Tuesday 29 November 2011

திமுகவின் கூத்து :கனிமொழிக்கு கொ.ப.செ செயலாளர் பதவி

- 0 comments
 
 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்று 6 மாதங்களுக்கும் மேலாக திஹார் சிறையில் அடைபட்டு மீண்டுள்ள கனிமொழிக்கு திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் அல்லது முதன்மைச் செயலாளர் பதவி தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
2ஜிஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி கடந்த மேமாதம் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்ட கனிமொழி 6 மாத காலம் திகார் சிறையில் அடைபட்டிருந்தார். அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை மாலை ஜாமீன் வாழங்கியது. இந்த நிலையில் விரைவில் சென்னை வர உள்ள கனிமொழிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
மறுபடியும் ஆற்காட்டார் தியாகியாகிறார்?
 
நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழி, தற்போது திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவரும் அவருக்கு தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவி அளிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
 
ஆற்காடு வீராசாமி வகித்து வரும் அந்த பதவியை அவர் விட்டுத்தர முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தான் வகித்து வந்த பொருளாளர் பதவியை மு.க ஸ்டாலினுக்காக விட்டுக்கொடுத்தார் ஆற்காடு வீராசாமி என்பது நினைவிருக்கலாம். இப்போது கருணாநிதி மகளுக்காகவும் தனது பதவியை விட்டுத் தருகிறார் ஆற்காட்டார். இதன் மூலம் அவரும் ஒரு தியாகியாகிறார்!
 
இதைப்போல துணைப் பொதுச்செயலாளர் பதவி வகிக்கும் சற்குணபாண்டியனும் தன் பதவியைக் கனிமொழிக்கு அளிக்குமாறு கூறியதாகத் தெரிகிறது. இந்த இரண்டு பதவிகளில் ஏதாவது ஒன்று கனிமொழிக்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
 
அதேசமயம் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை கனிமொழிக்கு அளித்து, அவரை தமிழகம் முழுவதும் கனிமொழியைச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் செய்யவும் ஒரு பிரிவு கட்சித் தலைமையைக் கேட்டுக் கொண்டுள்ளதாம்.
 
அனைவரும் சம்மதம்
 
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்த செய்தி அறிந்தவுடன் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் திங்கள்கிழமை மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கருணாநிதி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் கனிமொழிக்கு பதவி தரவேண்டியது அவசியம் என கூறப்பட்டது. இதற்கு மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி உள்பட அனைவரும் சம்மதித்துவிட்டதாகத் தெரிகிறது.
 
சந்தடி சாக்கில் பதவி கேட்கும் ஸ்டாலின்
 
இதற்கிடையில் மு.க.ஸ்டாலினும் தனக்குச் இந்த முறையாவது செயல் தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்றும் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
திமுக தலைவர் பதவிக்காக அவர் நீண்ட காலமாக காத்திருக்கிறார். ஆனால் அவருக்கு செயல் தலைவர் பதவியைக் கொடுத்து பின்னர் தலைவராக்கலாம் என மூத்த தலைவர்கள் கருதுவதாகத்தெரிகிறது. மேலும் அழகிரியும் ஒருபக்கம் மல்லுக்கட்டி வருவதால் ஸ்டாலினுக்கு அது கூட கிடைக்க முடியாத நிலை நிலவுகிறது.
 
தற்போது கனிமொழியை ஜாமீ்னில் கொண்டு வரும் முயற்சிகளில் தீவிர அக்கறை காட்டி வந்தார் ஸ்டாலின் என்பதால் இந்த முறை அவருக்குப் பதவியைக் கொடுத்து கட்சித் தலைமை குஷிப்படுத்த முயற்சிக்லாம் என்று தெரிகிறது.
 
திமுக பொதுக்குழு டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி மாதம் கூடும்போது கனிமொழி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு பதவி அளிக்கப்படும் என கட்சி வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.



[Continue reading...]

பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிக்கும் நாடகம்...

- 0 comments
 
 
 
சென்னையில் நடக்கும் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி) விழாவில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாஸன் நடிக்கும் புதிய நாடகம் நடக்கிறது. இந்தத் தகவலை கமல்ஹாஸன் நேற்று தெரிவித்தார்.
 
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, நடிகர் கமல்ஹாசன் தலைமையில், சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது.
 
இதுதொடர்பாக ஃபிக்கியின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் டிசம்பர் 1, 2 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாடு, இரண்டாவது முறையாக சென்னையில் நடைபெறுகிறது.
 
இந்த தொழிலில் உள்ள சிக்கல்களை எடுத்துரைக்க ஒரு அரங்கம் தேவைப்பட்டது. அதற்காகவே இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியால் ஆரம்பிக்கப்பட்டது. அவருடைய தீர்க்க தரிசனங்களில் நம்பிக்கை உள்ளவர்களில் நானும் ஒருவன்.
 
மும்பையில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை, சென்னையிலும் நடைபெறுவதற்கு நானும், நண்பர் முராரியும் பாடுபட்டோம். தொழில் கட்டுக்கோப்பாக நடப்பதற்கு நம் குரல் மத்திய-மாநில அரசுகளுக்கு கேட்க வேண்டும். இதில், சினிமா மட்டுமல்லாமல் பத்திரிகை உலகமும் புரிந்து கொள்ளும் விஷயங்கள் இருக்கிறது.
 
கே பி இயக்கத்தில் நாடகம்
 
சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் வெவ்வேறு தொழில்நுட்ப அறிஞர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 800 பேர் கலந்துகொள்கிறார்கள். தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
 
பிரச்சினைகளை விட, தொழில் முன்னேற்றத்துக்கான விஷயங்கள் அதிகமாக விவாதிக்கப்படும். நமக்கு உரிய உரிமைகள் என்ன என்பதை கலைஞர்கள் புரிந்துகொள்ளும் பயிலரங்கமாக இது இருக்கும்.
 
மாநாட்டில் ஒரு சின்ன நாடகம் அரங்கேற்றப்படுகிறது. அந்த நாடகத்தை டைரக்டர் கே.பாலசந்தர் எழுதியிருக்கிறார். நான் (கமல்ஹாசன்), கிரேஸி மோகன், ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிக்கிறோம். இது, டிஜிட்டல் சினிமா பற்றிய நகைச்சுவை நாடகமாக இருக்கும்.
 
தமிழக அரசிடம் நிதி கேட்போம்
 
சினிமா இன்னும் தொழிலாக அங்கீகரிக்கப்படாததால், படம் தயாரிப்பதற்கு வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. இதனால்தான் இந்தி பட உலகில் கறுப்புப் பணம் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டது.
 
கடந்த முறை சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவதற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியது. இந்த முறையும் அரசிடம் நிதி உதவி கேட்கப்படும். அவர்கள் தருகிறார்களா இல்லையா என்பது ஒரு பக்கமிருக்கட்டும். கேட்பது எங்கள் கடமை,'' என்றார்.
 
பேட்டியின்போது, இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த லீனா ஜெய்சானி, பி.முராரி ஆகியோர் உடன் இருந்தார்கள். பத்திரிகைத் தொடர்பாளர் நிகில் முருகன் வரவேற்றுப் பேசினார்.



[Continue reading...]

மனைவியுடன் சினேகன் தொடர்பு வழக்கு: குழந்தை, தந்தையுடன் வசிக்க கோர்ட்டு உத்தரவு

- 0 comments
 
 
 
சென்னை குடும்ப நல கோர்ட்டில் மடிப்பாக்கம் சக்திநகரை சேர்ந்த பிரபாகரன் தனது மனைவியுடன் நடிகர் சினேகன் தொடர்பு வைத்து இருப்பதாக வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
எனக்கும், ஜமுனாகலா தேவிக்கும் 2004-ல் திருமணம் நடந்தத. எங்களுக்கு சஞ்சனாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. எனது மனைவி நாட்டியப் பள்ளி நடத்துகிறார். அவ ருக்கும், நடிகர் சினேகனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஜமுனாவிடம் சினேகன் நாட்டியம் கற்றார்.
 
எனது மனைவியிடம் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஆக்குவதாக ஆசைவார்த்தை கூறினார். என் பேச்சை கேளாமல் ஜமுனா சினேகனுடன் சுற்ற தொடங்கினார். அவர்கள் தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டனர். ஒரு கட்டத்தில் என்னுடன் வாழமாட்டேன் என்று கூறிவிட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
 
தற்போது குழந்தை என்னுடன் வசிக்கிறாள். குழந்தையை அபகரிக்க ஜமுனா முயற்சிக்கிறார். என்னிடமே குழந்தை வாழ உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜாசொக்கலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
 
அப்போது குழந்தை சஞ்சனாஸ்ரீ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டாள். குழந்தை தந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்தது. இதையடுத்து பிப்ரவரி 1-ந்தேதி வரை தந்தையுடன் குழந்தை சஞ்சனாஸ்ரீ வசிக்க நீதிபதி உத்தரவிட்டார்.



[Continue reading...]

'தட்டாம்பூச்சி' மூலம் உளவு பார்க்கப் போகும் இந்தியா!

- 0 comments
 
 
எதிரிகளை கண்காணிக்கவும், உளவு பார்க்கவும் பறவைகள், தட்டாம்பூச்சிகளின் அளவில் உளவு விமானம் தயாரிக்கப்படவிருப்பதாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன முதன்மை கட்டுப்பட்டாளர் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிவதாணுப்பிள்ளை கூறியதாவது,
 
வருங்கால மக்களின் வாழ்க்கையில் நானோ டெக்னாலஜி பெரும் பங்கு வகிக்கும். நானோ டெக்னாலஜி மூலம் உணவு பதப்படுத்துதல், எரிசக்தி உற்பத்தி, பாதுகாப்பான குடிநீர் உள்ளி்ட்ட துறைகளில் மக்கள் பயன் பெற முடியும்.
 
ஒளியை விட 7 மடங்கு வேகமாக சென்று தாக்கக் கூடிய பிரமாஸ் ஏவுகணையின் வேகத்தை மேலும் அதிகரிக்க ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றது. உயர்வேதியியல் முறையில் தயாரிக்கப்படும் தளவாடங்கள் ஏவப்பட்டால் அவை மனித உடலில் படும் போது அவர்களுக்கு கதிர்வீச்சு ஏற்படும். அந்த கதிர்வீச்சு பாதிப்பை குறைக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக குளுக்கோஸ் கொடுக்க வேண்டும்.
 
இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு ரத்த அழுத்தம், இ.சி.ஜி. ஆகியவற்றை அளக்கும் கருவிகள் பொருத்தப்பட்ட சீருடை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராணுவ வீரர்களின் உடல்நிலையை ராணுவ அதிகாரிகள் முகாமில் இருந்தவாறே தெரிந்து கொள்ள முடியும். ராணுவ வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உடனடி சிகிச்சை அளிக்கவும் இந்த சீருடை பயன்படும்.
 
நானோ டெக்னாலஜியின் மூலம் தட்டாம்பூச்சி, பறவைகளின் அளவில் உளவு விமானங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் மூலம் வெளிநாட்டு எதிரிகளின் ஊடுருவல், நடமாட்டம் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். இந்த விமானங்களில் 5 ஆண்டுகளில் தயாரிக்கப்படும் என்றார்.



[Continue reading...]

விடுதலையானார் கனிமொழி-டிச. 3ம் தேதி சென்னை வருகிறார்

- 0 comments
 
 
 
6 மாதங்களுக்கும் மேலாக திஹார் சிறையில் கழித்து விட்ட திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி இன்று சிறையிலிருந்து விடுதலையானார். திஹார் சிறையின் 3வது வாசலில் பெருமளவிலான பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்த நிலையில், அவர்களிடமிருந்து தப்புவதற்காக பின்வாசல் வழியாக வெளியேறிய கனிமொழி கார் மூலம் புறப்ட்டுச் சென்றார்.
 
டெல்லி உயர்நீதிமன்றம் கனிமொழிக்கு நேற்று நிபந்தனை ஜாமீன்அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று இரவே அவர் வெளியே வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் திஹார் சிறைக்கு வெளியே மீடியாக்கள் குழுமியிருந்தனர். அதேபோல திமுகவினரும் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். இருப்பினும் ஜாமீன் தொடர்பான நீதிமன்ற உத்தரவு, 2ஜி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு சிபிஐ கோர்ட்டுக்கு தாமதமாக வந்தது.
 
அதற்குள் சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி வீட்டுக்குக் கிளம்பி விட்டார். இதனால் கனிமொழியை விடுவிப்பது நேற்று இயலாததாகி விட்டது. இதனால் நேற்று இரவும் கனிமொழி சிறையிலேயே கழித்தார்.
 
இன்று சிறப்பு சிபிஐ நீதிபதியிடம் உயர்நீதிமன்ற உத்தரவு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் இருந்து வெளிவருவதற்காக அங்கு கனிமொழி சார்பில் பிணைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவை சிபிஐ நீதிமன்றம் இன்று மாலை நான்கரை மணியளவில் பிறப்பித்தது.
 
இந்த உத்தரவு பின்னர் திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டது. அங்கு பல்வேறு நடைமுறைகள் முடிந்து இரவு ஏழரை மணியளவில் கனிமொழி விடுதலை செய்யப்பட்டார்.
 
கனிமொழியை வரவேற்க திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரும், திமுக எம்.பிக்களும், கட்சி நிர்வாகிகளும் திஹார் சிறைக்கு வந்திருந்தனர்.
 
கனிமொழி வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட 3வது நுழைவாயில் முன்பு பெருமளவில் பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்தனர். இருப்பினும் அந்த வழியாக கனிமொழி வரவில்லை. மாறாக சிறையின் பின்வாசல் வழியாக அவர் வெளியேறி விட்டார்.
 
3ம் தேதி சென்னை வருகிறார்:
 
முன்னதாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், இன்னும் 3 நாட்கள் சிபிஐ தரப்பு நடைமுறைகளை முடித்து விட்டு அவர் டிசம்பர் 3ம் தேதி சென்னை வருவார் என்றும், டிசம்பர் 6ம் தேதி வரை சென்னையில் இருக்கும் கனிமொழி, பின்னர் மீண்டும் டெல்லிக்குச் செல்வார் என்றும் கூறப்பட்டிருந்தது.
 
தடபுடல் வரவேற்புக்கு திமுக தயார்
 
சென்னை வரும் கனிமொழிக்கு தடபுடலான வரவேற்பு அளித்து பிரமாண்டமாக அவரை வீட்டுக்கு அழைத்து வர கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
 
விழாக்கோலத்தில் திமுகவினர்
 
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது திமுகவினரிடையே பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. கனிமொழி கவலையால்தான் கருணாநிதி பெரும் சோர்வுடன் காணப்பட்டார். அவரது வழக்கமான அதிரடியைக் கூடக் காண முடியவில்லை. இப்போது அவர் நிம்மதியாக இருப்பார். தனது வழக்கமான அரசியலில் அவர் இறங்குவார். அது பல கட்சிகளுக்கு நிம்மதியான தூக்கத்தைப் பறிப்பதாக அமையும் என்று திமுகவினர் கருதுகிறார்கள்.



[Continue reading...]

அரசியல் வாரிசுகளின் பத்தாயிரம் கோடி!

- 0 comments
 
 
 
மதுரையில் ஆடியோ வெளியிடுவது, மலேசியாவில் ஒற்றை பாடல் வெளியிடுவது... என கோலிவுட்டின் இசை வெளியீட்டு வைபவங்கள், கோடம்பாக்கத்துக்கு வெளியேயும் சமீபகாலமாக அரங்கேறி வரும் வேளையில், தன் இயக்கத்தில் உருவாகும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் படத்தொடக்க விழாவையே, தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லிநகரத்தில் ஆர்ப்பாட்டமாக நடத்தி முடித்தார் இயக்குநர் பாரதிராஜா. அவரைத்தொடர்ந்து பழம் பெரும் அரசியல்வாதியும், படஅதிபரும், இயக்குநருமான முக்தா சீனிவாசனின் வாரிசும், திரைப்பட இயக்குநருமான வி.சீனிவாசன் சுந்தர் புதிதாக இயக்க இருக்கும் பத்தாயிரம்கோடி எனும் திரைப்படத்தின் தொடக்க விழாவை, பாண்டிச்சேரியில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாளை(30.11.11) 9 மணிக்கு நடத்த இருக்கிறார்.
 
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தலைமையில் நடைபெறும் இப்படத்தின் தொடக்க விழாவில், காமிராவை முடுக்கி வைக்க இருப்பவர் புதுவை சட்டசபை உறுப்பினர் அஷோக் ஆனந்தன். மாயா கிரியேஷன் எனும் பேனரில் பத்தாயிரம் கோடி படத்தை என்.ஆர்.சீனிவாசன் தயாரிக்கிறார்.
 
அரசியல்வாதிகளின் வாரிசுகள், அரசியல் பிரபலங்கள் புடைசூழ படத்தின் தலைப்பு "பத்தாயிரம்கோடி" என்றிருப்பது தான், புதுவையில் இதன் தொடக்கவிழா இருப்பதைகாட்டிலும் கோடம்பாக்கத்தில் பலரது புருவங்ளை உயர செய்திருக்கும் சமாச்சாரமாகும்!



[Continue reading...]

கொடநாடு பயணத்தை திடீர் என ரத்து செய்தார் ஜெ.

- 0 comments
 
 
 
முதல்வர் ஜெயலலிதா நாளை, நீலகிரி மாவட்டம் கோடநாடு செல்வதாக இருந்தார். முதல்வர் வருகையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேற்கு மண்டல ஐஜி (பொறுப்பு) அம்ரேஷ் பூஜாரி, டிஐஜி ஜெயராமன், நீலகிரி எஸ்பி நிஜாமுதீன், குன்னூர் டிஎஸ்பி மாடசாமி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
 
 
கோத்தகிரி முதல் கோடநாடு வரை சாலையில் எந்தெந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆராயப்பட்டது.
 
உள்ளூர் போலீசார் மட்டுமில்லாமல், கோவையில் இருந்து அதிவிரைவு படை போலீசாரையும் வரவழைக்க திட்டமிடப்பட்டது.
 
வழக்கமாக ஜெயலலிதா கோடநாடு வரும்போது சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு செல்வது வழக்கம்.
 
ஆனால், நீலகிரியில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக மேகமூட்டம் நிலவி வருகிறது. நாளையும் இதே போல் மேகமூட்டம் நிலவினால் ஹெலிகாப்டர் தரையிறங் குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, வாகனம் மூலம் தரைமார்க்கமாக முதல்வர் கோடநாடு செல்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்தது.
 
தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் சில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தோழி சசிகலா ஆகியோரும் கோடநாடு செல்வதாக இருந்தனர். கோடநாடு பங்களாவில் ஜெயலலிதா சுமார் 3 வார காலம் தங்கி இருப்பார். டிசம்பர் கடைசியில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நேரத்தில் சென்னை திரும்புவார் எனவும் பேசப்பட்டது.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, தனது கொடநாடு பயணத்தை திடீர் என ரத்து செய்துள்ளார்.
 
 

 


[Continue reading...]

காமம் காதல் கபடி ஆட்டம் : அனல்காற��று - ஜெயமோகன்

- 0 comments



ப்ரியா மணி அல்லது மாளவிகா  ஆகியவர்களில் ஒருவர் நடிக்க  , பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்க வேண்டிய திரைப்படம் அனல் காற்று. அதற்காக ஜெயமோகன் கதை எழுதினார். சில காரணங்களால் படம் எடுக்க முடியவில்லை.
படமாக வந்து இருந்தால் ஓடி இருக்குமா? ஜெயமோகன் சிறந்த நாவல்களில் இது ஒன்றா? படித்தே தீர வேண்டிய நாவலா?
பார்க்கலாம்.ப்ரியா மணி , மாளவிகா அல்லது நக்மா ஆகியவர்களில் ஒருவர் நடிக்க  , பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்க வேண்டிய திரைப்படம் அனல் காற்று. அதற்காக ஜெயமோகன் கதை எழுதினார். சில காரணங்களால் படம் எடுக்க முடியவில்லை.
படமாக வந்து இருந்தால் ஓடி இருக்குமா? ஜெயமோகன் சிறந்த நாவல்களில் இது ஒன்றா? படித்தே தீர வேண்டிய நாவலா?
பார்க்கலாம்.
எல்லோருக்கும் தெரிந்த , தெரிந்து கொள்ள விரும்புகின்ற ஆனால் தெரிந்து கொள்ள முடியாத ஒரு விஷ்யத்தைப் பற்றிதான் நாவல் பேசுகிறது.
காதல். காம்ம் 

காமம் இல்லாத காதல் உண்டா?   காதல் இல்லாத காமத்திற்கு பின் ஏதேனும் மனோதத்துவ பிரச்சினைகள் உள்ளனவா? காமம் , காதல் இரண்டுமே இல்லாமல் வாழ முடியாதா?
பல குற்றங்களுக்கு இவைதானே காரணங்களாக இருக்கின்றன. அல்லது இவை பற்றிய புரிதல் இன்மை காரணமாக உள்ளது.

இந்த பிரச்சினைக்ளை அலசும் நாவல்தான் அனல் காற்று.

வழக்கமான ஜெ மோ நாவல்கள் போலல்லாமல் எளிய கதை போக்கு. நேரடியான கதை.  சீரான கதை ஓட்டம் என்ற பாணியில் கதை செல்கிறது. ஜெ மோ நாவல்தானா என்று கூட அவ்வபோது சந்தேகம் வருகிறது.

அருண், சுசீ, சந்திரா, அருணின் அம்மா ஆகியோரை அடிப்படையாக கொண்ட கதை.

அருணின் அப்பாவுக்கு மற்ற பெண்கள் தொடர்பு இருப்பதால், அவரை விட்டு விலகுகிறாள் அம்மா. அருணை தானே வளர்க்கிறாள். அருணை அவன் அப்பா போலல்லாது " நல்லவனாக" வளர்க்க முயல்கிறாள். அவனோ தன் தந்தை பாணியில்,  வயதில் மூத்த - கணவனை இழந்த - சந்திராவுடன் காதல்/ காம வயப்படுகிறான். தன் கணவனுக்கு  எந்த தவறான தொடர்புகளும் இருக்க கூடாது என்ற கனவுடன் இந்தியா வரும் அருணின் முறைப்பெண் சுசீலா மீதும் இவனுக்கு காதல் ஏற்படுகிறது.
அதே நேரத்தில் சந்திரா மீதான காதலும் போகவில்லை. சுசீலாவோ இவனை காதலிக்கிறாள். சந்திராவும் காதலிக்கிறாள். சந்திராவுக்கு வளர்ந்த வயதில் ஒரு பையன் இருக்கிறான். 

காதல் என்றால் என்ன? எந்த காதல் ஜெயித்தது என்பது கதை.

இந்த நாவலின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் எளிமையான கதையோட்டமும் , மொழி ஆளுமையும்தான். 

காமத்தின் இன்னொரு எல்லை மரணம் என்பதை உணர்ந்து மரணத்தைப்பற்றியும் கூர்மையாக சுட்டிக்காட்டி இருப்பதுதான் , இந்த நாவலை அர்த்தமுள்ள நாவலாக்குகிறது. 

வசதி குறைவான , கீழ்த்தட்டு மக்கள் வீடுகளைப்பற்றிய குறிப்புகள் அபாரம். வீட்டில் நுழைந்தால் பொருட்கள்தான் பெரும்பாலான இடத்தை அடைத்து கொண்டிருக்கும் போன்ற நுட்பமான பார்வைகள் , கதையை நேரடியாக பார்க்க வைக்கிறது.

பெரிய மைனஸ் பாயிண்ட் என்றால் , கதாபாத்திரங்கள் யதார்த்த உலகை விட்டு சற்று விலகி இருக்கிறார்க்ளோ என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றுவதுதான்.

இந்த நாவலின் அனைத்து கதாபாத்திரங்களும் கடைசியில் நல்லவர்கள் ஆகி விடுகிறார்கள். இது சற்றும் நடை முறையில் பார்க்காத ஒன்று.

அதே போல கிளைமேக்ஸ் சினிமாட்டிக்காக இருப்பது போல தோன்றுகிறது. சற்று முன்பே முடிந்து விட்ட  கதை, சுபமான முடிவுக்காக நீட்டப்பட்டு இருப்பது போல தோன்றுகிறது.

சந்திரா , அருணுக்கிடையே இருப்பது காதல் அன்று. வெறும் உடல் இச்சையும் அன்று. அது வேறு என உணர்வதுதான் கதையின் உச்சம். அதற்கு பிறகு பைக் சேசிங் , விமான பயணம் எல்லாம் செய்ற்கையாக உள்ளது.

அனல் காற்று ஓர் உச்சத்துக்கு சென்ற பின் , குளிர்ந்துதான் ஆக வேண்டும் என்பது இயற்கை விதி. அதே போல குளிர்ச்சிக்கு முன்பு, அதீத வெப்பத்தை சந்தித்துதான் ஆக வேண்டும் என்பதும் விதி.

ஒருவன் இயல்பான வாழ்க்கை வாழ்ந்தால், - தான் நினைப்பது போல வாழ்ந்தால் - இந்த இயக்கம் சுமூகமாக நடந்து முடிந்து விடும். ஆனால் அப்படி நடக்க முடியாமல் , சமூக குடும்ப அழுத்தங்கள் செய்து விடுவதால்தான் பல பிரச்சினைகள்.

இங்கே காதல் என்று வேறு ஏதோ ஒன்றைத்தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். பல காதல்களுக்கு எதிர்ப்பே தேவையில்லை. அதை அப்படியே அனுமதித்தால் , தானகவே அது உதிர்ந்து விடும்.

சில தவ்றான காதல்கள் , திருமணத்தில் முடிந்து பிரச்சினையில் முடிவதும் உண்டு. 

அருணை பொறுத்த வரை எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்து விட்டது. சந்திராவுடனான அவன் உறவு , அது கிளைமேக்சை அடைவதற்கு முன்பே சிதைந்து இருந்தால், வாழ் நாள் முழுக்க அவன் அதை ஓர் இழப்பாகவே நினைத்து கொண்டு இருப்பான். அதே போல , அந்த உறவு திருமணத்தில் ( ? ! ) முடிந்திருந்தாலும், வாழ் நாள் முழுக்க வருத்தம்தான்.

அனல் காற்று- மழை என்ற இயல்பான நிகழ்ச்சி அவனுக்கு வாய்த்து விட்டது . 

தனக்கு துரோகம் செய்த கணவன் , அனாதையாக சாக வேண்டும் என்ற மனைவியின் எதிர்பார்ப்பு இயல்பு. அந்த எதிர்பார்ப்பு பொய்யாகும்வண்ணம் , தந்தை குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கும் அருணின் கேரகடரும் இயல்பு. ஆனால் அந்த குடும்பத்துக்கு தானும் ஆதரவாக நின்று , ஆயிரம் அன்னைகளுக்கு சமமாக தோன்றும் சுசீ இயல்பாக சித்திரிக்கப்படவில்லை. சினிமாவை மனதில் வைத்து எழுதி இருப்பார் போல. 

அந்த கேரகடர் உள்ள ஒரு பெண், தன் வருங்கால மாமியாரைத்தான் ஆதரித்து இருப்பாள்.

அதே போல, சந்திரா மனம் மாறுவது இயல்பு. ஆனால் தன் மகனுடன் பைக் சேஸ் செய்வது சினிமாவின் விறுவிறுப்பான கிளைமேக்சுக்காக என்பது தெளிவு. அவள் மகன் மட்டும் போய் இருந்தால் போதுமே.

இவை எல்லாம் நாவலில் முழுமையாக ஒன்றுவதை தடை செய்தாலும், உரையாடல்கள், மன ரீதியான அலசல்கள்,  நுட்பமான காட்சி அமைப்புகள் போன்றவை நாவலை தூக்கி நிறுத்துகின்றன. அப்பா, அவர் இரண்டாவது குடும்பம், நண்பன் ஜோ கேரகடர் போன்றவையும் வலு சேர்க்கின்றன 

********************************************************************

எனக்கு பிடித்த சொல்லாட்சிகள்

1 வெள்ளை உடை அணிந்த பெண் கூட்ட ஆரம்பித்தாள். என்னை அவள் நெருங்கினால், கூட்டி தள்ளி விடுவாள் என அஞ்சினேன்

2 உனக்கு பிடிக்காத எதுவுமே உலகில் இல்லை என அறிந்தேன். ஏனெனில் உனக்கு உன்னைப் பிடித்து இருக்கிறது

3 " லவர்ஸ்தான் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க"  " கல்யாண வாழ்க்கைக்கு ரிகர்சலோ ?"

4 பெண்ணின் அழகு என்பது ஆணின் கண்ணால் உருவாக்கப்படுவது. பார்த்ததும் நம்மை கவரும் பெண்ணின் அழகு மெல்ல மெல்ல நம் கண்ணில் குறைய ஆரம்பிக்கும். நாம் விரும்பி, அவ்விருப்பத்தால் ஒரு பெண்ணில் கண்டடையும் அழகு அப்பிரியத்துடன் சேர்ந்து வளரும்.

5 வில்லில் இருந்து அம்பு பாய்றப்ப, அம்பின் நிழலும் சேர்ந்து போகும். அம்பு நேரா போகும், நிழல் குப்ப, கூளம் ,மேடு பள்ளம் புரண்டு போகும் ,ஆனால் இரண்டும் போய் சேரும் இடம் ஒன்றுதான்

6 மரணத்தின் போது , ஒரு மனிதர் தன் முழுமையுடன் தெரிய வருகிறார்

7 அப்பாவின் படத்தை பார்த்தேன். அவர் இருந்த போது அந்த படம் அவர் போல இல்லை என தோன்றியது. இப்போது அது அவராகவே இருந்தது.

8ஸ்ட்ரா போட்டு இளனீரை உறிஞ்சறப்போ , ஒரு புள்ளில இளனீர் தீர்ந்து போச்சுனு தெரியற மாதிரி, உறவு முறிவது சட் என தெரிந்து விடும்
9 உண்மையான காதல்னா , காதலை கொடுப்பது மட்டும்தான்

**********************************************************************************

சிறந்த கேரக்டரைசேஷன்

சந்திராவின் பையன் நவீன்.. விளையாட்டு பையனாக, சாப்பாட்டு பிரியனாக சித்திரிக்கப்படும் அவனுக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது, தெரியாத மாதிரி இருந்திருக்கிறான் என்பது செம ட்விஸ்ட். அவன் அம்மாவின் தவறான உறவை சிலர் சுட்டிக்காட்டும்போது, இதை பற்றி கவலைப்பட வேண்டியது என் அப்பா, அவருக்கு பின் நான் ..உங்களுக்கு என்ன என கேட்பதில் கம்பீரம், கதையின் கிளைமேக்ஸ் இதுதான். எனவே இந்த் கதையில் மனதில் நிற்பது இந்த கேரக்டர்தான்

**************************************************************************

வெர்டிக்ட் 

1 படிக்க வேண்டிய நாவல். படித்தே தீர வேண்டிய நாவல் அன்று 


2 ஜெயமோகனின் உன்னத நாவல்களில் ஒன்றல்ல . 

3 சினிமாவாக எடுத்து இருந்தால், சூப்பர் ஹிட் ஆகி இருக்கும் 

******************************************
அனல் காற்று 

ஜெயமோகன்

தமிழினி வெளியீடு

விலை ; ரூ 90 




http://tamil-vaanam.blogspot.com




  • http://blackinspire.blogspot.com


  • [Continue reading...]

    சர்க்கரை பந்தலி��் தேன் மழை - எஸ் ர��மகிருஷ்ணனுக்கு ���ரு கடிதம்

    - 0 comments


    அன்புள்ள உயர்திரு எஸ் ரா அவர்களுக்கு..

    சிலர் நன்றாக எழுதுவார்கள். ஆனால் சரி வர உரையாற்ற தெரியாது . நல்ல பேச்சாளர்கள் சிலருக்கு எழுத தெரியாது.

    எழுத்து , பேச்சு என இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் நீங்கள்..

    உங்களது உப பாண்டவம் நாவலை படிக்கும்போதோ அல்லது நடந்து செல்லும் நீரூற்று போன்ற சிறுகதைகளை படிக்கும்போதோ கிடைக்கும் உன்னத உணர்வு உங்கள் சொற்பொழிவை கேட்கும்போதும் கிடைக்கும்.

    இந்த ஆண்டு மதுரை புத்தக கண்காட்சியில் சில புத்தகங்கள் வாங்கினேன்

    புத்தக வாங்க வந்ததை விட உங்கள் சொற்பொழிவை கேட்கத்தான் வந்தேன். கவிதை நூல் வெளியிட்டு பேசினீர்கள்.

    அட்டகாசமான பேச்சு. என்றோ கேட்ட பேச்சு. இன்னும் அந்த நினவுகள், அப்போது பெற்ற உணர்வுகள் நினைவில் இருக்கின்றன

     நீங்கள் வெளி நாட்டில் பிறந்து இருந்தால் , ஒரு மணி நேர சொற்பொழிவுக்கு கணிசமான டாலர் கட்டணம் பெறும் , மிகப்பெரிய பேராசிரியராக போற்றப்பட்டு இருப்பீர்கள்.

    தமிழ் நாட்டில் அறிவு சார்ந்த விழிப்புணர்வு இல்லை.. ஒரு நடிகனுக்கு கிடைக்கும் கவனிப்பு எழுத்தாளனுக்கு இல்லை.

    அப்படி இருந்தும்  உங்கள் பேச்சுக்கு , எழுத்துக்கு , அறிவுக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருக்கின்றனர் - என்னையும் சேர்த்து.

    தமிழ் நாட்டில் மட்டும் அன்று. தமிழ் பேசும் மக்கள் இருக்கும் அனைத்து நாடுகளிலும் உங்களுக்கு வரவேற்பு உண்டு.

    அல்ட்டிமேட் ரைட்டர் சாரு பக்தர்களுக்கு உங்கள் மேல மாபெரும் மரியாதை உண்டு. தேகம் நாவல் விழாவில் உங்கள் பேச்சு என்றும் மறக்க முடியாத ஒன்று.

    இந்த நிலையில் எக்சைல் நாவல் விழாவில் நீங்கள் பேசவில்லை என்ற செய்தி எங்களை வருத்தமுற செய்தது. இந்த வருத்தத்துக்கு காரணம் உங்கள் மீது கொண்ட பாசம்தான்.

    சிலர் வராவிட்டால் சந்தோஷம்.. ஆனால் நீங்கள் வந்து பேசினால் , அது ஓர் உன்னதமான அனுபவம். அதானால்தான் வருத்தமாக இருந்தது.

    ஆனால் நீங்கள் விழாவிற்கு வருகிறீர்கள் என்ற செய்தி வந்துள்ளது.

    வாவ்..

    சாரு சம்பந்தமான நிகழ்ச்சி என்றால் அது சர்க்கரையால் ஒரு பந்தல் அமைத்தமாதிரி இனிமையாக் , இனிப்பாக இருக்கும்.


    அதில் உங்கள் வருகை என்பது சர்க்கரை பந்தலில் தேன் மழை பெய்தது மாதிரி இருக்கும்

    வருக வருக,, என மலர் தூவி வரவேற்கிறோம்






    http://tamil-vaanam.blogspot.com




  • http://blackinspire.blogspot.com


  • [Continue reading...]

    டாப் டென் வாதங்க���்- அறிவு கொழுந்த���களின் அணு உலை, நூலக நிலைப்பாடு

    - 0 comments



    கூடன் குளம் அணு உலை பிரச்சினை, அண்ணா நூலக இட மாற்ற பிரச்சினைகளில் சில அறிவு கொழுந்துகள் செய்யும் அழிச்சாட்டியங்களைப் பார்த்தால் இவர்கள் புரிந்து செய்கிறார்களா இல்லையா என்ற குழப்பமே மிஞ்சுகிறது.
    இரண்டு தரப்பினரும் எடுத்து வைக்கும் வாதங்கள்கூட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
    அவ்ர்களின் கருத்து வெள்ளங்கள் – உங்கள் பார்வைக்கு,

    அணு உலை ஆதரவாளர்கள்
     நூலக இட மாற்ற எதிர்ப்பாளர்கள்


    1 அணு உலையை மூடக்கூடாது
    1  நூலகத்தை இடம் மாற்ற கூடாது
    2 அணு உலை இந்தியாவின் கவுரவ சின்னம்
    2 இந்த நூலகம் தமிழகத்தின் கவுரவ சின்னம்


     3 வல்லரசு ஆக வேண்டுமென்றால் சிலர் உயிர் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். தமிழர்கள் சிலர் செத்தால் என்ன ? இந்தியா வல்லரசு ஆகிறதே..அது போதும்
     3 நலிந்த மக்களின் நிதியை இந்த ஆடம்பர நூலகத்துக்கு பயன்படுத்தியதில் தவறு இல்லை. அவர்கள் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்


     4 நவீன கருவிகள். வசதிகள் கொண்ட இந்த உலையை மூட மனம் வரவில்லை. மக்களை விட கட்டடம்தான் முக்கியம்

    இதை கட்டும்போதே ஏன் எதிர்க்கவில்லை


    6 இதை கட்டி இருக்க கூடாது. கட்டிய பின் இடிக்க கூடாது 


    7 வேண்டுமென்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு பணம் கொடுத்து விடலாம் 



    8 இந்த அணு உலையை மூடுவோம் என தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. இப்போது மூட முயற்சித்தால் தவறு 


    9 சில எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்பட்டு அணு உலையை ஆதரிக்கவில்லை 


    10 அணு உலையைப்பற்றி புரிந்து கொண்டுதான் , இதை ஆதரிக்கிறோம். 

     4 மக்களுக்கு பயன்பட்டால் என்ன .இல்லாவிட்டால் என்ன ? வசதியும் , அழகும் கொண்ட இந்த நூலகத்தை மாற்றக்கூடாது

    இதை கட்டும்போதே ஏன் எதிர்க்கவில்லை


    6 இதை கட்டி இருக்க கூடாது. கட்டிய பின் இடிக்க கூடாது 


    7 வேண்டுமென்றால் நலிந்த மக்களிடம் இருந்து திருடப்பட்ட பணத்தை , அந்தந்த நூலகங்களுக்கு திருப்பி கொடுத்து விடலாம்


     இந்த  நூலகத்தை இடம் மாற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. இப்போது மாற்ற  முயற்சித்தால் தவறு 



    9 சில எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்பட்டு இந்த ஊழல் கட்டடத்தை ஆதரிக்கவில்லை 


    10 நூலக சட்டம், மக்கள் வசதி என எல்லாவற்றையும் புரிந்து கொண்டுதான் , இதை ஆதரிக்கிறோம்



    http://tamil-vaanam.blogspot.com




  • http://blackinspire.blogspot.com


  • [Continue reading...]

    டிசம்பரில் , இலக்கியத்துக்கு குர��� பூஜை - பிரேக்கிங் நியூஸ்

    - 0 comments


    மாதா , பிதா , குரு அதன் பின் தெய்வம் என்பது இந்திய மரபு.

    ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் ஐரோப்பிய பாதிப்பில் அந்த நிலை இன்று மாறி விட்டது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆசிரியர்கள் என்றால் மாணவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கும் நிலை இருந்தது . இன்று ஆசிரியர் என்பது ஒரு பணியாளர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களும் முன்பு போல அளவு கடந்த உரிமை , அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. தன் பணியை முடித்தோமா சென்றோமா என இருக்க பழகிக்கொண்டு விட்டனர்.


    இப்படி நாம் மறந்து போனவை ஏராளம்.

    ஆங்கிலேயர் வரவால், இப்படி  நாம் மறந்து போன பலவற்றை   நமக்கு அறிமுகப்படுத்தும் நாவலை எழுதி முடித்துள்ளார் இறைவன் நமக்களித்த இதயக்கனியான அல்ட்டிமேட் ரைட்டர் சாரு அவர்கள்.

    இது சுய முன்னேற்ற் நூலா, ஆன்மிக் பெட்டகமா , இலக்கிய கருத்துக்களை சுமந்து வரும் ஒட்டகமா,  இலக்கியத்தின் உச்சமா, இறைவன்  நமக்களிக்க மறந்த உன்னதங்களின் மிச்சமா , நவீன எழுத்தை தமிழுக்கு கொண்டு வரும் ஒப்ப்ற்ற முயற்சியா என்பதை எல்லாம் என்னால் மதிப்பிட முடியாது. ஆன்றோர்களும் சான்றோர்களும்தான் மதிப்பிட முடியும்.

         இலக்கிய உலகின் இறைவனான சாருவுக்கு  நம்மால் எந்த கைமாறும் செய்ய இயலாது.  ஆனால் நம் அவர் மேல் வைத்து இருக்கும் மரியாதையை எந்த வகையிலாவது காட்டியாக வேண்டும்.

    அவர் மேல் நாம் காட்டும் மரியாதை சாரு என்ற தனி நபர் மேல் காட்டும் மரியாதை அன்று.

    அவருக்கு செலுத்தும் மரியாதை , தமிழுக்கு செலுத்தப்படும் மரியாதை, இலக்கியத்துக்கு செலுத்தப்படும் மரியாதை, நம் பண்பாடுகளுக்கு செலுத்தப்படும் மரியாதை

    ஏன் அப்படி சொல்கிறேன்? விளக்குகிறேன்

     நம் ஊரில் அறிவு ஜீவி என பெயர் எடுக்க சில டெம்ப்ளேட் ஃபார்முலாக்கள் உள்ளன.


    • தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொள்வது
    • வாசகனை மதிக்காமல் இருப்பது
    • எதையும் படிக்காத அறிவிலியாக இருந்து கொண்டு , தமிழ் கலாச்சாரம் என உதார் விடுவது
    • உலக இலக்கியம் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் , மேம்போக்காக பழம் பெருமை பேசுவது 
    • ஆளும் கட்சி எது செய்தாலும் திட்டுவது

    அல்ட்டிமேட் ரைட்டர் இது எதையும் செய்வதில்லை

    தன் எழுத்தால், தன் அறிவால், தன் உழைப்பால் மட்டுமே மக்கள் மனதில் நிற்கிறார். அவர் உழைப்பு , தமிழ் ஆளுமை , உலக இலக்கிய ஞானம் எல்லாம் போற்றத்தக்கது. வணங்கத்தக்கது..

     நாம் எதை வணங்குகிறோமோ, அந்த குண்ங்கள் நம்மிடமும் வளரும் என்பது மனோதத்துவ உண்மை

    அந்த அடிப்படயில், எழுத்துலக விடி வெள்ளி சாருவின் பிறந்த நாளான டிசம்பர் 18 ல்   குரு பூஜை செய்ய இருக்கிறோம்

    ஆன்மிக மரபு சார்ந்த பூஜையாக இது இருக்கும்

    இது குறித்த மேலதிக விபரங்கள் , அடுத்த பதிவில்...







    http://tamil-vaanam.blogspot.com




  • http://blackinspire.blogspot.com


  • [Continue reading...]

    FDI in retail: All-party meet fails, Parliament adjourned for the day

    - 0 comments


    The row over FDI in reatil continued to disrupt the functioning of Parliament with both Lok Sabha and Rajya Sabha adjourned after a united opposition மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com




  • http://tamil-photo.blogspot.com


  • [Continue reading...]

    Mullaperiyar: DMK accuses Kerala parties of misleading people

    - 0 comments


    Accusing political parties in Kerala of misleading people on safety of Mullaperiyar Dam, DMK on Tuesday sought Prime Minister Manmohan Singh's intervention to "desist" them மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com




  • http://tamil-photo.blogspot.com


  • [Continue reading...]

    Kanimozhi to leave Tihar Jail in evening, to visit Chennai on Dec 3

    - 0 comments



    After spending more than six months in Tihar Jail, DMK MP Kanimozhi will finally walk free on Tuesday evening, a day after she was granted மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com




  • http://tamil-photo.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger