ஒரு பெரிய கம்பெனியின் மானேஜர், தான் செய்த களவாணி'தனத்தால் ஒரு நாள் அகபட்டு கொண்டார். முதலாளி அவரை டிஸ்மிஸ் செய்து விட்டார். ஆனாலும் மனம் தளராத மானேஜர் வலிய வலிய போயி முதலாளியை சந்தித்தார் பேசினார் ஆனாலும் முதலாளி அவனை ஏற்று கொள்ளவில்லை.
கடுமையாக யோசித்த மானேஜர், ஒரு முடிவோடு கடைசியா உங்களை சந்திக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டுமென்று மன்றாடி கேட்டு கொண்டார். முதலாளியும் வந்து தொலைன்னு வேண்டா வெறுப்பாக சொன்னார்.
மறுநாள் முதலாளியை சந்திக்க வந்த மானேஜர் முதலாளியோடு மனம் திறந்து பேசினார். சார் நான் செய்தது தப்புதான் உங்களை ஏமாற்றி விலை உயர்ந்த கார்கள் வாங்கினேன், பங்களா வாங்கினேன், எனது பேங்கில் தாராளமாக பணமும் டெபாசிட் செய்து விட்டேன். அதனால் இனி எனக்கு பணம் தேவை இல்லை, கார் தேவை இல்லை, பங்களா தேவை இல்லை, பேங்க் டெபாசிட் தேவை இல்லை.
ஆனால் நீங்கள் புதிதாக சேர்க்க போகும் மனேஜருக்கு வீடு இல்லை, கார் இல்லை, பங்களா இல்லை, பேங்க் டிபாசிட்டும் இல்லை. அவனும் என்னைப்போலவே உங்களை கொள்ளை அடிப்பான். ஆனால் எனக்கு இப்போ எல்லாம் இருக்கிறது இனி நான் கொள்ளையடிக்க தேவை இல்லை ஆகவே என்னையே மானேஜரா வையுங்கன்னு சொன்னார். நன்றாக யோசித்த முதலாளி அவரையே மானேஜராக வைத்து கொண்டாராம். . . .
முதலாளி சொன்னது இதுதான். இவன் ஏற்கனவே எல்லாம் வாங்கியாச்சி [கொள்ளையடிச்சிதான்] அதனால இவனுக்கு இனி கொள்ளையடிக்க தோணாது. ஆனால் புதுசா வர்றவன் மறுபடியும் முதல்ல இருந்தே ஆரம்பிப்பானே அதான் பழைய மானேஜரே இருக்கட்டும்னு சொல்லிட்டார்....!!!
டிஸ்கி : இப்போதைய அரசியல்வாதிகளுக்கு இது பொருந்துமா.... இல்லை நான்தான் தெரியாமல் கேக்குறேனா..?
டிஸ்கி : இன்று பிறந்தநாள் காணும் என் உயிர் நண்பன் சிபி செந்தில்குமாருக்கு, இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.....[[ பிறந்த வருஷம் 1985 ன்னு பதிச்சி வச்சிருக்கான் ஹி ஹி]]
டிஸ்கி : பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின், வெள்ளை குச்சி பற்றி நான் அறியாத விஷயத்தை நம்ம ரத்னவேல் அய்யா அவரது தளத்தில் பகிர்ந்துள்ளார், லிங்க் கீழே, யாவரும் அறிந்து கொள்ளவேண்டிய விஷயம்!!!!
http://girls-stills.blogspot.com
http://girls-stills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?