அந்த விளம்பரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் அந்த மனிதர்.அவரைப் போலவே அதைப் பார்த்தவர்கள் அனைவருமே ஆச்சரியப்பட்டி ருப்பார்கள் என்று அவர் எண்ணினார். அச்சுப்பிழையாக இருக்குமோ என்றும், ஒரு வேளை இது வெறும் முட்டாளாக்கும் ஒரு வேலையோ என்றும் கூட எண்ணினார்.அப்படி என்ன இருந்தது அந்த விளம்பரத்தில்?
"2011 ஆம் ஆண்டு மாடல் செவர்லே ஸ்பார்க் கார்.3000 கிலோ மீட்டர்களே ஓடியது.ஷோ ரூம்இல் இருப்பது போல் மெருகு குலையாத வண்டி,விற்பனைக்கு.விலை ரூ.3000. உடன் தொடர்பு கொள்ள –தொலை பேசி எண்—xxxxxxxx"
இதுவே அந்த விளம்பரம்.அவர் யோசித்தார்.பின் பேசித்தான் பார்ப் போமே என்று தொலை பேசினார்.
"ஹலோ!உங்கள் விளம்பரம் பார்த்தேன்.உண்மையிலேயே புது வண்டியா?"
மறு முனையில் பெண்குரல்"ஆம்"
"மூவாயிரம் கி.மி.தான் ஓடியிருக்கிறதா?
"ஆம்"
"விலை?"
"அதுதான் விளம்பரத்தில் போட்டிருந்தேனே!ரூ.3000."
"காரில் ஏதும் பிரச்சினையா?"
"ஒன்றும் இல்லை.உண்மையில் நீங்கள் ஒருவர்தான் இதுவரை பேசியவர்.எல்லோரும் இது ஜோக் என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது."
அவர் போய்ப் பார்த்தார் .ஓட்டிப் பார்த்தார்.பிடித்திருந்தது.3000 ரூபாயைக் கொடுத்தார். சாவியை வாங்கிக் கொண்டார்.
பின் கேட்டார்"நீங்கள் இதை 3 லட்சத்துக்கு விற்றிருக்க முடியும்.ஏன் 3000க்கு விற்றீர்கள்?"
அவள் சொன்னாள்"இது என் கணவரின் சென்ற பிறந்த நாளுக்கு நான் பரிசாகக் கொடுத்த கார்.போன மாதம் அவர் வேறு ஒரு பெண்ணோடு ஓடிப் போய் விட்டார்.நேற்று டார்ஜீலிங்கில் இருந்து அவர் ஒரு தந்தி அனுப்பியிருந்தார்.கையில் பணமில்லாததால் காரை விற்றுப் பணம் அனுப்பச் சொல்லியிருந்தார்.காரை விற்று விட்டேன்.3000 அனுப்பி விடுவேன்!"
இது தன் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள அப்பெண் தேர்ந்தெடுத்த வழி.
இவ்வாறு சிலர் செயலில் தீர்த்துக் கொள்கிறார்கள்
சிலர் காத்திருத்தலைத் தேர்ந்தெடுக்கிறார்கள்
சிலர் பழிதீர்த்துத் தீர்த்துக்கொள்கிறார்கள்.
சிலர் சண்டை மூலம் முடிவு கட்டுகிறார்கள்.
ஆனால் இவையெல்லாம் மேலும் பிரச்சினையைத்தான் உருவாக்கும்.
பேசித் தீர்த்துக் கொள்வதே சிறந்த வழி.
உண்மையாகப் பேசுங்கள்.நியாயமாகப் பேசுங்கள்.உணர்ந்து பேசுங்கள். நம்பிக்கையோடு பேசுங்கள்.தெளிவாகப் பேசுங்கள்.
எல்லாம் சரியாகும்.
http://famousstills.blogspot.com
http://mobilesexpicture.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?