Wednesday, 24 August 2011

துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவத���? ஹசாரே ஆவேசம்



ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வருகிறேன். ஒருவேளை நான் இறந்தால், அது நாட்டு நலனுக்காகத் தான் இருக்கும்' என, அன்னா ஹசாரே உணர்ச்சிகரமாக பேசினார். பலமான லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரே பேசியதாவது:

நான் ஏற்கனவே அறிவித்தபடி, வரும் 30ம் தேதிக்குள், ஜன் லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், போராட்டம் மேலும் தீவிரமாகும். அரசில் அங்கம் வகிக்கும் ஒரு சிலர், எங்களுக்கு துரோகம் செய்து விட்டனர். ஒரு வேளை ஜன் லோக்பால் மசோதா, தாக்கல் செய்யப்பட்டால் கூட, இப்படிப்பட்ட துரோகக்காரர்கள், அரசை நடத்தினால், நாட்டில் என்ன நடக்கும். இந்த கேள்வி தான், எனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது.

பார்லிமென்ட் நடவடிக்கைகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளன. இது தான், அகிம்சையின் பலம். எங்களின் போராட்டம், தொடர்ந்து வன்முறையற்ற போராட்டமாகவே இருக்கும். நாம் ஏதாவது தவறு செய்தால், நம் போராட்டத்தை அரசு நசுக்கி விடும். நான் நடத்தும் இந்த போராட்டம், இரண்டாவது சுதந்திர போராட்டம். நாட்டு மக்களுக்கு இன்னும் உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால் தான், இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.

என் உடல் நிலை நன்றாக இருக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்க முடியும். என் உடல் எடை குறைந்திருக்கிறது. இதைத் தவிர வேறு பிரச்னை எதுவும் இல்லை. சிலர், மாரடைப்பால் இறக்கின்றனர். இரவு 10 மணிக்கு தூங்கப் போனால், காலையில் எழுந்திருப்பது இல்லை. ஆனால், நான் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறேன். ஒருவேளை நான் இறந்தால், அது நாட்டு நலனுக்காகத் தான் இருக்கும். இவ்வாறு ஹசாரே பேசினார்.



http://tamilhot.blogspot.com




  • http://tamilhot.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger