ஊழலுக்கு எதிரான அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது அதே நேரம் அன்னா ஹசாரேவின் மக்கள் லோக்பால் மசோதாவை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் டெல்லி மேல் சபை துணைத் தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியாக அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஊழலுக்கு எதிராக அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் வரைவு மசோதா மிகவும் பல வீனமானது. இதை வைத்தே ஊழலை ஒழிக்க, ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஆர்வம் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். அதேபோல, அன்னா ஹசாரே குழுவினர் தயாரித்துள்ள மக்கள் லோக் பால் மசோதாவையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த மசோதாவிலும் நிறைய குறைபாடுகள் உள்ளன.
லோக்பால் மசோதாவை வருகிற 30 ந்தேதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹசாரே கால நிர்ணயம் செய்து எச்சரிக்கை விடுத்திருப்பதும் ஏற்புடையது அல்ல. இந்த விஷயத்தில் அவருக்கு பாரதீய ஜனதா ஆதரவு அளிக்காது.
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி எம்.பி.க்கள் முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் என்று ராம்லீலா மைதானத்தில் இருந்து (ஹசாரே) அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கட்சியின் எம்.பி.க்களும் அந்த கட்சியின் கொறடாவின் கட்டுப்பாட்டில் உள்ளனர். எனவே, கொறடாவின் அனுமதி இல்லாமல் இதை செய்ய முடியாது என்பது அவர்களுக்கு தெரியாமல் போனது எப்படி என்று தெரியவில்லை.
அரசின் லோக்பால் மசோதா பலவீனமானது என்பதால், அதை திரும்ப பெற வேண்டும். அதற்கு பதிலாக வேறொரு லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும். லோக்பால் மசோதா அதிகார வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டு வர வேண்டும். என்பதே பாரதீய ஜனதாவின் விருப்பம். ஆனால், அரசு கொண்டுவந்துள்ள லோக்பால் விரைவு மசோதாவில் இந்த அம்சம் இடம் பெற வில்லை.
ஹசாரே குழுவினர் கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதாவில் பல பிரிவுகள் 100 சதவிகிதம் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக உள்ளன. அதே சமயம், சில அம்சங்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன. அந்த பிரிவுகளை திருத்தி மேம்படுத்த முடியும். இன்னும் சில அம்சங்கள் முற்றிலும் எற்றுக் கொள்ள முடியாதவை இந்த மசோதாவும் முழுமையானது அல்ல. எனவே தான் ஹசாரே குழுவினர் தயாரித்துள்ள லோக்பால் மசோதாவை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
http://tamil-joke-sms.blogspot.com
http://tamil-joke-sms.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?