சிரியாவில் ஏற்பட்டுள்ள போர் அபாயத்தால் இந்திய ரூபாயின் மதிப்பு
மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் சர்வதேச வெளி மார்க்கெட்டில்
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்தது. டாலருக்கு நிகரான இந்திய
ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 68.85 ஆக வீழ்ச்சி அடைந்தது.
இது இந்திய பங்கு சந்தையிலும் சரிவை ஏற்படுத்தி உள் நாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக ரூபாய் மதிப்பு சரிவில் இருந்து சிறிதளவு மீண்டது.
கடந்த சில நாட்களாக ரூபாய் மதிப்பு 66, 67 என்ற அளவில் இருந்தது. இந்த நிலையில் இன்று ரூபாய் மதிப்பு மீண்டும் கடுமையாக சரியத் தொடங்கியுள்ளது. இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 68 ஆக சரிந்தது. தொடர்ந்து 68.50 ஆக மேலும் வீழ்ச்சி அடைந்தது. அதன்பிறகு 68.60 என்ற அளவில் உள்ளது.