ஜோத்பூர் சிறையில் அடைப்பு:
சாமியார் ஆசாராம் ஜாமீன்
கேட்டு மனு jodhpur jail swami aasaram
case bail hearing manu
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர்
ஆசிரமத்தில் தங்கிப் படித்த உத்தரபிரதேச
மாணவியை கற்பழித்ததாக சாமியார்
ஆசாராம் பாபு இந்தூரில்
கைது செய்யப்பட்டார். போலீசார்
அவரை ஜோத்பூர்
கொண்டு சென்று ஒரு நாள் காவலில்
வைத்து விசாரணை நடத்தினார்கள்.
ஆசிரமத்துக்கும் அழைத்துச்
சென்று விசாரணை நடத்தப்பட்டது.
72 வயதான சாமியார்
நரம்பு கோளாறால் ஆண்மைத்
தன்மையை இழந்து விட்டதால்
கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட
முடியாது என்றும் தான்
நிரபராதி என்றும் கூறினார்.
இதையடுத்து அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் அவர்
முழு ஆண்மை பலத்துடனும் நல்ல உடல்
நலத்துடனும் இருப்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணைக்குப் பின்
ஜோத்பூர் கோர்ட்டில் சாமியார்
ஆசாராம் ஆஜர் படுத்தப்பட்டார். 14 நாட்கள்
நீதிமன்ற காவலில் வைக்க
நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்
ஜோத்பூர் மத்திய சிறையில்
அடைக்கப்பட்டார்.
முன்னதாக ஆசாராமை போலீஸ்
வேனில் பலத்த பாதுகாப்புடன்
அழைத்து வந்தனர். கோர்ட்டில்
அவரது ஆதரவாளர்கள் கூடியிருந்ததால்
ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஜெயிலில் அடைக்க
கொண்டு செல்லும்
போது அவருக்கு வேனுக்கு முன்னும்
பின்னும் ஏராளமான கார்களில்
போலீசார் அணி வகுத்து சென்றனர்.
அவருக்கு சிறையில் தகுந்த மருத்துவ
சிகிச்சைகள் அளிக்க வேண்டும்
என்று அவரது வக்கீல் கோர்ட்டில்
கேட்டுக் கொண்டார்.
அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
ஜெயிலில் அவர் எண் 1 அறையில்
அடைக்கப்பட்டார். வெள்ளை வேட்டியும்
குர்தாவும் அணிந்து வாடிய
முகத்துடன் காணப்பட்டார்.
சாமியார் ஆசாராமை ஜாமீனில்
விடுதலை செய்யக்
கோரி அவரது வக்கீல் இன்று ஜோத்பூர்
கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இதற்கிடையே இந்த வழக்கில் ஜோத்பூர்
போலீசார் மெத்தனமாகவும்,
மென்மையாகவும்
செயல்படுவதாகவும்
எனவே வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க
வேண்டும் என்று கற்பழிக்கப்பட்ட
சிறுமியின் தந்தை ஷாஜகான் பூரில்
நிருபர்களிடம் கூறினார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?