சினிமா ஹீரோ போல், நிஜத்திலும் ஹீரோவாக திகழ்ந்திருக்கிறார் நடிகர் கஞ்சா கருப்பு. கவுண்டமனி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட காமெடி நடிகர்களை தொடர்ந்து, நடிகர் கஞ்சா கருப்புக்கும் ஹீரோ ஆசை வந்து, தற்போது "மன்னார் வளைகுடா" என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருவதும், படத்தின் சூட்டிங் ராமேஸ்வரம் பகுதிகளில் நடித்து வருவதும் அனைவரும் அறிந்த செய்தியே. இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் டெக்னீசியன் ஒருவருக்கு எதிர்பாராமல் தலையில் அடிபட்டு, மண்டை ஓடு வெளியே தெரியும் அளவிற்கு பலத்த காயம் ஏற்பட, உடனே படத்தின் ஹீரோ கஞ்சா கருப்பு, மற்ற ஹீரோக்களை போல் இல்லாமல், தன்னுடைய சொகுசு காரில், அடிப்பட்ட அந்த நபரை அள்ளிபோட்டு அருகில் இருந்து மருத்துவமனையில் முதல் உதவி கொடுத்துள்ளார். பின்னர் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு வேகமாக தன்னுடைய காரில், அந்த நபரை அழைத்து வந்து தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
http://tamilhot.blogspot.com
http://tamilhot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?