Tuesday, 10 January 2012

மட்டைப் பந்து அண���த்தலைவர் பற்றிய அதிர்ச்சித் தகவ���்!




மேற்கிந்திய கிரிக்கெட் அணித்தலைவர்  டேரன் சாமி,ஆப்பிரிக்க இனத்தவரல்ல என்பதும் ,மாறாக அவர் ஒரு தமிழ் பிராமணர் என்பதும் அதிர்ச்சியான புதிய தகவல்கள்.இந்தியாவில் போட்டிகள் நடை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் அதிகாலை அவர் தங்கியிருந்த 5 நட்சத்திர ஓட்டலில் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்தபோது இந்த உண்மை வெளி வந்தது.(படம் பார்க்க).இதை வெளியிட்டது டுபாகூர் டைம்ஸ்.

அவரது இயர்பெயர் முரளிதரன் சாமி என்பதாகும். இந்தப் பெயரை உச்சரிப்பது மேற்கில் உள்ளவர்களுக்குச் சிரமம் என்பதால் இதைச் சுருக்கி டேரன் சாமி என்று வைத்துக் கொண்டார்.அவர் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமிக்குத் தூரத்து உறவினராம்.

அவர் சிறுவராக இருந்தபோது சென்னை மைலாப்பூரில் வசித்தார்.பின் பெரிய கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவுகளோடு  செயிண்ட் லூசியாவுக்குப் போனார்.

பத்மா சேஷாத்ரி பள்ளி நாட்களில் அவரது உறவுக்காரச் சிறு
வர்கள்,   கணிதத்திலும், விஞ்ஞானத்திலும்,கர்நாடக இசையிலும்   நேரத்தைச் செலவிட்டபோது,சாமி கிரிக்கெட்டிலேயே காலத்தைக் கழித்தார்.

பின் தன் தாய்மாமா அம்பிமாமாவின் ஆதரவோடு,பெற்றோரை எதிர்த்துத் தன் விருப்பப்படி மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சென்றார்.அங்கு விரைவில் கிரிக்கெட்டில்  பெயர் வாங்கி அணித்தலைவராகவும் ஆகி விட்டார்!அம்பி மாமாவுக்கு வருத்தமெல்லாம்,தான் விரும்பியது போல் செஸ் வீரர் ஆகா விட்டாலும் ,வேகப் பந்து வீச்சுக்குப் பதில்,வெங்கட்,அஸ்வின் போல் சுழற் பந்து வீச்சாளராக விளங்கியிருக்கலாம் என்பதே.

முன்னாள் நடுவண் அமைச்சர் மணிசங்கர ஐயர் இது பற்றிக் கூறும்போது,சாமி தன் பெயரோடு ஐயர் என்று சேர்த்து வைத்துக் கொண்டிருக்கலாம் எனச் சொன்னார்.

நன்றி :அன்ரியல் டைம்ஸ்.(unreal times)



http://famousstills.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger