Thursday 12 April 2012

பெண்ணின் பெருமை

- 0 comments



                   பெண் குழந்தைகள் குடும்பத்துக்குச் சுமை என்ற கருத்து இந்த கணினி யுகத்திலும் நீடித்திருப்பது வியப்பாகத்தான் இருக்கின்றது. பெங்களூரில், சொந்தத் தந்தையால் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்ட மூன்று மாதப் பெண் குழந்தை அஃபிரீன் இரு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது. பெண் குழந்தை என்ற ஒரே காரணத்துக்காக அந்தக் குழந்தையை அதன் தந்தை அன்பு செலுத்தாமல் வெறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்ய முயன்ற அன்றைய தினம், "நானே பால் புகட்டுகிறேன்' என்று மனைவ� ��யைக் கடைத்தெருவுக்குப் போய்வரச் சொன்னபோது, குழந்தையை நேசிக்கத் தொடங்கிவிட்டார் என்று மகிழ்ச்சியுடன் போன தாய் ரேஷ்மா பானு தனது கணவர் சொந்த மகளை அடித்துக் கொல்வார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

 சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் குவாலியரில் இதேபோன்று ஒரு தந் தை, தன் பெண் குழந்தைக்கு அதிகளவு புகையிலையைப் புகட்டிக் கொலை செய்தார். இந்த வழக்குத் தொடர்பாக அவரை அண்மையில் குவாலியர் போலீஸ் கைது செய்துள்ளனர். வரதட்சிணை கொண்டுவராத உன் குழந்தைக்கு நான் வரதட்சிணை கொடுக்க வேண்டுமா? என்பதுதான் இந்தத் தகராறின் அடிப்படைக் காரணம்.

 பிறக்கப்ப� �கும் குழந்தை பெண் குழந்தைதான் என்று ஜோதிடத்தை நம்பி, பெண்ணை அடித்து உதைத்து கருக்கலைப்பு செய்த சம்பவம் ஆந்திர மாநிலம், குண்டூரில் மார்ச் 31-ஆம் தேதி நடந்தது. முன்னி என்ற அந்தப் பெண்மணி மணமான பத்து ஆண்டுகளில் தற்போது ஆறாவது முறையாகக் கருவுற்றிருந்தார். ஆனால் ஜோதிடரோ, அந்தப் பெண்ணுக்கு ஏழாவது குழந்தைதான் ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்று அறிவித்தார். அதனால்தான் இந் த சித்திரவதை.

 மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இந்தப் பெண்மணிக்கு, கருப்பை பாதிக்கப்பட்டுள்ளதால் இனி குழந்தைப் பேறுக்கே வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்கள். இதற்காக ஜோதிடரை கட்டி வைத்து அடிக்க நினைத்தாலும் முடியாதபடி அனைவரும் சிறையில் இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதம், புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ ஆய்வுக் கழக மருத்துவமனைக்கு (எய்ம்ஸ்) உடல் முழுதும் காயங்களுடன் கொண்டுவரப்பட்ட குழந்தை பாலக், சிகிச்சை பலனின்றி இறந்தது. அந்தக் குழந்தையைக் கொண்டுவந்த வளர்இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்தப் பெண்ணின் தாய் உள்பட சிலர் பல மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு, பலரால் சீரழிக்கப்பட்ட அவலம� � தெரியவந்தது. இப்போது 13 பேரை கைது செய்திருக்கிறது புது தில்லி போலீஸ்.

 சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில், இந்தப் பெண் குழந்தை என் குழந்தையே இல்லை. செவிலியர்கள் மாற்றிவிட்டார்கள் என்று மருத்துவமனையில் தகராறு செய்த ஒரு தந்தையை சமாதானப்படுத்தி உட்கார வைத்து, குழந்தையின� � டிஎன்ஏ சோதனை மூலம் அது அவருடைய குழந்தைதான் என்று நிரூபித்துக் கையில் கொடுத்து அனுப்பினார்கள்.

 பிளஸ்-2 தேர்விலும், கல்லூரி பட்டமளிப்பு விழாக்களிலும் பரிசும் பாராட்டும் அள்ளிக்கொண்டு வருவது பெண் குழந்தைகள்தான். வயதான பெற்றோர்களை, மகன்களைவிடப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்� ��து யார் என்று கணக்கெடுத்தால், அதிலும் பெண்கள்தான் முன்னிலை வகிப்பார்கள். வயதான அப்பா, அம்மாக்கள் தங்களோடு வசிக்காவிட்டாலும், அவர்களுக்கு மகன்கள் கொடுக்காத அளவுக்கு கணிசமான பாக்கெட்மணி கொடுப்பதும் மகள்களே!

 இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் வந்தாயிற்று. குடியரசுத் தலைவர ், முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் என அரசியலில் ஆணுக்கு இணையாகச் செயல்படுகிறார்கள். அதிகாரிகள் என்று எடுத்துக்கொண்டாலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நிறைய பேர் பெண்கள். இருந்தும்கூட, பெண் குழந்தை என்றால் குடும்பத்துக்குச் சுமை என்ற எண்ணம் இன்னும் மாறவில்லை. பெண்களின் இந்தச் சாதனைகளை நம் வீட்டுக் குழந்தைகள் செய்யாது என்� ��ின்ற அவநம்பிக்கைதான் இந்த பிற்போக்குத்தனத்துக்குக் காரணம்.

 பெண் குழந்தை, ஆண் குழந்தை என்ற பிரச்னை தமிழகத்தில் இன்று பெருமளவு நீங்கிவிட்டது எனலாம். சாதனைக்குப் பாலினம் தடையல்ல எனும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பெண்சிசுக் கொலைகளைத் தடுக்க முடிந்திருக்கிறது என்ப தற்கு தமிழகமே சாட்சி. இப்போது தமிழகத்தில் பெண்சிசுக் கொலை என்ற பேச்சே இல்லை. அரசு அமைத்த தொட்டில் குழந்தை திட்டத்துக்கு வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது. இதற்காகத் தமிழக அரசை மனமாரப் பாராட்டலாம்.

 பெண்சிசுக் கொலை போய், இப்போது தமிழகத்தில் இ� �வயது திருமணம் மிகப் பெரும் பிரச்னையாக வடிவெடுத்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பூப்பெய்தியவுடன் பெண்ணுக்கு மணம் முடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பல திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. பெற்றோர்கள் கைது செய்யப்படுவதில்லை என்றாலும் எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்.

 இதற்குக் காரணம், பெண்கள் பிளஸ்-2 படிக்கும்போதே காதல் பிரச்னையில்-உபயம் தமிழ்ச்சினிமா, டிவி சீரியல்கள்- சிக்கிக்கொள்கிறார்கள். ஆகவே, "கல்யாணத்தை முடி, கணவன் விரும்பினால் தொடர்ந்து படி' என்று இளவயது திருமணங்களை நடத்தத் துணிகிறார்கள் பெற்றோர். இப்பிரச்னையில் விழிப்புணர்வு தேவைப்படுவது பெற்றோருக்கு அல்ல. இளவயது பெண்களுக்குத்தான்!
< span style="color: #0b5394;">
 காதலிப்பதும், காதலித்தவர்களையே திருமணம் செய்துகொள்வதும் தவறில்லை. ஆனால், முறையற்ற காதலும், ஏதோ கவர்ச்சியால் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு "மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்' என்று கைக்குழந்தையுடன் குடும்ப நீதிமன்றப் படிகளில் விவாகரத்துக்கு ஏறி இறங்குவதும் எவ்வளவு முட்டாள்தனம்.

 ""முதலில் கல்வியை நேசி, காதலைப் பிறகு யோசி'' என்று இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் தமிழகத்தில் உருவாகியுள்ளது.


http://review-filmnews.blogspot.com


[Continue reading...]

ராமஜெயம் கொலை: திருச்சி பிரமுகர் ஏன் மீடியாவுக்கு ‘துப்பு’ கொடுக்கிறார்?

- 0 comments




            ராமஜெயம் கொலை விவகாரத்தில் 'குழப்பமான தகவல்கள் வெளியாவதை விரும்பிய நபர்' என்று ஒருவரை ஸ்பாட் செய்திருக்கிறது தமிழக உளவுத்துறை. மீடியாக்களில் குழப்பமான தகவல்கள் வருவது இந்த நபருக்கு எந்த வகையில் பலனுள்ளது என்பதை உளவுப் பிரிவு தற்போது விசாரிக்கத் துவங்கியிருப்பதாக தெரியவருகிறது.

ராமஜெயம் கொலை புலன்விசாரணைக்கும், தமிழக உளவுத்துறைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. புலன் விசாரணையை முழுமையாக கிரைம் பிராஞ்ச்தான் கவனிக்கிறது. அப்படியிருந்தும் இந்த விவகாரத்தில் உளவுத்துறை தலையிட்டது தற்செயலாகத்தான் என்கிறார்கள்.

அரசியல் ரீதியான விவகாரம் ஒன்றை ஃபாலோ பண்ணிய உளவுத்துறை டீம் ஒன்று, திருச்சி பிரமுகர் ஒருவரை கடந்த சில நாட்களாக தமது வாட்ச் சர்க்கிளுக்குள் வைத்திருக்கிறது. கடந்த காலத்தில் மத்திய அரசில் செல்வாக்குடன் இருந்த நபர் அவர். திருச்சி மன்னார்புரம் மற்றும் அதையடுத்த சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல வருடங்களு� ��்கு முன் சில பில்டிங்குகளின் வளைத்து உரிமையாக்கிக் கொண்ட ஆள். ஆனால், தி.மு.க.காரர் அல்ல.

இவருக்கும், ராமஜெயத்துக்கும் ரியல் எஸ்டேட் ரீதியான தொடர்புகள் ஏதும் இருந்ததில்லை. அப்படியிருந� �தும், ராமஜெயம் கொல்லப்பட்ட பின் தனது மீடியா தொடர்புகளை வைத்து, சில வேலைகளை இவர் செய்ததாக சொல்கிறார்கள். ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள் இரவு வேறு எங்கோ தங்கினார் என்ற செய்தி வெளியானது ஞாபகம் இருக்கிறதா?
அந்த செய்தி ஒரிஜினேட் பண்ணியதே இவர் மூலமாகதான். இவர் தனது மீடி� ��ா தொடர்பாளர் ஒருவருக்கு கொடுத்த தகவல் ஒன்று, சுற்றிக்கொண்டு அப்படியொரு செய்தியாக முதலில் வெளியானது. அதன்பின் மற்றைய மீடியாக்கள் அதை பிக்கப் பண்ணிக்கொண்டன.

அதேபோல, கொலை செய்யப்பட்டப ோது ராமஜெயம் கையில் ரேடோ வாட்ச் இருந்தது. அந்த வாட்ச் அதிகாலை 2.50 மணிக்கு நின்று விட்ட நிலையில் காணப்பட்டது என்று ஒரு செய்தி வெளியானது ஞாபகமிருக்கிறதா?

அந்த செய்தி ஒரிஜினேட் பண்ணிய இடம� �� வேறு. ஆனால் அந்தச் செய்தியை ஊதிப் பெரிதாக்கிய ஆள் இவர்தான். (ராமஜெயம் கையில் கட்டியிருந்த வாட்ச், பாதுகாக்கப்படும் ஒரு தடயமாக உள்ளது. வாட்ச் இன்னமும் ஓடிக்கொண்டும் இருக்கிறது)

வேறு எ� ��ற்காகவோ இவரை வாட்ச் பண்ணிக் கொண்டிருக்கும் உளவுத்துறை டீம், இவர் ஏன் இதற்குள் தலையை விடுகிறார் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது!
ஏதாவது தனிப்பட்ட விவகாரம் இருக்கலாம்!


http://review-filmnews.blogspot.com


[Continue reading...]

arrkay | Tamil Magazines | TV Serials | Movies | Hot News

- 0 comments


kumudamreporter,vikatan,Nakkeeran,TamilMagazines,SunTV serials,Kumudam,Dinamalar, Dinathanthi,Dinakaran ,Thinathanth,SunTV Serials,Vijay Tv Shows,Kalaignar TV Shows,Raj TV Shows, Jaya TV Shows, Sun TV News, Captan Tv ,comedy, Tamil Movies, songs, free download from here

http://review-filmnews.blogspot.com


[Continue reading...]

பயணம் இது பந்தையமல்ல!

- 0 comments
 
 


தொடர்புடைய இடுகைகள்


[Continue reading...]

எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு சினிமா துரோகி’ – தயாரிப்பாளர்கள் குமுறல்.

- 0 comments

பெப்ஸி ஊழியர்களை ஒரு சிறிய மிரட்டல் மூலம் வழிக்குக்கொண்டுவந்து விடலாம்' என்ற எங்கள் நினைப்பில் மண் வாரிப்போட்டு விட்டு, சினிமா துறைக்கே ஒரு பெரும் துரோகம் செய்துவிட்டார் எஸ். ஏ. சந்திரசேகர் என்று தயாரிப்பாளர் சங்கமே குமுறிக்கொண்டிருக்கும் வேளையில், அவரது ராஜினாமா கோரிக்கையும் நிமிடத்துக்கு நிமிடம் வலுத்து வருகிறது.

பல சங்கங்களுக்கான பிரச்சினைகள் பேசித்தீர்க்கப்படாமலே உள்ள நிலையில், அமைச்சருடன் அமர்ந்து எல்லா பிரச்சினைகளையும் இரண்டே நிமிடத்தில் பேசித்தீர்த்தது போல் எஸ்.ஏ.சி. கூறுவது சுத்த மோசடி.தயாரிப்பாளர்கள் சங்கம் ஆரம்பிக்க நினைத்த புதிய சங்கத்தை குழி தோண்டிப் புதைக்கும் ஒரு நோக்கம் தவிர அதில் வேறு எதுவும் இல்லை.இன்னொரு சுயநலமான நோக்கம் அவரது மகன் விஜயின் படம் ஷூட்டிங் கிளம்பவேண்டுமென்பது.

இந்த துரோகத்துக்கு தண்டனையாக எஸ்.ஏ.சி. உடனே ராஜினாமா செய்யாவிடில், அவர் ராஜினாமா செய்யவைக்கப்படுவார் என்கின்றன தயாரிப்பாளர் தரப்பு வட்டாரங்கள்.

இந்நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் கவுன்சிலுக்கு வந்த எஸ்.ஏ.சி.யோ,''நான் சினிமாவுக்கு சேவை செய்வதற்கென்றே அவதாரம் எடுத்தவன்.அப்படியெல்லாம் ராஜினாமா செய்து என் சினிமா சேவையை நிறுத்திக்கொள்ளமுடியாது' என்கிறார்.

இன்னொரு பக்கம் நடிகர் சங்கத்தினர் ஒரு ஸ்டார் ஹோட்டலில் கூட்டம் நடத்தி, நாங்க ரெண்டுபேர் பக்கமும் இருக்கோம். நடுநிலை என்கின்றனர்.

மொத்தத்தில், ஆளாளுக்கு கட்டி உருண்டு திரையுலகம் நாறிக்கொண்டிருப்பதைப் பார்த்தால், 'ஊரு ரெண்டுபட்டா…' என்ற பழமொழி ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger