Monday, 22 August 2011

Blog தயாரிக்க உதவி ��ேண்டுமா!






கம்ப்யூட்டரைப் பயன்படுத்த பழகிக் கொண்ட அனைவரும், இன்டர்நெட் வழியே தங்களுக்கென நண்பர்கள் வட்டத்தை அமைத்துக் கொள்கின்றனர். அடுத்ததாகத் தங்கள் கருத்துக்களை, எண்ணங்களை உலகிற்கு எடுத்துச் சொல்ல Blog எனப்படும் தனி வலைமனைகளை அமைத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு உதவிடத் தற்போது இணையத்தில் பல தளங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த வலைமனைகளை அமைப்பது மட்டுமின்றி, அவற்றைத் தொடர்ந்து பராமரிக்கவும் பல தளங்களில் தகவல்கள் கிடைக்கின்றன.
இந்த வலைமனைகளை உருவாக்குவதில், சில குழு நண்பர்களிடம் ஓர் ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. எந்த விஷயங் களைச் சேர்த்து வடிவமைத்தால் நன்றாக இருக்கும் என்று எடுத்துச் சொல்லி வழிகாட்டவும் பல தளங்கள் கிடைக்கின்றன.

மேலே குறிப்பிடப்படும் அனைத்து உதவி களையும் தரும் ஓர் தளத்தினை அண்மையில் காண நேர்ந்தது. அதன் முகவரி http://www.allblogtools.com/. வலைமனை தயாரிப்பிற்கு இதில் கிடைக்கின்ற டூல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

டூல்ஸ், டிரிக்ஸ் மற்றும் தகவல்கள் என பலவகைகளில் ஒரு பிளாக் அமைக்கத் தேவையான அனைத்தும் கிடைக்கின்றன. இரண்டு வகைகளில் இவற்றைத் தேடிப் பெறலாம். பக்க வாட்டில் ஒரு மெனு தரப்பட்டுள்ளது. அத்துடன் புளு நேவி கேஷன் மெனு ஒன்றும் தரப்பட்டுள்ளது. புளு நேவிகேஷன் மெனுவில் கிடைக்கும் வகைகள் இங்கு பட்டியலிடப் படுகின்றன.

1. Blogger Templates: இங்கு தான் நம் பிளாக்குகளை அமைக்க அடிப்படை கட்டமைப்பு கிடைக்கிறது. எந்த வகை, என்ன அமைப்பு மற்றும் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். கீழே இருக்கும் எண்கள் பக்கங்களைக் குறிக்கின்றன. இவற்றின் மூலம் பல பக்கங்களில் உள்ள டெம்ப்ளேட்டுகளைக் காணலாம்.ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தவுடன் அதனைக் கிளிக் செய்தால் அதனை முழுமையாகப் பெற லிங்க் ஒன்று கிடைக்கும். (கூகுள் விளம்பர பாப் அப்களும் கிடைக்கும்; அவற்றைத் தள்ளிவிடுங்கள்). இந்த லிங்க்கிள் கிளிக் செய்தால் மிக அழகான வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகள் இலவசமாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்த எந்தவிதமான தடையும் இல்லை.

2. Blogger Tricks: இந்த பிரிவில் உங்கள் வலை மனையை வெற்றிகரமான ஒன்றாக அமைக்கத் தேவையான ட்ரிக்குகள் கிடைக்கின்றன. பலவகைகளில் இவை வகைப்படுத்தப்பட்டு கிடைப்பது நம் வேலையை எளிதாக்குகின்றன.


3. Blogger Tools: இதில் நான்கு வகையான டூல்ஸ் தரப்பட்டுள்ளன. அவை glitter generator, signature generator, static image generator, மற்றும் HTML color code generator ஆகும். இவை அனைத்தையும் நாம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆனால் பிளாக்குகளை வண்ண மயமாக்க உதவும் HTML color code generator மிகவும் பயனுள்ள ஒரு சாதனம். பெரிய அளவில் இதனை நாம் பயன்படுத்தலாம்.

4. Blogger Falling Objects: உங்கள் பிளாக்கில் நட்சத்திரங்கள், காதல் அடையாளச் சின்னங்கள் பின்னணியில் விழுவது போல் அமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா! உங்கள் எண்ணத்திற்குத் தீனி போடும் வகையில் இந்த பிரிவு வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனைக் கட்டாயம் உங்கள் பிளாக்குகளில் அமைக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் இவற்றை எப்படி உருவாக்கலாம் என்பதை இந்த பிரிவில் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

5. Glitters: இந்த பிரிவில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மின்னும் இமேஜஸ் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் எடுத்து பிளாக்கில் இணைத்துக் கொள்ளலாம்.

6. Animations: அனிமேஷன் எனப்படும் சிறிய அசையும் உருவங்கள் உங்கள் வலைமனையில் அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டால் இந்த பிரிவு உங்களுக்கு நிறைய அனிமேஷன் பைல்களைத் (.GIF) தருகிறது.
மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அதன் பிரிவுகளைச் சார்ந்தே தரப்பட்டுள்ளன. இந்த தளத்திற்குச் சென்றால் இன்னும் என்னவெல்லாம் கிடைக்கின்றன என்பதனைத் தெரிந்து கொள்வீர்கள்.

இங்கு சென்று வந்த பின் இதுவரை வலைமனை அமைக்காதவர்கள் இதன் எளிதான சாதனங்களைப் பெற்று அமைக்கத் தொடங்கிவிடுவார்கள். ஏற்கனவே அமைத்தவர்கள் தங்கள் பிளாக்குகளுக்கு மெருகூட்டுவார்கள் என்பது உறுதி.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
 



http://tamil-actress-photo.blogspot.com




  • http://tamil-actress-photo.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger