காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட்ட இடங்களில் பெரும்பாலானவற்றில் டெபாசிட்டைப் பறி கொடுக்கும் நிலையில் உள்ளது. 'கை' விட்டு எண்ணும் அளவுக்கு அதன் வெற்றி மிக மிக சொற்ப அளவில் உள்ளது. திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தை நிலையில் காங்கிரஸ் பரிதாபமாக காட்சி தருகிறது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை அத்தனை பேரும் கைவிட்டு விட்டனர். ஏன் அக்கட்சியின் மேலிடமே கைவிட்டு விட்டது. இதனால் தவித்துப் போன காங்கிரஸ் தேமுதிகவை கூட்டணிக்குச் சேர்க்கலாமா என்று முயற்சித்தது. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை அவர்கள் எடுத்தனர்.
ஆனால் தேர்தல் முடிவுகள் மகா கேவலமாக உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு காங்கிரஸின் செயல்பாடுகள் உள்ளன. பெரிய அளவில் எதையுமே கைப்பற்றவில்லை காங்கிரஸ்.
இதுவரை மொத்தமே 10 கவுன்சிலர்கள் வரைதான் தமிழகம் முழுவதும் பெற்றுள்ளது காங்கிரஸ். ஒரு நகராட்சித் தலைவர் பதவியும் கிடைக்கவில்லை. வார்டு உறுப்பினர்கள் பதவிகள் ஓரளவுக்குக் கிடைத்துள்ளன.
இதுவரை தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாக இருந்து வந்த காங்கிரஸ் தற்போது அந்த இடத்தை தேமுதிகவுக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளது. தேமுதிகவுக்கு அடுத்த நிலையி்ல்தான் தற்போது காங்கிரஸ் வந்து கொண்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?