மதுரையில் ஆடியோ வெளியிடுவது, மலேசியாவில் ஒற்றை பாடல் வெளியிடுவது... என கோலிவுட்டின் இசை வெளியீட்டு வைபவங்கள், கோடம்பாக்கத்துக்கு வெளியேயும் சமீபகாலமாக அரங்கேறி வரும் வேளையில், தன் இயக்கத்தில் உருவாகும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் படத்தொடக்க விழாவையே, தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லிநகரத்தில் ஆர்ப்பாட்டமாக நடத்தி முடித்தார் இயக்குநர் பாரதிராஜா. அவரைத்தொடர்ந்து பழம் பெரும் அரசியல்வாதியும், படஅதிபரும், இயக்குநருமான முக்தா சீனிவாசனின் வாரிசும், திரைப்பட இயக்குநருமான வி.சீனிவாசன் சுந்தர் புதிதாக இயக்க இருக்கும் பத்தாயிரம்கோடி எனும் திரைப்படத்தின் தொடக்க விழாவை, பாண்டிச்சேரியில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாளை(30.11.11) 9 மணிக்கு நடத்த இருக்கிறார்.
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தலைமையில் நடைபெறும் இப்படத்தின் தொடக்க விழாவில், காமிராவை முடுக்கி வைக்க இருப்பவர் புதுவை சட்டசபை உறுப்பினர் அஷோக் ஆனந்தன். மாயா கிரியேஷன் எனும் பேனரில் பத்தாயிரம் கோடி படத்தை என்.ஆர்.சீனிவாசன் தயாரிக்கிறார்.
அரசியல்வாதிகளின் வாரிசுகள், அரசியல் பிரபலங்கள் புடைசூழ படத்தின் தலைப்பு "பத்தாயிரம்கோடி" என்றிருப்பது தான், புதுவையில் இதன் தொடக்கவிழா இருப்பதைகாட்டிலும் கோடம்பாக்கத்தில் பலரது புருவங்ளை உயர செய்திருக்கும் சமாச்சாரமாகும்!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?