ராமஜெயம் கொலை விவகாரத்தில் 'குழப்பமான தகவல்கள் வெளியாவதை விரும்பிய நபர்' என்று ஒருவரை ஸ்பாட் செய்திருக்கிறது தமிழக உளவுத்துறை. மீடியாக்களில் குழப்பமான தகவல்கள் வருவது இந்த நபருக்கு எந்த வகையில் பலனுள்ளது என்பதை உளவுப் பிரிவு தற்போது விசாரிக்கத் துவங்கியிருப்பதாக தெரியவருகிறது.
ராமஜெயம் கொலை புலன்விசாரணைக்கும், தமிழக உளவுத்துறைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. புலன் விசாரணையை முழுமையாக கிரைம் பிராஞ்ச்தான் கவனிக்கிறது. அப்படியிருந்தும் இந்த விவகாரத்தில் உளவுத்துறை தலையிட்டது தற்செயலாகத்தான் என்கிறார்கள்.
அரசியல் ரீதியான விவகாரம் ஒன்றை ஃபாலோ பண்ணிய உளவுத்துறை டீம் ஒன்று, திருச்சி பிரமுகர் ஒருவரை கடந்த சில நாட்களாக தமது வாட்ச் சர்க்கிளுக்குள் வைத்திருக்கிறது. கடந்த காலத்தில் மத்திய அரசில் செல்வாக்குடன் இருந்த நபர் அவர். திருச்சி மன்னார்புரம் மற்றும் அதையடுத்த சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல வருடங்களு� ��்கு முன் சில பில்டிங்குகளின் வளைத்து உரிமையாக்கிக் கொண்ட ஆள். ஆனால், தி.மு.க.காரர் அல்ல.
இவருக்கும், ராமஜெயத்துக்கும் ரியல் எஸ்டேட் ரீதியான தொடர்புகள் ஏதும் இருந்ததில்லை. அப்படியிருந� �தும், ராமஜெயம் கொல்லப்பட்ட பின் தனது மீடியா தொடர்புகளை வைத்து, சில வேலைகளை இவர் செய்ததாக சொல்கிறார்கள். ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள் இரவு வேறு எங்கோ தங்கினார் என்ற செய்தி வெளியானது ஞாபகம் இருக்கிறதா?
அந்த செய்தி ஒரிஜினேட் பண்ணியதே இவர் மூலமாகதான். இவர் தனது மீடி� ��ா தொடர்பாளர் ஒருவருக்கு கொடுத்த தகவல் ஒன்று, சுற்றிக்கொண்டு அப்படியொரு செய்தியாக முதலில் வெளியானது. அதன்பின் மற்றைய மீடியாக்கள் அதை பிக்கப் பண்ணிக்கொண்டன.
அதேபோல, கொலை செய்யப்பட்டப ோது ராமஜெயம் கையில் ரேடோ வாட்ச் இருந்தது. அந்த வாட்ச் அதிகாலை 2.50 மணிக்கு நின்று விட்ட நிலையில் காணப்பட்டது என்று ஒரு செய்தி வெளியானது ஞாபகமிருக்கிறதா?
அந்த செய்தி ஒரிஜினேட் பண்ணிய இடம� �� வேறு. ஆனால் அந்தச் செய்தியை ஊதிப் பெரிதாக்கிய ஆள் இவர்தான். (ராமஜெயம் கையில் கட்டியிருந்த வாட்ச், பாதுகாக்கப்படும் ஒரு தடயமாக உள்ளது. வாட்ச் இன்னமும் ஓடிக்கொண்டும் இருக்கிறது)
வேறு எ� ��ற்காகவோ இவரை வாட்ச் பண்ணிக் கொண்டிருக்கும் உளவுத்துறை டீம், இவர் ஏன் இதற்குள் தலையை விடுகிறார் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது!
ஏதாவது தனிப்பட்ட விவகாரம் இருக்கலாம்!
http://review-filmnews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?