Thursday, 5 September 2013

திண்டுக்கல் அருகே பேருந்து மீது கார் மோதல்: கேரளாவை சேர்ந்த 5 பேர் பலி Dindigul car bus collision 5 dead

- 0 comments

திண்டுக்கல் அருகே பேருந்து மீது கார் மோதல்: கேரளாவை சேர்ந்த 5 பேர் பலி Dindigul car bus collision 5  திண்டுக்கல் மாவட்டம் வத்லகுண்டு அருகேயுள்ள சிங்காரக்கோட்டையில் நேற்று அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்டுக்கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து கேரளாவிற்கு சென்ற கார் ஒன்று அந்த பேருந்தின் பின்புறத்தில் வேகமாக மோதியது.
>
> இதில் அந்த காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்துபோயினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
>
> அவர்கள் நடத்திய விசாரணையில், சென்னையில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த ஜோசப் என்ற மாணவன் ஓணம் பண்டிகை கொண்டாட தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கேரளா சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

[Continue reading...]

இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்குகிறது India provide 2 war ships to Sri Lanka defend sea borders

- 0 comments

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் நடந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதிபர் ராஜபக்சேவின் இந்த கொடூர செயலுக்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.
>
> மேலும், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, இலங்கையுடனான இந்தியாவின் ராணுவ தொடர்பை துண்டிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
>
> வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக, இலங்கைக்கு 2 போர்க்கப்பல்களை வழங்க இந்தியா தற்போது முடிவு செய்துள்ளது. இந்த கப்பல்கள் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட உள்ளன. 2017-18ம் ஆண்டில் இந்த கப்பல்கள் இலங்கைக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
>
> கடல் எல்லையை பலப்படுத்த உதவுமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த கப்பல்கள் அந்நாட்டிற்கு வழங்கப்பட இருக்கிறது.
>
> தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்து வரும் சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவாக அந்நாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
>
> அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மத்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு தற்போது போர்க்கப்பல்களை வழங்க இருப்பது அந்நாட்டு ராணுவத்துடனான தொடர்பை துண்டிக்காமல் பலப்படுத்தி வருவதையே காட்டுகிறது.

[Continue reading...]

விமான பணிப்பெண் தற்கொலை வழக்கு: ஓராண்டு சிறைவாசத்துக்கு பிறகு கோபால் கண்டாவுக்கு ஜாமின் airhostess suicide case Gopal Kanda gets bail After year in jail

- 0 comments
airhostess suicide case Gopal Kanda gets bail After year in jail

புதுடெல்லி, செப். 5-

விமான பணிப்பெண் கீதிகா சர்மா தற்கொலை வழக்கில் அரியானா மாநில முன்னாள் மந்திரி கோபால் கண்டா மற்றும் அவரது உதவியாளர் கீதிகா சர்மா ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் கோபால் கண்டா, அவரது உதவியாளர் அருணா சத்தா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்கொலைக்கு தூண்டியது, குற்றச்செயல்களில் ஈடுபட்டது, ஆதாரங்களை அழித்தது உள்ளிட்ட 6 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் எதிர்ப்பு காரணமாக கோபால் கண்டாவின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி கோர்ட்டில் கோபால் கண்டா சார்பில் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சிர்சா தொகுதி எம்.எல்.ஏ.வான கோபால் கண்டா, அரியானா மாநில சட்டசபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசியல் செல்வாக்கு உள்ள கோபால் கண்டா வெளியில் வந்தால் ஆதாரங்களை அழித்து விடுவார் என்பதால் அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், விசாரணை முடிந்துவிட்டதால், காவல்துறை கவலைப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கோபால் கண்டாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக கோபால் கண்டாவுக்கு ஒரு மாதம் ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் ரூ.5 லட்சம் ரொக்கம் செலுத்தி ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறிய நீதிபதி, வெளிநாட்டு பயணத்துக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தார்.


[Continue reading...]

மதுரவாயலில் கழுத்தை அறுத்து தாய்–மகள் படுகொலை Maduravoyal near mother daughter murder

- 0 comments


சென்னை, செப். 5–

மதுரவாயல் கார்த்திகேயன் நகர் நாகேஸ்வரராவ் தெருவை சேர்ந்தவர் சாமிக் கண்ணு. டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விமலாதேவி (40). இவர்களது மகள் பவித்ரா (20).

இன்று காலை சாமிக் கண்ணு டீக்கடைக்கு சென்று விட்டார். வீட்டில் விமலா தேவியும், பவித்ராவும் இருந்தனர். காலை 9 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று சாமிக் கண்ணு வீட்டுக்குள் சென்றது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் விமலாதேவி, பவித்ரா ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

பின்னர் வீட்டில் இருந்து நகை–பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். விமலாதேவி, பவித்ரா ஆகியோர் அணிந்திருந்த நகைகளையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதற்கிடையே தாய்–மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது. அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தாய்–மகள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் நகை– பணத்துக்காக தாய்–மகளை கொன்றார்களா? அல்லது முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்று தெரியவில்லை.

இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பட்டப்பகலில் தாய்–மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger