முஸ்கி:
இந்த வார வேட்டையில் சிக்கிய சிறந்த ட்விட்டுகளின் தொகுப்பு இது.
இதனில் சிறந்த ஒன்றினை தெரிவு செய்து, பின்னூட்டத்தில் தர முடியுமா உங்களால்...
@g_for_guru
தமிழகத்தில் 50 டுவீலர் வரிசையா ரோடு ஓரமா நின்னா அங்க ஒரு TASMAC இருக்குன்னு அர்த்தம்!!
@minimeens
மனைவியின் ஐந்து மிஸ்டு கால்களை மொபைலில் பார்க்கும் தருணத்தை விட கலவரமான தருணம் வாழ்க்கையில் வர வாய்ப்பில்லை.!
@drkvm
அப்படியே சரவண பவன்ஹோட்டலையும் ரெய்டு பண்ணுங்க சாமி # தோசை 90 ரூபா
@thirumarant
பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? #லோக்பால் vs ஜன்லோக்பால்..,
@thoatta
முதலாளியை குறை கூறாத ஒரே தொழிலாளி பாரத பிரதமர் மட்டும்தான்.!
@jyovram
சுட்டால் பொன் சிவக்கும் என்பதற்கு துப்பாக்கியால் சுடுவதைப் போன்று ஆக்ஷன் செய்யும் எஸ்ஜே சூர்யாவை என்ன செய்யலாம் :-)
@thunichal
எமதர்மனுக்கு கருப்பு எருமையும், காமதேனுவுக்கு வெள்ளை பசுவும் கொடுத்திலிருந்தே ஆரம்பித்துவிட்டது நமது வெள்ளை மோகம்.
நடிப்புதான் என்று தெரிந்து விடாமல் எல்லோரிடமும் நடிக்கிறேன்... ஆனால் என்னிடம் மட்டும் என்னால் நடிக்க முடியவில்லை ...
கூட்டுக்குடித்தனம்னா மனைவியுடன் வாழ்வது , தனிக்குடித்தனம்னா மனைவியைப்பிரிஞ்சு வாழ்வது # 2011
@arasu1691
பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளில் கொடுமையானது ''ஆப்-பாயில்'' சாப்பிட வாய்ப்பு வழங்காதது #முனியாண்டிவிலாஸ்சிந்தனைகள்
அன்புள்ள கலைஞருக்கு, ஆனந்தி எழுதுவது.. அழகான பெரிய ஆஸ்பித்திரிக்கு நன்றி.. பிரமாண்ட மருத்துவக் கல்லூரிக்கு நன்றி!
@Kaniyen
மனைவி பேச ஆரம்பித்தவுடன், ரேடியோவை நிறுத்திவிடுகிறேன் ! ஒரே நேரத்தில் ரெண்டு எப்.எம்மை கேட்கும் சக்தி இல்லையென்பதால் !
மனைவி பேச ஆரம்பித்தவுடன், ரேடியோவை நிறுத்திவிடுகிறேன் ! ஒரே நேரத்தில் ரெண்டு எப்.எம்மை கேட்கும் சக்தி இல்லையென்பதால் !
இலங்கையில் மகிந்த ராஜபக்சவ பூச்சாண்டி எதும் புடிச்சிட்டுப் போய்டுச்சா!? 'கோத்தபய' மட்டுமே வம்பிழுத்திட்டிருக்கான்.
மேனேஜர்-க்கு பிடிச்ச மாதிரி நடதுங்கரத விட மேனேஜர்-க்கு பிடிச்ச பொண்ணுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கறவன் தான் புத்திசாலி ...
மத்திய அரசு, ராம்தேவை அன்னாவாக நினைத்ததும், அன்னாவை ராம்தேவாக நினைத்ததும், மிகப் பெரிய சறுக்கல்.
அம்மா...போரடிக்கிறது! அமைச்சர்களை எதாவது செய்யுங்க!
பெற்றோர், மனைவி, மக்கள் தாண்டி ஹவுஸ் ஓனருக்கும் மெஸ் ஓனருக்கும் சேர்த்து சம்பாதிக்கிறான் ஐ.டி இளைஞன்.!!!
சோனியா நலமாக உள்ளார்:ராகுல் தகவல்...# நானும்/நாடும் நலமாக இருக்கிறோம,பொறுமையாக வரவும்-சிங் ரிப்ளை!
தாசில்தார் வீட்டு நாய் செத்தால் எல்லாரும் வருவாங்க; அதுவே தாசில்தார் செத்தால் ஒரு நாயும் வராது # யதார்த்தம்
இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் இனத்தில் இருந்து ஒரு பிரதமர் உருவாக முடிகின்றது ஏனோ தமிழனுக்கு மட்டும் இன்னமும் விடியவில்லை
மனைவி எடுத்த பத்தாவது புடவைக்கு பணம் செட்டில் பண்ணும்போது அம்மா புடவையின் கிழிசல் ஏனோ ஞாபகம் வருகிறது...
புலி பூனையானதை நீங்க பார்த்திருக்கீங்களா? நான் பார்த்திருக்கேன். அவர் பெயர் விஜயகாந்த்.
சுற்றியிருப்பவர்களிடம் நம் மீதான மரியாதை கூடும் போது தான் சட்டென புலப்படுகிறது நாம் இப்போ யூத் இல்லன்னு
டிஸ்கி:
நீங்கள் படித்தவற்றில் சிறந்த ட்விட்டுக்களையும் பின்னூட்டத்தில் பகிரலாமே...
http://girls-stills.blogspot.com
http://girls-stills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?