போலி என்கவுண்ட்டர் வழக்கில் கைதான
போலீஸ் அதிகாரி ராஜினாமா:
நரேந்திரமோடி மீது பகிரங்க
குற்றச்சாட்டு Police officer resigns arrested
in fake encounter case
குஜராத் மாநிலத்தில் கடந்த சில
ஆண்டுகளுக்கு முன் போலீஸ்
என்கவுண்ட்டரில் சொராபுதீன் ஷேக்
என்பவர் கொல்லப்பட்டார். பின்னர்
இது போலியாக நடந்த என்கவுண்ட்டர் என
தெரிய வந்தது. அங்கு இது போல்
மேலும் சில போலி என்கவுண்ட்டர்கள்
நடந்ததும் பின்னர் தெரிய வந்தது. இந்த
போலி என்கவுண்ட்டர்கள் பற்றி சி.பி.ஐ.
விசாரணை நடத்தி வருகிறது.
குஜராத்தில் நடந்த 4
போலி என்கவுண்ட்டர்கள் தொடர்பான
வழக்குகளில் குஜராத் மற்றும்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 6
ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 32
போலீசார்
இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களில் ஒருவர் குஜராத் மாநில
ஐ.பி.எஸ். அதிகாரியான 'டி.ஐ.ஜி.'
வன்சாரா. சொராபுதீன் ஷேக்
போலி என்கவுண்ட்டர் வழக்கு தொடர்பாக
டி.ஐ.ஜி. வன்சாரா கடந்த 2007-ம்
ஆண்டு ஏப்ரல் 24-ந்
தேதி கைது செய்யப்பட்டார்.
சபர்மதி மத்திய சிறையில்
அடைக்கப்பட்டு உள்ள அவர், கடந்த 6
ஆண்டுகளில் மேலும் சில
போலி என்கவுண்ட்டர் வழக்குகளிலும்
முக்கிய குற்றவாளியாக
சேர்க்கப்பட்டு உள்ளார். டி.ஐ.ஜி.
வன்சாரா, முதல்-மந்திரி நரேந்திர
மோடிக்கு நெருக்கமாக இருந்தவர் என
கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சிறையில்
இருக்கும்
டி.ஐ.ஜி வன்சாரா திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
அவர், தனது 10 பக்க
ராஜினாமா கடிதத்தை குஜராத்
உள்துறை கூடுதல்
தலைமைச்செயலாளருக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்.
அதில், நரேந்திர மோடி மீதும்,
அவரது அரசு மீதும் கடுமையான
குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.
மேலும் நரேந்திர மோடிக்கு மிகவும்
நெருக்கமானவரும், குஜராத்
உள்துறை மந்திரியாக இருந்தவருமான
அமித் ஷாவையும் அவர் கடுமையாக
தாக்கி இருக்கிறார். அரசின்
கொள்கையைத்தான் போலீஸ்
அதிகாரிகள் செயல்படுத்தியதாகவும்,
பாகிஸ்தான் தூண்டி விடும்
தீவிரவாதத்துக்கு எதிராக போராடி,
அதன் காரணமாக
கைதாகி தற்போது சிறையில்
இருக்கும் அவர்களை குஜராத்
அரசு பாதுகாக்க தவறிவிட்டதாகவும்
குறை கூறி இருக்கிறார்.
நரேந்திர மோடியை கடவுள் போல்
கருதியதாகவும், அவர் மீது மிகுந்த
மரியாதை வைத்து இருந்ததால்தான்
இவ்வளவு நாளும்
அமைதி காத்ததாகவும் கடிதத்தில்
வன்சாரா குறிப்பிட்டு உள்ளார்.
நரேந்திர மோடியை அமித் ஷா தவறாக
வழிநடத்தியதாகவும் அவர்
கூறி உள்ளார்.
போலி என்கவுண்ட்டர்களுக்காக
போலீஸ்காரர்களை சிறையில் அடைக்க
முடியும் என்றால், அந்த
என்கவுண்ட்டர்களுக்கு காரணமான
அரசாங்கத்தில் இருப்பவர்கள்
நவி மும்பையில் உள்ள
தலோஜா மத்திய
சிறையிலோ அல்லது ஆமதாபாத்தில்
உள்ள சபர்மதி மத்திய சிறையிலோதான்
இருக்கவேண்டும் என்றும்
வன்சாரா தனது கடிதத்தில்
கூறி உள்ளார்.
போலீஸ் அதிகாரி வன்சாராவின் இந்த
ராஜினாமா கடிதம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நரேந்திரமோடி அரசு மீது போலீஸ்
அதிகாரி வன்சாரா கூறியுள்ள
குற்றச்சாட்டுகள் பற்றி குஜராத் மாநில
பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர்
ஜெய் நாராயண் வியாசிடம் நிருபர்கள்
கருத்து கேட்டனர். அப்போது அவர்
கூறுகையில்; டி.ஐ.ஜி.
வன்சாரா இப்படி கூறி இருப்பதில்
ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றும்,
சிறையில் இருக்கும் அவர்
கோபத்திலும் விரக்தியிலும்
இவ்வாறு கூறி இருக்கலாம் என்றும்
தெரிவித்தார்.
மேலும் வன்சாரா இடைநீக்கம்
செய்யப்பட்டு இருப்பதால்
அவரது ராஜினாமா ஒரு பிரச்சினை அல்ல
என்றும் அவர் கூறினார்.
டெல்லியில் காங்கிரஸ்
பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்
இதுபற்றி கூறுகையில்; குஜராத்
மாநில அரசு தனது அதிகாரிகளை எந்த
அளவுக்கு தவறாக
நடத்துகிறது என்பது வன்சாராவின்
ராஜினாமா கடிதம் மூலம் தெரிய
வந்துள்ளது என்றும்,
போலி என்கவுண்ட்டர் பற்றி சி.பி.ஐ.
ஏற்கனவே விசாரித்து வருவதால்
உண்மை விரைவில் வெளிவரும்
என்றும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?