ஆணிகள் குறைவாக இருந்ததால், நேற்று இரவு கொஞ்சம் முன்னதாகவே நேரத்திலேயே வீட்டிற்கு திரும்பி விட்டதால் தான் இப்படி ஒரு தலைப்பு வைக்கும் கொடுமை நடந்தது எனக்கு.. சீரீயல் நேரம் என்பதால், இந்தியாவின் தேசிய பொழுதுபோக்கான டிவி பார்த்தலில்; வீட்டிலிருந்தவர்கள் ஏற்கனவே மூழ்கியிருந்தனர்.
ஏதோ ஒரு சீரியல். அதே டிரேட் மார்க் "டொம் டும் டொம்..." பின்ணணி இசையுடன், யாரையோ கவிழ்க்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர் இரு பெண்கள்.( ஏம்மா...பெண்ணுரிமைவாதிகளே.. இப்படி பெண்களே எப்போதும் மற்றவர்களை கவிழ்க்க திட்டம் போடுவதாகவே சீரியல்களில் காட்டுகிறார்களே... இதை கொஞ்சம் கண்டிக்கக்கூடாதா?)
பெரும் போரட்டத்திற்கு பிறகு ரிமோட் என் கைகளுக்கு வந்தது. வழக்கம் போல ரிமோட்டில் "டைப்" அடிக்க துவங்கினேன். வேகமாய் சேனல் மாற்றிக்கொண்டே வந்ததில், விஜய் டிவி வந்தது.
இளந்தொப்பையை மறைக்க வழக்கமாய் பெரியதொரு கோட் அணிந்து வரும் "நீயா நானா" கோபிநாத், சின்னதாய் கறுப்புக்கோட் அணிந்து, சற்று பக்கவாட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சி "நடந்தது என்ன? குற்றமும், பின்ணனியும்" என்றார்கள்.
ஓ... கோபிநாத் பெரிய கோட் போட்டிருந்தால் நீயா நானா.... கறுப்பு கோட் அணிந்திருந்தால் நடந்தது என்ன? பைஜமா போட்டிருந்தால் சூப்பர் சிங்கர்ஸ்....
சரி விஷயத்திற்கு வருகிறேன்.., சில நாள்களுக்கு முன், சூரியனில் உண்டான காந்தபுயல், பூமியை தாக்கியதாம். அதன் காரணமாக ஏற்கனவே காந்தம் போன்று செயல்படும் பூமியின் காந்த விசைக்கோடுகள் பெருத்த மாற்றத்திற்கு உள்ளாகியதாம். இதையெல்லாம் கிராபிக்ஸ் காட்சிகளுடன் வேறு விளக்கினார்கள்.
அடுத்து சொன்ன விஷயம் தான் அதிர்ச்சியில் உறையவைத்து விட்டது. லண்டனில் ஏற்பட்ட கலவரத்துக்கும், அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவுக்கும் சூரியனில் ஏற்பட்ட காந்தப்புயலால், நமது பூமியில் ஏற்படுத்திய மாற்றங்கள் தான் காரணம் என்றார்கள்.
அதாவது காந்தப்புயலின் காரணமாக மனிதர்களின் மனநிலையில் தீவிர மாற்றங்கள் உண்டானது தான் காரணம் என்றார்கள்.
அவர்கள் சொன்னதை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை.
பூமி நெருக்கமான காந்த விசைக்கோடுகளுடன் ஒரு காந்தம் போன்று செயல்படுகிறது என்பது உண்மை தான். சூரியனில் காந்தப்புயல்கள் உண்டாகும் என்பதும் உண்டாகும் என்பது உண்மைதான்.
ஆனால் சூரிய காந்தப்புயல்கள், மனித மனங்களை மாற்றுமா என்பது சந்தேகத்திற்கு உரிய விஷயமாகவே தெரிகிறது. அறிவியலை பொறுத்த வரை எந்த விஷயத்தையும் ஆய்வின் மூலமாக நிருபித்தால் மட்டுமே ஒரு விஷயம் ஏற்றுக்கொள்ளப்படும். ஆய்வு விபரங்களையும் குறிப்பிடவில்லை.
பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில், மனித மனங்களில் மாற்றங்கள் ஏற்படுவது கூட, அறிவியலில் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏன் இப்படி மீடியாவை வைத்துக்கொண்டு பீதியை கிளப்புகிறார்கள் என்று தெரியவில்லை.
தற்கொலைகள், நோய் தீவிரமடைதல், கொடூர விபத்துகள் ஏற்படுதல் போன்றவை பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் அதிகம் நடப்பதாக தமிழகத்தில் பரவலாக நம்பப்படுகிறது. இத்தகைய நம்பிக்கைகளை அதிகப்படுத்துவதற்காகத்தான், தொலைக்காட்சிகள் நிஜம், குற்றம் நடந்தது என்ன போன்ற புலன் விசாரணை நிகழ்ச்சிகளை நடத்துவதாகவே தெரிகிறது.
2012-ல் உலகம் அழியப்போகிறது என்ற பீதி ஏற்கனவே கிளம்பி, குறுஞ்செய்திகள் மூலம் விஸ்ரூபம் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், சூரியனில் 2012-ல் ஏற்பட இருக்கும் காந்த சுனாமி, பூமியை தாக்கி அழிக்கப்போவதாக புதுசா லிங்க் கொடுத்திருக்கிறார்கள் விஜய் டிவி புண்ணியவான்கள்.
(இப்படித்தான் 2000-ல் உலகம் அழியப்போகிறது என்று கிளப்பினார்கள்...நான் கூட, ஒளிந்து கொள்ள பெரியதொரு அட்டைப்பெட்டியை தயார் நிலையில் வைத்திருந்தேன்..ம்ம்ம் ஒண்ணும் நடக்கவில்லை)
டிஸ்கி:
பிரபல விண்வெளி ஆய்வாளர் டாக்டர் ராஜ் பல்தேவ் Two Big Bangs Created the Universe என்ற தலைப்பில் கடந்த 2003ல் ஒரு நூலை வெளியிட்ட புத்தகத்திலிருந்து மேலும் சில தகவல்கள்:
சூரியனிலும் புயல், சோலார் சுனாமி ஏற்படும். இதனை coronal mass ejection என்பார்கள். கடந்த 2005-ம் ஆண்டு மற்றும் 2010-ம் ஆண்டு சூரிய புயல் ஏற்பட்டது.
சூரிய புயலின் வெப்பம் பூமியை நோக்கி வரும் என்பது உண்மைதான்.ஆனால் பூமிக்கு மேல் இருக்கும் காற்று மண்டலம் உள்பட பல மண்டலங்களை தாண்டிதான் இந்த சூரிய புயல் பூமிக்கு வர வேண்டும். அத்தனை மண்டலங்களும் இந்த சூரிய புயல் வேகத்தின் தாக்கத்தை குறைத்து விடும். மேலும் பூமியை சுற்றி காந்த வளையம் உள்ளது. இந்த சக்தி வெப்பத்தை பூமிக்கு வரவிடாமல் தடுத்து விடும்.
பூமியின் காந்த வளையத்தை அது அடையும்போது வெப்பக் கதிர் வீச்சு புவி காந்தப் புயலாக (geomagnetic storm) மாறும்.
இதனால் செயற்கைக்கோள்கள் முற்றாக அழியக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. தகவல் தொடர்பு முற்றிலும் சீர்குலையும். அதாவது மின்ணனு சாதனங்கள் அனைத்தும் செயல் இழக்ககூடும்.
http://girls-stills.blogspot.com
http://girls-stills.blogspot.com