Friday, 21 October 2011

விஜயின் ஸ்பெஷல் நேர்க்காணல்

- 0 comments
 
 
நம்ம படத்தைப் பத்தி நாமளே ரொம்பப் பேசக் கூடாதுங்ணா. இந்தப் படத்துக்கு அப்புறம் பெரிய ஹீரோக்கள் பட வாய்ப்பு இயக்குநர் ராஜாவுக்கு வரும். பெரிய இயக்குநர்கள் இன்னும் நம்பி என்னை ஃபிக்ஸ் பண்ணுவாங்க!'' - கண்களில் தொக்கி நிற்கும் டிரேட் மார்க் புன்னகையுடன் பேட்டியை ஆரம்பிக்கிறார் விஜய்.

''ஷங்கர் - விஜய் காம்பினேஷன் சந்தோஷம்... எப்படி வந்திருக்கு 'நண்பன்'?''

''ஷங்கர் சார் என் அப்பாகிட்ட அசிஸ்டென்டா இருந்தப்பவே பழக்கம்தான். அப்பப்போ அவர்கிட்ட பேசி இருக்கேன். ஆனா, இன்னைக்கு இருக்குற ஷங்கர் வேற. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் அவர் பிளான் பண்ற மெத்தட் சிம்ப்ளி சூப்பர்ப்!

ஷங்கர் சார் படத்தில் ஈஸியா நடிச்சிடலாம். ஏன்னா, அவரே நடிச்சுக் காட்டிருவார். அவர் இன்னைக்கு இந்திய அளவில் பிரபலமான டைரக்டர். அந்தப் பேர் சும்மா வந்தது இல்லை. என்னைக் கேட்டா, அவரை 'இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்'னு சொல்வேன். நான் எப்பவோ அவரோட இயக்கத்தில் நடிச்சிருக்க வேண்டியது. ஆனா, வேற வேற காரணங்களால் தள்ளிப்போச்சு. இப்போ கச்சிதமா செட் ஆகி இருக்கு. 'த்ரீ இடியட்ஸ்' இந்திப் படம் மொழி எல்லை எல்லாம் தாண்டி இந்தியாவையே வசீகரிச்சது. அதை இன்னும் அழகேத்தி உருவாக்கி இருக்கிறார் ஷங்கர் சார்!''

''ஜீவா, ஸ்ரீகாந்த்கூட ஃப்ரெண்ட் ஆகிட்டீங்களா?''

''ஜீவா ரொம்ப ஜாலி. டேக்குக்குப் போற அந்த விநாடி வரை கமென்ட் அடிச்சுட்டே இருப்பார். அவர் ஸ்பாட்ல இருந்தா யூனிட்டே சந்தோஷமா இருக்கும். ஸ்ரீகாந்த் முன்னாடியே எனக்கு ஃப்ரெண்ட்தான். இப்ப இன்னும் க்ளோஸ் ஆயிட்டார். சத்யராஜ் சார்கிட்ட நிறையப் பேசிக்கிட்டே இருந்தோம். நாங்க ஷூட்டிங் ஸ்பாட்டில் நட்பாகப் பழகினது ஃப்ரே மில் நல்லாவே தெரியும். நல்ல கதையில் இப்படி ஒரு டீமோட நடிச்சது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்போ ஷூட்டிங் முடிஞ்ச தும் எங்க டீமை நான் ரொம்ப மிஸ் பண்றேன்!''

''கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க எப்படித் தயார் ஆகிட்டு இருக்கீங்க..?''

''பொது நண்பர் ஒருத்தர் மூலம் தான் கௌதம் மேனன் என்னை இயக்க ஆசைப்படுவதுபத்தித் தெரிஞ்சுக் கிட்டேன். சந்திச்சோம். அவர் சொன்ன கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. இங்கேயும் அமெரிக்கா விலும் நடக்கும் கதை. கௌதம் படம் எப்பவும் ஸ்டைலிஷா இருக்கும். 'யோஹன்' படத்துக்காக என் லுக், பாடி லாங்குவேஜ்னு எல்லாத்தையும் டியூன் பண்ணிட்டு இருக்கேன். அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போறேன். இப்படி ஷங்கர், முருகதாஸ், கௌதம்னு காம்பினேஷன் அமையுறது நல்ல விஷயம்!''

''உங்க படமும் உங்க நண்பர் சூர்யா நடிச்ச படமும் ஒண்ணா தீபாவளிக்கு வருதே?''

''ஆமா. ரெண்டு படங்களும் ஜெயிக்கணும்னு ரெண்டு பேரும் நினைப்போம். ரெண்டு யூனிட்டும் ஜெயிக்கிறதுக்கு என்னோட வாழ்த்துகள்ண்ணா!''
நன்றி :- ஆனந்த விகடன்
[Continue reading...]

கேரளாவின் கள்ளன�� போலீஸ்...!!!

- 0 comments



கேரளாவில் நடந்த உண்மை சம்பவம். நண்பன் சொன்னது, அவன் வீட்டருகில் உள்ள வீட்டில், கணவனுக்கு கல்ஃபில் வேலை என்பதால் அந்த பெண்ணும் இரண்டு ஆண் [[சிறிய]] குழந்தைகளும் வசித்து வரும் வேளையில் ஒரு நாள் மத்தியான வேளையில்,


Read more »

http://girls-stills.blogspot.com



  • http://girls-stills.blogspot.com

  • [Continue reading...]

    தமிழக மீடியாக்க��ை நினைத்து வெம்பும் கூடங்குளம் அ���ல் பூமி...!!!

    - 0 comments


    கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை கொன்றாய், தாடவையின் கையிலிருக்கும் நீ....!!!



    இன்று அடிமடியிலேயே கையை வைத்திருக்கிறாய் தமிழ்நாட்டில், இது என்ன ஸ்பெக்ட்ரம் என நினைத்தாயா சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொல்ல...?? மக்கள் விட்டுகொண்டிருக்கும் பெருமூச்சிலேயே நீ பொசுங்கி போவாய்...!!!

    உனக்கு வெக்கம் இல்லையா, ஈனம் இல்லையா, மானம் இல்லையா, இல்லை ரோஷம்தான் இல்லையா...??? ஊனமுற்ற மாற்று திறனாளிகளை தாக்க, எப்படி மனம் வந்தது...?? அவர்களின் சாபம் உன்னை சும்மா விடுமோ..???


    யார் இந்த இளங்கோவன்...?? யார் இந்த தங்கபாலு...?? இவர்களுக்கு மக்களை பற்றி என்ன அக்கறை இருக்கிறது...? சூனியா பூந்தியை குளிர்விக்க இவர்கள் செய்யும் இடும்புகள் கொஞ்சநஞ்சமல்ல...!!!


    முதல்வர் அம்மா அவர்கள் குரல் கொடுத்தும், நீ அங்கிருந்து கடிதம் அனுப்பி கொண்டிருக்கிறாய்...!!! இதென்ன பழக்கம்..?? கலைஞர் வழியை பின் பற்றினால் விளைவு, விலாசம் இல்லாமல் போகவேண்டியதுதான்...!!!


    முதலில் உங்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்களை [[இருந்தாதானே]] கூடங்குளத்தில் தங்கி வாழசொல்லுங்கள் பார்க்கலாம்...? கட்சியைவிட்டே ஓடிவிடுவார்கள்...!!!

    மக்கள் போராட்டம் வெல்வதுதான் சரித்திரம்!!! ஆனால் நீ காந்தி பாதையை மீறி பல காலமாகிவிட்டது என்பதும் எங்களுக்கு தெரியும், ஆனாலும் கலகம் பிறவாது  நீதி கிடைக்காது என்பதும் உண்மையே...!!!


    ஜப்பான் அழிவுகளை கண்முன்னால் கண்டும் நீ, மக்கள் நலம் காக்க முன்வராமல் சாக்குபோக்கு சொல்லிகொண்டிருக்கிறாய். ரஷ்ய ராஜதந்திர உறவு வேணும்தான் ஆனால், மக்களுக்கு அழிவு பீதியை உண்டாக்கும் ராஜதந்திரம், பிஞ்ச செருப்புக்கு சமம்...!!!

    உண்ணாவிரதம் நடக்கும் ஸ்தலத்திற்கு போக அனுமதி அளிக்காமல் மக்களை தடுக்கும் போலீஸ், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், உங்கள் வருங்கால சந்ததிகளுக்காகவே நாங்கள் போராடுகிறோம்...!!!


    காங்கிரசின் அல்லக்கைகள், வெட்டி பேச்சு பேசாமல் தைரியமிருந்தால், மக்கள் மீது அக்கறை இருந்தால், அணுமின் நிலையம் அருகில் மக்களோடு மக்களாக குடியேறுங்கள் பார்ப்போம்...!!!

    பாதுகாப்பானது பாதுகாப்பானது என வெறும் வாயை மெல்லுகிற நீங்கள், ஆலை ஆபத்தின் போது மக்கள் எப்படி தப்பவேண்டும், அவர்களின் மறுவாழ்வின் அடிப்படை தேவைகள் என்ன என்பதனை சோதனை செய்து காட்டுனீர்களா...???


    ஜப்பான், அழிவின் நிறைய விஷயங்களை உலகுக்கு மறைத்து விட்டது அதாவது உங்களுக்கு தெரியுமா சிங்கிடி சாமி...???

    பெரும் பொருளாதார மேதை என்று நினைத்த என் நினைப்பில் மண்[ன்] அள்ளிப்போட்டுவிட்டு, சூனியா பூந்தியின் சேலை ஓரத்தை பிடித்து தொங்குவதென்ன, அற்பமான நாற்காலி ஆசைதானே அல்லாமல், மக்கள் நலனுக்கு அல்ல என்பது எப்போதோ உங்களை பற்றி சந்தி சிரிக்க ஆரம்பிச்சாச்சு...!!!


    அடுத்து, ஊடகங்கள் பலமாக மூடி மறைக்கும் போக்கு என்னவென்றே புரியவில்லை...!!!???  ஏன் நடுநிலை கொள்கையை தளர்த்தி விட்டார்கள்...?? இதற்க்கு பின்பாக ஏதும் சக்தி இருக்கிறதா..? அது என்ன சக்தி..??

    [[நெருங்கிய நண்பர்களுக்கு கூட அணுமின் நிலையத்தின் விபரீதம் தெரியாமல்தான் இருந்தார்கள், இப்போது எல்லாம் எடுத்து விளக்கியபின், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பது சந்தோஷமான விஷயம்...!!!]]


    இனி உங்களுக்கு ஆயுள் இல்லை என்பது என் சாபம் மட்டுமல்ல, மக்கள் நலம் விரும்பும் நல்லோரின் சாபமும் கூட....கடைசியாக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கேள்வியோடு முடிக்கிறேன், உங்கள் தங்க தானை தலைவி குடும்பம் மட்டும் அங்கே வந்து குடியேறட்டும் பார்ப்போம்...???

    --------------------------------------------------------------------------------------


    கூடன்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக முற்றுகை போராட்டம் நடந்தது.அங்கு மக்கள் உணவருந்த சாப்படுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
    இதற்கு ஊடகங்கள் திரு.உதயகுமார் அவர்களிடம் இவ்வளவு செலவு செய்கிறீர்களே இதற்க்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது?என்று கேட்டிருக்கிறார்கள்.
    அதற்கு உதயகுமாரும் மக்கள் தான் தந்தார்கள்.வேறு யாரும் எங்களுக்கு தரவில்லை என்று கூறினார்.வெறும் 20 மக்களை(வறுமை கோட்டிற்க்குகீழ் உள்ள மக்களை) கொண்டு இருக்கும் காமநேரி என்ற ஊர் மக்கள் 3500-ரூபாய் தந்தார்கள் எனவும் கூறினார்.

    எங்களிடம் கணக்கு வழக்கு கேட்கிறீர்களே.அப்படியென்றால் நீங்கள்உங்களது அணு உலையின் வரவு செலவு கணக்குகளை காட்டுங்கள்.என்று ஊடகத்தின் வாயிலாக கேட்டார்.ஆனால் ஊடகமோ இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை இது வருத்தத்தை அளிக்கிறது.
    [[நன்றி "வைறை சதீஷ்"]]

    ஊடகங்களே கொஞ்சம் மக்கள் நிலையையும், ஏன் உங்கள் நிலைமையையும் யோசித்து நடுநிலைமையாக செயல்படுங்கள், இது உயிர் பிரச்சினை, பாழாய் போன அரசியல் பிரச்சினை இல்லை....

    பணம் என்ன பணம், போராட்டத்துக்காக நாங்கள் பணம் அனுப்பவும் தயாராக இருக்கிறோம்...!!

    ----------------------------------------------------------------------------------
    வைறை சதீஷ் பிளாக்.

    கவிதை வீதி'சவுந்திரபாண்டியன் பிளாக்.

    தம்பி கூடல் பாலா பிளாக், இவர் ஏற்கெனவே உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்..!!!

    நண்பன் சூர்யா ஜீவா பிளாக்.

    நண்பன் விக்கியின் பிளாக்.

    பூவுலகின் நண்பர்கள் பிளாக்.

    தமிழ் மீடியா.

    பூந்தளிர் பிளாக்.

    ஊடறு பிளாக்.
    புலவர் இராமாநுசம் அய்யா'வின் பிளாக்.
    http://pulavarkural.blogspot.com/2011/10/blog-post_15.html

    இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்...!!!

    டிஸ்கி : நான் போராட்ட களத்தில் உங்களுடன் இல்லை என்பதை நினைத்து வருந்துகிறேன், அல்லாமலும் எனது மனம் முழுவதும் அங்கேயே இருக்கிறது. மனம் தளராமல் போராடும் டாக்டர் . உதயகுமாருக்கும், தம்பி கூடல் பாலா போன்றோருக்கும், இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எல்லோருக்கும் வாழ்த்துகளையும், நன்றிகளையும் "நாஞ்சில் மனோ" தெரிவித்து, தலைவணங்கி ராயல் சல்யூட் செய்கிறேன் நன்றி....

     படங்கள் நன்றி கூகுள்.




    http://girls-stills.blogspot.com



  • http://girls-stills.blogspot.com

  • [Continue reading...]

    தமிழ்மணத்தை நான�� போடா வெண்ணை என்��ேனா, இல்லை தமிழ்��ணம் என்னை போடா வ��ண்ணை என்று சொல்லுமா...???

    - 0 comments



    டெரர் குருப்பின் தமிழ்மணம் பய'டேட்டாவை படித்துவிட்டு, போக்கிறிதனமாக கமெண்ட்ஸ் போட்டு கொண்டிருந்த "பெயரிலி" என்னும் நிர்வாகியை நானும் கவனித்து கொண்டுதான் இருந்தேன்.

    சூப்புறது பற்றி [[தப்பாக நினைக்கவேண்டாம் அவர் சொன்னதுதான்]] சூப்பராகவே அவர் எழுதின விதம் எனக்கு நெஞ்சில் பாலை வார்த்து விட்டது!!!!! அந்த நேர்மையும் எனக்கு பிடிச்சுது...[[?]]

    சிபி'யை தூக்குன அன்னைக்கே நானும் தமிழ்மணத்தை தூக்கி இருக்கணும், மிஸ் பண்ணிட்டேன், என் உயிர் நண்பர்கள் இருக்கும் டெரர் குரூப் விலகின அன்னைக்கே நானும் தமிழ்மணத்தை தூக்கி இருக்கணும் அப்போதும் பொறுமை காத்தேன் காம்ரமைஸ் ஆகும் என்று...

    சிபி, பொறுடா பொறு உணர்ச்சி வசப்படாதேன்னு இதோ இப்பவும் மெயில் அனுப்பிகிட்டு இருக்கான், ஆனாலும் என் தன்மானம் ஒத்துகொள்ளாததால் இதோ தமிழ்மணத்தை விட்டு, "நான் நானே" விலகுகிறேன் 

    நண்பர்கள் இல்லாதவன் வாழ்க்கை பாலைவனம் போன்றதுன்னு, மேதைகள் சொல்ல படித்திருக்கிறேன், என் உயிர் நண்பர்கள் பலரும் இதில் இல்லாததால் இந்த பாலைவனம் எனக்கு தேவையில்லை, எனக்கு என் உயிர் நண்பர்கள்தான் முக்கியம் தமிழ்மணம் இல்லை....!!!

    கடைசியாக.....


    மானமுள்ள தமிழன்டா, ஜெயஹிந்த்.

    டைட்டிலுக்கு நன்றி : தமிழ்வாசி பிரகாஷ்....







    http://girls-stills.blogspot.com



  • http://girls-stills.blogspot.com

  • [Continue reading...]

    போலீஸ் கமிஷனர் ஆ���ார் பன்னிகுட்டி...!!!

    - 0 comments


    ஒரு ஊர்ல ஒரு சின்ன குளம் இருந்துச்சு அது நடுவுல ஒரு சின்ன தீவு இருந்துச்சு, அந்த தீவுல காய்த்து குலுங்கும் ஒரு எலுமிச்சை மரம் இருந்துச்சு, அந்த மரத்துல ஒரு சேட்டைக்கார குரங்கு இருந்துச்சு.



    இப்போ சம்பவம் என்னான்னா நம்ம சிபி அண்ணனுக்கு எலுமிச்சை பழம் தேவைப்படுது குளத்தங்கரையில் போயி நிக்குறான், ஆனால் குளத்து உள்ளே சிபி இறங்க கூடாது, அந்த குரங்கும் வெளியே வரக்கூடாது.


    ஆனால் குளத்துக்குள் இறங்காமலையே சிபி எலுமிச்சை பழம் வீட்டுக்கு கொண்டு போறான், குரங்கும், சிபி'யும் என்ன சேட்டை செய்துருந்தால், சிபி கையில் அந்த எலுமிச்சை பழங்கள் வந்திருக்கும் என்பதுதான் கேள்வி...???
    ----------------------------------------------------------------------------------------------------------------------

    அடுத்து, ஒரு தற்கொலை சம்பவம், ஒரு வீட்டில் ஒருத்தன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான் மின் விசிறியில், போலீஸ் ஆபீசர் நம்ம "சிரிப்பு போலீஸ்" வந்தான், கதவை உடைத்தான், உள்ளே வந்து பார்க்கும் போது, பிணம் தொங்கி கொண்டு இருக்கிறது ஆனால் கீழே நாற்காலியோ, ஸ்டூலோ இல்லை, கதவும் உள்ளே தாளிடப்பட்டு இருந்தது.


    கொஞ்சம் தண்ணீர் மட்டும் கீழே இருந்தது, அப்போ தற்கொலை செய்து கொண்டவன் மின் விசிறியில் கயிற்றை போடுவதற்கு எப்படி மேலே ஏறினான்னு, போலீஸ் கமிஷனர் பன்னிகுட்டி'க்கு ஒன்னும் தெரியாமல் யூனிபார்ம் போட்டுருக்குறதையும் மறந்து மண்ணில் உருண்டு அழுகிறார்.


    சிரிப்பு போலீஸ் இந்த கிரைம் கேஸை [[அந்த கேஸ் இல்லை]] கண்டுபிடித்து சொல்கிறான், பன்னி மூக்கில் விரல் வைக்கிறார் [[ம்ஹும் இவரெல்லாம் ஒரு கமிஷனர்]]

    அப்படி சிரிப்பு போலீஸ் என்ன கண்டுபிடித்தான்...???
    -----------------------------------------------------------------------------------------------------------------------

    அரிசி மூட்டை ஏத்திகிட்டு ஒரு லாரியில [[ரேசன் அரிசி கடத்தல் அல்ல]] கே ஆர் விஜயனும், கோமாளி செல்வாவும் நாகர்கோவில்ல இருந்து ஈரோடு போகிறார்கள். போகும் வழியில் ஒரு குகை வருகிறது, அந்த குகைக்குள் செல்லமுடியாமல் அரிசி மூட்டை தடுக்கிறது.


    ஒரு இன்ச் தாழ்ந்தாதான் லாரி போகமுடியும், விஜயன் என்ன செய்வது என்று நெஞ்சில் அடிச்சி விம்மி விம்மி அழுகிறார், ஏன்னா மேலே இருக்கும் மூட்டையை சுமக்கனுமே குகையின் அந்த கரைக்கு, அதனால ஓங்கி அழுகிறார்.


    ஆனால் செல்வாவின் ஐடியா'வுல மூட்டையை கீழே இறக்காமலே லாரி அக்கறை வந்து, பேரோடு விரைகிறது ஸாரி ஈரோடு விரைகிறது....!!!

    சரி, செல்வா சொன்ன ஐடியா, ஆலோசனை என்ன....???

    டிஸ்கி : உங்கள் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள், விடை நாளைய பதிவில் சொல்கிறேன்....ஹி ஹி....




    http://girls-stills.blogspot.com



  • http://girls-stills.blogspot.com

  • [Continue reading...]

    தமிழ்மணத்தை நீக��கின பதிவரின் கேள்விகளும், பதிலும���...!!!

    - 0 comments


    நேற்றைய பதிவின் கேள்விகளுக்கு நிறைய பேர் சரியாகவே பதில் சொல்லி இருக்கிறார்கள்...!!!

    ௧ : சேட்டைக்கார குரங்கல்லவா, சிபி கல்லைதூக்கி வீச, குரங்கு கோவத்துல எலுமிச்சை பழத்தை புடுங்கி எறிய, சிபி பையை நிறைத்து கொண்டு ஓடுகிறான்.

    ௨ : சிரிப்பு போலீசையும், கமிஷனர் பன்னிகுட்டியையும் வேணும்னே குழப்பி கும்மியடிக்க வைப்பதற்கு, ஐஸ்கட்டி கொண்டு வந்து வச்சி அதுக்கு மேலே ஏறி தூக்கு போட்டுகிட்டான்...!!!

    ௩ : செல்வா"தான் லாரி கிளீனர் ஆச்சே, ஓடிபோய் நாலு டயர்லையும் கொஞ்சம் கொஞ்சம் காற்றை புடுங்கி விட லாரி பேயா ஈரோடு பறக்குது...
    -------------------------------------------------------------------------------------------------------------------------

    ௧ : நாம நன்மை செய்யபோயி, சம்பந்தபட்டவர்களுக்கு அது தீமையாக போவது ஏன்...???

    ௨ : பர்ஸில் காசு இல்லாவிட்டாலும், அடிக்கடி தடவி பார்ப்பது ஏன்...???

    ௩ : குருவி சத்தம் கேட்டால் கூட, செல்போனை உற்று பார்ப்பது ஏன்...???


    ௪ : தலைமுடி வளர்வதை விட, நகங்கள் வேகமாக வளர்கிறதே ஏன்...???


    ௫ : பென் களவாடுவதை ஒரு ஹாபியாக சிலர் வைத்து இருக்கிறார்களே அது ஏன்...???


    ௬ : சிபி மட்டும் நாஞ்சில்மனோ பிளாக்கில் வறுத்து எடுக்கப்பட்டு நாறுகிறானே [[ஹி ஹி]] அது ஏன்...???


    ௭ : அரசாங்க பஸ்கள், பஸ் நிறுத்தத்தை தாண்டியே எப்போதும் நிற்கின்றன அது ஏன்...???


    ௮ : அரசாங்க மருத்துவமனைக்கு மட்டும் தனியாக அந்த நாற்றம் வருவது ஏன்...???


    ௯ : எவ்வளவு அடித்தாலும், குழந்தை தாயோடு போயி ஒட்டிக்கொள்கிறதே அது ஏன்...???


    ௰ : நடிகர் விஜய் பேரைக்கேட்டதும், பன்னிகுட்டிக்கு பிரஷர் ஏறுதே அது ஏன்...???


    ௧௧ : கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி மத்திய அரசு அலட்சியம் காட்டுகிறதே அது ஏன்...???


    ௧௨ : எவ்வளவு சம்பாதித்தாலும், தேவைகள் தீருவதில்லையே அது ஏன்...???

    ௧௩ : செத்தவன் ஓட்டையும், கள்ள ஓட்டா போட்டு மாட்டி இருக்காங்களே அது ஏன்...???


    ௧௪ : இம்சை அரசன் அந்த அருவா ஏன்...??? [[நேர்ல பார்த்தா சாப்டா இருக்கார்]]


    ௧௫ : நயன்தாரா டேஸ்ட் மாறிவிட்டதே அது ஏன்....???


    "மனோ"தத்துவம் : காருக்குள் நீ இருந்து அழுவதை, ரோடுகள் அறிவதில்லை....!!!

    நன்றி : படங்களுக்காக கூகுளுக்கு, இல்லைன்னா சோனியா பூந்தி டான்ஸை பார்த்துட்டு பொங்கிற போறாங்க காங்கிரஸ் சிங்'கிடிங்க ஹா ஹா ஹா ஹா....




    http://girls-stills.blogspot.com



  • http://girls-stills.blogspot.com

  • [Continue reading...]

    நான் நூறு தடவை சொன்னால்.......!!!!

    - 0 comments


    டப்பா டப்பா வீரப்பா
    எப்பம்டா கல்யாணம்

    மாசம் பொறக்கட்டும் 
    மல்லிகை பூ பூக்கட்டும்

    எம்ஜியார் சண்டை
    பானுமதி கொண்டை 

    குளத்துல கொக்கு
    கொலப்பியை நக்கு 
    --------------------------------------------------------

    மரங்கொத்தி புறாவே
    உனக்கென்ன வேலை

    காலை எழும்பனும்
    பல்லு தேய்க்கணும்

    வயலுக்கு போகணும்
    நண்டை பிடிக்கணும்

    நறநறன்னு கடிக்கனும் 
    துறு துறுன்னு பீக்கணும்


    -------குழந்தையில் பாடித்திரிந்த பாடல் இன்னும் நினைவில் பசுமையாக--------
    ----------------------------------------------------------------------------------------------------------------

    இன்னும் கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்பட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதை பார்க்கும் போது, அவர்களின் அலட்சியம் மக்களை இன்னும் வலுவாக போராடசெய்யும் என்பதை ஏன் எண்ணாமல் போகிறார்கள்...!!!!


    பெயரில் மட்டும்தான் காந்தியா...?? செயலில் "நீரோ" மன்னனை நியாபக படுத்துகிறார்கள், இதோ கூடங்குளத்துக்காக, கொல்கத்தாவில் அடையாள உண்ணாவிரதம் நடத்த பட்டிருக்கிறது...!!!

    அடுத்ததாக கேரளாவிலும் போராட்டம் நடக்கப்போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது....??? மக்களுக்காக அரசாங்கமா அல்லது அரசாங்கத்துக்காக மக்களா...???


    மமதையோடு இருக்கும் காங்கிரஸ் அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன் இங்கே.....!!!
    ---------------------------------------------------------------------------------------------------------------------

    2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பொது மக்களின் நம்பிக்கை இழந்துள்ளோம், இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது போன்ற நிலையில் வலுவான ஸ்திரத்தன்மையுடன் மத்திய அரசு அமைவது மிகவும் முக்கியமாகும். 

    ஆனால் இந்த வழக்கில் முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் மத்திய அரசு இல்லை. மத்திய அரசில் ஏராளமான முறைகேடுகள் மத்திய அரசை பலவீனப்படுத்தி விட்டது. இதனால் நீதித்துறை அரசுக்கு உத்தரவிடும் நிலை ஏற்பட்டுள்ளது....!!!!????


    இதை சொல்றது யார் தெரியுமா...??  மத்திய அமைச்சர் சரத்பவார் சொல்றார். அப்போ அந்த லட்சனத்துலதான் காங்கிரஸ் ஆட்சி நடத்திட்டு இருக்கு...!!!! ஏ யப்பா வெள்ளைக்காரனை தாத்தா [[நேரு]] விரட்டினார், பேரன் வெள்ளைகாரியை இழுத்துட்டு வந்தார் [[நன்றி கே ஆர் விஜயன்]] ராகுல் பூந்தி அமெரிக்கா'காரியை கட்டப்போறாராம்...

    ஒரு இத்தாலிக்கே நாடு தாங்கலையே, இனி அமெரிக்காவும் வந்தால் நாடு உருப்படுமா...?? இதுக்கும் வெளங்கோவன், மொட்டை பாலு இவனுக எல்லாம் காவடி எடுப்பாணுக, இவிங்களுக்கு என்ன, ஏசி கார்ல குளு குளு அயிட்டத்தோட [[அந்த அயிட்டம் இல்லை]] சுத்திட்டு இருக்கானுங்க....!!!
    ------------------------------------------------------------------------------------------------------------------------------

    அடுத்து முக்கிய பிரச்சினை, நயன்தாரா பிரபு தேவா'வை விட்டு பிரிஞ்சிட்டாராம் [[நாட்டுக்கு முக்கியமான பிரச்சினைதான்]] எலேய் ஒரு படமும் கையில் இல்லாமல் மார்'கட் கந்தலாகி காலியா கெடக்கு சேச்சிக்கு, அதான் என்னத்தையாவது செஞ்சி மறுபடியும் லைம் லைட்டுக்கு வர துடிக்கிறாங்க அதுக்குதான் இந்த ஸ்டண்டு எளவு எல்லாம்...!!! இனி ஒரு பய சீண்டுவானாக்கும், ஆக அம்மணி ஸாரி சேச்சி அவுட்டே....!!!
    -------------------------------------------------------------------------------------------------------------------------------

    அப்புறம் நம்ம பிர்ர்ர்ர்தமர், திடீர் திடீர்னு மொட்டைமாடிக்கு ஓடிப்போயி, சத்தமா வாய்விட்டு சிரிக்கிறாராம் தனியாக, வீட்டில் சர்தாரினி நோந்துபோயி, சூன்யா பூந்திக்கு போன் பொட்டு சொல்ல அடுத்த உகாண்டா பயணம் கிளம்புராறாம் நம்ம பிர்ர்ர்ர்தமர்....!!!

    ----------------------------------------------என்னா ஒரு ரொமாண்டிக் சீன்-------------------------------------------


    டிஸ்கி : குப்பனும் சுப்பனும் பாவங்க [[யாரு நம்மதேன்]]

    "மனோ"தத்துவம் : எலியை நீ பிடிச்சா எலி காலி, எலி காய்ச்சல் உன்னை பிடிச்சா நீ காலி....

    [[கேரளாவில் வேகமா எலி காய்ச்சல் பரவிகிட்டு இருக்கு]]

    நீதி : எலியை கண்டால் தூரவிலகு... 
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------

    அன்பு நண்பர்களே,
                                 நண்பர்களா, ஹிட்ஸா? என்று பார்க்கையில், நட்பு மட்டுமே என் நம்பிக்கை.
                                   தேர்தல் பணி காரணமாக, உடனடியாக நீக்கிட இயலவில்லை. இன்று முதல் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை என் வலைப்பூவில் இருந்து நீக்கியுள்ளேன்.தகவலுக்காக.

    --
    மிக்க அன்புடன்,
    அ.ரா.சங்கரலிங்கம்.

    உணவுஉலகம்
    FOOD SAFETY



    ஆபீசர் எனக்கு அனுப்பிய மெயில், "நட்புக்கு மரியாதை" நன்றி ஆபீசர்.....!

    ---------------------------------------------------மலரும் நினைவுகள் அருவியாக------------------------------------------






    http://girls-stills.blogspot.com



  • http://girls-stills.blogspot.com

  • [Continue reading...]

    பிரபல பதிவருக்க�� இன்று பிறந்தநாள்......!!!

    - 0 comments




    கீழே நான் எழுதியுள்ள கதை சின்ன வயசுல எங்கயோ படிச்ச நியாபகம். இன்றைய அரசியல் அண்ணாச்சிகளுக்கு பொருந்துமான்னு பாருங்க.....



    ஒரு பெரிய கம்பெனியின் மானேஜர், தான்  செய்த களவாணி'தனத்தால் ஒரு நாள் அகபட்டு கொண்டார். முதலாளி அவரை டிஸ்மிஸ் செய்து விட்டார். ஆனாலும் மனம் தளராத மானேஜர் வலிய வலிய போயி முதலாளியை சந்தித்தார் பேசினார் ஆனாலும் முதலாளி அவனை ஏற்று கொள்ளவில்லை. 

    கடுமையாக யோசித்த மானேஜர், ஒரு முடிவோடு கடைசியா உங்களை சந்திக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டுமென்று மன்றாடி கேட்டு கொண்டார். முதலாளியும் வந்து தொலைன்னு வேண்டா வெறுப்பாக சொன்னார்.


    மறுநாள் முதலாளியை சந்திக்க வந்த மானேஜர் முதலாளியோடு மனம் திறந்து பேசினார். சார் நான் செய்தது தப்புதான் உங்களை ஏமாற்றி விலை உயர்ந்த கார்கள் வாங்கினேன், பங்களா வாங்கினேன், எனது பேங்கில் தாராளமாக பணமும் டெபாசிட் செய்து விட்டேன். அதனால் இனி எனக்கு பணம் தேவை இல்லை, கார் தேவை இல்லை, பங்களா தேவை இல்லை, பேங்க் டெபாசிட் தேவை இல்லை. 

    ஆனால் நீங்கள் புதிதாக சேர்க்க போகும் மனேஜருக்கு வீடு இல்லை, கார் இல்லை, பங்களா இல்லை, பேங்க் டிபாசிட்டும் இல்லை. அவனும் என்னைப்போலவே உங்களை கொள்ளை அடிப்பான். ஆனால் எனக்கு இப்போ எல்லாம் இருக்கிறது இனி நான் கொள்ளையடிக்க தேவை இல்லை ஆகவே என்னையே மானேஜரா வையுங்கன்னு சொன்னார். நன்றாக யோசித்த முதலாளி அவரையே மானேஜராக வைத்து கொண்டாராம். . . .


    முதலாளி சொன்னது இதுதான். இவன் ஏற்கனவே எல்லாம் வாங்கியாச்சி [கொள்ளையடிச்சிதான்] அதனால இவனுக்கு இனி கொள்ளையடிக்க தோணாது. ஆனால் புதுசா வர்றவன் மறுபடியும் முதல்ல இருந்தே ஆரம்பிப்பானே அதான் பழைய மானேஜரே இருக்கட்டும்னு  சொல்லிட்டார்....!!!


    டிஸ்கி : இப்போதைய அரசியல்வாதிகளுக்கு இது பொருந்துமா.... இல்லை நான்தான் தெரியாமல் கேக்குறேனா..?



    டிஸ்கி : இன்று பிறந்தநாள் காணும் என் உயிர் நண்பன் சிபி செந்தில்குமாருக்கு, இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.....[[ பிறந்த வருஷம் 1985 ன்னு பதிச்சி வச்சிருக்கான் ஹி ஹி]]

    டிஸ்கி : பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின், வெள்ளை குச்சி பற்றி நான் அறியாத விஷயத்தை நம்ம ரத்னவேல் அய்யா அவரது தளத்தில் பகிர்ந்துள்ளார், லிங்க் கீழே, யாவரும் அறிந்து கொள்ளவேண்டிய விஷயம்!!!!







    http://girls-stills.blogspot.com



  • http://girls-stills.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger