Wednesday 9 May 2012

நான் ரெடி! நீங்க ரெடியா? நித்தி சவால்! கலக்கல் கதம்பம்!

- 0 comments


விஜயகாந்த் இப்போது சட்டசபைக்கு வராதது சென்சேஷன் ஆகிப் போய் விட்டது. நாக்கை கடித்து மிரட்டி பேசினார் என்று அவரை சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர்! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பார்த்தார் கேப்டன்! தோனி போல அங்கு அவருக்கும் அடி சறுக்க கம்மென்று இருந்துவிட்டார். சபைக்கு வருவதில்லை! அவர் அவைக்கு வராததை அதிமுக அமைச்சர்களும் உறுப்பினர்களும் தினம் தினம் கிளப்பி தேமுதிக உறுப்பினர்களை வம்புக்கிழுத்து வருகிறார்கள்.  ; நேற்றும் சபைக்கு வராமல் நடிக்க போய் விட்டாரா? என்று கிண்டல் செய்தனர் அதிமுகவினர்.அலோ கேப்டன் சார்! நீங்க சபைக்கு போய் இதை கேப்பீங்களா? இவர் மட்டுமல்ல திமுக தலைவரும் அவைக்கு வருவதில்லை! இந்த பழக்கத்தை முதலில் துவக்கி வைத்த பெருமை இப்போதைய முதல்வரையேச் சாரும். நம்முடைய குறைகளை சட்டசபையில் எடுத்து சொல்லி பேச இவர்களை அனுப்பிவைத்தால் இவர்கள் போகமாட்டேன் என்று அட� ��் பிடித்தால் எப்படி?

தமிழகத்தில் புதிதாக ஒன்பது வட்டங்களை உருவாக்கியுள்ளார் அம்மா! இப்படி அதிரடியாக ஏதாவது செய்வதில் அவருக்கு நிகர் இல்லைதான்! ஆனால் இது உருப்படியான விசயம்! நிர்வாக சிக்கல் தீரும்! மக்கள் பலரும் இதை வறவேற்றுள்ளனர். இப்படியே நல்லதாவே எதாவது செய்யுங்க ம� ��டம்!

தமிழகத்தில் மின்வெட்டு மீண்டும் தொடங்கிவிட்டது ஒரு நாளு நாள் வெட்டில்லாமல் கிடைத்த மின்சாரம் கடந்த இரண்டு நாட்களாக பழையகுருடி கதவை திறடி என்ற கதையாக பழையபடி எட்டு மணி நேர மின்வெட்டாக தொடர ஆரம்பித்துவிட்டது! என்ன காரணம் என்று தெரியவில்லை! கத்திரி வெயிலின் தாக்கத ்தில் தவிக்கும் மக்கள் மின் வெட்டு தளர்வடைந்ததும் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் ஆனால் அவர்களின் நிம்மதி நிலைக்கவில்லை! காற்றாலைகள் உற்பத்தி குறைந்துவிட்டதா? இல்லை அந்த மின்சாரத்தை வாங்க வக்கில்லையா? ஒன்றுமே புரியவில்லை! மின்சார தளர்வு குறித்து பக்கம் பக்கமாய் எழுதியவர்கள் இந்த வெட்டை குறித்து ஒன்றுமே எழுதவில்லை! ஒன்னுமே புரியல இந்த உலகத்துல!


பொன்னேரியில் ஹரியும் ஹரனும் சந்திக்கும் சந்திப்பு உற்சவம் சிறப்பாக வெகு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பேரூரின் ஓர் சாலைக்கே ஹரிஹரன் சாலை என்று பெயர்! இங்கு நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் ஹரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு நிகழ்ச்சி முக்க� ��யமானது. பொன்னேரி அகத்தீஸ்வர பெருமானும் கரிக்கிருஷ்ண பெருமாளும் உற்சவ மூர்த்தங்களாய் சர்வ அலங்காரத்துடன் வீதி உலா வந்து ஆஞ்சநேயர் கோயில் அருகே எதிரும் புதிருமாய் சந்தித்து கொள்ளும் காட்சி கண்கொள்ளா விருந்து! இந்த ஆண்டின் சந்திப்பு உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. அதை தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது.


கரண்ட்தான் தட்டுப்பாடுன்னு பார்த்தா டீசலுக்கும் இப்ப தட்டுப்பாடு வந்திடுச்சு! மங்களூர் எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்� �தால் இங்கிருந்து டீசலை அங்க அணுப்பி இருக்காங்க! அதாம்பா கர்னாடாகவிற்கு அவங்க தண்ணி தரலேன்னாலும் நாம டீசல் தருவோம்லன்னு கர்ண மகாபிரபு பட்டம் வாங்க கொடுத்துகிட்டு இருக்காங்க! இப்ப சென்னை சுத்திகரிப்பு ஆலையிலும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு போச்சு! சென்னையிலும் சுற்றியுள்ள பகுதிகளான திருவள்ளூர் காஞ்சிபுரம் பகுதிகளில் சுமார் 300 பங்குகளில் டீசல் ஸ்டாக் இல்லை என்ற � �ோர்டு தொங்குகிறது. வாகன ஓட்டுனர்கள் பாடு ரொம்பவே திண்டாட்டமா இருக்குது! டிராவல்ஸ் வச்சிருக்கவங்க கஷ்டம் சொல்லி தெரியவேண்டியது இல்லை! இதுல ஜெனரேட்டர் மூலம் கரண்ட் தயாரிக்கற கம்பெனிகளும் ரொம்பவே கஷ்டத்துல தவிக்குது! இன்னும் ரெண்டு மூணு நாள்ல நிலைமை சீரடையும்னு சொல்றாங்க!


நித்தியானந்தா கடும் சவால் விட்டிருக்காரு! தன்னோட அறையில் ரகசிய கேமரா மாட்டத் தயார்! என்னை குறைகூறும் ஆதினங்களின் அறையில் ரகசிய கேமரா பொறுத்த தயாரா? அப்படி பொறுத்தினால் எத்தனை � ��தினங்கள் மாட்டுவார்கள் என்று எனக்குத் தெரியும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் இதை செய்ய வேண்டும்! இந்த சவாலை ஆதினங்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று பேட்டியளித்துள்ளார்! ஆதினங்களே நித்தியின் சவாலை ஏற்க தயாரா? அடுத்த கில்மா வீடியோவிற்கு ஜனங்க ரொம்ப ஆவலா காத்துகிடக்கறாங்க!


வரும் கல்வியாண்டு முதல் ஜாதிச்சான்றிதழ்! வருமான சான்றிதழ்! இருப்பிடச் சான்றிதழ் ஆறாம் வகுப்பிலேயே பள்ளிகளில் வழங்கப்படும் என்று அம்மா அறிவித்துள்ளார்! இதனால் பெற்றோர்கள் பலரும் நிம்மதி பெருமூச்சுவிட� �கின்றனர். இந்த சான்றிதழ்களை வழங்கி காசு பார்க்கும் அதிகாரிகள் கலங்கிப் போயுள்ளனர். ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன் இந்த சான்றிதழ்களுக்காக விஏஒ, ஆர்டிஓ, தாசில்தார், என அலைந்து பலருக்கும் லஞ்சம் கொடுத்து காத்திருந்து பெற்ற சான்றிதழ் இனி பள்ளிகளில் கிடைக்க போகிறது என்ற அறிவிப்பு வறவேற்கத் தக்க ஒன்றே! இது மாதிரி நல்ல திட்டங்களை செயல் படு� ��்துங்கள் முதல்வரே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!


http://tamilnews-latest.blogspot.com<>


<><><><><><><><><><><><><><><><><>
[Continue reading...]

காஞ்சியை கலக்கும் "ஏழு தலை நாகம்' புகைப்படம்

- 0 comments


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஏழு தலை பாம்பு பிடிபட்டதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து, சாலையில் ஏழு தலையுடன் கூடிய பாம்பு படமெடுத்து ஆடுவது போல், கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்ட புகைப்படம், அலைபேசி மூலம் வேகமாக பரவி வருகிறது.

காஞ்சிபுரத்தில் கடந்த மாதம், இரவில் ரத்தக்க� �ட்டேரி உலா வருவதாகவும், அது, வீட்டிற்குள் நுழைவதை தடுக்க, நுழைவு வாயிலில், "இன்று போய் நாளை வா' என, சிகப்பு வண்ணத்தில் எழுதி வைக்க வேண்டும், எனவும் வதந்தி பரவியது. அதை நம்பி, ஏராளமானோர் தங்கள் வீடுகளில், சூலம் படம் வரைந்து, "இன்று போய் நாளை வா' என, சிகப்பு வண்ணத்தில் எழுதி வைத்தனர். சிலர் மனித முகத்தை படமாக வரைந்து வைத்தனர். சிலர், 'ஸ்வஸ்திக்' குறியீட்டை வரைந்து வைத்தனர்.< /b>

ஏழு தலை நாகம்: அடுத்த கட்டமாக, ஏழு தலை நாகம் உலா வருவதாக வதந்தி பரவத் துவங்கி உள்ளது. கடந்த வாரம் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில், ஏழு தலை நாகம் வந்ததாகவும், அதை சிலர் புகைப்படம் எடுத்ததாகவும், அதன்பிறகு அந்த நாகம் மறைந்துவிட்டதாகவும் தகவல் பரவியது. தகவல் கூறியவர்களிடம், நீங்கள் பார்த்தீர்களா எனக் கேட்டால், "நான் பார் க்கவில்லை, என் நண்பன் சொன்னான்' என்றனர். அவர்களைக் கேட்டாலும், அதே தகவலை தெரிவித்தனர். நேரில் பார்த்தவர்கள் உண்டா என விசாரித்தால், யாரும் இல்லை.

"கி� �ாபிக்ஸ்' படம்: இச்சூழலில், ஏழு தலை நாகம் படமெடுத்து ஆடுவதை, புகைப்படம் எடுத்துள்ளதாகக் கூறி, "புளூடூத்' மூலம் சிலர் அலைபேசிகளுக்கு அனுப்பி வருகின்றனர். அவ்வாறு அனுப்பப்பட்ட படத்தை வாங்கி, கணினி வல்லுனர்களிடம் காண்பித்தபோது, "கிராபிக்ஸ்' உதவியுடன், சாலையோரம் ஏழு தலை பாம்பு படமெடுத்திருப்பதைப் போல் வடிவமைத்து, உலவ விட்டிருப்பது தெரிய வந்தது. இப்படம் தற்போது காஞ்ச� �புரம் மக்களிடம் வேகமாகப் பரவி வருகிறது. இப்படத்தை சிலர் உண்மை என நம்பி, தங்களுக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் அனுப்பி வருகின்றனர். அவர்களிடம் இது கிராபிக்ஸ் எனக் கூறினாலும், நம்ப மறுக்கின்றனர். "கலிகாலம் முடிவடைய உள்ளதால், ஏழு தலை நாகம் வெளியில் வரத் துவங்கிவிட்டது. பலர் நேரில் பார்த்துள்ளனர். நீங்கள் கூறுவது தான் பொய்' எனக் கூறி, உண்மையை கூறுவோரின் வாயை அடக்குகி� �்றனர். இதுபோன்ற நபர்களால், காஞ்சிபுரம் நகரில், "ஏழு தலை நாகம்' புகைப்படம், வேகமாகப் பரவி வருகிறது.

எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுதுண்ணாலும் நம்புவாங்க! வாயில் இருந்து லிங்கம் வரவழைச்சாலும் நம்புவாங்க! பிள்ளையார் பால் குடிச்சாலும் நம்புவாங்க! ஆனா அவங்களை அவங்களே நம்ப மாட்டாங்க நம்ம அப்பாவி சனங்க! இன்னும் என� �னென்ன கிளம்பப்போகுதோ? 

தகவல் உதவி :தினமலர்


http://tamilnews-latest.blogspot.com<>


<><><><><><><><><><><>
[Continue reading...]

தளிர் அண்ணா கவிதைகள் 4

- 0 comments



வெற்றி உன் பக்கம்!

நாட்கள் தேயத் தேய
நாமும் தேய்கிறோம் நண்பா!
நாளை நாளை என
வேலையை தள்ளிப் போடாதே!
வேளை வரும் என்று
மூலையில் கிடாதே!
மூளையை உபயோகி!
உதறி எறி உன் தயக்கங்களை!
உற்சாகமாக புறப்படு!
உன் வாழ்க்கை சிறக்க
உறுதியாய் திட்டமிடு!
இறுதி வரை போராடு!
சலித்து போகாமல்
சல்லடை போடு! உன் வாய்ப்பு
உன் காலடியில் விழும்!
வீணாக்காமல் விரைந்து பற்றிடு!
வெற்றி உன் பக்கம்
விரைந்து வந்திடும்!

நம்பு இளைஞா!

நம்மால் முடியும்
என்று நம்பு
நண்பா!

முடியாதது எதுவும்
இல்லை என்ற
முனைப்பு உன்னிடம் இருந்தால்
மலையும் கடுகாகும்!

கடலின் அலைகளை
எதிர்த்து கப்பல்
நீந்த வில்லையா?

காற்றை கிழித்து
விமானங்கள்
பறக்கவில்லையா?

பூமியைத்
துளைத்து நீர்
ஊற்றெடுக்கவில்லையா?

முட்டையை உடைத்து
பறவ� ��கள்
பிறக்கவில்லையா?

நிலவை மறைக்க
மேகம்
முயல்வதில்லையா?

எதிர் நீச்சல் போட
பழகு! என்னாலும்
முடியும் என நினை!
எந்நாளும் உன்
பொன்னாள் ஆகும்நாள்
தூரத்தில் இல்லை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு கு� ��ித்த கருத்துக்களை பகிரலாமே!




http://tamilnews-latest.blogspot.com<>


<><><><><><><><><><><><><><><><><><><><>
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger