Tuesday, 12 March 2013

மனைவிக்கு போதை மாத்திரை கொடுத்து ஆபாசபடம்

- 0 comments

கோவையை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில்,
’’எனக்கும் பெங்களூர் ஆர்.கே.நகரை சேர்ந்த தொபயாஸ் ( 25 ) என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் நாங்கள் பெங்களூரில் தனிக்குடித்தனம் நடத்தினோம்.
அங்கு சென்றதும் கணவர் வேலைக்கு செல்லாமலும், வீட்டுக்கு ஒழுங்காக வராமலும் இருந்தார். என்னை வீட்டில் அடைத்து வைத்து, என்னுடைய செல்போனையும் பறித்து வைத்துக் கொண்டார்.
ஒரு நாள் தலைவலிக்கு மாத்திரை கேட்டேன். அதற்கு கணவர் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டதும் மயங்கி விட்டேன். பின்னர் அவரது நண்பரை, என்னோடு சேர்த்து ஆபாச படம் எடுத்துள்ளார்.மயக்கம் தெளிந்ததும், அதை என்னிடம் காட்டி எனது பெற்றோரிடமிருந்து 10 பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் வாங்கி வா.
இல்லையென்றால் ஆபாச படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி கொடுமைப்படுத்தினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து முகமது பயாஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி பெங்களூர் விரைந்துள்ளனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger