Wednesday, 24 August 2011

ராசிபலன்;உங்கள் ���ாசியும் ஒரு வரி ���ச் பலனும்

- 0 comments
[Continue reading...]

உங்கள் ராசிப்பட��,எந்த நோய் பாதிக��கும்..?-ஜோதிடம்

- 0 comments
[Continue reading...]

காஞ்சனா -செம காமெடி..செம திகில்

- 0 comments
[Continue reading...]

18+ தாம்பத்திய சுக���் /கள்ளக்காதல் ப���்றிய ஜோதிடம்

- 0 comments
[Continue reading...]

சர்க்கரை வியாதி��ை ஒரே நாளில் குண��ாக்கும் டாக்டர் sugar

- 0 comments
[Continue reading...]

CYBER CAFE ஆபாசம் ..சீரழ���யும் பெண்கள் 18+

- 0 comments
[Continue reading...]

வேலாயுதம்-விஜய் ���ோக்ஸ் jokes

- 0 comments
[Continue reading...]

எனக்கு பிடித்த ட���ப் 10 ரஜினி படங்க��்!

- 0 comments
[Continue reading...]

இந்தியாவின் துண�� இல்லாமல் இலங்கை போரில் வெற்றியீ���்டியிருக்க முடியாது!: சம்பந்தன்

- 0 comments


இந்தியாவின் ஒத்துழைப்பின்றி தமிழீழ விடுதலைப்புலிகளுடான போரில் இலங்கை அரச படைகளினால் வெற்றியீட்டியிருக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகவும், இந்தியாவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாட்டின் சகல அரசியல்வாதிகளும் இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கு மட்டுமன்றி சிங்களவர்களின் பூர்வீகமும் இந்தியாதான் என்பதனை எவரும் மறந்துவிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கை அரசாங்கம் சில உறுதிமொழிகளை இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாகவும் அவற்றை நிறைவேற்றுமாறு தற்போது வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிளவடைய வேண்டும் என்பது இந்தியாவின் நோக்கமல்ல எனவும், தமிழ் மக்களுக்கு சமவுரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்றே தாம் வலியுறுத்தி வருவதாகவும அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது உதவிகளை வழங்கிய ஏனைய நாடுகளுடன் இந்தியாவிற்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் கோரிக்கை என தெரிவித்துள்ள சம்பந்தன், அரசாங்கத்துடன் எந்தவிதமான தப்பான அபிப்பிராயங்களும் இந்தியாவிற்கு ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த வலயங்கள் தொடர்ந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், வடக்கில் இன்னமும் இயல்பு நிலை ஏற்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபிவிருத்தித் திட்டங்களை விடவும் நிலையான தீர்வுத் திட்டமொன்றையே மக்கள் வேண்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை தெற்கு மக்கள் அறிந்திருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஏழு மாதங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நோக்கம் பற்றி தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டால் மட்டுமே தெரிவுக்குழுவில் பங்கேற்பது குறித்து தீர்மானிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவசர நிலைமைகளின் போது அவசரகாலச் சட்டம் அமுல்படுத்துவதில் தவறில்லை எனவும், அந்தச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவதனால் நாட்டில் பல்வேறு அடக்குமுறைகள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

http://tamil-joke-sms.blogspot.com




  • http://tamil-joke-sms.blogspot.com


  • [Continue reading...]

    மூவர் உயிர் காக்��� - தமிழருவி மணியன், தோழர் தியாகு (க���ணொளி இணைப்பு)

    - 0 comments


    மூவர் உயிர் காக்க - தமிழருவி மணியன், தோழர் தியாகு.

    பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்க​ளை மரண தண்ட​னையிலிருந்து காக்க ​சென்​னை எம்.ஜி.ஆர் நகரில் ​கட்சி ​வேறுபாடுக​ளைக் கடந்து த​லைவர்கள் பங்​கேற்ற பொதுக்கூட்டம் 22.08.2011 அன்று ந​டை​பெற்றது. அக்கூட்டத்தில் தமிழருவி மணியன் ,தோழர் தியாகு அவர்களின் ​பேச்சு.





    http://tamil-joke-sms.blogspot.com




  • http://tamil-joke-sms.blogspot.com


  • [Continue reading...]

    ஸ்பெக்ட்ரம் ஊழல�� பிரதமர், சிதம்ப��த்திற்கும் பங்க���ண்டு: கனிமொழி

    - 0 comments


    ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலம் விடுவதில்லை என்று முடிவெடுத்ததில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் பங்குண்டு என்று சி.பி.ஐ., கோர்ட்டில் கனிமொழி கூறினார். இந்த வாதத்தை உறுதிப்படுத்துவதற்காக மன்மோகன் சிங், சிதம்பரம், ராஜா ஆகிய மூன்று பேரும் இதுகுறித்து முடிவெடுத்த ஆலோசனைக் கூட்டத்தின் மினிட் புக்கையும் கனிமொழி கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    தனக்கு தெரியாமலேயே ராஜா முடிவெடுத்துவிட்டதாக பிரதமர் தொடர்ந்து கூறி வரும் நிலையில், கனிமொழி இவ்வாறு குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணை, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சி.பி.ஐ.,யின் வாதங்கள் முடிவு பெற்றுவிட்டன. இதையடுத்து, குற்றப் பின்னணியை தொகுப்பதற்குண்டான பணிகளில் சி.பி.ஐ., கோர்ட் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு முன், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாதங்களை நீதிபதி சைனி கேட்டு வருகிறார். அதற்கு முதல் ஆளாக, ராஜா தனது வாதத்தை வைத்தார். அதன் பிறகு, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் வரிசையாக வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று, கனிமொழியின் வாதம் கேட்கப்பட்டது.

    அப்போது, கனிமொழியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சுஷில்குமார் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த சி.ஏ.ஜி., அறிக்கையை, பார்லிமென்டின் இரு அவைகளுமே இன்னும் ஏற்கவில்லை. அந்த அறிக்கையை சாட்சியாக வைத்து தான், கனிமொழியை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. பார்லிமென்டின் இரு அவைகளுமே இன்னும் ஏற்காத அந்த அறிக்கையை, கனிமொழிக்கு எதிரான சாட்சியமாக எப்படி கருத முடியும்.

    கனிமொழியால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டதாக சி.பி.ஐ., குற்றம் சாட்டுகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்றும், இதனால் எந்த வகையிலும் நாட்டுக்கு இழப்பு ஏற்படவில்லை என்றும் பிரதமரே கூறியுள்ளார். இதை, பார்லிமென்டிலேயே இவ்வாறு கூறியுள்ளார். இழப்பை கனிமொழி ஏற்படுத்திவிட்டார் என்ற வாதமும் வலுவிழந்துவிட்டது.

    ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலம் விடுவதில்லை என்றும், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முடிவை அப்போதைய அமைச்சர் ராஜா மட்டுமே தன்னிச்சையாக எடுக்கவில்லை.
    ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்ற முடிவை பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் ராஜா ஆகிய மூன்று பேரும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தின் மினிட் புக்கில் இதற்கான ஆதாரங்கள் அனைத்துமே உள்ளன. அதை கோர்ட் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மூன்று பேரும் சேர்ந்து தான் ஏல முறை வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர். எனவே, நாட்டுக்கு, ராஜா தான் பெரிய இழப்பு உண்டாக்கிவிட்டதாக குற்றம் சாட்டினால் அது தவறானது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் பெருமளவுக்கு லாபம் அடைந்ததாக ஸ்வான் மற்றும் யுனிடெக் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களான எடிசலாட் மற்றும் யுனிநார் ஆகிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்ததே அரசு தான். பங்குகள் மட்டும் தான் விற்பனை செய்யப்பட்டதே தவிர, ஸ்பெக்ட்ரம் உரிமங்களையே விற்பனை செய்யவில்லை என்பதையும் கோர்ட் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கனிமொழி ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். அவரை கைது செய்வதற்கும், அவர் மீது வழக்கு தொடர்வதற்கும் சில நடைமுறைகள் உள்ளன. இது குறித்து, ராஜ்யசபாவின் தலைவரிடம் உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது அனுமதியை பெற வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் நடைமுறைகள் எதையும் கடைபிடிக்கவில்லை. இவ்வாறு சுஷில்குமார் வாதாடினார்.

    கனிமொழிக்காக வாதாடும் மூத்த வழக்கறிஞரான இவர் தான் ராஜாவுக்காகவும் வாதாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விவகாரத்தில் தனக்கு எதுவும் தெரியாது; என்னை கலந்து ஆலோசிக்காமலேயே ராஜா முடிவெடுத்துவிட்டார் என்று பிரதமர் மன்மோகன் சிங் பல பேட்டிகளில் கூறினார்.

    சிதம்பரமும், ராஜாவும் உடனிருந்து, அவர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தான், ஏல முறை வேண்டாமென முடிவெடுத்ததாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான மினிட் புக்கையும் கனிமொழி தாக்கல் செய்துள்ளதால், புதிய பரபரப்பும் திருப்பமும் ஏற்பட்டுள்ளது.

    http://tamil-joke-sms.blogspot.com




  • http://tamil-joke-sms.blogspot.com


  • [Continue reading...]

    தமிழக மக்கள் இலவ���ங்களை எதிர்பார்க்காத நிலையை உரு���ாக்குவோம்: ஜெயல��ிதா

    - 0 comments


    தமிழக மக்கள் இலவசங்களை எதிர்பார்க்காத நிலையை உருவாக்குவோம் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

    தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்று 100 நாள் கடந்துவிட்டது. இதனைமுன்னிட்டு தமிழக சட்டப்பேரவையில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்யைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    அதிமுக அரசின் 100 நாள் நிறைவை முன்னிட்டு பேரவையில் பேசிய முதல் அமைச்சர் ஜெயலலிதா,

    தமிழகத்தில் நிதி பற்றாக்குறை உள்ளது உண்மைதான். தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு வேண்டிய உதவிகள் செய்வதில்லை. தமிழக மக்கள் இலவசங்களை எதிர்பார்க்காத நிலையை உருவாக்குவோம் என்றார்.

    http://tamil-joke-sms.blogspot.com




  • http://tamil-joke-sms.blogspot.com


  • [Continue reading...]

    ஹசாரேவின் லோக்ப��ல் மசோதாவை முழுமையாக ஆதரிக்க முட���யாது: பாஜக

    - 0 comments


    ஊழலுக்கு எதிரான அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது அதே நேரம் அன்னா ஹசாரேவின் மக்கள் லோக்பால் மசோதாவை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது.

    பாரதீய ஜனதா கட்சியின் டெல்லி மேல் சபை துணைத் தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியாக அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ஊழலுக்கு எதிராக அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் வரைவு மசோதா மிகவும் பல வீனமானது. இதை வைத்தே ஊழலை ஒழிக்க, ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஆர்வம் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். அதேபோல, அன்னா ஹசாரே குழுவினர் தயாரித்துள்ள மக்கள் லோக் பால் மசோதாவையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த மசோதாவிலும் நிறைய குறைபாடுகள் உள்ளன.

    லோக்பால் மசோதாவை வருகிற 30 ந்தேதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹசாரே கால நிர்ணயம் செய்து எச்சரிக்கை விடுத்திருப்பதும் ஏற்புடையது அல்ல. இந்த விஷயத்தில் அவருக்கு பாரதீய ஜனதா ஆதரவு அளிக்காது.

    லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி எம்.பி.க்கள் முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் என்று ராம்லீலா மைதானத்தில் இருந்து (ஹசாரே) அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கட்சியின் எம்.பி.க்களும் அந்த கட்சியின் கொறடாவின் கட்டுப்பாட்டில் உள்ளனர். எனவே, கொறடாவின் அனுமதி இல்லாமல் இதை செய்ய முடியாது என்பது அவர்களுக்கு தெரியாமல் போனது எப்படி என்று தெரியவில்லை.

    அரசின் லோக்பால் மசோதா பலவீனமானது என்பதால், அதை திரும்ப பெற வேண்டும். அதற்கு பதிலாக வேறொரு லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும். லோக்பால் மசோதா அதிகார வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டு வர வேண்டும். என்பதே பாரதீய ஜனதாவின் விருப்பம். ஆனால், அரசு கொண்டுவந்துள்ள லோக்பால் விரைவு மசோதாவில் இந்த அம்சம் இடம் பெற வில்லை.

    ஹசாரே குழுவினர் கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதாவில் பல பிரிவுகள் 100 சதவிகிதம் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக உள்ளன. அதே சமயம், சில அம்சங்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன. அந்த பிரிவுகளை திருத்தி மேம்படுத்த முடியும். இன்னும் சில அம்சங்கள் முற்றிலும் எற்றுக் கொள்ள முடியாதவை இந்த மசோதாவும் முழுமையானது அல்ல. எனவே தான் ஹசாரே குழுவினர் தயாரித்துள்ள லோக்பால் மசோதாவை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    http://tamil-joke-sms.blogspot.com




  • http://tamil-joke-sms.blogspot.com


  • [Continue reading...]

    மனித சங்கிலி போர���ட்டம்: பழ. நெடுமாறன் வேண்டுகோள்

    - 0 comments


    முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 26-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடத்துமாறு பழ.நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில், ''தூக்குமேடையின் நிழலில் நிறுத்தப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மரண தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்,

    சட்டப் புத்தகத்தில் இருந்து மரண தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி 26-8-2011 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மனித சங்கிலிப் போராட்டம் நடத்துமாறு அனைத்துக் கட்சிகள்,

    அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றை வேண்டிக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    http://tamil-joke-sms.blogspot.com




  • http://tamil-joke-sms.blogspot.com


  • [Continue reading...]

    கயிற்றின் முன்ன��ல் நின்று நான் ச��ல்ல நினைப்பது... - ���ேரறிவாளன்

    - 0 comments


    ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவேளை மரணம் எங்களை வென்றுவிட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது... தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்!'' மரணத்தின் நிழலில் நிற்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மனப்போராட்டங்களின் தொகுப்பு கேள்வி - பதில் வடிவில்....

    ஈழப் படுகொலைகள் உண்​டாக்கிய துயரமே தமிழக மனங்​களில் ரணமாக வடியும் நிலையில், தூக்குக் கயிறு வடிவில் மீண்டும் துரத்தத் தொடங்கி இருக்கிறது துயரம்.

    ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் மரணத்தின் நிழலில் நிற்கிறார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தளர்த்தக்கோரி இவர்கள் அனுப்பிய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

    மூவரை​யும் காப்பாற்றக் கோரி கட்சி வேறு​​பாடுகளைக் கடந்து தமிழகம் முழுக்க உணர்வும் உருக்கமுமான போராட்​டங்கள் நடக்கின்றன.

    மரணத்தின் துரத்தலில் வாடும் அந்த மூவரின் மனப் போராட்டங்களையும் அறிய முடிவெடுத்​தோம். வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். அதன் தொகுப்பு இங்கே...

    முதலில் பேரறிவாளன்...

    கேள்வி: எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி எதிர்கொள்​கிறீர்கள்?

    பதில்: முதலில் எங்களுக்காகப் போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம். கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் மரண நிழல் எங்களைப் பெரிதாக சூழ்ந்திருக்கிறது.

    மக்களின் ஒருமித்த கைகோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது. 19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்.

    கேள்வி: தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து?

    பதில்: அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனை​வரும் எங்களுக்காகப் போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனிதநேயமும் ஒன்று சேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. பொதுமக்களும் அனைத்துத் தலைவர்களும் ஒரே அணியில் நின்று தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்.

    அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத்தெரியும்.

    கேள்வி: தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

    பதில்: மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல... 20.07.07 அன்றே உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன்.

    வழக்கில் சிக்குபவர்களுக்கு வசதி இல்லை என்றால், அவர்களின் தரப்பு நியாயம் அம்பலம் ஏறாமல் போய்விடும். அத்தகைய குறைபாடு கொண்ட கட்டமைப்புதான் இன்றைக்கு நிலவுகிறது. என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்.

    தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் என அந்தக் கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன். பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது.

    மனச்சாட்சியின் கண்ணீர்க் குரலாகச் சொல்கிறேன்... எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை. சித்தரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும் அம்மா.

    கேள்வி: கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?

    பதில்: 99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் என்னைப் பார்க்க வந்தார். 'வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்?' எனக் கேட்டார். 'தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன்' எனச் சொன்னேன். காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிஷமும் எத்தகையக் கொடூரமானது என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான்.

    வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்​களுக்காகப் போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்பத் தோன்றுகிறது.

    ஆனால், ஏற்கனவே பரப்பிய பழிகள் போதாது என 'சாத்தானின் படைகள்' என்கிற புத்தகத்தை நான் அச்சடித்ததாக சிலர் இப்போது கிளப்பிவிடுகிறார்கள். அந்தப் புத்தகத்தை யார் உருவாக்கியது என்பது சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் என்னை இட்டுக்கட்டுவது ஏன்?

    ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவேளை மரணம் எங்களை வென்றுவிட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது... தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்.

    அடுத்து முருகன்...

    கேள்வி: தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?

    பதில்: மரணத்தைவிட மரணத்தின் நாளுக்காகக் காத்திருப்பது கொடுமையானது. அதை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் இந்த சூழலில், மக்களின் ஆதரவுதான் எங்​களை நம்பிக்கையோடு நிமிர வைக்கிறது! தனித்தனியான போராட்டங்களை முன்னெடுக்​காமல், எங்களுக்காக எல்லோரும் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை.

    இதர மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைக்குகூட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத் திரளுகின்றன. எங்களின் கண்ணீர் பிரச்னைக்கும் அதேபோல் அனைத்துக் கட்சிகளும் திரண்டு, முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மூன்று உயிர்களுக்காக மொத்த தமிழகமும் கைகோத்து நின்றதை காலக் கல்வெட்டு தமிழனின் உயர்ந்த உணர்வாகப் பதிவு செய்ய வேண்டும்.

    கேள்வி: தமிழக மக்களிடம் ஏதாவது சொல்ல விரும்பு​கிறீர்களா?

    பதில்: எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மரணத்துக்குப் பயந்து இந்த வார்த்தை​களைச் சொல்லவில்லை. எங்களின் கவனத்துக்குத் தெரியாமல் நடந்த சம்பவத்துக்கு இத்தனை வருட சிறைவாசமே பெரிய கொடுமை. ஒப்புதல் வாக்குமூலத்தில் நாங்களே பல விஷயங்களை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

    ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களே தயாரித்து எங்களை அதில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அதற்காக அவர்கள் செய்த சித்திரவதைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

    மரணக் கொட்டடியின் நெருக்கடிகள் எங்களுக்குப் பழகிப்போனாலும், என்றைக்காவது ஒருநாள் வெளியே வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. உறவுகளின் உணர்வுகளால் அந்த நம்பிக்கைப் பலப்படுகிறது. ஒரே வார்த்தையில் எங்களின் உணர்வைச் சொல்வதானால்.... நன்றி.

    அடுத்து ம.தி.சாந்தன்...

    கேள்வி: ராஜீவ் கொலை விசாரணையில் நிறைய குளறு​படிகள் நடந்ததாகச் சொல்கிறார்களே...?

    பதில்: கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். இந்த வேதனையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.

    கொழும்பு வழியாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதாலேயே நான் இந்தியாவுக்கு வந்தேன். இலங்கை அரசு தந்த உண்மையான கடவுச்சீட்டுடன் வந்தேன். அதை சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளது.

    ராஜீவ் போன்ற பெரிய தலைவரைக் கொல்ல வருபவன் தன்னைப் பற்றிய தகவலைச் சொல்லும் உண்மையான கடவுச்சீட்டுடன் வருவானா? நான் சுமக்கும் மரண தண்டனைக்குப் பெயர் குழப்பமும் ஒரு காரணம்.

    இந்த வழக்கில் கைதாகி விடுதலையான இரும்பொறை என்பவரை நான் ராஜீவ் இறப்பதற்கு முன்னர் சந்தித்ததாகவும், 15 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், 'முக்கியமான ஒரு நபரைக் கொல்லப் போகிறோம்' என்று சொன்னதாகவும் மரண தண்டனையை உறுதி செய்தபோது மாண்புமிகு நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் கூறுகிறார்.

    ஆனால், மாண்புமிகு நீதிபதி வாத்வா அவர்கள் அது இறந்துபோன எதிரி திருச்சி சாந்தன் என்கிறார். இன்னொருவர் சொன்னதை நான் சொன்னதாகச் சொல்லி என்னைத் தூக்கில் நிறுத்தப் போகிறார்கள்.

    நானும் சிவராசனும் நளினியை மிரட்டி இந்த​ச் சதிக்கு உடன்பட வைத்தோம் என்று நீதிபதி தாமஸ் சொல்கிறார். ஆனால், நீதிபதி வாத்வா, 'ராஜீவ் இறந்த அடுத்த நாள்தான் நளினியை சாந்தன் அறிவார் என்கிறார்.

    நான் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவில் முக்கியமான ஆள் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக நீதிபதி தாமஸ் தீர்ப்பில் சொல்கிறார். இவை எதற்கும் ஆதாரம் இல்லை.

    விடுதலையான இரும்பொறையுடன் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றோ, நளினியை மிரட்டினேன் என்றோ சி.பி.ஐ.கூடச் சொல்லவில்லை. ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவரிடம் கூறி அவரது பதிலை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் என் விஷயத்தில் இது செய்யப்படவில்லையே.. எப்படி?

    சிவராசனின் பணத்தை முதலில் காந்தன் என்பவர் கையாண்டார். அவரிடம் இருந்து நான் அந்தப் பொறுப்பினை எடுத்துக்கொண்டதாக நீதிபதி வாத்வா அவர்கள் தீர்ப்பில் கூறுகிறார்.

    சிவராசனின் பணத்தை நான் பாதுகாத்து கொடுத்ததாகவோ கையாண்டதாகவோ விசாரணை நீதிமன்றம் என்னிடம் கேட்டுப் பதிவு செய்யவில்லை. இப்படி எல்லாம் குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகளே எங்களுக்கான முடிவுப் படிகளாக மாறிவிட்டன.

    கேள்வி: கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரிந்த உடன் என்ன நினைத்தீர்கள்?

    பதில்: என் தந்தை ஆறுமுகம் தில்லையம்பலம் அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு இப்போது 70 வயது. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை.

    அதற்கு முன்னர் அங்கு விவசாயம் செய்துகொண்டு இருந்தார். அவர் எப்படி இருக்கிறார் என்கிற கவலை என்னைப் பெரிதாக வருத்துகிறது. பெற்ற தகப்பன் இருக்கிறாரா இல்லையா என்பதை நினைத்து அழுவதா? நான் இருப்பேனா மாட்டேனா என்பதை நினைத்து அழுவதா? இந்த அப்பனும் மகனும் விதியெனும் கையில் சிக்கிய விளையாட்டுப் பொம்மைகளாய் அல்லாடுகிறோம்.

    ஜூனியர் விகடன்

    http://tamil-joke-sms.blogspot.com




  • http://tamil-joke-sms.blogspot.com


  • [Continue reading...]

    இளைஞர் காங்கிரஸ�� தலைவியாகும் ரம்யா!

    - 0 comments



    கர்நாடக காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவி பதவிக்குப் போட்டியிடுகிறார் நடிகை ரம்யா.

    கன்னட சினிமாவின் நம்பர் ஒன் நடிகை ரம்யா. இவரது படங்கள் அடுத்தடுத்து சூப்பர் ஹிட்டாகின. தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ரம்யா. ராகுல் காந்தியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் சேர்ந்ததாக அறிவித்த அவர், அடுத்து தீவிர கட்சிப் பணியாற்ற முடிவு செய்துள்ளார்.

    இதற்கு வசதியாக கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவராக அவரை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

    அடுத்த மாதம் (செப்டம்பர்) கர்நாடக காங்கிரசுக்கு கட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. அப்போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட அவர் வேட்புமனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

    அதே நேரம் ரம்யாவை போட்டியின்றி தேர்வு செய்யவும் முயற்சிகள் நடக்கின்றன.





    http://tamil-vaanam.blogspot.com




  • http://tamil-vaanam.blogspot.com


  • [Continue reading...]

    திருச்சி சிறையி��் அழகிரி: அனிதா ர���தாகிருஷ்ணன், எஸ��ஸார் கோபியுடன் சந்திப்பு

    - 0 comments


    திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக மதுரை மாவட்ட நிர்வாகி எஸ்ஸார் கோபி ஆகியோரை மத்திய அமைச்சர் அழகிரி இன்று நேரில் சந்தித்து பேசினார்.

    திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் தனது பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி சுரேஷை கொல்ல ஆளைத் தூண்டுவிட்டதற்காக கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இது தவிர அவர் மீது மேலும் இரு வழக்குகள் உள்ளனர். கடந்த மே மாதம் 21-ம் தேதி ஆறுமுகநேரி நகர திமுக அலுவலத்திற்கு தீவைத்தது, அடைக்கலாபுரம் ரோட்டில் சுரேஷின் தம்பி ராஜேஷ் நடத்தி வரும் டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வீசியது ஆகிய இரண்டு சம்பவங்களுக்கு தூண்டுதலாக இருந்ததாகக் கூறி அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர அவர் மீது வீடு அபகரிப்பு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

    மதுரை வில்லாபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் (33) கொலை வழக்கில் திமுக நிர்வாகி எஸ்ஸார் கோபி கைது செய்யப்பட்டார். அவரும் தற்போது திருச்சி சிறையில் தான் உள்ளார்.

    இன்று திருச்சி சிறைக்கு வந்த மத்திய அமைச்சர் அழகிரி அங்கிருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்ஸார் கோபியை சந்தித்து பேசினார். இதில் எஸ்ஸார் கோபி அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அழகிரிக்கு நெருக்கமானவர்களில் பலர் தற்போது சிறையில் தான் உள்ளனர்.









    http://tamil-vaanam.blogspot.com




  • http://tamil-vaanam.blogspot.com


  • [Continue reading...]

    மைக்ரோசாப்ட் வழ��்கும் இலவசங்கள் !!!

    - 0 comments


     



    டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் முன்னணியில் உள்ளது. அதே போல தன் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பு மூலம் பயன்பாட்டு சாப்ட்வேர் வகையிலும் தனி நபர் ஆட்சியை நடத்துகிறது. இதே போல இணைய பிரவுசர் வகையிலும் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் பெரும்பங்கினைக் கொண்டுள்ளது. வேறு வழியின்றி, மக்களும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கு வதனையே தங்கள் கம்ப்யூட்டர்களை இயக்க பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு நேர் மாறாக, கூகுள் ஒரு ராபின்ஹூட் போல வேறு வர்த்தக வழிகளில் பணத்தைச் சம்பாதித்து, மக்களுக்குப் பல வசதிகளை இலவசமாகத் தந்து வருகிறது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனமும் பல சாப்ட்வேர் வசதிகளை இலவசமாகத் தந்து வருவது பலருக்குத் தெரியாமலேயே உள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

    1. ஹாட்மெயில்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைய இமெயில் சேவை. இணையத்தில் முதல் முதலாக இமெயில் சேவையைப் பெரும் அளவில் இலவசமாக வழங்கிய நிறுவனம் ஹாட் மெயில். பின்னரே, இதனை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்கி தன தாக்கிக் கொண்டது. தொடர்ந்து ஹாட் மெயில் சேவைகள் இலவசமாகவே கிடைத்து வருகின்றன. மேலும் http://office.microsoft.com/en-us/outlook-help/microsoft-office-outlook-hotmail-connector-overview-HA010222518.aspx என்ற முகவரியில் உள்ள தளத்தில் இலவசமாகக் கிடைக்கும் Microsoft Outlook Hotmail Connector மூலம், அவுட்லுக் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் ஹாட் மெயில் அக்கவுண்ட்களை இணைக்கலாம்.

    <a href="http://www.bidvertiser.com">affiliate program</a>

    2. விண்டோஸ் லைவ் எசன்சியல்ஸ் (Windows Live Essentials): விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரை, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பல டூல்களை இணைத்தே வழங்கி வந்தது. வாடிக்கையாளர்கள் பலர், இந்த இலவச டூல்கள் டிஸ்க் இடத்தைக் கபளீகரம் செய்கின்றன என்று குற்றம் சாட்டியதால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இந்த இலவச டூல்களில் பல எடுக்கப்பட்டன. இவை அழிக்கப்படாமல், மொத்தமாக விண்டோஸ் லைவ் எசன்சியல்ஸ் என்ற பெயரில் ஒரு தொகுப்பாக, இலவசமாக டவுண்லோட் செய்யும் வகையில், மைக்ரோசாப்ட் சர்வரில் வைக்கப் பட்டுள்ளது. இந்த இலவச தொகுப்பில், விண்டோஸ் லைவ் மெயில் (Windows Live Mail), விண்டோஸ் லைவ் மெசஞ்சர் (Windows Live Messenger), விண்டோஸ் லைவ் மெஷ் (Windows Live Mesh), விண்டோஸ் லைவ் ரைட்டர் (Windows Live Writer), போட்டோ காலரி (Photo Gallery), விண்டோஸ் லைவ் மூவி மேக்கர் (Windows Live Movie Maker), விண்டோஸ் பேமிலி லைவ் சேப்டி (Windows Live Safety), ஆகியவை தரப்படுகின்றன.

    விண்டோஸ் லைவ் மெயில், ஒரு டெஸ்க்டாப் இமெயில் கிளையண்ட் புரோகிராம். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட பல இமெயில் அக்கவுண்ட்களை இயக்கலாம்.

    விண்டோஸ் லைவ் மெசஞ்சர் அடிப்படையில் இன்ஸ்டன்ட் மெசேஜ் டூல். இதன் மூலம் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் அக்கவுண்ட் ஏற்றுக் கொள்ளும் எந்த இன்ஸ்டண்ட் மெசஞ்சர் சேவையின் அக்கவுண்ட் கொண்டிருந் தாலும், அவர்களுடன் சேட் செய்திடலாம். இதனை இன்ஸ்டண்ட் மெசஞ்சர் என்று சொல்வதைக் காட்டிலும் ஆன்லைன் தொடர்பு வலை என்று விரிக்கலாம்.
    விண்டோஸ் லைவ் மெஷ், உங்களின் பல கம்ப்யூட்டர்களின் டேட்டாவை ஒருங்கிணைக்க உதவுகிறது. லைவ் மெஷ் இயங்கும் மேக் மற்றும் விண்டோஸ் கம்ப்யூட்டர்களையும் இது இணைக்கிறது.

    விண்டோஸ் லைவ் ரைட்டர்: வேர்ட் ப்ரெஸ் மற்றும் ஷேர் பாய்ண்ட் போன்ற ப்ளாக்குகள் எனப்படும் வலைமனை களில் பதிவதற்கான டேட்டாவினை அமைப்பதற்கு விண்டோஸ் லைவ் ரைட்டர் பயன்படுகிறது. நாம் விரும்பும் வகையில் டெக்ஸ்ட் டைப் செய்த பின்னர், இணைப்பதற்கான படங்கள், வீடியோ கிளிப்கள் போன்றவற்றை இணைக்க இது பயன்படுகிறது.

    போட்டோ காலரி: வகை வகையான ஆல்பங்களில் நம் போட்டோவினை ஒட்டி, ஷெல்ப்களில் அடுக்கி வைக்கின்ற காலம் போய்விட்டது. நம் கம்ப்யூட்டர் அல்லது இணையத்தில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்தி, நம் போட்டோக்களை ஆல்பங்களாக வைத்து வருகிறோம். இதனாலேயே, போட்டோக்களை இணைய சர்வர்களில் வைத்திட பல நிறுவனங்கள் இலவச இடம் அளித்து வருகின்றன. அது மட்டுமின்றி, போட்டோக்களை நம் விருப்பத்திற்கேற்ப இணைக்கவும், மாற்றி அமைக்கவும் டூல்களையும் இந்த தளங்கள் தருகின்றன. மைக்ரோசாப்ட் தரும் போட்டோ காலரி இந்த வசதிகள் அனைத்தையும் கொண்டுள்ளது.

    விண்டோஸ் லைவ் மூவி மேக்கர்: ஹை டெபனிஷன் வீடியோ காட்சிகள் ஸ்மார்ட் போன், லேப்டாப் மற்றும் டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அதிகமான அளவில் இடம் பெறத் தொடங்கிவிட்டன. இதனாலேயே இந்த சாதனங்களைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஒரு பட இயக்குநர் எனத் தங்களை எண்ணிக் கொண்டு, படங்களை உருவாக்கி மன நிறைவு கொள்கின்றனர். விண்டோஸ் லைவ் மூவி மேக்கர் இந்த எண்ணம் கொண்டவர் களுக்கு மிகவும் உதவுகிறது. டைட்டில் அமைப்பது, முன்னுரை தருவது, பின்னணி இசை சேர்ப்பது என்பது போன்ற அனைத்து வேலைகளுக்கும் உதவுகிறது விண்டோஸ் லைவ் மூவி மேக்கர்.

    விண்டோஸ் லைவ் பேமிலி சேப்டி: இணையத்தில் உலாவ விரும்பும் நம் குழந்தைகளைக் கண்காணிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு சாதனம் தேவைப்படுகிறது. அந்த வகையில் நமக்கு மிகவும் உதவுவது இந்த விண்டோஸ் லைவ் பேமிலி சேப்டி. இதன் மூலம் பெற்றோர்கள், தங்கள் குழந்தை கள் பார்க்கும் இணைய தளங்கள் மட்டுமின்றி, இமெயில்களைக் கூடக் கட்டுப்படுத்தலாம்.

    <a href="http://www.bidvertiser.com">affiliate program</a>

    3. விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவ்: கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் மெதுவாக கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறைக்கு மாறி வருகின்றனர். அவரவர் கம்ப்யூட்டர்களில் சாப்ட்வேர் தொகுப்பு களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்து வதனைக் காட்டிலும், கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், இணைய சர்வர்களில் கிடைக்கும் அப்ளிகேஷன் தொகுப்புகளைப் பயன்படுத்த முன்வரு கின்றனர். இவ்வாறு உருவாக்கும் பைல்களையும் இணையத்திலேயே சேவ் செய்து, தேவைப்படுகையில் எடுத்துப் பயன்படுத்த விண்டோஸ் லைவ் ஸ்கை உதவுகிறது. நம்முடைய முக்கிய டேட்டா பைல்களை இதில் பேக் அப் ஆக சேவ் செய்து வைக்கலாம்.

    4. ஆபீஸ் வெப் அப்ளிகேஷன்ஸ்: மைக்ரோசாப்ட் தரும் ஆபீஸ் அப்ளிகேஷன்களை இணையத்தில் இருந்தவாறே பெற்று பயன்படுத்த ஆபீஸ் வெப் அப்ளிகேஷன்ஸ் உதவு கிறது. உங்களுடைய கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் இன்ஸ்டால் செய்ய வில்லை என்றாலும், வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் ஒன் நோட் பைல்களை, இதன் மூலம் உருவாக்கலாம். இவை எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்புகளில் கிடைக்கும் பார்மட்களிலேயே உருவாக்கப்படுவது இதன் சிறப்பாகும்.

    5. செக்யூரிட்டி எசன்சியல்ஸ்: ஒவ்வொரு விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் செக்யூரிட்டி சாப்ட்வேர் ஒன்று இப்போது அத்தியா வசியத் தேவையாக ஆகிவிட்டது. வைரஸ், வோர்ம், பிஷிங் அட்டாக், மால்வேர் என பலவகை ஆபத்துகள் நம் பெர்சனல் கம்ப்யூட்டரைச் சுற்றி வருகின்றன. இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க, விண்டோஸ் சிஸ்டத்திலேயே ஒரு பயர்வால் கிடைக்கிறது. இருப்பினும் முழுமையான ஒரு பாதுகாப்பு வளையம் வேண்டும் என விரும்புவோர், மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியல்ஸ் தொகுப்பைப் பயன்படுத்தலாம்.

    மேலே சொல்லப்பட்ட இலவச மைக்ரோசாப்ட் டூல்களில் ஒரு சிலவற்றை ஏற்கனவே நீங்கள் அறிந்து செயல்படுத்தி வரலாம். மற்றவையும் அதே போல சிறந்த பயன்களைத் தருபவை தான். ஒருமுறை பயன்படுத்திப் பார்த்தால் அதன் பலன்களை அனுபவிப்பீர்கள்.



    ---------------- நன்றி -------------------

    இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
     



    http://tamil-vaanam.blogspot.com




  • http://tamil-vaanam.blogspot.com


  • [Continue reading...]

    புதிய மொபைல் போன���கள்

    - 0 comments











    பிரிமியம், நடுத்தரம் மற்றும் பட்ஜெட் விலைகளில் புதிய மாடல்களாக பல மொபைல் போன்கள் சென்ற சில வாரங்களில் அறிமுகமாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


    1.எல்.ஜி. ஆப்டிமஸ் 2 எக்ஸ் (LG P990 Optimus 2X): நவீன ப்ராசசர் ஒன்றுடன் வடிவமைக்கப்பட்ட முதல் ஸ்மார்ட் போன் இது. இதன் டெக்ரா 2 டூயல் கோர் ப்ராசசர், ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்டது. ப்ரையோ ஆண்ட்ராய்ட் 2.2 சிஸ்டம் இயங்குகிறது. இதன் நான்கு அங்குல அழகிய வண்ணத் திரையில் உங்கள் வீடியோ கிளிப்களைத் தெளிவாகவும் துல்லியமாகவும் பார்த்து ரசிக்கலாம். இதன் பேட்டரியின் திறனும் கூடுதலாக 1500 mAh பவர் கொண்டுள்ளது. P990 Optimus 2X எனப் பெயரிடப்பட்ட இந்த மொபைல் போன், 6.4 ஜிபி மெமரி கொண்டது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியை 32 ஜிபி வரை அதிகரிக்கலாம். 3ஜி அழைப்பு மற்றும் ஸூம் வசதியுடன் கூடிய கேமரா 8 எம்பி திறன் கொண்டதாக உள்ளது. முன்புறத்தில் வீடியோ அழைப்புகளுக்கென தனி கேமரா ஒன்று தரப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில் ஆகிய நெட்வொர்க் வசதிகள் எளிமையாகவும் விரைவாகவும் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, A2DP இணைந்த புளுடூத் மற்றும் அக்ஸிலரோமீட்டர் ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகும். இதன் அதிக பட்ச விலை ரூ. 25,481.

    2. சாம்சங் சி3560: இது ஒரு கிளாம் ஷெல் போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. 2.2 அங்குல டி.எப்.டி.வண்ணத்திரை, ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, புளுடூத், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்துதல், 2 எம்.பி. திறனுடன் ஸூம் வசதி கொண்ட டிஜிட்டல் கேமரா, வீடியோ இயக்கம், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இமெயில் வசதி, எம்.பி.3 மியூசிக் பிளேயர் ஆகியன தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,231.


    3.சாம்சங் இ2232: குறைந்த பட்ச அடிப்படை வசதிகளுடன் இந்த போன் வடிவமைக்கப் பட்டிருந்தாலும், இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். 1.77 அங்குல டி.எப்.டி. டிஸ்பிளே, போட்டோ மற்றும் வீடியோ எடுக்க விஜிஏ கேமரா, புளுடூத், 3.5 மிமீ ஆடியோ ஜாக், எம்பி 3 மியூசிக் பிளேயர், மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் ஆகியவற்றுடன் கேண்டி பார் போனாக இது உள்ளது. இதன் நினைவகம் 20 எம்பி. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்ப முடியும். இமெயில் பெறும் வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு A2DP இணைந்த புளுடூத் ஆகியனவும் தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 2,308.



    ------------------- நன்றி -------------------

    இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?



    http://tamil-vaanam.blogspot.com




  • http://tamil-vaanam.blogspot.com


  • [Continue reading...]

    உண்ணாவிரத கலைஞன�� - உலக புகழ்பெற்ற சிறுகதை

    - 0 comments


    காப்காவின் இந்த கதை உலக புகழ் பெற்ற ஒரு கதை... மிகவும் யோசிக்க வைத்து , என் நினைவில் நீங்கா இடம் பெற்ற இந்த கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


    ************************************************************************
                        கடந்த சில வருடங்களில் பட்டினி கலைஞர்களின் மீதான ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. ஒரு காலத்தில் பட்டினி கிடக்கும் இந்த அரிய கலையை பயன்படுத்தி , சுய தொழில் செய்ய முடிந்தது. வெகுவாக பணமீட்டவும் முடிந்தது.
                        இப்போது இது சாத்தியமில்லை.
                            அதெல்லாம் ஒரு காலம். அப்போதெல்லாம் ஒரு பட்டினி கலைஞன் , ஒட்டு மொத்த ஊரின் கவனத்தை ஈர்த்து வைத்திருப்பான். உண்ணாவிரத்தை ஆரம்பித்து அதை முடிக்கும் வரை , நாளுக்கு நாள் பார்வையாளர்கள் அதிகரித்தவண்ணம் இருப்பார்கள். உண்ணாவிரத கலைஞனை , ஒவ்வொரு நாளும் ஒரு முறையேனும் பார்த்து விடுவார்கள்.நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டை மொத்தமாக வாங்கி கொண்டு நாள் முழுதும் , அந்த உண்ணா விரத கலைஞன் அமர்ந்து இருக்கும் சிறிய கூண்டின் முன் அமர்ந்து ஆவலாக கவனிப்பவர்களும் உண்டு. இரவில் இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழ்பவர்களும் உண்டு. இரவை பகலாக்கும் ஒளி வசதி , இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கியது.

                         சில பிரத்தியேக நாட்களில் அந்த கூண்டு திறந்த வெளிக்கு எடுத்து வரப்பட்டு , பட்டினி கலைஞன் மக்கள் பார்வைக்கு - குறிப்பாக சிறுவர்களின் பார்வைக்கு - வைக்கப்படுவான்.பெரியவர்களை பொருத்தவரை இந்த கலை நிகழ்ச்சியை ஒரு நகைச்சுவையாகத்தான் நினைத்தார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது நாகரிகம் என கருதப்பட்டதால் இதில் கலந்து கொண்டனர்.ஆனால் சிறுவர்கள் , இதை வாய் மூடாமல் பிரமிப்புடன் பார்த்தார்கள். ஒருவர் கரத்தை ஒருவர் பாதுகாப்பாக பற்றியவண்ணம் நிகழ்ச்சியை பார்த்தார்கள்.

                    அந்த கலைஞன் கூண்டில் அமர்ந்து இருப்பான். சில சமயம் மென்மையாக தலையசைப்பான். வலுக்கட்டயமாக வரவழைக்கப்ப்ட்ட புன்னகையுடன் கேள்விகளுக்கு பதில் அளிப்பான். ,
                          சமயங்களில் தன் கைகளை வெளியே நீட்டி , சாப்பிடாமல் தான் மெலிந்து போயிருப்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்துவான்.ஆனால் இது கொஞ்ச நேரம்தான். அதன்பின் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் தன்னுள் ஆழ்ந்து விடுவான். அந்த கூண்டில் இருக்கும் கடிகாரம் உட்பட எதையும் கவனிக்க மாட்டான். கண்கள் கிட்டத்தட்ட மூடப்பட்ட நிலையில் தன் முன்புறமாக பார்வையை செலுத்திகொண்டு இருப்பான். அவ்வப்போது சிறிய குடிவையில் இருக்கும் தண்ணீரை சற்று உறிஞ்சி , தன் உதடுகளை ஈரமாக்கிக் கொள்வான்.

                          அவ்வப்போது பார்த்து செல்லும் பார்வையாளர்களைத்தவிர சில நிரந்தரமான பார்வையாளர்களையும் பொதுமக்கள் நியமித்து இருந்தனர். இதில் வினோதம் என்னவெனில் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் , கசாப்புக்கடைக்காரர்கள். எந்த நேரத்திலும் மூன்று பேர் கொண்ட அந்த குழு இரவும் பகலுமாக அந்த கலைஞனை கண்காணிக்கும். ரகசியமாக அவன் உணவு அருந்த வில்லை என்ப்தை உறுதி செய்வது இந்த குழுவின் வேலை.
                           ஆனால் இது சம்பிரதாயமான ஒன்று. இந்த கண்காணிப்புக்கு அவசியமே இல்லை. எந்த ஒரு நிலையிலும், வற்புறுத்தப்பட்டால் கூட , அந்த கலைஞன் ஒரு துளி உணவைக்கூட எடுத்துக்கொள்ள மாட்டான் என்பதை அனைவரும் அறிவர். அந்த கலையின் கவுரவம் அதை ஏற்காது.

                      அந்த கண்காணிப்போர் குழுவுக்கு இது புரியவில்லை. வேண்டுமென்றே சற்று தொலைவில் அமர்ந்து தீவிரமாக சீட்டாடுவார்கள். தம் கவனம் முழுதும் ஆட்டத்தில் இருக்கும்ப்போது அந்த கலைஞன் ரகசியமாக சாப்பிடக்கூடும் என்பது அவர்கள் எண்ணம்.
                       இது போன்ற கண்காணிப்பை போல வேதனை தருவது வேறு ஒன்றும் அந்த கலைஞனுக்கு இல்லை. அவனை அவர்கள் நோகடித்தார்கள். அந்த கலையை கடினமாக்கினார்கள். இதை சமாளிப்பதற்காக, அவர்கள் பார்க்கும்போது பாடுவது அவன் வழக்கம். அவர்கள் சந்தேகம் எவ்வளவு தவறானது என இப்படி உணர்த்த முயற்சிப்பான். ஆனால் அதில் பயன் அதிகம் இல்லை. பாடிக்கொண்டே எப்படியோ சாப்பிட்டு விடுகிறானே என அவர்கள் ஆச்சரியத்துடன் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள் அவர்கள்.

                 அந்த அறையின் மங்கலான வெளிச்சத்தில் திருப்தி அடியாத நிகழ்ச்சி நிர்வாகி மின் ஒளி விளக்குகளை பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தார். இந்த ஒளி வெள்ளம் அந்த கலைஞனை கொஞ்சமும் பாதிக்கவில்லை. பொதுவாக அவனால் தூங்க முடிந்ததே இல்லை. எந்த வெளிச்சத்திலும், எந்த சத்தத்திலும் , கூட்டத்திலும், எந்த நேரமாக இருந்தாலும் சற்று கண் அயர்வான் . அவ்வளவுதான்.
                    தன்னை கண்காணிக்க பார்வையாளர்கள் இருப்பது இந்த கலைஞனுக்கு மகிழ்சி ஏற்படுத்தும். அவர்களுக்காக இரவு முழுதும் தூங்காமல் இருப்பான். அவர்களுடன் கலகலப்பாக பேசியும், பழங்கதைகள் பேசியும் , அவர்கள் கதையை சொல்ல சொல்லியும், அவர்களை தூங்காமல் பார்த்து கொள்வான். தான் உண்மையிலேயே சாப்பிடாமல் இருப்பதை இப்படி நிரூபிப்பான். ஆனால் காலையில் தன செலவிலயே அவர்களுக்கு காலை உணவு வழன்கி மகிழ்வான். இரவு முழுதும் விழித்து இருந்து கடுமையாக பணியாற்றிய அவர்கள் ஆவலாக உணவை எடுத்துக்கொள்வார்கள்.. ஆனால் இதுவும் ஒரு சாராரிடையே சந்தேகத்தை கிளப்பியது. காலை உணவு வாங்கி கொடுத்து , கண்காணிப்பாளர்களை பொய் சாட்சி சொல்ல வைக்கிறான் என குற்றம் சாட்டினர் சிலர்.. சரி, உணவு வாங்கி தரவில்லை.. நீங்கள் வந்து கண்காணியுங்கள் என அழைப்பு விடுத்தால், சாக்கு போக்கு சொல்லி நழுவினர். ஆனாலும் அவர்கள் சந்தேகம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது                     

    ஆனால் இந்த சந்தேகம் தவிர்க்க முடியாத ஒன்று . ஏனென்றால் இரவு பகலாக , அவன் அருகேயே அமர்ந்து அவனை கண்காணிப்பது சாத்தியமற்ற ஒன்று. அதனால் தன அனுபவத்தை மட்டும் வைத்து ,அவன் சாப்பிடாமல் ஏமாற்றாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறான் என யாரும் சொல்லும் நிலையில் இல்லை.. அந்த கலைஞனுக்கு மட்டுமே உண்மை தெரியும்,. அதே சமயம்&கலைஞனின்;;உண்ணாவிரத செயல் திறமை மீது முழு திருப்தி கொண்ட ஒரே பார்வையாளனும் அந்த கலைஞன் மட்டும்தான்.

    ஆனால் அவன் திருப்திக்கு காரணம் வேறு. இந்த நிறைவுக்கு காரணம் , அவனை எழும்பும் தோலுமாக ஆக்கி , சிலர் பார்க்க விரும்பாத பரிதாப தோற்றத்தை தந்த , இந்த உண்ணாவிரதம் அன்று. இந்த உண்ணாவிரதம் எவ்வளவு சுலபமான ஒன்று என அவைக்கு தெரியும். அதை சொல்லியும் இருக்கிறான்., ஆனால் யாரும் இதை நம்ப தயாராக இல்லை..சிலர் தன்னடக்கம் என நினைத்தனர் அவனை ஏமாற்றுக்காரன், விளம்பர மோகம் படித்தவன் என நினைத்தனர் . .
    (தொடரும் )


    http://meena-tamilsexstory.blogspot.com




  • http://meena-tamilsexstory.blogspot.com


  • [Continue reading...]

    சாப்பிடுவதைப் ப��ருங்கள்.. நல்ல மா���்பிள்ளை கிடைப்பார்..’

    - 0 comments


    ணவு குறித்த ஒருவரின் மனோபாவம், சாப்பிடும் விதத்தை கவனிப்பதன் மூலம் அவரின் நடத்தை, குணாதிசயங்களை கணித்திட முடியும் என்கிறார்கள், வல்லுனர்கள். `சாப்பாட்டு மேஜையில் குளறுபடியானவராகவும், பிரச்சினைக்குரியவராகவும் நடந்து கொள்பவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார்' என்கிறார், புகழ்பெற்ற மேலை நாட்டு எழுத்தாளர் ஒருவர். `உணவைப் பெறுவது, சாப்பிடுவது போன்ற விஷயங்களில் சீடர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்தே அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை அறிந்து, தனக்கான சீடர்களை அந்த காலத்தில் முனிவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்' என்கிறார், டெல்லியைச் சேர்ந்த பிரபல நட்சத்திர ஹோட்டல் `செப்' மஞ்சித் எஸ்.கில்.

    "முடியும்..! அதனால்தான் இன்று நிறைய பேர் மாப்பிள்ளை, பெண் பார்ப்பதற்கு பிரபலமான ரெஸ் டாரண்ட்களை தேடி வருகிறார்கள்"- என்கிறார், சேமியர்ஸ் டஸ்கானா ரெஸ்ட்டாரண்ட் டின் விபின் சச்தேவ்.

    அவரே ருசிகரமான சம்பவம் ஒன்றையும் விளக்குகிறார்.

    "பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக குன்னூர் சென்றோம். வெளியூரில் உள்ள மாப்பிள்ளை பையன், அங்குள்ள உயர்தர ஹோட்டலுக்கு வந்தார். பெண் வீட்டு சார்பில் நாங்கள் ஏழெட்டு பேர் அங்கு சென்றி ருந்தோம்.

    மாப்பிள்ளை பையனும், பெண்ணும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பையனை, பெண்ணின் அம்மா உற்று கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது உணவு ஆர்டர் எடுப்பதற்காக `வெயிட்டர்' வந்தார். சீருடையில் வந்த அவரைப் பார்த்ததும் மாப்பிள்ளை பையன் ஏதோ பொறிதட்டியதுபோல் அருகில் சென்று விசாரித்தார். பின்பு இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். இருவரும் பள்ளித் தோழர்களாம். பத்து வருடத்திற்குப் பிறகு அவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.

    வெயிட்டரை தனது பால்ய நண்பன் என்று எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்த மாப்பிள்ளை பையன், யார்- யாருக்கு என்னென்ன உணவு தேவை என்பதைக் கேட்டு, சில உணவுகளைப் பற்றி விளக்கமும் கொடுத்தார். சிறிது நேரத்தில் உணவு வந்தது.

    தனது நண்பன் கொண்டுவந்த உணவு பிளேட்களை தானே வாங்கி, அங்கே இருந்தவர்களில் வயதானர்களுக்கு முதலில் தனது கையாலே கொடுத்தார். வரிசையாக ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு, அந்தப் பெண்ணுக்கும் கொடுத்துவிட்டு கடைசியில் தனக்கு எடுத்துக்கொண்டார்.

    பேசிக்கொண்டே நிதானமான எல்லோரும் சாப்பிட்டார்கள். ஒவ்வொரு உணவாக சுவை யறிந்து அந்த பையன் சாப்பிட்டார். தேவையான அளவு மட்டுமே உணவினை எடுத்துக் கொள்ளவும் செய்தார். அனைவருக்கும் என்னென்ன தேவை, எல்லோரும் சாப்பிடு கிறார்களா என்றும் கவனித்துக்கொண்டார். எல்லோரும் சாப்பிட்டு முடித்தார்கள்.

    அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணின் அம்மாவிடம் நான், `என்ன பையனைப் பிடித்திருக்கிறதா?' என்று கேட்டேன். `அவர் நட்புக்கு கொடுத்த மரியாதை, உணவை ஆர்டர் செய்த விதம், மற்றவர்களுக்கு முதலில் பரிமாறியது எல்லாமே பக்குவமான பையனாகக் காட்டியது. அருகில் இருக்கும் ஒவ்வொருவர் சாப்பிடுவதையும் கவனித்து, அவர்களுக்கு தேவையானவைகளை எடுத்துக்கொடுத்தார். அவர் நிதானமாக சாப்பிட்ட முறையும், மேஜையில் நடந்துகொண்ட விதமும் அவரை பொறுப்புள்ளவனாக காட்டியது. அதனால் எனக்கு பையனை பிடித்துவிட்டது' என்றார். மகளும் அதையே சொல்ல, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அந்த திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

    இந்த உண்மையை நம்ம ஊர் முனிவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து சீடர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதனால்தான் இப்போது பெரும்பாலானவர்கள் பெண் பார்ப்பதற்கும், மாப்பிள்ளை பார்ப்பதற்கும் ஹோட்டலுக்கு வந்துவிடுகிறார்கள். பையனோ, பெண்ணோ எப்படிப்பட்டவர்கள் என்பதை சாப்பிடும் விதத்திலே அறிந்து கொள்கிறார்கள்…" என்று கூறும் விபின் சச்தேவ், சாப்பிடும் விஷயத்தை வைத்து ஒருவரை எப்படி கணிக்கவேண்டும் என்ற டிப்சையும் தருகிறார்.

    * ஹோட்டலுக்குள் வந்து சவுகரியமாக அமர்ந்துகொண்டு, உபசரிக்க வரும் வெயிட்டரிடம் அன்பாக அணுகி, உணவு பற்றி விசாரிக்கிறவர்கள் `ஈகோ' எதுவும் இன்றி எல்லோரையும் சமமாக மதிக்கும் எண்ணம் கொண்டவராக இருப்பார்.

    * மெனு கார்டை வாங்கி நிதானமாகப் பார்த்து ஒவ்வொரு உணவைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டு, உணவுகளை ஒருவர் தேர்ந்தெடுக்கிறார் என்றால் அவர் எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர் என்பதும், எதையும் ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் எண்ணம் கொண்டவர் என்பதையும் உணர்ந்துகொள்ளலாம்.

    * ஒரே ஹோட்டலுக்கு தொடர்ந்து வந்தாலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவை ருசிக்கும் தன்மை கொண்டவர்கள் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    * அளவோடு வாங்கி, மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுபவர் திட்டமிட்டு செயல்படக்கூடிய சிக்கனவாதி என்பதை தெரிந்துகொள்ளலாம். அதையும் மீறி மிச்சம் வந்தாலும் அதை, `பேக் செய்து தாருங்கள். வீட்டுக்கு கொண்டு செல்கிறேன்' என்பவர் காரியவாதி.

    * நன்றாக மென்று சாப்பிடுபவர்கள் நிதானமானவர்கள். அவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை ஆழமாக சிந்தித்துதான் செயல்படுவார்கள்.

    * நண்பர்களோடு வந்து, அவர்களையும் நன்றாக கவனித்து- தேவைப்பட்டால் பங்கிட்டு உண்பவர்களிடம் ஒருங்கிணைந்து செயல்படும் ஆற்றல் இருக்கும். சுயநலம் குறைவாக இருக்கும்.

    - இப்படி வெகுநீளமாக `மனோதத்துவ' ரீதியான கணிப்பு உண்மைகளை வெளியிடும் இவர், "இந்திய உணவகங்கள் மன அழுத்தத்தை அகற்றும் மையங்களாக செயல் படுகின்றன. ஒரு நாள் முழுவதும் பல்வேறு மன அழுத்தத்தில் வேலை பார்ப்பவர்கள் அதை எல்லாம் அகற்ற வேண்டும் என்றால் பேச வேண்டும், ருசிக்க வேண்டும், மகிழ வேண்டும். அதற்காக அவர்கள் ஹோட்டல்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால் ஹோட்டல்களின் பொறுப்புகள் சுவையான உணவு வழங்குவது மட்டுமல்ல, அதையும் தாண்டி உறவுகளை மேம்படுத்தி மனிதர்களின் மன உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்து கிறது. இந்தியாவில் உணவுப் புரட்சி ஏற்பட இதுதான் முக்கிய காரணம்.." என்கிறார்.

    ***

    `சாப்பிடும் முறையில் குணங்கள் தெரியும்..'

    சாப்பிடுபவர்களின் குணநலன்களை அறிவது பற்றி சவேரா ஹோட்டலின் மக்கள் தொடர்பு மேலாளர் நவோமியிடம் சில கேள்விகள்:

    ஆத்திரம், அவசரம், கோபம் கொண்டவரை, அவர் சாப்பிடும் முறையில் கண்டு பிடித்துவிட முடியுமா?

    "முடியும். ஹோட்டலுக்கு வரும் ஒருவர் பசியுடன், அவசரமாக ஆர்டர் கொடுத்தால் அவரது முக பாவனை செயல்பாடுகளை வைத்து அவர் விரைவாக சாப்பிட்டுவிட்டு செல்ல விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ளலாம். அவர் பிசியான மனிதராகவும் இருக்கலாம். சாப்பாட்டு மேஜை யில் கோபமாக ஒருவர் நடந்துகொள்கிறார் என் றால் அவரிடம் சுயநலம் இருக்கும். தன்னை மற்றவர்கள் கவனிக்கவேண்டும் என்று விரும்பு கிறவர்களும் கோபத்தைக் காட்டுவார்கள். அவர் களுக்கு பொறுமை இருக்காது. மற்றவர்களின் உணர்வு களை புரியத் தெரியாதவர்களாகவும் இருப்பார்கள். கோபதாபம் எதுவும் இன்றி அமைதியான மனதுடன் இருப்பவர் உணவை ரசித்து, ருசித்து சாப்பிடுவார். ஒரு வெயிட்டரால் தனது வாடிக்கையாளர் என்ன குண நலன்களை கொண்டவர் என்பதை அறிந்திட முடியும். மற்றவர்களாலும் முயன்றால் முடியும்"

    ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவர், பட்ஜெட் போட்டு செலவிடுபவர்களை எப்படி கண்டறிவது?

    "ஒரு விருந்தாளி மெனுவில் உள்ள உணவுப் பொருட்களின் விலையைப் பார்த்துக் கொண்டே தேர்வு செய்தால் அவர் பட்ஜெட் போட்டு வாழ்பவராக இருக்கலாம். எந்த வகை உணவை தேர்வு செய்கிறார் என்பதை வைத்து அவர் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத் துவம் கொடுப்பவரா அல்லது ருசிக்கு முக்கியத்துவம் கொடுப்பவரா என்பது தெரிந்து விடும். விலை, தயாரிப்பு முறை, ஆரோக்கியம் என்று எதையும் பார்க்காமல் தாராளமாக ஒருவர் ஆர்டர் கொடுக்கிறார், செலவிடுகிறார் என்றால் அவர் தனக்கு மிக முக்கிய மானவர்களை ஹோட்டலுக்கு அழைத்து வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளலாம்"

    தானாகவே ஆர்டர் செய்பவருக்கும், வெயிட்டரிடம் ஆலோசனைகேட்டு ஆர்டர் கொடுப்பவருக்கும் மனதளவில் என்ன வித்தியாசம் இருக்கும்?

    "பயண அனுபவம் கொண்டவர்கள் குறிப்பிட்ட உணவை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த உணவை அவர் வெளிநாடுகளில் ஏற்கனவே சாப்பிட்டிருக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட உணவுகளை வாங்கி விதவிதமாக ருசிப்பவர்கள் உணவுப் பிரியர்களாக இருப் பார்கள். வெயிட்டரிடம் ஆலோசனை கேட்டு விபரங்கள் தெரிந்துகொண்டு ஆர்டர் செய்கிற வர்களிடம், அதுஅதற்குரியவர்களிடம் கருத்துக் கேட்டு முடிவுசெய்யும் குணம் இருக்க வாய்ப்பிருக்கிறது"

    சிறந்த வளர்ப்புமுறை, நாகரீகம் போன்றவை ஒருவரிடம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அவர் சாப்பிடும் முறையில் கண்டறியலாமா?

    "சாப்பாட்டு மேஜையில் ஒருவர் வந்து அமர்வது முதல், அவர் சாப்பாட்டை முடித்துவிட்டு எழுந்து செல்வதுவரையிலான அனைத்து விஷயங்களையும் கூர்ந்து கவனித்தால் அவரு டைய வளர்ப்புமுறை, நாகரீகம், குணநலன், இயல்பு, மற்றவர்களுக்கு மதிப்பு கொடுக்கும் மனநிலை போன்ற அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். சாப்பிட்டு முடிந்த பின்பு வெயிட்டருக்கு நன்றி தெரிவிப்பதும், உணவின் சுவையைப் பற்றி பாராட்டுவதும் ஒருவரிடம் இருந்தால் அவரிடம் எல்லோரையும் மதிக்கும் பண்பு இருக்கும். அவர் எங்கே திறமை இருந்தாலும் அதை தேடிவந்து பாராட்டுபவராக இருப்பார்.

    இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. கனிவான உபசரிப்பு என்ற கலையில் இந்தியா உலகிற்கே முன்னோடி. ஒருவர் என்ன மனநிலையில் சாப்பிட வருகிறார் என்றாலும், அவரை நல்ல மனநிலைக்கு மாற்றும் விதத்தில் அன்புடன் நாம் செயல்படுவதால்தான், இந்திய ஹோட்டல் உணவுத்துறை உலக அளவில் பெருமைக் குரியதாக இருக்கிறது.."-என்கிறார்.

    நன்றி-தினத்தந்தி




    http://tamilhot.blogspot.com




  • http://tamilhot.blogspot.com


  • [Continue reading...]

    கலைஞர் “டிவி’ சொ���்து பறிமுதலுக்கு அமலாக்கத்துறை ���ீவிரம்

    - 0 comments


    ஸ்பெக்ட்ரம் ஊழலில், கலைஞர் "டிவி'யுடன் நடந்த பணப் பரிமாற்றத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு, அமலாக்கத் துறை விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சலுகை பெற்ற, டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தின் உரிமையாளரான ஷாகித் பல்வாவும் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றதற்கு கைமாறாக, டி.பி.ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து சினியுக் நிறுவனம், குசிகான் பழ நிறுவனம் வழியாக, கலைஞர் "டிவி' க்கு 214 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இது தொடர்பாக, விசாரணை நடத்திய சி.பி.ஐ., கலைஞர் "டிவி' நிறுவனத்தில் சோதனை நடத்தியது.

    வரி ஏய்ப்பு செய்து, சட்ட விரோத பண மாற்றம் செய்யும் நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், டி.பி.,ரியாலிட்டி நிறுவனம் முதல், கலைஞர் "டிவி' வரையில் நடந்த பண பரிமாற்றத்தில் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய, அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. விரைவில், இது தொடர்பான உத்தரவை, அமலாக்கத்துறை பிறப்பிக்க உள்ளது. இதையடுத்து, டி.பி.ரியாலிட்டி, சினியுக், குசிகான், கலைஞர் "டிவி', சொத்துக்களை பறிமுதல் செய்ய, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன



    http://tamilhot.blogspot.com




  • http://tamilhot.blogspot.com


  • [Continue reading...]

    துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவத���? ஹசாரே ஆவேசம்

    - 0 comments


    ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வருகிறேன். ஒருவேளை நான் இறந்தால், அது நாட்டு நலனுக்காகத் தான் இருக்கும்' என, அன்னா ஹசாரே உணர்ச்சிகரமாக பேசினார். பலமான லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரே பேசியதாவது:

    நான் ஏற்கனவே அறிவித்தபடி, வரும் 30ம் தேதிக்குள், ஜன் லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், போராட்டம் மேலும் தீவிரமாகும். அரசில் அங்கம் வகிக்கும் ஒரு சிலர், எங்களுக்கு துரோகம் செய்து விட்டனர். ஒரு வேளை ஜன் லோக்பால் மசோதா, தாக்கல் செய்யப்பட்டால் கூட, இப்படிப்பட்ட துரோகக்காரர்கள், அரசை நடத்தினால், நாட்டில் என்ன நடக்கும். இந்த கேள்வி தான், எனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது.

    பார்லிமென்ட் நடவடிக்கைகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளன. இது தான், அகிம்சையின் பலம். எங்களின் போராட்டம், தொடர்ந்து வன்முறையற்ற போராட்டமாகவே இருக்கும். நாம் ஏதாவது தவறு செய்தால், நம் போராட்டத்தை அரசு நசுக்கி விடும். நான் நடத்தும் இந்த போராட்டம், இரண்டாவது சுதந்திர போராட்டம். நாட்டு மக்களுக்கு இன்னும் உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால் தான், இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.

    என் உடல் நிலை நன்றாக இருக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்க முடியும். என் உடல் எடை குறைந்திருக்கிறது. இதைத் தவிர வேறு பிரச்னை எதுவும் இல்லை. சிலர், மாரடைப்பால் இறக்கின்றனர். இரவு 10 மணிக்கு தூங்கப் போனால், காலையில் எழுந்திருப்பது இல்லை. ஆனால், நான் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறேன். ஒருவேளை நான் இறந்தால், அது நாட்டு நலனுக்காகத் தான் இருக்கும். இவ்வாறு ஹசாரே பேசினார்.



    http://tamilhot.blogspot.com




  • http://tamilhot.blogspot.com


  • [Continue reading...]

    நிஜத்திலும் ஹீர��வான கஞ்சா கருப்பு!

    - 0 comments


    சினிமா ஹீரோ போல், நிஜத்திலும் ஹீரோவாக திகழ்ந்திருக்கிறார் நடிகர் கஞ்சா கருப்பு. கவுண்டமனி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட காமெடி நடிகர்களை தொடர்ந்து, நடிகர் கஞ்சா கருப்புக்கும் ஹீரோ ஆசை வந்து, தற்போது "மன்னார் வளைகுடா" என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருவதும், படத்தின் சூட்டிங் ரா‌மேஸ்வரம் பகுதிகளில் நடித்து வருவதும் அனைவரும் அறிந்த ‌செய்தியே. இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் டெக்னீசியன் ஒருவருக்கு எதிர்பாராமல் தலையில் அடிபட்டு, மண்டை ஓடு வெளியே தெரியும் அளவிற்கு பலத்த காயம் ஏற்பட, உடனே படத்தின் ஹீரோ கஞ்சா கருப்பு, மற்ற ஹீரோக்களை போல் இல்லாமல், தன்னுடைய சொகுசு காரில், அடிப்பட்ட அந்த நபரை அள்ளிபோட்டு அருகில் இருந்து மருத்துவ‌மனையில் முதல் உதவி கொடுத்துள்ளார். பின்னர் ரா‌மேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு வேகமாக தன்னுடைய காரில், அந்த நபரை அழைத்து வந்து தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.



    http://tamilhot.blogspot.com




  • http://tamilhot.blogspot.com


  • [Continue reading...]

    இசைபட

    - 0 comments


    அத்தியாயம் 16 மக்கள் 100 வருடமாக ஆட்டோமொபைல்கள் தயாரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதை வைத்து பார்த்தால் கம்புயூட்டர்கள் இன்னும் தவழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. கம்புயூட்டர்கள் இன்னும் அடைய வேண்டிய பரிமாண வளர்ச்சியைவே எட்டிப் பிடிக்கவில்லை. கம்புயூட்டர்கள் இன்னும் கண்றாவியாகத் தான் இருக்கின்றன.இதில் சரி செய்ய வேண்டியதே இன்னும் அதிகமாக இருக்கிறது. டெல் போன்றவர்கள் கம்பெனிகளுக்கு கம்புயூட்டரை விற்கிறார்கள், சோனி மக்களுக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்கிறார்கள். அது போல மக்களுக்கு தேவையான கம்புயூட்டர்களை விற்பதே [...]

    http://tamil-friend.blogspot.com




  • http://tamil-friend.blogspot.com


  • [Continue reading...]

    கனிமொழி என்ன சொல���றாங்கன்னா.......

    - 0 comments



    ஸ்பெக்ட்ரம் ஊழல் : பிரதமர், சிதம்பரம் மீது கைகாட்டுகிறார் கனிமொழி...!!!

    [[அப்போ ராசா அண்ணாச்சி....???]]


    அ.தி.மு.க., அரசின் 100 நாள் ஆட்சி: கட்சிகள், மக்கள் மதிப்பீடு என்ன?

    [[சமசீர் கல்வியில ஆப்பு]]


    கலைஞர் "டிவி' சொத்து பறிமுதல் : அமலாக்கத்துறை தீவிரம்...!!

    [[அப்பிடியே தாத்தாவையும் கஸ்டடியில எடுங்க, உடன்பிறப்புக்கு கடிதம் எழுதியே திமுக'வை அழிச்சிருவர் போல தெரியுது..!!!]]


    தமிழ் புத்தாண்டு மாற்றம் : கருணாநிதி கண்டனம்...!!

    [[அடங்கும்ய்யா ஏற்காட்டில் போயி ரெஸ்ட் எடுக்குற வழியை பாக்குறது]]


    சென்னை:அன்னா ஹசாரேக்கு ஆதரவாக, தமிழ்த் திரையுலகத்தின் சார்பில், சென்னையில்  உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளவில்லை......!!!


    [[ஐயோ  ஐயோ உடம்புல வெயில் பட்டுறபோகுது]]


    துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம்... 

    [[சோனியாவை அருமையா வாரிவிட்டார் சூப்பர்ப்]]


    பாட்னா: லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவோர் பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு, அரசு சார்பில் 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என, பீகார் அரசு அறிவித்துள்ளது.....!!!

    [[உடனே நாஞ்சில்மனோ பீஹார் கிளம்புறார் ஹி ஹி]]


    [[சிங்[டி]க்கு வேற வழி....??!!! சோனியா கண்ணை மூடியாச்சு....]]


    [[முடிவா தொடரா....?? எவனை நம்புனாலும் காங்கிரஸ்'காரனை நம்ப முடியாதுப்பா ஜாக்குரதை]]


    டிஸ்கி : ஆயிரம் பதிவு போடுரவனுக்கெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை, ஒரு பதிவை நான் போட படும் பாடு இருக்கே........முடியல........

    நன்றி : தினமலர்.


    http://maangaai.blogspot.com




  • http://maangaai.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger