Tuesday 3 September 2013

சிரியாவில் போர் அபாயம்: இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் கடும் சரிவு Syria war danger indian rupees value decrease

சிரியாவில் ஏற்பட்டுள்ள போர் அபாயத்தால் இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் சர்வதேச வெளி மார்க்கெட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 68.85 ஆக வீழ்ச்சி அடைந்தது.
இது இந்திய பங்கு சந்தையிலும் சரிவை ஏற்படுத்தி உள் நாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக ரூபாய் மதிப்பு சரிவில் இருந்து சிறிதளவு மீண்டது.
கடந்த சில நாட்களாக ரூபாய் மதிப்பு 66, 67 என்ற அளவில் இருந்தது. இந்த நிலையில் இன்று ரூபாய் மதிப்பு மீண்டும் கடுமையாக சரியத் தொடங்கியுள்ளது. இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 68 ஆக சரிந்தது. தொடர்ந்து 68.50 ஆக மேலும் வீழ்ச்சி அடைந்தது. அதன்பிறகு 68.60 என்ற அளவில் உள்ளது.

கடந்த சில நாட்களாக சிரியா மீது அமெரிக்கா போர் தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக சேர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி போருக்கு ஆயத்தமாகி உள்ளன. இது சர்வதேச வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.
சிரியா இந்தியாவின் நட்பு நாடாக உள்ளது. சிரியாவில் இந்தியாவின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களை நடத்தி வருகிறது. அங்கு போர் மூண்டால் அது இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்த நிலையில் இன்று பங்கு சந்தையில் உயர்வு ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 250 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தையில் நிப்டி 70 புள்ளிகளும் உயர்ந்தது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger