ஒரு ஊர்ல ஒரு சின்ன குளம் இருந்துச்சு அது நடுவுல ஒரு சின்ன தீவு இருந்துச்சு, அந்த தீவுல காய்த்து குலுங்கும் ஒரு எலுமிச்சை மரம் இருந்துச்சு, அந்த மரத்துல ஒரு சேட்டைக்கார குரங்கு இருந்துச்சு.
இப்போ சம்பவம் என்னான்னா நம்ம சிபி அண்ணனுக்கு எலுமிச்சை பழம் தேவைப்படுது குளத்தங்கரையில் போயி நிக்குறான், ஆனால் குளத்து உள்ளே சிபி இறங்க கூடாது, அந்த குரங்கும் வெளியே வரக்கூடாது.
ஆனால் குளத்துக்குள் இறங்காமலையே சிபி எலுமிச்சை பழம் வீட்டுக்கு கொண்டு போறான், குரங்கும், சிபி'யும் என்ன சேட்டை செய்துருந்தால், சிபி கையில் அந்த எலுமிச்சை பழங்கள் வந்திருக்கும் என்பதுதான் கேள்வி...???
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------------
அடுத்து, ஒரு தற்கொலை சம்பவம், ஒரு வீட்டில் ஒருத்தன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான் மின் விசிறியில், போலீஸ் ஆபீசர் நம்ம "சிரிப்பு போலீஸ்" வந்தான், கதவை உடைத்தான், உள்ளே வந்து பார்க்கும் போது, பிணம் தொங்கி கொண்டு இருக்கிறது ஆனால் கீழே நாற்காலியோ, ஸ்டூலோ இல்லை, கதவும் உள்ளே தாளிடப்பட்டு இருந்தது.
கொஞ்சம் தண்ணீர் மட்டும் கீழே இருந்தது, அப்போ தற்கொலை செய்து கொண்டவன் மின் விசிறியில் கயிற்றை போடுவதற்கு எப்படி மேலே ஏறினான்னு, போலீஸ் கமிஷனர் பன்னிகுட்டி'க்கு ஒன்னும் தெரியாமல் யூனிபார்ம் போட்டுருக்குறதையும் மறந்து மண்ணில் உருண்டு அழுகிறார்.
சிரிப்பு போலீஸ் இந்த கிரைம் கேஸை [[அந்த கேஸ் இல்லை]] கண்டுபிடித்து சொல்கிறான், பன்னி மூக்கில் விரல் வைக்கிறார் [[ம்ஹும் இவரெல்லாம் ஒரு கமிஷனர்]]
அப்படி சிரிப்பு போலீஸ் என்ன கண்டுபிடித்தான்...???
------------------------------ ------------------------------ ------------------------------ -----------------------------
அரிசி மூட்டை ஏத்திகிட்டு ஒரு லாரியில [[ரேசன் அரிசி கடத்தல் அல்ல]] கே ஆர் விஜயனும், கோமாளி செல்வாவும் நாகர்கோவில்ல இருந்து ஈரோடு போகிறார்கள். போகும் வழியில் ஒரு குகை வருகிறது, அந்த குகைக்குள் செல்லமுடியாமல் அரிசி மூட்டை தடுக்கிறது.
ஒரு இன்ச் தாழ்ந்தாதான் லாரி போகமுடியும், விஜயன் என்ன செய்வது என்று நெஞ்சில் அடிச்சி விம்மி விம்மி அழுகிறார், ஏன்னா மேலே இருக்கும் மூட்டையை சுமக்கனுமே குகையின் அந்த கரைக்கு, அதனால ஓங்கி அழுகிறார்.
ஆனால் செல்வாவின் ஐடியா'வுல மூட்டையை கீழே இறக்காமலே லாரி அக்கறை வந்து, பேரோடு விரைகிறது ஸாரி ஈரோடு விரைகிறது....!!!
சரி, செல்வா சொன்ன ஐடியா, ஆலோசனை என்ன....???
டிஸ்கி : உங்கள் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள், விடை நாளைய பதிவில் சொல்கிறேன்....ஹி ஹி....
http://girls-stills.blogspot.com
http://girls-stills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?