Monday 16 September 2013

கர்நாடகாவில் இளம்பெண்ணை கற்பழித்து பீரோவில் பூட்டி வைத்த கொடுமை Young woman molested in Karnataka

- 0 comments
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பென்னிபுராமோளே பகுதியை சேர்ந்தவர் ரோஜா(வயது 17) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பி.யூ.சி. முதலாண்டு படித்து உள்ளார். இவருக்கு தாய் மட்டும் உள்ளார். தந்தை ஏற்கனவே இறந்து விட்டார்.

ரோஜா தினமும் இரவு அதே பகுதியில் உள்ள தனது சித்தி சாக்கம்மாவின் வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கம். அதேபோல், நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ரோஜா சாப்பிட்டுவிட்டு தனது சித்தி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

ரோஜாவின் சித்தி வீட்டுக்கு அருகே நாகேஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். அவர் கூலி தொழிலாளி. ஏற்கனவே திருமணம் ஆனவர். ரோஜா தனது சித்தி வீட்டுக்கு அருகே நடந்து வந்தபோது, அவரை நாகேஷ் வழிமறித்து சத்தம்போடவிடமால் வாயில் துணியை திணித்து தனது வீட்டுக்குள் இழுத்து சென்றார்.

பின்னர் ரோஜாவை நாகேஷ் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதில், ரோஜா மயங்கி விழுந்தார். அவர் மயக்கம் தெளிந்து வெளியே சென்றால் பிரச்சினை ஆகி விடும் என்று கருதிய நாகேஷ், அவரை பீரோவில் வைத்து பூட்டி விட்டார்.

இந்த நிலையில், ரோஜா தனது வீட்டுக்கு வராததால் சித்தி சாக்கம்மா மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரோஜாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது நாகேஷ் தான் இரவில் ரோட்டில் நடமாடியதாக சிலர் தெரிவித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த ரோஜாவின் உறவினர்கள், நாகேசின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அப்போது பீரோவின் உள்ளே இருந்து தட்டும் சத்தம் கேட்டது. இதனால் பீரோவை திறக்கும்படி நாகேசிடம் அவர்கள் கூறினார்கள்.

ஆனால், அதற்கு மறுத்த நாகேஷ் சாவியை வெளியூருக்கு சென்று உள்ள தனது மனைவி கொண்டு சென்று விட்டதாக கூறினார். ஆனாலும், அவர்களுக்கு சந்தேகம் அதிகமானால் பீரோவின் கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ரோஜா மிகவும் சோர்ந்து போய் இருந்தார். அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சாம்ராஜ்நகர் டவுன் போலீசில் ரோஜாவின் சித்தி சாக்கம்மா புகார் செய்தார். அதன்பேரில், நாகேஷ் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு பிரிவுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்சார் அலி வழக்கு பதிவு செய்தார்.

பின்னர் நாகேசை பிடிக்க போலீசார் பென்னிபுராமோளேவுக்கு சென்றனர். ஆனால், அதற்குள் நாகேஷ் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே, ரோஜாவுக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

இளம்பெண்ணை மணமான ஒரு நபர் கற்பழித்ததோடு பீரோவில் வைத்து பூட்டிய சம்பவம் பென்னிபுராமோளே கிராமத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
[Continue reading...]

விடைத்தாள்களில் டம்மி நம்பருக்கு பதிலாக ரகசிய குறியீடு: அரசு தேர்வுத்துறை விரைவில் அறிமுகம் dummy number instead of secret code number government select department introduction soon

- 0 comments

விடைத்தாள்களில் டம்மி நம்பருக்கு பதிலாக ரகசிய குறியீடு: அரசு தேர்வுத்துறை விரைவில் அறிமுகம் dummy number instead of secret code number government select department introduction soon

Tamil NewsYesterday,

சென்னை, செப்.17- எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்போது எந்தவித முறைகேடும் நடக்காமல் தடுக்க அந்த விடைத்தாள்களுக்கு டம்மி நம்பர் கொடுக்கப்படுவதற்கு பதிலாக யாரும் அறியாத வகையில் ரகசிய குறியீடு வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அரசு பொதுத்தேர்வுகளாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 2014-2015-ம் ஆண்டு ரத்து செய்யப்படும் என்று வதந்தி பரவுகிறது. ஆனால் எந்த தேர்வும் ரத்து செய்யப்படமாட்டாது. இப்போது போல அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் ஆகியோர் ஏற்கனவே உறுதி அளித்திருந்தனர். பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களில் தமிழ், ஆங்கிலம் தவிர கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட 10 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் எந்த தவறும் நடக்கக்கூடாது என்பதற்காக மாணவர்கள் எழுதிய தேர்வு பதிவு எண்ணை அகற்றிவிட்டு டம்மி நம்பர் கொடுக்கப்படும். இதனால் எந்த விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்காக எங்கு செல்கிறது என்பதை கண்டறிவது சிரமம். இருப்பினும் அந்த தாளை பின்பற்ற முடியும் என்ற நிலை உள்ளது. எனவே டம்மி நம்பருக்கு பதிலாக தேர்வர்களின் விடைத்தாளிலேயே ரகசிய கோடு முதலிலேயே பிரிண்ட் செய்யப்படும். இந்த குறியீட்டை சாதாரணமாக யாரும் காணமுடியாது. அதை கம்ப்யூட்டர் மூலம்தான் அறியமுடியும். இதனால் எந்த விடைத்தாள் எங்கு மதிப்பீடு செய்யப்படுகிறது என்ற விவரம் தெரியாது. எனவே ரகசிய குறியீடு கொண்டு வரும் முறையை அமல்படுத்த அரசு தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது. இது விரைவில் உயர் அதிகாரியின் அனுமதி கிடைத்ததும் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த ரகசிய குறியீடு முறையை வருகிற அக்டோபர் மாத தேர்வில் அமல்படுத்தலாமா என்றும் அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள். ...
Show commentsOpen link

[Continue reading...]

லிப் டு லிப் கிஸ் சாதனை படைத்த அமீர்- அனுஷ்கா lip top lip kiss ameeranushka

- 0 comments

முத்தக்காட்சியில் சாதனை படைத்த அமீர்- அனுஷ்கா ஜோடி

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

லிப் டு லிப் கிஸ் காட்சியில் புது சாதனை படைத்துள்ளனர் அமீர்கான் அனுஷ்கா ஜோடி.
3 இடியட்ஸ் படத்துக்கு பிறகு ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படம் பிகே.

இதில் அமீர்கான் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார்.

சமீபத்தில் இருவரும் லிப் டு லிப் கிஸ் கொடுக்கும் காட்சியை ராஜ்குமார் ஹிரானி படமாக்கியுள்ளார்.

இந்த காட்சி புது சாதனையை படைத்துள்ளது.

அதாவது இதுவரை இந்திய சினிமாவில் படமாக்கப்பட்ட முத்தக் காட்சியில் இதுதான் நீளமான முத்தக்காட்சியாம்.

ஏற்கனவே 3 இடியட்ஸ் படத்தில் கரீனா கபூருக்கு முத்தம் கொடுத்து ஆமிர்கான் நடித்திருந்தார்.

இதில் அனுஷ்கா சர்மாவுக்கு நீண்ட முத்தம் கொடுத்து அசத்தியுள்ளாராம்.

இந்த காட்சி படமானதும் படக்குழுவினர் கைதட்டி அமீருக்கும் அனுஷ்காவுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்களாம்.

Show commentsOpen link

[Continue reading...]

இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் நரேந்திர மோடி: அத்வானி புகழாரம் Modi is Eligible to PM candidate Advani tribute

- 0 comments

இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் நரேந்திர மோடி: அத்வானி புகழாரம் Modi is Eligible to PM candidate Advani tribute

Tamil NewsToday,

கோர்பா, செப். 16- இந்தியாவில் வரும் 2014ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு ஆட்சேபனை எழுப்பிய அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எல்.கே.அத்வானி தனது அதிருப்தியை ராஜ்நாத் சிங்கிடம் குறிப்பிட்டார். நேற்று மாலை பிஜேபி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ராம்ஜெத்மலானியின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. அப்போது மோடியும், அத்வானியும் நேருக்குநேர் சந்திக்க நேர்ந்தபோதும்கூட அது இயல்பானதாக இருக்கவில்லை. ராம்ஜெத்மலானி அவர்கள் இருவரையும் அருகருகே அமர வைக்க முயற்சித்தபோதும் அவர்கள் அவரை தங்கள் நடுவில் அமர வைத்தே பேசினர். இந்த நிலையில் இன்று காலை சத்தீஸ்கர் மாநிலத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் நரேந்திர மோடியின் சாதனைகள் குறித்துப் பேசி அத்வானி அவரை புகழ்ந்துள்ளார். உட்கட்டமைப்பு வசதியிலும், மின்சாரத்துறையிலும் குஜராத் அரசு வெகுவாக முன்னேறியுள்ளது என்று அத்வானி கூறினார். தங்கள் கட்சி பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ள நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்திலேயே குஜராத் முன்னேற்றம் கண்டதாகவும் எனவே அவர் இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் என்றும் அத்வானி புகழ்ந்துள்ளார். அத்துடன் நரேந்திர மோடிக்கு மிகப் பெரிய பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் நினைவுறுத்தினார். சென்ற முறை நடைபெற்ற தேர்தலில் பிஜேபி கட்சியின் பிரதமர் வேட்பாளராக அத்வானி தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், தேர்தலில் பிஜேபி தோல்வியைத் தழுவியது. நரேந்திர மோடி தேர்வு குறித்த தனது எதிர்ப்பைத் தெரிவித்த பின்னர் அத்வானி பேசும் முதல் பொதுக்கூட்டம் இதுவாகும். நாளை தனது 63 ஆவது பிறந்த நாளைக் காணும் நரேந்திர மோடிக்கு அத்வானியின் பாராட்டு இன்று கிடைத்துள்ளது. ...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger