நண்பன் கோகுல், எனக்குள் நான் [[பயங்கர டேட்டா]] பதிவுக்கு தொடர்பதிவு எழுத சொல்லி கேட்டுருந்தார், சரி நண்பன் வேண்டுகோளை தட்டமுடியுமா, அதான் எனக்குள்ளே உறங்கும் [[உறுமும்]] என்னை சொல்லி இருக்கேன் ஹி ஹி.....
நான் : நான் ஒன்றும் பிரபல பதிவர் சிபி, விக்கி மாதிரி பிராப்ள ச்சே ச்சீ பிரபல ஆளு கிடையாது, உங்களுக்கு நான் நாஞ்சில்மனோ, அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காளுக்கு நான் மனாசே, நண்பர்களுக்கு மனோஜ், மனைவி குடும்பத்தாருக்கு மனோ...
சந்தோஷ தருணங்கள் : குழந்தைகளுடன் குழந்தையாக இருப்பது, விக்கி'யை சாட்டிங்கில் திட்டி தீர்ப்பது, ஆபீசர் [[சங்கரலிங்கம்]] அருகில் அமர்ந்து இருப்பது, கே ஆர் விஜயனுடன் ஊர் சுற்றுவது, மனைவி குழந்தைகளுடன் வெளியே போயி சாப்பிடும் நேரம், பஹ்ரைன் மலையாளி நண்பர்களுடன் ஜாலியாக அரட்டையடித்து சிரிப்பது.....!!!
மறக்க முடியாதது : நெல்லை பதிவர் சந்திப்பை, ஏன்னா இனி அப்பிடி மொத்தமாக ஒரே இடத்தில் பதிவர்கள் சந்திப்போமா தெரியவில்லை...!!!
வாழ்க்கை : கடுமையாக போராடிகிட்டு இருக்கேன் ஒற்றை மனிதனாக, இதுவும் சுகமாகவே இருக்கிறது...!!
காதல் : முதல் காதல் சோகத்தில் முடிந்தது [[தோல்வி அல்ல]] அடுத்த காதல் தென்றலாக வந்து, என்னை அணைத்தவள்தான் என் மனைவி லீதியாள், இரு வீட்டு பெற்றோரின் சம்மதப்படி கல்யாணம் மும்பையில் நடந்தது, எனக்கு காதல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
நட்பு : நட்புன்னு நம்பி ஏமாந்த கதைகள் நிறைய உண்டு, அதைவிட ஏராளமான நல்ல நட்புகள் என்னை சுற்றி இருக்கிறார்கள் ஏன் நீங்களும் கூடத்தான்....!
மரணம் : சர்வ சிருஷ்டியையும் உண்டாக்கிய தெய்வம் கையில் இருக்கிறது, இதை முற்றிலும் நம்புகிறவன்...!!!
சோகம் : ஈழத்தமிழ் மக்களின் நிலை...!!!
கோபம் : மும்பையில் பதினான்கு வயது சிறுமியை பூங்காவில் மறைத்து வைத்து சீரழிக்க முயற்சி செய்த ஒருவனை என் கண்ணால் கண்டு, அவனை மயங்கி விழும் வரை துவைத்து போட்டுவிட்டு, சிறுமியை வீட்டில் கொண்டுபோயி விட்டுட்டு அவள் அப்பனையும் அவன் வீட்டுலேயே போட்டு அப்பினது...!
நினைப்பது : சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்...!!! [[நன்றி பாக்யா]]
கவர்ந்த வரிகள் : துஷ்டனை கண்டால் தூர விலகு [[பைபிள் வசனம்]]
ஒய்வு கிடைத்தால் : ஆர்மோனியம் இசைத்து வாசித்து பாட்டு பாடுவது, மனைவி பிள்ளைகளுடன் போனில் அரட்டை, நண்பர்களுடன் பார்களில் சாப்பிடுவது சாப்பாடு மட்டும்தான் ஹி ஹி...!!!
பலம் : தெய்வ நம்பிக்கை....!!!
பலவீனம் : ஓவர் செலவு, கண்ட்ரோல் பண்ண முடியவில்லை....!!!
டிஸ்கி : ஒ இனி தொடர் பதிவுக்கு ஆளை கூப்பிடனுமா, போன தொடருக்கே [[குழந்தை உலகம்]] கூப்பிட்ட ஒருத்தன் [[ராஸ்கல்ஸ்]] சத்தத்தையும் காணோம், ம்ம்ம்ம் யாரை போட்டு குடுக்கலாம்....??
பன்னிகுட்டியை அழைக்கிறேன், காமெடியா இல்லை சீரியஸா போட்டாலும் சுவாரஷ்யமா இருக்கும் அடுத்து, கில்மா நாயகனை [[சிபி]] அழைக்கிறேன், கவிதைவீதி'யை அழைக்கிறேன்.
மனோ'தத்துவம் : நான் உழைக்கிறேன் நான் சாப்புடுறேன் உனக்கென்னடா....?
http://galattasms.blogspot.com
http://naamnanbargal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?