Tuesday, 10 January 2012

பொன்சேகாவை விடு��லை செய்து வீட்டுக்காவலில் வைக்க��் திட்டம்?

- 0 comments


சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகா எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னதாக, விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி வருவதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

அத்துடன், அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்பது உட்பட மேலும் சில நிபந்தனைகளுடன் அவரை விடுவிப்பதற்கு அரச தரப்பு அக்கறை கொண்டிருப்பதாகவும் அவ் வார இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அமைச்சர்கள் மட்டத்தில் கூட உருவாகியிருக்கும் நிலையில், கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவ்வாறு விடுதலை செய்யப்படவில்லை எனில், ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் இராஜதந்திர வழிமுறைகளில் இலங்கையை அமெரிக்க எச்சரித்திருப்பதாகவும்வ் ஆங்கில வார இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிட்டளவு கையொப்பங்களைப் பெறுவதற்கான முயற்சிகளும், பொன் சேகாவின் மகள் மேற்கொண்டிருந்த முயற்சிகளும் அரசாங்கத்திற்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையிலேயே, அரசாங்கம் சரத் பொன்சேகாவை விடுதலை செய்து வீட்டுக்காவலில் வைக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


http://tamil-cininews.blogspot.com



  • http://girls-tamil.blogspot.com

  • [Continue reading...]

    உலகின் ஊட்டச்சத��துக் குறைவான குழந்தைகளில் மூன்ற��ல் ஒன்று இந்தியக் குழந்தை

    - 0 comments


    இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகள் தொகை அதிகமாகக் காணப்படுவது நாட்டின் ஒட்டுமொத்தத் தேசிய அவமானம் என பிரதமர் மன்மோகன்சிங் கவலை தெரிவித்திருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    Hunger and Malnutrition எனும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பான ஆய்வினை மேற்கொள்ளும் அமைப்பு, இந்தியாவில் பொருளாதாரப் பின்னடைவுள்ள 9 மாநிலங்களைச் சேர்ந்த 112 மாவட்டங்களில் வதியும் மக்கள் மத்தியில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் அதிர்ச்சி தருபவையாக அமைந்திருப்பதாகத் தெரிய வருகின்றது.

    இது தொடர்பில் 73,000 வீடுகளில் ஆய்வு நடத்தியிருக்கும் அவ்வமைப்பு, சுமார் ஒரு இலட்சம் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்ததில், 5 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆரோக்கியமான எடையை எட்டியுள்ளது ஆனால் மிகுதி நான்கு குழந்தைகள் ஊட்டச் சத்து பற்றாக்குறையுடன் வாழ்கின்றன எனத் தெரிவித்துள்ளது.

    இவ்வாறான நிலைக்கு, குடும்பப் பொருளாதாரம், சுற்றுப்புறச் சுகாதாரம், தாயின் கல்வியறிவு, தாய்ப்பால் கொடுக்கும் தாயின் ஆரோக்கியம், குடும்பங்களில் பெண்கள் நடத்தப்படும் முறை என்பவை இந்த ஊட்டசத்துக் குறைபாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், தனது அறிக்கையில் அந்த அமைப்புக் குறிப்பிட்டுள்ளது.

    இந்த அறிக்கை சுட்டிக்காட்டும் ஆதாரங்களின் அடிப்படையில் நாட்டின் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மொத்த வீதத்தில் 42 வீதமானோர் ஊட்டச்சத்துக் குறைவானவர்களாக இருப்பதாகத் தெரிய வருகிறது. உலகில் ஊட்டச்சத்துக்குறைவான மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியக் குழந்தை என்கின்ற நிலையைத் தோற்றுவிக்கிறது.

    இந்த அறிக்கையை மேற்கொள் காட்டிப் பேசிய பிரதமர், இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து வருகின்ற போதும், இவ்வளவு அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து அற்று இருப்பது நாட்டின் ஒட்டு மொத்தத் தேசிய அவமானம் என்பதுடன், எதிர்கால இந்தியாவின் ஆரோக்கியமற்ற நிலைகுறித்தம் அக்கறைப்பட வேண்டிய அவசியம் குறித்துப் பேசிய பிரதமர் இது தொடர்பான மாற்றுச் சிறப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

    தற்போதுள்ள குழந்தைகள் நலத் திட்டங்கள் சிறப்பாக உள்ள பொதும், அவற்றினால் மட்டும் இப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்பதால், இவ்வாறான உதவி தேவைப்படும் 200 மாவட்டங்களில் பல்வேறு துறைகள் சார்பிலும், சிறப்புத் திட்டங்கள் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.


    http://tamil-cininews.blogspot.com



  • http://girls-tamil.blogspot.com

  • [Continue reading...]

    நக்கீரன் விவகார��்: தமிழக அரசை கேள���விகளால் குடைந்த உயர்நீதிமன்றம்!

    - 0 comments


    கடந்த 07.01.2012 அன்று நக்கீரன் அலுவலகம் அதிமுகவினரால் தாக்கப்பட்டது. அதோடு தமிழக அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நக்கீரன் அலுவலகத்தன் மின் இணைப்பையும், குடிநீர் இணைப்பையும் துண்டித்தது. இதன் மூலம் நக்கீரன் அலுவலகம் இயங்கக் கூடாது என்று குறி வைத்து வேலை செய்தது.

    இதைத்தொடர்ந்து, நக்கீரன் அலுவலகத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் நக்கீரன் சார்பில் அவசர வழக்கு 09.01.2012 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு 10.01.2012 அன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் மற்றும் வாசுகி தலைமையிலான முதல் பென்ஞ் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நக்கீரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பெருமாள், அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான புகைப்பட ஆதாரங்களை காட்டி வாதாடியதோடு, அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எடுத்துக் கூறினார்.

    இதையடுத்து தலைமை நீதிபதி இக்பால், ''அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஜாதி, மதம் பார்க்கக் கூடாது. கட்சி பேதம் பார்க்கக் கூடாது. மரண தண்டனை கைதிகளுக்கு கூட குடிநீரும், மின்சாரமும் கடைசி வரை வழங்க வேண்டும். அப்படி இருக்கும்போது நக்கீரன் அலுவலகத்தின் மின்சாரத்தையும், குடிநீர் இணைப்பையும் ஏன் நிறுத்தினீர்கள்? உங்களை யார் நிறுத்தச் சொன்னது?'' என்று அரசு தரப்பை நோக்கி கேள்வி கணைகளை தொடுத்தார்.

    அப்போது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதற்கு நக்கீரன் அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட நோட்டீசின் நகல் நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது. அதில், குடிநீரில் அசுத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் துண்டித்துள்ளோம் என்று கூறப்பட்டிருந்தது.

    இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ''எத்தனையோ இடங்களில் அசுத்தம் ஏற்பட்டுள்ளது. இதுநாள் வரை தூங்கிக் கொண்டிருந்த நீங்கள், எப்படி இந்த விஷயத்தில் மட்டும் அவசரமாக துண்டித்தீர்கள்?'' என்று கேள்வி எழுப்பினார்.

    இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒரு நாள் அவகாசம் கேட்டது அரசு தரப்பு.

    இதையடுத்து வழக்கு விசாரணையை மறுநாளுக்கு (11.01.2012) ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://girls-tamil.blogspot.com

  • [Continue reading...]

    கொலைவெறி தாக்கு��ல்! பதை பதைப்பு ந���மிடங்கள்!! (காணொளி இணைப்பு)

    - 0 comments


    கொலைவெறி தாக்குதல் பதை பதைப்பு நிமிடங்கள்! (காணொளி இணைப்பு)













    நக்கீரன்


    http://tamil-cininews.blogspot.com



  • http://girls-tamil.blogspot.com

  • [Continue reading...]

    படம் காட்டிய கோட���டபாய!

    - 0 comments



    தேசிய பாதுகாப்பு சவால்கள் எனும் தொனிப்பொருளில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட கோட்டபாய GTF தலைவர் மற்றும் சுரேன் சுரேந்திரன் நா.க அரசின் தலைவர் திரு.ருத்திரகுமாரன் வினாயகம் மற்றும் நெடியவன் ஆகியோரது படங்களைப் போட்டுக் காட்டி இவர்களே தமக்கு தொல்லை தருபவர்கள் எனக் கூறியுள்ளார்.

    தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தோற்றம் பெறுவதற்கான சாத்தியப்பாடானது யுத்தத்தற்குப் பின்னர் நாடு எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கூறியுள்ளார். இராணுவம் இந்த அச்சுறுத்தலை இனங்கண்டுள்ளதுடன் இலங்கையின் புலனாய்வு சேவைகளை பலப்படுத்தவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முகாம்களை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் இலங்கை முகம்கொடுக்கும் தேசிய பாதுகாப்பு சவால்கள் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

    "யுத்தத்தின்போது இராணுவத்தினரிடமிருந்து தப்பிய எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகளை எல்.ரி.ரி.ஈ. முகவர் அமைப்புகள் ஊக்குவித்து வசதிகளை அளித்து அவ்வமைப்பை மீளத் தோன்ற செய்யக்கூடும். 11,000 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள போதிலும் 100 சதவீதம் புனர்வாழ்வு பெறாத போராளிகளும் இருக்கக்கூடும். அவர்களை இராணுவ ரீதியாக நாம் தோற்கடித்துவிட்டதனால் அனைத்தையும் நாம் மறந்துவிட முடியாது. இன்னும் அச்சுறுத்தல் உள்ளது. சர்வதேச அமைப்புகளில் உள்ள பெரும் எண்ணிக்கையான எதிரிகள் அரசாங்கத்தை தடம்புரளச் செய்வதற்கு செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இதனால் தான் நாம் இன்னும் வலிமையான இராணுவத்தைப் பேணுகிறோம். இதனால்தான் வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்கு இராணுவத்துக்கு ஒதுக்கப்படுகிறது. எல்.ரி.ரி.ஈ.யை இராணுவ ரீதியாக தோற்கடித்து இரண்டரை வருடங்கள் மாத்திரமே கடந்துள்ளன" என அவர் கூறினார்.

    நாட்டை இராணுவ மயப்படுத்துவதாக அரசியல் காரணங்களுக்காக சில குழுக்கள் கூறுவதாகவும் பாதுகாப்புச் செயலர் குற்றம் சுமத்தினர். நாட்டை இராணுவமயப்படுத்துவதாக சில குழுக்கள் அரசியல் லாபங்களுக்காக கூறுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். நாளாந்த சட்டம் ஒழுங்கு செயற்பாடுகள் பிரதானமாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையின் எந்த பகுதியிலும் இராணுவ முகாமை நிறுவுவது இறைமையுள்ள நாடென்ற வகையில் அதன் சொந்தத் தீர்மானமாகும் என அவர் கூறியுள்ளமையின் உள்ளர்த்தம் புரிகிறது. தற்போது சில குழுக்கள் இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

    இலங்கையை அழுத்தத்திற்குள்ளாக்குவதற்கு சர்வதேச சமூகத்திற்கு உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற அமைப்புகள் சகல வழிகளிலும் அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன.எல்.ரி.ரி.ஈ. சார்பு அமைப்புகள், சர்வதேச ஊடகங்களுடன் இணைந்து செயற்படுகின்றன. இதனால் தான் சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவை போன்ற தகவல்களையும் அவர்களால் பரபப்ப முடிந்தது. அவ்வமைப்புகள் தமிழ் சோலை எனும் பெயரில் பாடசாலைகளையும் நடத்துகின்றன. அவை சுமார் 15,000 மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்றன எனவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

    மொத்தத்தில் புலம்பெயர் தமிழர்களை இம் மாநாட்டில் வைத்து மறைமுகமாக அவர் திட்டித்தீர்த்தது தான் மிச்சம். எங்கே மீண்டும் ஒரு போராட்டம் வெடித்துவிடுமோ என அவர் அஞ்சுவது அவர் பேச்சுக்களில் இருந்து தெளிவாகப் புலப்படுகிறது.


    http://tamil-cininews.blogspot.com



  • http://girls-tamil.blogspot.com

  • [Continue reading...]

    சென்னை புத்தகக் ���ண்காட்சி : பட்டா���்பூச்சி குறிப்புகள் – 1

    - 0 comments


    ஜனவரி 5 தொடங்கிய சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 17 வரை புனித ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது.  பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பர் கல்லூரிக்கு எதிரில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. கண்காட்சியின் இரண்டாவது நாள் பற்றிய பட்டாம்பூச்சியின் முதல் குறிப்பு இது. கண்காட்சி நிறைவடையும்வரை முடிந்தவரை தினமும் இங்கே எழுத முயற்சி செய்கிறேன். டிக்ஷனரியும் சமைத்துப் பாரும் 30 நாள்களில் ஆங்கிலம் பேசலாமும் பொன்னியின் செல்வமும் இல்லாத ஒரு புத்தக் கண்காட்சியை பிராங்ஃபர்டில் மட்டும்தான் நடத்தமுடியும். ஆனந்த விகடன் சுவர் முழுவதும் [...]


    http://blackinspire.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • [Continue reading...]

    காவல் கோட்டம் – ஓர் அனுபவம்

    - 0 comments


    "Good writers write the kind of history good historians can’t or don’t write." – Daniel Aaron சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலை நான் வாசித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலும், அதற்கு 2011 சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கும் இவ்வேளையில் அதைப் பற்றி எழுத முயல்வது பரிசுத்த‌மான‌ சந்தர்ப்பவாதமாகவே படுகிறது. ஆனாலும் இப்போதேனும் இந்த நாவல் குறித்த கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு அமைந்ததே என்றே எடுத்துக்கொள்கிறேன். காவல் கோட்டம் என்கிற [...]


    http://blackinspire.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • [Continue reading...]

    பட்டாம்பூச்சி க��றிப்புகள் 2 : அருந்ததி ராய் செய்தத��� சரியா?

    - 0 comments


    சமீபத்தில் வெளிவந்த உயிர்மை சிறப்பிதழில் அ. முத்துகிருஷ்ணன் கூடங்குளம் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தனி நூலாக வெளிவந்துள்ளது. புத்தகக் கண்காட்சியில் அவரைச் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தபோது, இரண்டு நாள்களில் தனது பிரசுரம் இரண்டாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். 'இருபதாயிரம் பிரதிகள் அச்சிட்டிருக்கிறோம். ஒருவரே பத்து, இருபது என்று வாங்கி சென்று விநியோகிக்கிறார்கள். பல இடங்களில் இருந்தும் தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு முக்கியப் பிரச்னை குறித்து ஏதோ என்னால் முடிந்த வரை விழிப்புணர்வு [...]


    http://blackinspire.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • [Continue reading...]

    கி. வீரமணியும் கிழக்கு பதிப்பகமு��் – 1

    - 0 comments


    ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் இருவரும் எழுதி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும், உடையும் இந்தியா நூல் பற்றிய கருத்து விவாதம் நேற்று பெரியார் திடலில்நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடக்கவிருக்கும் இந்தக் கருத்தரங்கின் இரண்டாவது அமர்வு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. அ.இராமசாமி, ந.க.மங்களமுருகேசன், அ.கருணானந்தன் ஆகியோருடன் கி. வீரமணியும் கலந்துகொண்டு நேற்று உரையாற்றினார்கள். அ. இராமசாமியின் உரையில் இருந்து சில பகுதிகள். இந்த ராஜீவ் மல்ஹோத்ரா இருக்கிறாரே, அவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அரவிந்தன் நீலகண்டன் கேம்ப்ரிட்ஜில் [...]


    http://blackinspire.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • [Continue reading...]

    கி. வீரமணியும் கிழக்கு பதிப்பகமு��் – 2

    - 0 comments


    உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? கருத்தரங்கின் முதல் அமர்வு ஒலிவடிவம் இங்கே. தலைமை தாங்கி உரையாற்றியவர் பேராசிரியர் அ. கருணானந்தன். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர். அவரது உரையில் இருந்து சில பகுதிகள். நூலாசிரியர்களுக்கு தமிழ்நாடு மற்றும் இந்திய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும்கூட தெரியவில்லை என்பது தெளிவாகிறது. கிறிஸ்தவத்தைப் பற்றி அவர்கள் குறிப்பிடும் செய்தியே இதற்கு அத்தாட்சி. ஐரோப்பாவின் வரலாறும் அமெரிக்காவின் வரலாறும் கிறிஸ்தவத்தின் வரலாறே என்று புத்தகம் ஓரிடத்தில் கூறுகிறது. அதுவா உண்மையா? [...]


    http://blackinspire.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • [Continue reading...]

    ஓப்பன் சோர்ஸ் – ஓர் எளிய அறிமுகம்

    - 0 comments


    தொலைக்காட்சி போல, கம்ப்யூட்டரும் எல்லோருடைய வீட்டிலும் இடம்பெற ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளின் படிப்புக்காக, வெளிநாடுகளில் இருப்பவர்களைத் தொடர்பு கொண்டு பேசுவதற்காக, வீட்டிலிருந்தபடியே பகுதி நேரப் பணிகள் செய்ய, பொழுதுபோக்குக்காக – இப்படி ஏதாவது ஒரு விதத்தில் கம்ப்யூட்டரும் ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. சரி, சில யதார்த்தமான கேள்விகள். @ நம் வீடுகளில் இருக்கும் கம்ப்யூட்டர்களில் உள்ள ஆபரேட்டிங் சிஸ்டம் என்னவாக இருக்கும்? # இதென்ன கேள்வி, விண்டோஸ்தான். @ அதை வாங்க எவ்வளவு காசு கொடுத்தீர்கள்? # [...]


    http://blackinspire.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • [Continue reading...]

    புதுக் காரின் வி���ை ரூ.3000!

    - 0 comments


    அந்த விளம்பரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் அந்த மனிதர்.அவரைப் போலவே அதைப் பார்த்தவர்கள் அனைவருமே   ஆச்சரியப்பட்டி ருப்பார்கள் என்று அவர் எண்ணினார். அச்சுப்பிழையாக இருக்குமோ என்றும், ஒரு வேளை இது வெறும் முட்டாளாக்கும் ஒரு வேலையோ என்றும் கூட எண்ணினார்.அப்படி என்ன இருந்தது அந்த விளம்பரத்தில்?

    "2011 ஆம் ஆண்டு மாடல் செவர்லே ஸ்பார்க் கார்.3000 கிலோ மீட்டர்களே ஓடியது.ஷோ ரூம்இல் இருப்பது போல் மெருகு குலையாத வண்டி,விற்பனைக்கு.விலை ரூ.3000. உடன் தொடர்பு கொள்ள –தொலை பேசி எண்—xxxxxxxx"

    இதுவே  அந்த விளம்பரம்.அவர் யோசித்தார்.பின் பேசித்தான் பார்ப் போமே    என்று தொலை பேசினார்.

    "ஹலோ!உங்கள் விளம்பரம் பார்த்தேன்.உண்மையிலேயே புது வண்டியா?"

    மறு முனையில் பெண்குரல்"ஆம்"

    "மூவாயிரம் கி.மி.தான் ஓடியிருக்கிறதா?

    "ஆம்"

    "விலை?"

    "அதுதான் விளம்பரத்தில் போட்டிருந்தேனே!ரூ.3000."

    "காரில் ஏதும் பிரச்சினையா?"

    "ஒன்றும் இல்லை.உண்மையில் நீங்கள் ஒருவர்தான் இதுவரை பேசியவர்.எல்லோரும் இது ஜோக் என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது."

    அவர் போய்ப் பார்த்தார் .ஓட்டிப் பார்த்தார்.பிடித்திருந்தது.3000 ரூபாயைக் கொடுத்தார். சாவியை வாங்கிக் கொண்டார்.

    பின் கேட்டார்"நீங்கள் இதை 3 லட்சத்துக்கு விற்றிருக்க முடியும்.ஏன் 3000க்கு விற்றீர்கள்?"

    அவள் சொன்னாள்"இது என் கணவரின் சென்ற பிறந்த நாளுக்கு நான் பரிசாகக் கொடுத்த கார்.போன மாதம் அவர் வேறு ஒரு பெண்ணோடு ஓடிப் போய் விட்டார்.நேற்று  டார்ஜீலிங்கில் இருந்து அவர் ஒரு தந்தி அனுப்பியிருந்தார்.கையில் பணமில்லாததால் காரை விற்றுப் பணம் அனுப்பச் சொல்லியிருந்தார்.காரை விற்று விட்டேன்.3000 அனுப்பி விடுவேன்!"

    இது தன் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள  அப்பெண் தேர்ந்தெடுத்த வழி.

    இவ்வாறு சிலர் செயலில்  தீர்த்துக் கொள்கிறார்கள்
                     சிலர் காத்திருத்தலைத் தேர்ந்தெடுக்கிறார்கள்
                     சிலர் பழிதீர்த்துத் தீர்த்துக்கொள்கிறார்கள்.
                     சிலர் சண்டை மூலம் முடிவு கட்டுகிறார்கள்.

    ஆனால் இவையெல்லாம் மேலும் பிரச்சினையைத்தான் உருவாக்கும்.

    பேசித் தீர்த்துக் கொள்வதே சிறந்த வழி.

    உண்மையாகப் பேசுங்கள்.நியாயமாகப் பேசுங்கள்.உணர்ந்து பேசுங்கள். நம்பிக்கையோடு பேசுங்கள்.தெளிவாகப் பேசுங்கள்.

    எல்லாம் சரியாகும்.



    http://famousstills.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

  • [Continue reading...]

    மட்டைப் பந்து அண���த்தலைவர் பற்றிய அதிர்ச்சித் தகவ���்!

    - 0 comments



    மேற்கிந்திய கிரிக்கெட் அணித்தலைவர்  டேரன் சாமி,ஆப்பிரிக்க இனத்தவரல்ல என்பதும் ,மாறாக அவர் ஒரு தமிழ் பிராமணர் என்பதும் அதிர்ச்சியான புதிய தகவல்கள்.இந்தியாவில் போட்டிகள் நடை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் அதிகாலை அவர் தங்கியிருந்த 5 நட்சத்திர ஓட்டலில் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்தபோது இந்த உண்மை வெளி வந்தது.(படம் பார்க்க).இதை வெளியிட்டது டுபாகூர் டைம்ஸ்.

    அவரது இயர்பெயர் முரளிதரன் சாமி என்பதாகும். இந்தப் பெயரை உச்சரிப்பது மேற்கில் உள்ளவர்களுக்குச் சிரமம் என்பதால் இதைச் சுருக்கி டேரன் சாமி என்று வைத்துக் கொண்டார்.அவர் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமிக்குத் தூரத்து உறவினராம்.

    அவர் சிறுவராக இருந்தபோது சென்னை மைலாப்பூரில் வசித்தார்.பின் பெரிய கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவுகளோடு  செயிண்ட் லூசியாவுக்குப் போனார்.

    பத்மா சேஷாத்ரி பள்ளி நாட்களில் அவரது உறவுக்காரச் சிறு
    வர்கள்,   கணிதத்திலும், விஞ்ஞானத்திலும்,கர்நாடக இசையிலும்   நேரத்தைச் செலவிட்டபோது,சாமி கிரிக்கெட்டிலேயே காலத்தைக் கழித்தார்.

    பின் தன் தாய்மாமா அம்பிமாமாவின் ஆதரவோடு,பெற்றோரை எதிர்த்துத் தன் விருப்பப்படி மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சென்றார்.அங்கு விரைவில் கிரிக்கெட்டில்  பெயர் வாங்கி அணித்தலைவராகவும் ஆகி விட்டார்!அம்பி மாமாவுக்கு வருத்தமெல்லாம்,தான் விரும்பியது போல் செஸ் வீரர் ஆகா விட்டாலும் ,வேகப் பந்து வீச்சுக்குப் பதில்,வெங்கட்,அஸ்வின் போல் சுழற் பந்து வீச்சாளராக விளங்கியிருக்கலாம் என்பதே.

    முன்னாள் நடுவண் அமைச்சர் மணிசங்கர ஐயர் இது பற்றிக் கூறும்போது,சாமி தன் பெயரோடு ஐயர் என்று சேர்த்து வைத்துக் கொண்டிருக்கலாம் எனச் சொன்னார்.

    நன்றி :அன்ரியல் டைம்ஸ்.(unreal times)



    http://famousstills.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

  • [Continue reading...]

    வெற்றி! வெற்றி! வ��ற்றி நமதே!!

    - 0 comments


    ஒரு அறிஞர் இருந்தார்.அவர் ஒரு நாள் நடந்து சென்று கொண்டி ருந்த  போது  அவர் எதிரே வந்த முரடன் ஒருவன் அவரைப் பார்த்து"நீ ஒரு முட்டாள்;போலி;உனக்கு எதுவும் தெரியாது.நீ யார் எல்லோருக்கும்  உபதேசம் செய்வதற்கு?" என்றெல்லாம் கடும் வார்த்தைகளால்  சாடினான்.

    அனைத்தையும் புன்முறுவலுடன் கேட்டுக்கொண்ட அறிஞர்"நீ ஒருவருக்கு ஒரு பரிசு கொடுக்கிறாய்.ஆனால் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அது யாருக்குச் சொந்தம்."எனக்கேட்டார்.

    எதிர்பாராத கேள்வியால் அதிர்ச்சியடைந்த அவன் "நான் வாங்கிய பரிசுஅது. எனக்குத்தான் சொந்தம்"என்றான்.

    "அது போல்தான் உன் கோபமும்.உன் கோபத்தினால் நான் காயப்பட வில்லையெனில் அந்தக்கோபம் உனக்கே திரும்பி வருகிறது.நீ காயப்படுகிறாய்.மகிழ்ச்சியற்றவனாகிறாய்.மற்றவரை நீ வெறுப்பதால் உனக்கு மகிழ்ச்சியில்லாமல் போகிறது.ஆனால் மற்றவர் மீது நீ அன்பு செலுத்தும்போது,அனைவரும்,நீ உட்பட, மகிழ்கிறார்கள்." என்றார் அறிஞர்.

    அவன் மனம் நெகிழ்ந்தான்."எனக்கு அன்பு வழியைக் காட்டுங்கள்.  இன்று முதல் நான் உங்கள் சீடன்" என்றான்.

    அறிஞர் சொன்னார்"விரும்புபவர்களுக்கு வழிகாட்டுவது என் கடமை." என்று சொல்லி உபதேசம் செய்தார்----------

    "நீ செய்வது சரியென்றால்,கோபப்பட அவசியமில்லை; தவறென்றால்  உனக்குக்  கோபப்பட  உரிமையில்லை"

    உற்றாரிடம்  பொறுமை என்பது அன்பு.
    மற்றாரிடம் பொறுமை என்பது   மரியாதை
    தன்னிடமே பொறுமை என்பது  பற்றுறுதி
    இறைவனிடம் பொறுமை என்பது விசுவாசம்.


    கடந்தகாலத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்காதே;அது கண்ணீரைத்தரும்.
    எதிர்காலம் பற்றி அதிகம் சிந்திக்காதே .அது பயம் தரும்.
    இந்த விநாடியை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்:அது உற்சாகம் தரும்.


    வாழ்க்கையில் வரும் ஒவ்வோரு சோதனையும் நம்மை செப்பனிடும் அல்லது சிதைத்து விடும்.
    ஒவ்வொரு பிரச்சினையும்,நம்மை உருவாக்கும் அல்லது உடைக்கும்.
    நாம் வெல்கிறோமா அல்லது வெல்லப் படுகிறோமா என்பது நம் கையில்தான் இருக்கிறது. 

    டிஸ்கி:இதற்கு என்ன இப்படி ஒரு தலைப்பு என்றா கேட்கிறீர்கள். சும்மா ஒரு செண்டிமெண்ட்தான் --சினிமாக்காரங்க மாதிரி!!



    http://famousstills.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

  • [Continue reading...]

    புத்தாண்டில் மக��ழ்ச்சியாக வாழ சில எளிய வழிகள்!

    - 0 comments


    மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது நம் கையில்தான் இருக்கிறது

    எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது?சில எளிய வழி முறைகள்!

    1)ஓய்வெடுப்பதற்காகவே வாழுங்கள்!

    2)உங்கள் படுக்கையை நேசியுங்கள்;அதுவே உங்கள் ஆலயம்!

    3)பகல் நேரத்தில் நன்றாக ஓய்வெடுங்கள்;இரவு நன்கு தூங்க அது உதவும்!

    4)பணி என்பது புனிதமானது;அதைத் தொடாதீர்கள்!

    5)எந்த வேலையையும் மற்றவர்கள் செய்ய வாய்ப்புக் கொடுங்கள்.அதைக் கண்டு ரசியுங்கள்!

    6)எந்த வேலையையும் நாளை செய்யலாம் என எண்ணாதீர்கள்; ஏனெனில் அதை நாளை மறுநாள் கூடச் செய்யலாம்!

    7)கவலையே வேண்டாம்.சும்மா இருந்ததால் யாரும் இறப்ப தில்லை. மாறாக,வேலை செய்யும்போது உங்களுக்கு ஏதாவது ஊறு நேரலாம்!  

    8)வேலை செய்ய வேண்டும் என்ற நினைப்பு வந்தால்,சிறிது அமருங்கள்;பொறுத்திருங்கள்.அந்த நினைப்பு அகன்று விடும்!

    9)மறவாதீர்கள்.வேலை செய்வது ஆரோக்கியம் தரும்.எனவே அதை உடல் நலமில்லாதவர்கள் செய்யட்டும்.அவர்கள் ஆரோக்கியமடைவார்கள்!

    இந்தப் புத்தாண்டில் மகிழ்ச்சியாக வாழுங்கள்!!

    be happy!



    http://famousstills.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

  • [Continue reading...]

    ஆருத்ரா தரிசனம்.

    - 0 comments





    மார்கழியின் மற்றொரு இனிய அங்கம்,திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக் கப்படும்,சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள். "கர்மாவே பெரிது, கடவுள் இல்லை" என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை.

    அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

    அன்று,சிதம்பரத்தில் மிக விசேஷமான அபிஷேக ஆராதனைகள் செய்யப் படும் (கேட்டதுதான்.பார்த்ததில்லை)எங்கள் வீடுகளில் செய்யப்படும் களியும் ஏழு கறிக்கூட்டும் மிகவும் சுவையானவை. ஏழை பக்தரான சேந்தனார் அளித்த களியை சிவன் ஆவலோடு ஏற்றுக் கொண்டதிலிருந்து திருவாதிரை தினத்தில் களி முக்கிய நைவேத்தியம் ஆனது. இனிப்பான களியையும், உப்பு,காரம் நிறைந்த கூட்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது –சுகம்!
    செய்முறை தெரிய வேண்டுமா?ஜெயஸ்ரீயைத் தவிர வேறு யாரைக் கேட்க முடியும்?

    இன்று திருவாதிரை.தில்லை நடராஜரை வணங்கி எல்லா நலமும் பெறுவோம்.

    டிஸ்கி:இன்று  நானே களியும் கூட்டும் செய்தேன் ---ஆசான் J.G யின் வழிகாட்டுதலின் படி..பிரமாதமாக இருந்தது.


    http://famousstills.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

  • [Continue reading...]

    கடவுளுக்கே அடைய���ளம் தெரியவில்லை!

    - 0 comments


    ஒரு 50 வயதுப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள்.அறுவைச் சிகிச்சைக்கு முன் ஒரு மயக்க நிலையில் கடவுளைக் கண்டாள்.

    அவள் கேட்டாள்"கடவுளே! நான் சாகப் போகிறேனா?"

    கடவுள் சொன்னார்."இல்லை!உனக்கு இன்னும் 30 ஆண்டுகள் 6 மாதங்கள்,18 நாட்கள் வாழ்க்கை இருக்கிறது."

    அறுவைச் சிகிச்சை நடந்து அவள் சுகமடைந்தாள்.

    அவள் யோசித்தாள்"இன்னும்30 ஆண்டுகள் வாழ்க்கை இருக்கிறது. அதை அனுபவிப்போம்"

    உடல் பூரண குணமான பின் அவள் மருத்துவ மனையில் இளமைத் தோற்றத்துக்கு வேண்டிய பல சிகிச்சைகளைச் செய்து கொண்டு,ஒரு இளம் பெண் போலத் தோற்றம் மாறினாள்.அழகு நிலையம் சென்று பல ஒப்பனைகள் செய்து கொண்டாள்.அங்கிருந்து வெளியே வந்து சாலையைக்  கடக்கும்போது ஒரு காரில் அடிபட்டு இறந்தாள்.

     இறந்த பின் கடவுளைப் பார்த்ததும் கேட்டாள்"இன்னும் 30 ஆண்டுகள் இருக்கிறது எனச் சொன்னீர்களே!பின் ஏன் இப்படி?

    கடவுள் என்ன சொன்னார்?!

    ;;;;;;;
    ;;;;;;;
    ;;;;;;;
    ;;;;;;;
    ;;;;;;;

    "உன்னை எனக்கு அடையாளம் தெரியவில்லை!"

    நீதி:  நீங்கள் நீங்களாகவே இருங்கள்!

    டிஸ்கி-1.
    இன்று முதல் ஏழு நாட்களுக்கு வலைச்சரப் பொறுப்பேற்றிருப்பதால், இங்கு பதிவிட இயலாத நிலையில் உள்ளேன்,

    அங்கு வாருங்களேன்,சந்திக்கலாம்!

    டிஸ்கி 2:நேரம் கிடைத்தால் இங்கும் பதிவிடுவேன்!
     



    http://famousstills.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

  • [Continue reading...]

    ஈழத் தமிழர் பிரச���னையின் போது அன்��ுமணியின் பதவிக்���ாக கூட்டணியை வி��்டு வெளியேறவில்���ை

    - 0 comments


    தமிழ், தமிழர் என்று பேசிக் கொண்டு எங்கு தனது தோட்டம், அலுவலகம், மக்கள் டிவி ஆகியவற்றில் மலையாளிகளுக்கும், தெலுங்கர்களுக்கும்தான் வேலை கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஏற்காட்டில் மாமியார் பெயரில் 550 ஏக்கர் தோட்டம், 40 கோடியில் தங்கை பெயரில் மாளிகை, சென்னையில் அக்கா பெயரில் சொத்துகள் என்று வாங்கிக் குவித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார் பண்ருட்டி வேல்முருகன்.

    விழுப்புரத்தில் நடந்த இளம்புயல் பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு வேல்முருகன் பேசுகையில் டாக்டர் ராமதாஸை கடுமையாக சாடிப் பேசினார். தமிழ், தமிழர் என்று வசனம் பேசிக் கொண்டு மலையாளிகளையும், தெலுங்கர்களையும்தான் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பம் ஆதரித்து, வாழ வைத்துக் கொண்டிருப்பதாக அப்போது குற்றம் சாட்டினார் வேல்முருகன்.

    அவர் பேசுகையில்,

    பாமகவின் வளர்ச்சிக்கு 21 பேர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களில் 20 பேர் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அந்த குடும்பங்கள் வாழ வழியின்றி தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்றபோது, நான் என்ன கொட்டியா வைத்திருக்கிறேன், ஏன் நாயைப்போல் சுற்றி சுற்றி வருகிறீர்கள் என்றார்.

    உங்கள் மகன் மந்திரியாக, உறவினர்கள் எம்.எல்.ஏ.க்களாக உயிரை இழந்த இந்த மக்களுக்கு ஏதாவது செய்ததுண்டா, உங்களால் அமைச்சராக்கப்பட்டவர்களால் இந்த மக்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு வழங்கியதுண்டா. அவரது எடுபிடிகள், நண்பர்கள், அன்புமணி ஆகியோர் அமைச்சர்களாவதற்கு தியாகம் செய்த தியாகிகளுக்கும், சமூகத்தினருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. அவர்களது, பினாமிகளை அமைச்சர்களாக்கி சம்பாதித்தனர்

    பேராசிரியர் தீரன் 1996-ல் சட்டப்பேரவையில் வாதாடி அந்த குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும், மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகையும் பெற்றுத்தந்தார். பின்னால் வந்த அரசு அதை நிறுத்தியபோது இவர்கள் கேட்டதுண்டா. நாங்கள் போராட முயன்றதை ராமதாஸ் தடுத்தார். நாங்கள் அண்டா, குண்டாவை வைத்து, காணி நிலங்களை விற்று, கல்வி அறக்கட்டளையை உருவாக்கினோம்.

    இந்த சமுதாயத்தில் எத்தனையோ தியாகிகள் இருக்கும்போது, அந்த கல்வி நிறுவனத்திற்கு உங்கள் மனைவி சரஸ்வதி பெயரை வைத்தது ஏன். நீங்கள் நடத்தும் தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர் உண்டா. ஏன் ஒரு தமிழ்நாட்டு தமிழன் கூட இல்லையே

    மக்கள் டிவியிலும் அவர்கள் குடும்பத்தினரே உள்ளனர். மலையாளி, தெலுங்கர்கள் தான் நிர்வாகிகளாக, ஆசிரியர்களாக உள்ளனர். தைலாபுரம் பயிற்சி பட்டறை இயக்குனரும் மலையாளிதான். வாயில்லா பூச்சிகள் தான் அவரிடம் உள்ளனர்

    வன்னியர்களிடம் நிதி திரட்டி கட்டிய பல்கலை., யில் யாருக்காவது வேலை கொடுத்தாரா. அவர் குடும்பத்தினர் டிரஸ்ட் நிர்வாகிகளாக உள்ளனர். வெளிநபராக இருந்த கோவிந்தசாமியும் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

    ஏற்காட்டில் மாமியார் பெயரில் 550 ஏக்கர் தோட்டம், 40 கோடியில் தங்கை பெயரில் மாளிகை, சென்னையில் அக்கா பெயரில் சொத்துகள் உள்ளன.

    தியாகிகளுக்கு 10 லட்சத்தில் வீடு கட்டச் சொன்னேன், கல்லூரிக்கு அவர்கள் பெயரை வைக்க கேள்வி கேட்டேன். பதில் கூறவில்லை. கோடிகள் வந்தது குறித்த புள்ளி விபரங்கள் என்னிடம் உள்ளது. லாபத்திற்காக கட்சி நடத்துகின்றார்.

    இந்த தேர்தலுக்கு கூட கருணாநிதியிடம் ராமதாஸ் குடும்பத்தினர் பெட்டி வாங்கியுள்ளனர். திண்டிவனம் வழக்கில் சி.பி.ஐ., உண்மை கொலையாளிகளை விசாரிக்க வேண்டும்

    டாஸ்மாக், ரிலையன்ஸ் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம், பின்னர் பெட்டி வாங்கிக் கொண்டு முடித்துக் கொள்வது. பவர் கார்ப்பரேஷனிடம் கோடிகளை வாங்கிக் கொண்டு ராமதாஸ் போராட்டத்தைப் பின் வாங்கினார்.

    ஈழத் தமிழர் பிரச்னையின் போது அன்புமணியின் பதவிக்காக கூட்டணியை விட்டு வெளியேறவில்லை. அதை நான் சுட்டிக் காட்டியதை ராமதாஸ் ஏற்கவில்லை என்றார் வேல்முருகன்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • [Continue reading...]

    உச்சிதனை முகர்ந��தால் ஓர் ஐரோப்பிய அவதானிப்பு...

    - 0 comments


    உச்சிதனை முகர்ந்தால் அனைவரும் வரவேற்க வேண்டிய நல்லதோர் முயற்சி!

    இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் உச்சிதனை முகர்ந்தால் தற்போது ஐரோப்பாவின் பல நாடுகளிலும் ஈழத் தமிழ் உணர்வாளர்களால் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தை நேற்று கேர்னிங் திரையரங்கில் பார்த்த பின்னர் எழுதப்படும் பக்கச்சார்பற்ற அவதானிப்புக்கள் இவையாகும்..

    பாராட்டப்பட வேண்டிய விடயங்கள்..

    01. இப்படியொரு முயற்சிக்குள் புகழேந்தி தங்கராஜ் துணிச்சலோடு இறங்கியிருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும்.

    02. தொடக்கத்தில் இருந்து முடிவுவரை (இரண்டொரு இடத்தைத் தவிர) கதைக்கோர்வை மிக நேர்த்தியாக நகர்கிறது.

    03. திரைக்கதை எழுத்தாளராக இல்லாவிட்டாலும், தமிழருவி மணியன் உரையாடலை பிரச்சார நெடி இன்றி மிகச்சிறப்பாக எழுதியுள்ளார்.

    04. இரண்டு பாடல்கள் அழகாக அமைந்துள்ளன, இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் கவிஞர் காசி. ஆனந்தன் இருவரும் மனதில் மகிழ்வோடு வருகிறார்கள்.

    05. சத்தியராஜ், சங்கீதா, சீமான், நாசர், பெண் வைத்தியர், புனிதவதி ஆகிய பாத்திரங்களை சிதைவடையாது அளவோடு பாவித்துள்ளார். அனைவருமே மிகச்சிறப்பாக நடித்துள்ளனர்.

    06. திருநங்கையர், ஆட்டோ சாரதி என்று ஏழை மக்களின் உதவும் நல்ல மன இயல்புகளை வெளிக்காட்டியுள்ளார்.

    07. இந்திய சென்சார் சட்டங்களுக்குள்ளால்தான் கதையை நகர்த்த வேண்டும் என்பதைப் புரிந்தால் அவருடைய கதைத் தேர்வு அறிவு பூர்வமானதாக உள்ளது.

    08. இடைவேளை வரை பார்வையாளரின் கண்களில் பல தடவைகள் கண்ணீரை வரவழைப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.

    09. புனிதவதி பாத்திரத்தில் தமிழகத்தின் சிறுமி ஒருத்தியை ஈழப் பெண் போலவே காட்டி வெற்றி பெற்றுள்ளார்.

    10. போராளிகளுடன் சிறுமிக்கு வரும் பாடல் நன்றாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

    மேலதிக சிறப்புக்கள்:

    11. கதாபாத்திரமான புனிதவதி போலீஸ் நிலையத்தில் இந்திய குடியரசு சின்னப் பொம்மையை ஏதோ விளையாட்டு பொருள் என்று எடுக்க, குறுக்கிட்ட சத்தியராஜ் ஐயையோ இது விளையாட்டு சின்னமல்ல என்று அதனுடைய அபாயமான பின்னணியை சொல்லிவிடுகிறார். இந்தியாவை அடையாளம் காட்ட இது போதும்.

    12. அமுதன் என்ற நாய்க்கு இருக்கும் மனித நேயம்கூட இல்லாமல் சிலர் வாழ்கிறார்களே என்ற சத்தியராஜ் வேதனை பலருக்கு அடியாக இறங்குகிறது.

    13. சிங்கள இராணுவம் குழு முறை பாலியலில் ஈடுபடும் காடையர் கூட்டம் என்று திரைப்படம் கூறியது பழைய செய்தி, ஆனால் அவர்களில் எயிட்ஸ் நோயை பரப்பும் கிருமிகளும் கலந்துள்ளதாக தெரிவிப்பது பிரச்சார உலகிற்கு புதிய செய்தியாகும்.

    14. சீமான் போன்றவர்கள் இருந்தால் தமிழ் நாட்டு போலீஸ்கூட நாகரிக மனிதர்களாக மாறும் என்ற செய்தி சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது.

    15. திருநங்கைகளை சரியான முறையில் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.

    படத்தில் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள்.

    தற்போது புகழேந்தியின் திரைப்படம் அரைப்பங்கு திரையரங்கை நிறைக்குமளவுக்கு வளர்ந்துள்ளது. அவருடைய முன்னைய காற்றுக்கென்ன வேலி திரைப்படத்துடன் ஒப்பிட்டால் இன்றைய வளர்ச்சி பல மடங்கு உயர்ந்துள்ளது. அவருடைய அடுத்த திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் பின்வரும் கருத்துக்கள் நட்புடன் முன்வைக்கப்படுகின்றன.

    01. திரைப்படத்தைத் தயாரிக்கும்போது ஏற்பட்ட நிதித் தட்டுப்பாடு காரணமாக பல இடங்களில் சமரசம் காண வேண்டி நேர்ந்துள்ளது. ஆனால் திரைப்படம் பார்க்க வரும் ரசிகனுடன் நாம் அந்த சமரசத்தை பேச முடியாது. 100 கோடியில் தயாராகும் தமிழ்ப்படத்திற்கு கொடுக்கும் கட்டணத்தையே அவன் இலட்சங்களில் தயாராகும் படங்களுக்கும் கொடுக்கிறான். எனவே தயாரிப்பில் சமரசம் காணாதிருக்க மேலும் அதிக முதலீடு செய்து தொழில் நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்.

    02. திரைப்படத்தின் வர்ணம் சரியாக பொருந்தவில்லை. அதற்கான டிஜிற்றல் இமேஜ் செய்ய நிதி கைகொடுக்கவில்லை. அதனால் மிகச்சாதாரண தொடர் நாடக தரத்திற்கு படத்தின் அவுட்புட் வந்துவிடுகிறது. (உதாரணம்: குண்டு வீச்சு விமானக் கிளிப்)

    03. கிராபிக்ஸ் பொருந்தி வரவில்லை, உதாரணம்: தீ காட்சிகள். பிரேம் கோபாலின் பாடலின் பிற்சேர்க்கையின் லைற்றிங் பொருந்தவில்லை. மேலும் சிறந்த நடனக்காரராக இருந்தாலும், பிறேம்கோபாலின் பாடல் பொருத்தமில்லாத இடத்தில் வருகிறது. கதை கிளைமாக்சிற்குள் போன பின்பு ஒரு பாடல் தேவையற்றது.

    04. இடைவேளைவரை சிறப்பாக வந்த திரைப்படம் சங்கீதாவின் தாய் வில்லியாக வந்து புகுந்ததும் உறொட்டி பாய்ந்து, தொடர் நாடகம் போல ஆகப் பார்க்கிறது. அந்த இடத்தில் மெல்ல சரிந்த திரைக்கதை மறுபடியும் இறுதிவரை எழுந்து நிற்கமுடியாதளவுக்கு சிரமப்படுகிறது. அதை கிளைமாக்சிலும் நிமிர்த்த முடியவில்லை.

    05. திரைப்படத்தின் ரீ ரிக்காடிங்கில் பின்னணி இசை மாஸ்ரரைஸ் பண்ணப்படாமல் எகிறிக் குதித்து குழப்புகிறது. சாதாரண கீ போட்டில் சீரியலுக்குக் கொடுக்கும் பின்னணி இசை திரைப் படத்தின் பின்னணி இசையாக வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது..

    06. முதலில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி ரசிகனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பின்னர் அவள் கர்ப்பிணியாக இருப்பது பேரதிர்ச்சியாகிறது, இடைவேளை யின்போது அவளுக்கு எயிட்ஸ் என்ற செய்தி அடுத்த அதிர்ச்சியாகி ரசிகனை அதி உச்சக்கட்டத்திற்கு கொண்டு போய்விடுகிறது. அதற்குப் பிறகு படத்தை உச்சத்திற்கு கொண்டு செல்ல இடமில்லாமல் போக, கதைக்கான விறுவிறுப்புப் பற்றாக்குறை ஆரம்பிக்கிறது.

    07. கதையை நல்லபடியாக நகர்த்திவந்த தமிழருவி மணியன் எயிட்ஸ் வந்தவுடன் தமிழ் நாட்டுக்கான எயிட்ஸ் பிரச்சாரத்தில் இறங்கிவிடுகிறார். அந்த இடைவெளியில் சிங்கள பேரினவாதம் வசதியாக தப்பித்து ஓடிவிடுகிறது. ரசிகனுடைய கவனம் சிதறடிக்கப்பட்டு எயிட்ஸ் நோய்க்குள் வசமாக சிக்குப்பட்டுவிடுகிறது. கடைசியில் புனிதவதியை எயிட்ஸ் கொல்லுகிறபோது அவளை கர்ப்பமாக்கிய சிங்களக் காடையர்களை ரசிகன் அடியோடு மறந்துவிடுகிறான். படத்தின் பிரதான பிரச்சனை எயிட்சாக மாறி படம் முடிகிறது.

    படத்தைப் பார்க்கும்போது உள்ளத்தை உறுத்தும் கேள்விகள்:

    01. சிறுமியை காப்பாற்றும் நடேசன் இந்திய சட்டங்களின்படி சிறை செல்கிறார். அதே சிறுமியை எயிட்சுக்கு உள்ளாக்கிய கொடியவர்களுக்கு இந்திய சட்டம் என்ன தண்டனை கொடுக்கிறது..?

    02. இறந்துபோன புனிதவதி பெற்ற எயிட்ஸ் சிறுமியுடன் வீடு திரும்புகிறாள் சங்கீதா அவளுடைய குழந்தையை இந்திய சட்டம் என்ன செய்யப்போகிறது.. ?

    03. ஈழத் தமிழன் படும் அவலத்தைப் பாருங்கள்… இதைக்கேட்க நாதியில்லையா..? என்ற அவலத்துடன் படம் முடிகிறது. ஆனால் ஒரு கதையை பதிவு செய்யும்போது அதற்கு ஒரு நல்ல முடிவு இருக்க வேண்டும். இதற்கு என்ன பதிலடி என்ற ரசிகனின் கேள்விக்கான பதிலை தரவில்லையே என்ற ஆதங்கம் வருகிறது.

    04. படம் முடியும்போது திரையரங்கில் இருந்து யாரோ ஒரு ரசிகர் மனதுக்குக் கஷ்டமாக இருப்பதாக சொன்னது காதில் கேட்டது. உணர்ச்சியும், உணர்ச்சிக்கவியும், கண்ணீருமல்ல, அறிவார்ந்த ஒரு பதிலுடன் கதை முடிந்திருந்தால் அந்த ரசிகரின் குரல் சங்கடப்பட்டிருக்காது. அந்த ரசிகரின் குரலே திரைப்படத்திற்கான சரியான பொது மக்கள் விமர்சனமாகும்.

    இப்படியான மனதுக்குக் கஷ்டமானநிலையில் முடிவடையும் திரைப்படங்களுக்கு பல நல்ல முடிவுகளை ஏற்கெனவே பல இயக்குநர்கள் வைத்துள்ளார்கள்.

    அ.) கதை முடிவில் பொறுக்க முடியாத ஒரு சிறுவன் வீதியில் கிடக்கும் கல்லை எடுத்து அதிகார வர்க்கத்தின் சன்னலில் எறிந்து அதை உடைப்பான்.

    ஆ.) நிலத்தின் அடியில் இருந்து இறந்துபோன போராளி ஒருவனுடைய கை வெளியே வரும்..

    இ.) ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை வெளியிட்ட பத்திரிகை ஒன்றை நடேசன் படிப்பது போன்ற காட்சியுடனாவது படத்தை முடித்திருக்கலாம். அதை விடுத்து, ஒரு மனித நேயமுள்ளவனை சிறையில் தள்ளி, ஓர் அபலைச் சிறுமியை கொன்று அனுதாபம் தேட வேண்டிய தேவை இல்லை.

    இந்திய குற்றவாளியும், சிங்கள குற்றவாளியும் உலக மன்றில் தப்பித்துப் போக தமிழன் மானமிழந்து கண்ணீருடன் கையேந்தி நிற்கக்கூடாது.

    தமிழன் தன்மானத்தை நாய்களுக்கு பயந்து எந்த இடத்திலும் கைவிட்டுவிடக் கூடாது. அடுத்த திரைப்படம் தமிழன் விடுதலைக்கான அறிவுப் பொறியை கிளப்ப வேண்டும். சகோதரர் புகழேந்தி தங்கராஜ் அவர்களாலும், தமிழருவி மணியனாலும் அது முடியும்.

    இதையெல்லாம் சொல்லத் துடிக்கிறது மனது..

    மாறாக…

    மற்றவர்கள் ஒன்றுமே செய்யாதிருக்க புகழேந்தி தங்கராஜ் இதையாவது செய்திருக்கிறாரே என்பதை நினைத்தால், அவருக்கு மரியாதை செலுத்த தலையில் உள்ள தொப்பியை கழற்ற வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை.

    மனதார பாராட்டுக்கிறோம்…

    உச்சிதனை முகர்ந்தால் அனைவரும் வரவேற்க வேண்டிய நல்லதோர் முயற்சி!

    அலைகள் திரைப்பட விமர்சனப் பிரிவு: 09.01.2012


    http://tamil-cininews.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • [Continue reading...]

    கொலன்ட் நாட்டில�� நடைபெற்ற கேணல் ��ிட்டு உட்பட 10 வேங்கைகளின் 19ம் ஆண்��ு நினைவு வணக்க ந��கழ்வு (படங்கள் இ��ைப்பு)

    - 0 comments


    கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின், 19 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, நேற்று கொலன்ட் நாட்டின் றுர்மொன்ட் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

    கப்டன் வின்ஸ்டனின் சகோதரி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ஈகைச்சுடரினை கப்டன் கம்பனின் தாயார் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு மக்களால் சுடர் வணக்கமும், மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.

    தமிழமுதம் இசைக்குழுவினரின் எழுச்சி கானங்கள், கவிதாஞ்சலி என்பன இடம்பெற்றதை அடுத்து தேசியக்கொடி இறக்கப்பட்டு தேச உணர்வோடும், நாங்கள் தமிழர்கள் என்ற இனமான உணர்வோடும் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தமது வழிகாட்டிகளுக்கும், மாவீரர்களுக்கும் இந்நாளில் வணக்கம் செய்திருந்தனர்.







    http://tamil-cininews.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • [Continue reading...]

    உலகை உலுக்க வரும��� வன்னிக்காடு!

    - 0 comments


    சீமான் நடித்த 'மகிழ்ச்சி' படத்தை இயக்கியவர் கௌதமன். இவர் இந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பு "சினிமாவுக்குப் போன சித்தாளு" என்ற ஜெயகாந்தனின் குறுநாவலை டெலிஃபிலிமாக எடுத்தவர்.

    இந்த முயற்சிகளின் மூலம் வெளிச்சத்துக்கு வராத வ.கௌதமன் மக்கள் தொலைகாட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் "சந்தணக்காடு" மெகா தொலைகாட்சித் தொடரின் மூலம் புகழ் பெற்றார். சந்தண வீரப்பனின் வாழ்க்கையை இந்தத் தொடரில் அவர் மிகநேர்மையாகவும் துணிச்சலாகவும், காட்சிபடுத்தி வந்தார். தொலைக்காட்சிக்கு முன் தணிக்கை இல்லாத காரணத்தால் பல உண்மைகளை மறைக்காமல் இந்த சந்தணக்காடு தொடர் ஒளிபரப்பானது.

    இந்நிலையில் ஈழமக்களின் விடுதலையில் அக்ககறை கொண்ட உணர்வாளராக, இவர் மக்கள் போராட்ட மேடைகளிலும் பிரபமாகி வருகிறார். இதனால் இவரிடம், "சந்தணக்காடு தொடரைப் போலவே, ஈழவிடுதலை வரலாற்றை வன்னிக்காடு என்ற தலைப்பில் ஏன் மக்கள் தொலைகாட்சிக்கு தயாரிக்கக் கூடாது" என்று நண்பர் கேட்க, ஏற்கனவே உணர்வாளராக இருக்கும் கௌதமன் இதை கற்பூரமாக பிடித்துக் கொண்டு விட்டார்.

    தற்போது "வன்னிக்காடு" மெகா தொலக்காட்சித் தொடருக்கான திரைக்கதை மும்முரமாக எழுதிவருகிறேன். விரைவில் மக்கள் தொலக்காட்சி வன்னிகாட்டை தொடங்க இருகிறோம். இது மாபெரும் மக்கள் வரலாறாக இருக்கும். கோவை சத்தியமங்கலம் பகுதியையே வன்னிக்காடு தொடருக்கும் கதைக்களமாக பயன்படுத்த இருகிறேன். கொழும்பு, மற்றும் யாழ் நகர்களை கோவா மற்றும் மங்களூர் பாண்டிச்சேரி ஆகிய நகரங்களை வைத்து மேச் செய்ய இருகிறோம். திருநெல்வேலி மாவட்டம் கிளிநொச்சிக்கு அப்படியே பொருந்தும். வன்னிக்காடு தமிழனின் வீரவரலாறாக இருக்கும். ஈழத்தை விரைவில் தமிழினம் வெல்லும்" என உணர்ச்சி பொங்க நம்மிடம் கூறினார் கௌதமன்.

    தமிழ் மீடியா


    http://tamil-cininews.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • [Continue reading...]

    இலங்கையரசு வரலா��்று பிழை இழைத்துள்ளது!: உலகத் தமி��ர் பேரவை

    - 0 comments


    தென்னாபிரிக்கா ஆளும் கடசியின் அழைப்பையடுத்து உலகத் தமிழர் பேரவையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தென்னாபிரிக்கா சென்றடைந்துள்ளனர்.

    கறுப்பின மக்களின் விடுதலைக்காக ஏறத்தாழ 100 வருடகாலமாக போராடி, கடந்த 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உலகத் தமிழர் பேரவையை அழைத்தமையானது சர்வதேச சிறப்பும் வரலாற்றும் சிறப்பும் மிக்கதென்கிறார் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேந்திரன்.

    தென்னாபிரிக்கா அரசின் ஆளும் கட்சியான தேசிய காங்கிரஸ் கட்சியானது தமிழ் மக்களுடன் நீண்ட கால உறவைப் பேணி வருகின்றது எனவும் குறிப்பாக விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தி விடுதலைக்காய் போராடிய காலம் தொட்டே தமிழ் மக்களுடன் தனது உறவைப் பேணி வருகிறதென உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுடடிக்காட்டியுள்ளார்.

    ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி நூற்றாண்டு விழாவில் இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

    தமிழர்கள் என்பதன் அடிப்படையில் கூட்டமைப்புடன் உலகத்தமிழர் பேரவை நலலுறவைப் பேணுகின்றதென உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

    ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழாவை இலங்கை புறக்கணித்தது தொடர்பில் தமிழ்வின் வினாவிய போது,

    அது இலங்கை அரசாங்கம் செய்த சரித்திர பிழையென தெரிவித்த சுரேந்திரன் தமிழர்க்ள சோர்ந்து விடாமல் சர்வதேச உறவினை பலப்படுத்தி தமிழர்களின் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தி விடுதலைக்காக போராட திட சங்கற்பம் பூண வேண்டுமென உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • [Continue reading...]

    போர்க்குற்றவாளி ராஜபக்சே உறவினர��� மீது தாக்குதல்: இராமேஸ்வரத்தில் பரபரப்பு

    - 0 comments


    போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் உறவினர் நடேசன் குமரன், இராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது சில அமைப்புகளால் தாக்கப்பட்டுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் சகோதரி கணவர் நடேசன் குமரன். இவர் இராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு அடிக்கடி வந்து தரிசனம் செய்வது வழக்கம். தற்போது அவருடைய வருகையை தெரிந்துகொண்ட சில அமைப்பினர், அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து நடேசன் குமரன் யாகம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது, அவரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். நடேசன் குமரனை வெளியேற்றுமாறு சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • [Continue reading...]

    மகிந்த பதவி விலக���வார் என்று கூறி�� இந்திய தொலைக்காட்சியை இலங்கையி��் பார்வையிட தடை: ���ங்கில ஊடகம்

    - 0 comments


    மகிந்த ராஜபக்ஸ 2012ம் ஆண்டில் தனது பதவியை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று சோதிடக் கணிப்பை வெளியிட்ட, இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றின் ஒளிபரப்பை இலங்கையில் பார்வையிட அரசாங்கம் தடை செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி இரவு, 2012ம் ஆண்டில் இந்திய அரசியல்வாதிகளின் நிலை தொடர்பாக எதிர்வு கூறும் சோதிடக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்தியாவின் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது.

    தமிழ்நாட்டில் பிரபலமான ஆறு சோதிடர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், இந்தியாவின் அயலில் உள்ள ஆறு நாடுகளின் நிலைமைகள் குறித்தும் தமது எதிர்வு கூறல்களை வெளியிட்டனர்.

    குறிப்பாக இலங்கையைப் பற்றிக் கருத்து வெளியிட்ட ஒரு சோதிடர், மகிந்த ராஜபக்ஸ 2012ம் ஆண்டு இறுதிக்குள் தனது பதவியை விட்டு, அரசியலை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அவரது இந்தக் கருத்தை நிகழ்வில் பங்கேற்ற ஏனைய சோதிடர்களும் ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி இலங்கையில் டயலொக் இணைப்பு மூலம் ஒளிபரப்பாகியிருந்தது.

    இந்நிகழ்ச்சி பற்றி கேள்வியுற்ற மகிந்த ராஜபக்ஸ. தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுச பல்பிட்டவை அழைத்து, கண்டித்துள்ளதுடன் மீ்ண்டும் இந்த நிகழ்ச்சி மறுஒளிபரப்பாவதை தடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து, குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் இலங்கையில் அந்த தொலைக்காட்சி அலைவரிசையின் இணைப்பைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

    2012ல் மகிந்தர் ஆட்சியை இழப்பார்! விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி (காணொளி இணைப்பு)


    http://tamil-cininews.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger