Thursday, 5 September 2013

இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்குகிறது India provide 2 war ships to Sri Lanka defend sea borders

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் நடந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதிபர் ராஜபக்சேவின் இந்த கொடூர செயலுக்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.
>
> மேலும், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, இலங்கையுடனான இந்தியாவின் ராணுவ தொடர்பை துண்டிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
>
> வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக, இலங்கைக்கு 2 போர்க்கப்பல்களை வழங்க இந்தியா தற்போது முடிவு செய்துள்ளது. இந்த கப்பல்கள் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட உள்ளன. 2017-18ம் ஆண்டில் இந்த கப்பல்கள் இலங்கைக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
>
> கடல் எல்லையை பலப்படுத்த உதவுமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த கப்பல்கள் அந்நாட்டிற்கு வழங்கப்பட இருக்கிறது.
>
> தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்து வரும் சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவாக அந்நாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
>
> அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மத்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு தற்போது போர்க்கப்பல்களை வழங்க இருப்பது அந்நாட்டு ராணுவத்துடனான தொடர்பை துண்டிக்காமல் பலப்படுத்தி வருவதையே காட்டுகிறது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger