Friday, 6 January 2012

ஒளியோவியம்

- 0 comments


அறையில் வண்ண மயமான
ஆடம்பர மின்விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.
தலையை இருபுறமும் ஆட்டி ஆட்டி
காற்றில் தள்ளாடும் மெழுகுவர்த்தியை போல
எதிரில் அமர்ந்து அழகாய் பேசி கொண்டிருக்கிறாள்.
அவளை பார்த்து கொண்டு
எரியாமல் உருகி கொண்டிருக்கிறேன் நான்.

மின்சாரம் நின்று போய்
விளக்கு அணைந்து விட்டது.

இப்போது
இன்னும் பிரமாண்டமாய்
ஒளிர்கிறது
அவள் முகம்.





http://girls-tamil-actress.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • [Continue reading...]

    கொலைகார வாசகன் - ��பாயில்

    - 0 comments



    2012 ஆம் வருடம் பிறந்து விட்டது.

    ஒரு ரூபாயை மிச்சபடுத்தி உங்களுக்கு ஒரு நாள் முன்பாகவே அட்வான்ஸ்டு புத்தாண்டு வாழ்த்துக்களை, உங்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நண்பர்கள் SMS மூலம் வாழ்த்தி  இருப்பார்கள்.

    நீங்களும் அடுத்த நூற்றாண்டின் மாமனிதர் விருது வாங்கி விடுவீர்கள். மக்கள் எல்லோரும் நல்லவர்கள் ஆகி விடுவார்கள். நாடே சுபிட்சம் அடைந்து விடும்.

    இவ்வருடம் உலகம் அழிந்து விடும் என்று மாயன்ஸ் மக்கான்ஸ் சொல்லுகிறார்கள். பயமாய் இருக்கிறது. என்னுடைய மொபைலும் Virgin நானும் Virgin.

    சரி, ஏன் Virgin மொபைல் என்று பெயர் வைத்தார்கள்?

    எல்லா மொபைலும் Virgin ஆக தான் இருக்கின்றன. அதிக நேரம் கொஞ்சி கொஞ்சி பேசி, பின் முத்தம் கொடுத்து அதை சூடேற்றி விட்டு தன் வேலையை பார்க்க போய் விடுகிறார்கள்.



    போன வருடம் வந்த மொக்கை படங்களை வரிசை படுத்தி தொலைகாட்சிகள் எல்லாம் இம்சை படுத்த, "எனக்கு பிடித்த பத்து படங்கள்", "எங்க ஆயாவுக்கு பிடித்த பத்து படங்கள்" என ஒவ்வொரு பிலாகர்களும் அதற்கு மேலும் புண்ணை கிளற, புத்தாண்டு எனக்கு இனிமையாய் கழிந்தது.

    -------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*

    ரு நாள் காலை எப்போதும் போல முகம் கழுவாமல் என் பிளாக்கை திறந்து பார்த்த போது, என் பிளாக்கில் ஒரு கமெண்ட் போடபட்டிருந்தது. தான் ஒரு கொலைகாரனாக இருந்ததாகவும், என் பிளாகை படித்து திருந்தி விட்டதாகவும் எழுதியிருந்தான். இப்படி திருந்திய வரிசையில் அரசியல்வாதி, ரேப்பிஸ்ட் என நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது சம்பந்தம் இல்லாத விஷயம்.

    என் எழுத்தின் மேல் பற்று கொண்டு அவன் நிறைய போலி ப்ரோபைல்கள் உருவாக்கி என் எல்லா பதிவுகளுக்கும் ஒட்டு போட்டு தமிழ் மணத்தின் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகளின் வரிசையின் உள்ளே நுழைத்து, எனக்கு மணி மகுடம் வாங்கி கொடுப்பதில் குறியாக இருக்கிறான்.

    அந்த மகுடத்தில் மணி இருக்குமா? இருக்காதா?

    தமிழ் தெரியாத என்னுடைய பிரெண்டு ஒருவன் தமிழ்மணம் (Tamilmanam) என்பதை எப்போதும் தமிழ்மானம் என்றே படித்து மானம் வாங்குவான். அவனை சாகடிக்கலாம் என்றிருக்கிறேன்.

    1330 குறள் எழுதி வைத்துவிட்டு கடலுக்குள் போய் தனியாக நின்று தவம் செய்து கொண்டிருக்கும் திருவள்ளுவருக்கே தெரியாது எத்தனை பேர் அதை படித்து உத்தமனாய் மாறி இருக்கான் என்று. பத்து குறள் மனப்பாடம் பண்ணுவதற்கே நாக்கு தள்ளும். பனிரெண்டாம் வகுப்பு பப்ளிக் எக்சாமிலே மினி பிட் எடுத்துட்டு போய் தான் நான் பாஸ் ஆனேன்.

    கலைஞர் எழுதிய திருக்குறள் உரையை படித்த பின் தான் எனக்கு எல்லா குறளின் பொருளும் புரிய துவங்கியது. அந்த உரையை (தலையணை உறையல்ல) எப்போதும் தலைமாட்டிலே வைத்து தான் தூங்குவது வழக்கம். அதை நான் காசு கொடுத்து வாங்கவில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து தான் சுட்டு வந்தேன்.

    நான் வழக்கமாய் செவ்வாய்கிழமை காலை சாப்பிட்ட பின் காக்காய்க்கு சோறு வைத்துவிட்டு  சரியாய் 10:00 மணிக்கெல்லாம் பதிவு போட்டு விடுவேன். அவனும் அதை ஷார்ப்பாய் போட்டவுடன் படித்து விடுவான். அதுவரை உயிரை கையில் பிடித்து வைத்துக் கொண்டு தான் காத்திருப்பான்.

    ஆனால் அன்று இரண்டு நிமிடம் தாமதம் ஆகி விட்டது. அதற்கே அவனுக்கு மூச்சு விட சிரமமாக போய் விட்டது.

    நல்லவேளை இரண்டு நிமிட தாமதம் அவனை காப்பாற்றி விட்டது. அதனால் அவன் உயிரோடு இருக்கிறான். இன்னும் ரெண்டு நிமிஷம் தாமதித்து போஸ்ட் போட்டிருந்தால் கூட அவன் பிழைத்திருக்க வாய்ப்பு ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும்.

    செக்ஸை கலந்து, படிக்கின்றவர்களை கவர்வது போல கதை எழுத விரும்புகிறவர்கள், நேட்டிவிட்டியுடன் அய்யனார் போல எழுத வேண்டும். சும்மா ஒரிஜினாலிட்டி இல்லாமல் மார்பு, உறுப்பு என்று வெறும் வார்த்தைகளை நிரப்பி சாரு போல போரடித்து தூக்கம் வரவைக்க கூடாது.

    -------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*


    ழுக்காய் இருந்த என்னுடைய உலகம் Surf Excel போட்டு துவைத்ததை போல புதிதாக மாறிவிட்டது.

    "பிகர் ஏதாவது செட் ஆகிடுச்சா?" ன்னு கேட்கறீங்களா?

    நோ.

    வேலை நேரம் மாறி விட்டது. இதுவரை மதியம் இரண்டு மணிக்கு ஆபிஸ் சென்று கொண்டிருந்த நான், இப்போது காலை ஆறு மணிக்கெல்லாம் சென்று விடுகிறேன்.

    எப்பவுமே லேட்டாக எந்திருக்கிறேன் என்று வழக்கமாய் திட்டும் என் அப்பா இனி என்னை திட்ட முடியாது.  "சூரியனே எனக்கு அப்புறம் தான் எந்திரிக்குது" 

    ஆனால் அதிகாலை ஐந்து மணிக்கு எழுவது சிரமமாக தான் இருக்கிறது. அதிகாலையில் வந்து மார்பில் கோலம் போடும் அனுஷ்காவையும், கழுத்தை பின்னி கட்டியணைக்கும் மோனிக்கா பெலுசியையும்  வலுகட்டாயமாய் உதறி தள்ளிவிட்டு எழுந்து வரவேண்டியதாய் இருக்கிறது. 

    ஒரு சந்தேகம்.

    ஏன் இந்த நடிகைகள் எல்லாம் அதிகாலை ஆரம்பித்தவுடன் தான் வருகிறார்கள்?





    http://girls-tamil-actress.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • [Continue reading...]

    திருமணங்கள் கேர��ாவில் நிச்சயிக்���ப் படுகின்றன

    - 0 comments



    என்னதான் கவிதை, கருமாந்திரம் என்று நிறைய எழுதினாலும் பொண்ணுங்ககிட்ட பேசும் போது மட்டும் எனக்கு சரியாக சிக்னல் கிடைக்காத செல்போன் மாதிரி, வார்த்தைகள் கட்டாக ஆரம்பித்து விடும். என்னுடைய எல்லா காதலும் கருமாதியிலே முடிய, கட்டாயப் படுத்தி மனதை பறிக்க நானும் கடைசியாக கல்யாண சந்தையில் தள்ளப்பட்டு விட்டேன்.

    இது மாடுகள் விலை பேசப்படும்  செவ்வாய் சந்தை.



    தண்ணி அடித்து பொம்பளைங்க பின்னால் அலைந்து, ஜாலியாக எதை பற்றியும் வருத்தப் படாமல் ஊர் சுற்றி கொண்டிருக்கும் வாலிப வயசு பையன்களை பார்த்து அவர்களது உறவினர்கள்,

    "ஒரு கால்கட்டு கட்டி விட்டால் எல்லாம் சரியாகிடும்"
    "மூக்கணாங் கயிறு போட்டால் அடங்கிடுவான்"

    என்று மாடுகளையே உதாரணம் சொல்லி பேசுவார்கள். கல்யாணம் ஆவதற்கு முன் நாய் மாதிரி சுற்றி கொண்டிருக்கும் நாம், கல்யாணம் ஆகி விட்டால் மாடு மாதிரி உழைக்க வேண்டும்.

    கேம்பஸ் இன்டர்வியுவிக்கே படிக்காமல் பன்னாட்டாக செல்லும் நம்ம பசங்க, பொண்ணு பார்க்க போகும் போது மட்டும் பொண்ணுகிட்ட எப்படி பதில் பேசறது என்று தனிமையில் ஆஸ்கார் விருது வாங்கும் அளவுக்கு நடித்தெல்லாம் பார்ப்பார்கள்.

    பெண் வீட்டார்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்கு, அவர்கள் கொடுக்கும் பஜ்ஜி சொஜ்ஜிகளை சாப்பிட்டால் தான் நம்மால் பதில் சொல்ல முடியும்.

    மாடு என்ன படிச்சிருக்கு?
    மாடு எவ்வளவு சம்பளம் வாங்குது?
    மாடு அமெரிக்கா போயிட்டு வந்திருக்கா? இல்லையா?

    டயர்டு ஆகிட்டா, கொஞ்சம் காபி சாப்பிட்டு விட்டு பதில் சொல்லலாம்.

    இதில் அமெரிக்கா சென்று வந்த மாட்டுக்கு முன்னுரிமை அதிகம்.

    இப்போது ஐ.டி துறையில் வேலை செய்யும் பையன்களுக்கு சரியான வயதில் திருமணம் ஆவதே சவாலான விஷயம். அப்படி இருக்க அதிகமாய் படித்திருக்காமல் டிரைவர் மற்றும் இதர வேலைகளை செய்யும் இளம் சிங்கங்களின் நிலைமை இன்னும் மோசம். இதனால் நிறைய பேர் திருமணம் ஆகாமல், நடிகர் சேரன் போல முகத்தை மூடி கொண்டு அழுகின்றனர்.

    பெண்களுக்கு Options அதிகமாய் இருக்கின்றன. பையன்களுக்கு?  

    They are the Options!.

    படித்து முடித்து விட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருக்கும் பசங்களிடம் வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி காசை பிடுங்குவதற்கென்றே சிட்டியில் ஒரு கும்பல் எப்போதும் நடமாடி கொண்டிருக்கும். அதுபோல திருமணம் ஆகாமல் தவித்து கொண்டிருக்கும் பையன் வீட்டார்களை ஏமாற்றி பணம் பிடுங்க ஜோசிகார கும்பல் நாட்டில் பஞ்சமில்லாமல் நிறைந்திருக்கிறது.

    அவர்கள் சொல்லும் சில ஏமாற்று சடங்கு வேலைகள்.

    1. வாழை மரத்திற்கு தாலி கட்டுவது

    பெண்ணின் கால்களை வாழை தண்டு கால்கள் என்று  கவிஞர்கள் வர்ணித்து காதலில் மூழ்கி முத்தெடுப்பர்கள். ஆனால் இங்கு முழு வாழை மரத்தையே பெண்ணாக்கி விடுகிறார்கள். நீங்கள் வாழை மரத்திற்கு தாலிகட்டும் சடங்கை செய்து முடித்தால் உங்கள் திருமண தோஷம் விலகி திருமணம் நடந்து, முதலிரவை பஞ்சு மெத்தையில் குஜாலாய் கொண்டாடலாம் என்பது நம்பிக்கை.

    இது கிட்டத்தட்ட ஒரு நிஜ திருமணம் போலவே நடக்கும். ஓம குண்டம் வளர்த்து, அதில் ஒரு கையால் அரிசி மற்றும் இதர வகைகளை போடுவதுடன், மற்றொரு கையில் உங்களது மணமகளை அதாவது இளம் வாழைக் கன்றை பிடித்துக் கொண்டு, அய்யர் சொல்லும் மந்திரங்களை ஒன்றும் புரியாமல் திருப்பி ஓத வேண்டும். மேளதாளம் மட்டும் இருக்காது. மிமிக்ரி தெரிந்த உங்கள் நண்பர் யாராவது இருந்தால் அதையும் அடித்து கொள்ளலாம்.

    அந்த வாழை மரத்திற்கு ஒரு பெயரும் வைக்கப் படும். கடைசியில் முகூர்த்த நேரம் வரும் போது அய்யரிடம் இருந்து மஞ்சள் கயிறை வாங்கி வாழை மரத்திற்கு மூன்று முடிச்சு போடவேண்டும். அப்போது அந்த வெட்டிய வாழை மரம் தண்ணீர் (கண்ணீர்) விட்டால் கவலைப் படக் கூடாது. ஆனால் கடைசியாக முதலிரவு கூட முடியாமல் அந்த வாழை பெண்ணின் கழுத்தை அரிவாளால் வெட்டி ஆற்றில் தூக்கி வீசி விடுவார்கள் என்பது வருத்தமான விஷயம்.

    என் நண்பனுக்கு நடந்த திருமணத்தில் அவன் பொண்டாட்டியின் பெயர் காவ்யா. காவ்யா செத்து போனதில் கொஞ்ச நாள் அவன் தாடி வளர்த்து கஞ்சா அடித்து "அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சல" என்று பாட்டு பாடி புலம்பி கொண்டிருந்தான். நம்மூரில் தான் கழுதைக்கும், மரத்திற்கும் தாலி கட்டி அவைகளை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றனர்.

    2.  திருமணஞ்சேரிக்கு சென்று மாலை வாங்கி வருவது.

    திருமணஞ்சேரி என்பது நாகப் பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். கடவுள் சிவன், பார்வதியை இங்கு தான் திருமணம் செய்தாராம். இங்கு வந்து கடவுளை வழிபட்டு பூ மாலையை வாங்கி கொண்டு சென்றால், உங்கள் திருமணம் ஏற்படுவதில் இருக்கும் தோஷம் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. அந்த மாலையை உங்களுக்கு திருமணம் ஆகும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். திருமணம் ஆனவுடன் மணமக்களாக மீண்டும் அங்கு சென்று அந்த மாலையை திருப்பி தர வேண்டும் என்பது சம்பிரதாயம்.



    இப்படியாக ஏமாந்து கடைசி வரை சந்தையில் விலை போகாத மாடுகள் எல்லாம் கடைசியாக கேரளாவுக்கு அனுப்பபட்டு அடிமாட்டு விலைக்கு விற்கப் படும். கேராளாவில் திருமண சம்பந்தம் பிடிப்பதற்கென்றே எங்கள் ஊரில் ஒரு Specialized மேரேஜ் புரோக்கர் இருக்கிறார். தமிழ் நாட்டிற்கும் கேரளாவிற்கும் நிறைய broadband இணைப்புகள் கொடுத்துள்ளார்.

    நம்ம ஊரு கல்யாணங்கள் போல மாப்பிள்ளை வீட்டு அழைப்பு, பெண் வீட்டு அழைப்பு, நிச்சயதார்த்தம் என்பதெல்லாம் தனித்தனியாய் இருக்காது. ஹனிமூன் செல்வது போல ஒரு வாரம், மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் கேரளா சென்று, திருமணம் முடித்து, அதன் பின் "கேரள நாட்டு முல்லை"யை (மணப்பெண்ணை) எந்த பிரச்சினையும் இல்லாமல் தமிழ் நாட்டிற்கு கூட்டி வந்து 'அணை'க்கலாம்.

    கேரள பெண்கள் அந்த ஊரை போலவே செழுமையாய் இருக்கிறார்கள். அந்த ஊர் இளநி பார்க்க பெரிதாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும். என் ஆபிஸ் பெண் ஒருத்தியை இளநி என்று குறிப்பிடுவோம். பெயர் காரணம் அவசியமில்லை.

    கேரளா சுற்றி பார்க்க அழகான இடம் என்பதால் நீங்கள் திருமணதிற்கு பின் ஹனிமூன் செல்ல அவசியம் இருக்காது.

    பெண் வீட்டார்களிடம் இருந்து பெண்ணை தவிர எதையும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. மாப்பிள்ளை வீட்டார்கள் தான் பெண்ணுக்கு நகைகள் போடுவது முதல் திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் செய்து கொள்ள வேண்டியது போல் இருக்கும். அவர்களால் முடிந்தால் நீங்கள் திரும்பும் போது வழிச் செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

    ஆந்திராவில் உங்களுக்கு எந்த டிகிரி, எந்த university -யில் வேண்டும் என்றாலும் பணம் கொடுத்தால் போதும் Fake certificate வாங்கி விடலாம். அதே போல் மாப்பிள்ளை வீட்டார்க்கு எந்த ஜாதியில் எந்த குலத்தில் பெண் வேண்டுமென்றாலும், அந்த Fake பெண் வீட்டார்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். உங்கள் உறவு, ஜாதி வட்டங்களுக்குள் ஒரே ஜாதி என்று புளுகி கொள்ளலாம்.

    ஆனால் இன்னொரு வகையில், சாதி மத பேதம் அற்ற சமுதாயத்தினை உருவாக்கி நீங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாய் திகழ்வீர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

    கல்யாணம் ஆன நிறைய பேருக்கு தெரியும், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவதில்லை என்று.




    http://girls-tamil-actress.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • [Continue reading...]

    கனடாவிலும் தமிழ��ழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள��க் கொண்ட முத்திரைகள்

    - 0 comments


    பிரான்ஸில் புலிகள் சார்பான முத்திரைகள் வெளிவந்தததையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களைக் கொண்ட முத்திரைகள் கனடாவில் புழக்கத்திலுள்ளதை ஓட்டாவிலுள்ள இலங்கையர் நிறுவனமொன்று கனேடிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

    தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழீழமென காட்டப்பட்ட பகுதியின் படத்தைக் கொண்ட தனிப்பட்ட முத்திரைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் முகப்பு நிறுவனமான தமிழ் இளைஞர் நிறுவனம் கனடா தபால் சேவையை துஷ்பிரயோகம் செய்து வெளியிட்டுள்ளதாக இலங்கையர் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

    'நான் தமிழ் இன அழிப்பை நினைவில் வைத்துள்ளேன்' என்னும் வாசகம் முத்திரையில் பொறிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

    இந்த முறைகேடான முத்திரையை புழக்கத்திலிருந்து அகற்றவும் இதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அறிய நாம் ஆவலாகவுள்ளோமென முறைப்பாட்டு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • [Continue reading...]

    கனடாவை குறிவைக்��ும் சிறீலங்கா, க��டாத் தமிழர் வெற்றிகரமாக எதிர்கொ��்வார்களா?

    - 0 comments


    நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அடுத்த நடவடிக்கைகள் குறித்த செயற்பாடுகள் சிறீலங்காவில் துரிதமடைந்துள்ளன. முதலில் அறிக்கைக்கான சர்வதேச ஆதரவை பெறுதல் என்பதே முதல் பணியாக்கப்பட்டுள்ளது.

    எதிர்பார்த்தவாறு ஆதரவு இதுவரை வெளிப்படாத நிலையில் அது குறித்த கண்டனங்கள் சிறீலங்காவிற்குள்ளேயே வெளியாவது அரசிற்கு சவாலாக அமைந்துள்ளது. அதை தடுக்கும் வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது அறிக்கையைக் கண்டித்தால் சட்ட நடவடிக்கை என மிரட்டும் அளவிற்கு சென்றுள்ளது.

    இந்நிலையில் வெளிப்படையாக அல்லது மறைமுக ஆதரவை வெளியிடும் சில நாடுகளும் அறிக்கையில் பிரேரிக்கப்பட்ட விடயங்களை அமுல் நடத்தக் கோருவது மேலும் சவாலை அரசிற்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இவ்வறிக்கையும் வழமைபோல் கிடப்பில் போட்டுள்ள அரசு, புதிய ஆண்டில் உள்நாட்டு, மட்டும் சர்வதேச மோதலுக்கு தன்னை தயார் செய்துள்ளதாக விசயம் அறிந்த அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

    இது குறித்த உயர்மட்ட கலந்துரையாடல்கள் சமீபத்தில் நடந்துள்ளன. இதில் சனாதிபதியின் சக்திவாய்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். இதில் கனடா குறித்த கலந்துரையாடலே முதன்மை இடத்தை பிடித்துள்ளது.

    குறிப்பாக கனடியப்பிரதமர் காப்பர் மற்றும் வெளி;விவகார அமைச்சர் பெயட் ஆகியோர் தொடர்ச்சியாக சிறீலங்கா குறித்து வெளியிட்டுவரும் கருத்துக்கள் அரச தரப்பை பெரும் சினம் அடைய வைத்துள்ளதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

    கனடா பல்வேறு சர்வதேச தளங்களில் சிறீலங்கா அரசிற்கு சவாலாகி வருவதாக பல்வேறு விடயங்களை முன்னிலை நிறுத்தி அங்கு கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. குறிப்பாக மார்ச்சில் வரவுள்ள ஐ.நா மனித உரிமைகள் அவையத்தின் அமர்வில் கனடாவின் செயற்பாடு குறித்து சிறீலங்கா தரப்பு அச்சம் அடைந்துள்ளது.

    மேலும் அடுத்த ஆண்டில் சிறீலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக கனடா தொடர்ந்தும் மிரட்டிவரும் நிலையில் அது குறித்த சர்வதேச ஆதரவு திரட்டும் செயற்பாட்டை கனடா பிறந்த புதியாண்டில் விரைவுபடுத்தலாம் என சிறீலங்கா தரப்பு அச்சப்படுகின்றது.

    அதனால் கனடாவை எதிர்கொள்ள பல திட்டங்கள் வரையப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் குறிப்பாக ஆளும் கன்சவேட்டிக் கட்சிக்கு எதிராக இருந்த கனடியத் தமிழ் மக்கள் சமீபகாலமாக அரசின் காந்திரமான செயற்பாடுகள் காரணமாக அதற்கு ஆதரவாக மாறிவரும் சூழல் சிறீலங்கா அரசை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அதை உடன் தடுத்துநிறுத்தும் செயற்பாடுகள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. ஊடகவியலாளராக இருந்து பின்னர் அரச வெளிவிவகார துறைக்குள் உள்வாங்கப்பட்டு தற்போது சனாதிபதி ஆலோசகராக உள்ள இனவாதி ஒருவர் இப்பணியில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளார்.

    இவர் முன்னர் ரொரன்ரொவில் சிறீலங்கா அரச பணியில் இருந்தபோது பல தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார் என்றும் கனடியத் தமிழரில் சிலரை முழுமையாக உள்வாங்கியிருந்தார் என்றும் சொல்லப்படுகின்றது.

    அவரது தலைமையில் ஒரு குழு கனடியத் தமிழரையும் கனடிய அரசையும் முழுமையாக பிரிக்கும் பணியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இக்குழுவில் கனடிய தமிழ் ஊடகவியாளர்கள், துறைசார் விற்பன்னர்கள், இளையோர், மதத் தலைவர்கள், மற்றும் கே.பி குழு எனத் தமிழர் பலரையும் இணைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.

    மேற்கத்திய நாடுகளில் உள்ள ஆளும் தரப்பிடம் இருந்து அங்கு வாழும் தமிழ் மக்களை அன்னியப்படுத்தி வைப்பது என்பது நீண்டகால சிறீலங்காவின் நாசகாரத்திட்டமாகும்.

    கனடிய அரசு குறித்து குழப்பமான, தமிழருக்கு கோபம் வரும் செய்திகளை வெளியிடுதல், கனடிய அரச வட்டாரத்தில் கனடிய தமிழர் குறித்து தொடர்ந்தும் மோசமான தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்துதல், கனடிய அரசு தமிழர் ஆதரவு நிலைக்கு வந்துள்ள நிலையில் கனடிய எதிர்கட்சிகளையாவது சிறீலங்கா ஆதரவு நிலைக்கு கொண்டுவருதல் ஊடாக கனடிய அரசிற்கு அழுத்தத்தை அதிகரித்தல், கனடிய கட்சிகளுக்குள் சிறீலங்கா ஆதரவு தரப்பின் தாக்கத்தை அதிகரித்தல், இலைமறையாக இருந்து தமிழர் தளத்தை கனடிய அரசியலில் வலுவாக்கிவருவோரை இனம்கண்டு அழித்தல் எனப் பலசெயற்பாடுகள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன.

    2012ஆம் ஆண்டு கனடியத் தமிழருக்கு சவால் நிறைந்த ஆண்டாக, ஒரு அரசியல் போர்களமாக விரிந்துள்ளது என்றார் கொழும்பில் உள்ள சிரேஸ்ட தமிழ் பத்திரிகையாளர் ஒருவர். கடந்த ஆண்டில் வலுவாக இருந்த பிரித்தானியத் தமிழர்கள் இவ்வாண்டில் சிதையுண்டு போயுள்ளமையையும் அவர் நினைவு கூர்ந்தார். கனடிய அரசு சிறீலங்கா தற்போது தொடுத்துள்ள சவால் குறித்து அறிந்து வைத்துள்ளதாகவும், ஆனால் கனடியத் தமிழர் இச்சதிவலை குறித்து முழுமையான புரிதலுடன் தயாராக உள்ளனரா என்பதே தனது கேள்வி என்றார் மேலும் அவர்.

    அவர் சுவாரசியமான மேலும் ஒரு விடயத்தையும் குறிப்பிட்டார். இக்கலந்துரையாடல்களில் போது சிறீலங்கா அரச தரப்பில் கனடா கடும் விசர்சனத்திற்கு உள்ளானதாகவும், வெறும் மூன்று கோடி மக்களை கொண்ட நாடு எங்களை மிரட்டுவதாக என வர்ணிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் சொன்னார். இவ்வாறே மேலும் பல நாடுகளும் கடந்த காலங்களில் மோசமாக விமர்சனம் செய்யப்பட்டமையையும் அவர் இங்கு நினைவு கூர்ந்தார்.

    அதேவேளை இவ்விமர்சனத்தின் பின் மறைக்கப்பட்ட உண்மைகளையும் சுவாரசியமாக அவர் தெரிவித்தார். சிறீலங்காவின் சனத்தொகை 2 கோடியே 6 லட்சம். உலகில் 56 இடம். கனடாவின் சனத்தொகை 3 கோடியே 46 லட்சம். உலகில் 35வது இடம்.

    ஆனால் உலகவங்கியின் கடந்த 10 ஆண்டுக்கணிப்பில் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவிற்கு அடுத்து கனடா 10வது இடத்தில். சிறீலங்கா 72வது இடத்தில். உலக நிலப்பரப்பில் 6.7 சதவீத நிலப்பரப்புடன் அதாவது 100 லட்சம் சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புடன் கனடா உலகில் 2வது பெரியநாடு. ஆனால் சிறீலங்காவோ வெறும் 0.04 சதவீத நிலப்பரப்புடன் அதாவது 65 ஆயிரத்து 610 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புடன் உலகில் 122 இடத்தில்.

    கனடா – சிறீலங்கா மோதலில் முள்ளிவாய்க்காலை இம்முறை சந்திக்கப் போவது யார்? இம்முறை வெற்றிக்கனியை தமிழர்கள் தவறாது பறிப்பார்களா? நடப்பாண்டில் பதில் தெரிந்துவிடும் என்கின்றனர் விசயம் அறிந்தவர்கள்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • [Continue reading...]

    காலநதி ஓட்டத்தி��் கேணல் சாள்ஸ்: ச.ச.முத்து

    - 0 comments


    காலநதி ஓட்டத்தில் கரைந்திட முடியாதகாவியபெரு வரலாறு கேணல் சாள்ஸ்.

    எல்லைக்கு வெளியேதான்
    இவனின் உறைவிடம்
    அதுவே மறைவிடமும்கூட

    எத்தனை எழுதினும்
    எழுத்திலோ பேச்சிலோ
    அடக்கிட முடியா
    உன்னத மனிதன் இவன்.

    கற்பனை என்றொரு
    வார்ததை உண்டு தமிழில்.
    அத்தனை கற்பனையும்
    கடந்த வீரம் இவனது.

    இவன் காற்றின் வீச்சில்
    கனல் எடுக்க தெரிந்த
    கந்தக வித்தை தெரிந்தவன்.

    எத்தனை காலம் இவன்.
    மூச்சை அடக்கி கொண்டே
    பேரினவாத மூளைக்குள்.
    துளையிட்டு போய் அமர்ந்திருந்தவன்.

    வெளியே தெரிந்த
    பேச்சுவார்த்தைகளுக்கும்
    சமாதான ஒப்பந்தங்களுக்கும் பின்னால்
    எங்கோ ஒரு மூலையில்
    சிரித்தபடியே சாள்ஸின்
    வெற்றி நின்றிருந்தது.

    அண்ணையின் கண்அசைவு
    ஒவ்வொன்றையும் இவனால்
    முழுதாக மொழிபெயர்க்க முடிந்திருந்தது.
    அதனால்தான் இவனால்
    எரிமலையின் குழம்புமழையையும்
    பூமிஅதிர்வின் பிரளயதையும்
    வானத்தில் இருந்து
    நெருப்பு மழையையும்
    நிகழ்த்த முடிந்த அக்கினிகுஞ்சு இவன்.

    காலநதி ஓட்டத்தில்
    கரைந்திட முடியாத
    காவியபெரு வரலாறு இவன்.
    தலைதாழ்த்தி வணங்குகின்றோம்.

    ச.ச.முத்து

    கேணல் சாள்ஸ் உட்பட்ட மூன்று மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • [Continue reading...]

    நெதர்லாந்தில் அ��தி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட ��மிழன் தற்கொலை!

    - 0 comments


    இலங்கையில் இடம்பெற்ற யுத்தம், அதனால் நாட்டு விட்டு நாடு தாவிய தமிழ் மக்கள் எனப் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர் தமிழர்கள். உள்நாட்டில் இடம்பெறும் யுத்தத்தில் இருந்து தம்மைப் பாதுகாக்க புலம்பெயர்ந்து சென்றாலும் அந் நாட்டினால் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு யுத்த முனையாக இருக்கும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்படும்
    பரிதாபங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அகதி தஞ்சம் கோரி விண்ணப்பித்த நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நெதர்லாந்தில் வசித்து வந்த இராஜரட்ணம் குஞ்சுப்பிள்ளை என்பவரது வதிவிட அனுமதி நிராகரிக்கப்பட்டு, அவரை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்காக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது 26.12.2011 அன்று தற்கொலை செய்துள்ளார்.

    இவர் யாழ் - பருத்தித்துறையை சொந்த இடமாகக் கொண்டதுடன் குறிப்பிட்ட காலமாக இந்தியாவில் அகதியாக வசித்து வந்தவர் என்பதோடு அவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்து அரசுக்கு நீண்ட காலமாக சிறீலங்காவினால் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுகின்றமை, சித்திரவதைகள் போன்ற அனைத்து விடயங்களும் எம் மக்களால் பேரணிகள், அரசியற் சந்திப்புகள், மகஜர்கள் மூலமாக தெரியப்படுத்தப்பட்டு வந்த போதிலும் அவற்றினைக் கருத்தில் கொள்ளாது தமிழர்களின் அகதித் தஞ்சத்தினை நிராகரித்துள்ளது என்பது கவலைக்குரிய விடயமாகும்.

    உலகம் எங்கும் மனிதம் மரத்து விட்டது என்பதற்கு மேற்படி சம்பவம் ஆதாரமாகின்றது.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • [Continue reading...]

    பொங்கலன்று பொது��க்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடக���கம்: ரூ 350 கோடி ஒத��க்கீடு

    - 0 comments


    பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதற்காக முதல்வர் ஜெயலலிதா ரூ 350 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இலவச

    வேட்டி, சேலை வழங்குவது பொங்கல் பண்டிகையின்போது தொடங்கப்பட்டு தமிழ்ப் புத்தாண்டுக்குள் அனைவருக்கும் வழங்கி முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் தயாரிப்பில் தற்போதுள்ள நிலை மற்றும் விநியோகம் குறித்து முதல்வர் ஜெயலலிதா 5.1.2012 அன்று ஆய்வு மேற்கொண்டார்.1981ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தேக்கமடைந்த கைத்தறி துணிகள் கொள்முதல் செய்யப்பட்டு, நெசவாளர்களுக்கு தொடர்வேலைவாய்ப்பு வழங்கப்படும் நோக்கத்துடனும், கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல்பண்டிகையின் போது புத்தாடைகளை இலவசமாக வழங்கும் நோக்கத்துடனும், அகில இந்தியாவிற்கும் முன்னோடி சமூக நல திட்டமான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது.

    இத்திட்டம், தமிழக அரசினால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தரமான வேட்டி சேலைகளை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும்என்ற உயரிய நோக்கத்துடன் முதன் முறையாக பருத்தி நூலுடன் பாலியெஸ்டர் நூல் கலந்து வேட்டிகள் மற்றும் சேலைகள் உற்பத்தி செய்து வழங்க முதல்வர் ஜெயலலிதா தனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 2003ஆம் ஆண்டு ஆணையிட்டார். அதன்படியே வேட்டி, சேலைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தின் கீழ் தேவைப்படும் 170.84 இலட்சம் சேலைகள் மற்றும் 169.75 இலட்சம் வேட்டிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்கள்.

    அதன்படி தமிழகத்திலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் மூலமே இந்த வேட்டி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.பொங்கல்-2012 விலையில்லா வேட்டி சேலை திட்டத்திற்காக நடப்பு ஆண்டில் 256 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே ஆணை வழங்கியுள்ளார். இத்திட்டத்திற்காக மேலும் தேவைப்படும் 94 கோடி ரூபாயை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா தற்போது உத்தரவிட்டுள்ளார்.

    ஆக மொத்தம் இத்திட்டத்திற்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் கைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் வேட்டி, சேலைகளுக்கான நெசவு கூலியில் 10 விழுக்காடுஉயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா 15.9.2011 அன்று ஆணையிட்டிருந்தார்.

    மேலும், இத்திட்டத்திற்கு தேவையான வேட்டி, சேலைகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூலி உயர்வினை கனிவுடன் பரிசீலனை செய்து வேட்டி மற்றும் சேலை ரகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நெசவு கூலியினை வேட்டி ஒன்றுக்கு ரூ. 16/-லிருந்து ரூ. 18.40 ஆகவும், சேலை ஒன்றுக்கு ரூ. 28.16/- லிருந்து ரூ. 31.68/-ஆகவும் உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 01.03.2011 முதல் 15.05.2011 முடிய தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தபடியாலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு 22.09.2011 முதல் 21.10.2011 முடிய தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தபடியாலும், நூல் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதிலும், இறுதி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.

    இதனால் தேவையான அளவு வேட்டி, சேலைகள் நெய்வதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும். வேட்டி மற்றும் சேலை உற்பத்தி தொடர்ந்து முனைப்புடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், அவற்றின் விநியோகம் பொங்கல் பண்டிகையின் போது தொடங்கப்பட்டு, வரும் தமிழ் புத்தாண்டுக்குள் தகுதி உள்ள அனைவருக்கும் வழங்கி முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • [Continue reading...]

    சென்னைப் புத்தக��் கண்காட்சியில் அன்பார்ந்த சிங்��ள மக்களுக்கு!

    - 0 comments


    தமிழகத் தலைநகர் சென்னையில் வருடந் தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சி நேற்று ஆரம்பித்துள்ளது.

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினால் இக் கண்காட்சி நடாத்தப்படுகிறது. 35 வருடமாக இந்த வருடம் நடைபெறும் கண்காட்சியில், 682 அரங்குகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அரங்குகளில் பல்வேறு பதிப்பகங்களின் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, பிரென்ச் மொழி வெளியீட்டுப் புத்தகங்கள் 10% விலைக்கழிவுடன் விற்கப்படுகின்றன.

    பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள செயின்ட் ஜோர்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் இக் கண்காட்சி வார நாட்களில் தினமும் மாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நிறைவடைகிறது. சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் காலை 11 மணிக்கு துவங்கி இரவு 9 மணிக்கு நிறைவடையும் எனத் அறியப்படுகிறது.

    பல்வேறு புத்தகங்கள் வெளியீடும் நடைபெறும் சென்னை புத்தக கண்காட்சியில், 'அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு' எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு வரும் 8ந் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 36 பக்கங்களுடனும் ,75 முக்கிய விளக்க படங்களுடனும், கடித வடிவில் ஈழ நியாயத்தை எவரும் வாசித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகத்தை, 'என்ன செய்யலாம் இதற்காக?' எனும் ஈழப்படுகொலை தொடர்பான ஆவணப்படங்களுடன் கூடிய நூலை வெளியிட்ட பென்னி குயிக் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

    மேற்படி கண்காட்சி அரங்கில், பூவுலகின் நண்பர்களது கடை எண்.71ல் 8ந் தேதி பிற்பகல் 3.00 மணியளவில், நடைபெறும் வெளியீட்டு வைபவத்தில், எழுத்தாளர் எஸ்.இராம கிருஷ்ணன், கவிஞர் காசி ஆனந்தன், இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் வ.கௌதமன் , எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், மற்றும் பலர் கலந்து கொள்வதாக வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • [Continue reading...]

    கருணாவுடன் சேந்��ு இயங்குவது யார் ? ஐ.பி.சி வானொலி - எதிரி இணையம்?

    - 0 comments


    சமீபத்தில் கருணா கனடா சென்றதாகவும் அங்கே புலம்பெயர் தமிழ் மக்களை அவர் சந்தித்ததாகவும் ஒரு செய்தி இணையத்தளவாயிலாக வெளியாகி இருந்தது. ஐ.நா வால் போர் குற்றவாளி மற்றும் சிறுவர்களைப் படையணியில் சேர்த்தது என்பது போன்ற பாரிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள கருணா மற்றும் பிள்ளையான் போன்றவர்களுக்கு அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் எவ்வாறு விசா கொடுக்கும் என்ற கேள்விகள் இருக்கின்றன. ஆனால் "எதிரி" என்று அழைக்கப்படும் ஒரு இணையமும் மற்றும் ஐ.பி.சி தமிழ் வானொலியும் சேர்ந்து திட்டமிட்டே இந்தப் பரப்புரையை மேற்கொண்டு வந்தது. அப்படியே கருணா கனடா சென்றால் கூட அவர் அங்கே எடுத்துக்கொண்டதாக ஒரு படமும் வெளிவரவில்லையே என்ற சந்தேகத்தில் அதிர்வு இணையம் அச் செய்தியைப் பிரசுரிக்கவில்லை. அதிர்வு இணையம் மேல் சேறு பூசு பல காலம் காத்திருந்த இந்தத் திருட்டுக் கும்பல் இதனைப் பயன்படுத்தி அதிர்வு இணையம் கருணாவின் நண்பன் என்றும் அதனால் தான் அச் செய்தியை நாம் பிரசுரிக்கவில்லை என்றும் பொய்யான திட்ட மிட்ட பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.

    ஒரு பொறுப்புள்ள ஊடகம் என்ற வகையில் எதையும் ஆராய்ந்து பார்க்காமல் இவர்களைப் போல நாமும் சிறுபிள்ளைத் தனமாக செய்தி எழுத முடியுமா? அதிர்வு இணையமானது இலங்கையில் உள்ள கனேடிய தூதரகத்துடன் தொடர்புகொண்டு கருணாவுக்கு விசா வழங்கப்பட்டதா என வினவியபோது கடந்த 30 திகனங்களுக்குள் அவ்வாறு தாம் விசா எதுவும் வழங்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கருணா கனடாவுக்குச் சென்றது என்பதே மொத்ததில் ஒரு பெரிய பொயாகும் ! இதனை தமிழ் சமூக விரோத இணையமான எதிரியும் தமிழர்களைக் குழப்புவதற்கு என்றே செயல்படும் ஐ.பி.சி வானொலியாலும் திட்டமிட்டு பரப்பப்பட்ட கட்டுக்கதையாகும். இதனை கனேடிய தூதரகம் உறுதிசெய்துள்ளது.

    ஐ.பி.சி இன் ஏகபொக உரிமையாளர் சத்தியர் போடும் எலும்புத் துண்டிற்காக வாலாட்டி நிற்கும் எதிரி என்னும் இணையத்தளம் முன்னர் "கலகம்" என்ற பெயரில் நடத்தப்பட்டது. அதன் ஆசிரியர் என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் வன்னி மைந்தனுக்கு தமிழ் எழுதவே தெரியாது என்பது வேடிக்கையான விடையம். 2009ம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்தவேளை கல்மடுக்கட்டு அணை உடைக்கப்பட்டது ! 5000 ஆமி செய்த்தார்கள் பின்னர் கோத்தபாய பறந்த உலங்கு வானூர்தி சுடப்பட்டது என்பது போன்ற தொடர்ச்சியான பொய்களை கலகம் என்னும் இணையம் எழுதி வந்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். பின்னர் அது எழுதிவந்த பொய்களைத் தாங்க முடியாத அதன் வடிவமைப்பாளர்களில் ஒருவர் அதனை முடக்கினார். பின்னர் இந்த வன்னி மைந்தன் "எதிரி" என்னும் இணையத்தை ஆரம்பித்து அதிர்வில் விளம்பரம் போடவும் கேட்டார். அதிர்வு விளம்பரம் போட்டும் கொடுத்தது. அதற்கான 3 மாதக் காசை இதுவரை அவர் கட்டவே இல்லை. இந்த விளம்பரக் காசைக் கூட கட்டாமல் ஏமாற்றிய வன்னி மைந்தன் தற்போது ஐ.பி.சி சத்தியர் என்னும் பண முதலையுடன் சேர்ந்து அவர் கொடுக்கும் காசுக்காக எதையும் தனது இணையத்தில் எழுதும் நிலையில் உள்ளார்.

    இவ்வாறு பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் 15,000 பவுண்டுகளை மாதம் செலவழித்து ஐ.பி.சி வானொலிய நடத்திவருகிறார் சத்தி எனும் கந்துவட்டி நபர். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் இவ் வானொலியை 100 பேர் தான் கேட்க்கிறார்கள். "யாருமே இல்லாத ரீ கடையில் யாருக்கா நீ ரீ போடுகிறாய்" என்று விவேக் கேட்ப்பது போல யாருமே கேட்க்காத வானொலியை நடத்தி அதற்கு மாதம் 15,000 பவுண்டுகளைச் செலவழிப்பதை விட இந்தக் காசைக் கொண்டுபோய் ஈழத்தில் அல்லலுறும் எமது உறவுகளுக்கு கொடுக்கலாமே? ஒருவருக்கு தலா 10 பவுண்டுகள் என மாதம் பிரித்துக் கொடுத்தால் கூட சுமார் 1500 பேருக்கு உதவலாம். இந்த எண்ணிக்கை இவர் ரேடியோவைக் கேட்ப்பவர்கள் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் ஐயா!

    அதிர்வின் ஆசிரிய பீடம்


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger