குஜராத் முதல்–மந்திரி நரேந்திர
மோடி வருகிற 26–
ந்தேதி திருச்சியில் இளைஞர்
மாநாட்டில் பேசுகிறார்.
இந்த கூட்டத்துக்கு மாநிலம்
முழுவதிலும் இருந்து இளைஞர்கள்,
மாணவர்கள்,
பொதுமக்களை பெருமளவில் திரட்ட
தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் தீவிர
முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
கூட்டத்துக்கு வருபவர்கள்
முன்கூட்டியே பெயர்
பதிவு செய்வதற்காக மாவட்ட வாரியாக
விண்ணப்ப படிவங்கள் மூலம் பெயர்
சேர்க்கை நடந்து வருகிறது.
ஆன்–லைன் மூலமும் பெயர்
பதிவு செய்யும்
முறையை பா.ஜனதா தகவல்
தொழில்நுட்ப பிரிவினர்
நேற்று தொடங்கினார்கள்.
நேற்று மாலை 5 மணி முதல் இந்த
வெப்செட் செயல்பட தொடங்கியது.
ஒரே நாளில் நரேந்திர
மோடியை பார்க்க சுமார் 1500 பேர்
பெயர் பதிவு செய்துள்ளார்கள்.
நரேந்திர மோடி பொதுக்
கூட்டத்துக்கு திருச்சி பைபாஸ்
ரோட்டில் இடம்
தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங்,
நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள்
அமர்வதற்காக
டெல்லி செங்கோட்டை வடிவில்
பிரமாண்டமான
மேடை அமைக்கப்படுகிறது.
மேடை அமைப்பு, பொதுக்கூட்ட
ஏற்பாடுகள் குறித்து திருச்சியில்
இன்று பொன்.ராதாகிருஷ்ணன்
தலைமையில் ஆலோசனை கூட்டம்
நடந்தது. கூட்டத்தில்
அமைப்பு செயலாளர் மோகன்ராஜுலு,
சரவண பெருமாள், மாநில செயலாளர்கள்
வானதி ஸ்ரீனி வாசன், கருப்புமுருகன்,
இளைஞர் அணி மாநில தலைவர்
பாலகணபதி, ஆதவன்,
முத்துலெட்சுமி உள்பட மாநில
மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?