ஒரு 50 வயதுப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள்.அறுவைச் சிகிச்சைக்கு முன் ஒரு மயக்க நிலையில் கடவுளைக் கண்டாள்.
அவள் கேட்டாள்"கடவுளே! நான் சாகப் போகிறேனா?"
கடவுள் சொன்னார்."இல்லை!உனக்கு இன்னும் 30 ஆண்டுகள் 6 மாதங்கள்,18 நாட்கள் வாழ்க்கை இருக்கிறது."
அறுவைச் சிகிச்சை நடந்து அவள் சுகமடைந்தாள்.
அவள் யோசித்தாள்"இன்னும்30 ஆண்டுகள் வாழ்க்கை இருக்கிறது. அதை அனுபவிப்போம்"
உடல் பூரண குணமான பின் அவள் மருத்துவ மனையில் இளமைத் தோற்றத்துக்கு வேண்டிய பல சிகிச்சைகளைச் செய்து கொண்டு,ஒரு இளம் பெண் போலத் தோற்றம் மாறினாள்.அழகு நிலையம் சென்று பல ஒப்பனைகள் செய்து கொண்டாள்.அங்கிருந்து வெளியே வந்து சாலையைக் கடக்கும்போது ஒரு காரில் அடிபட்டு இறந்தாள்.
இறந்த பின் கடவுளைப் பார்த்ததும் கேட்டாள்"இன்னும் 30 ஆண்டுகள் இருக்கிறது எனச் சொன்னீர்களே!பின் ஏன் இப்படி?
கடவுள் என்ன சொன்னார்?!
;;;;;;;
;;;;;;;
;;;;;;;
;;;;;;;
;;;;;;;
"உன்னை எனக்கு அடையாளம் தெரியவில்லை!"
நீதி: நீங்கள் நீங்களாகவே இருங்கள்!
டிஸ்கி-1.
நீதி: நீங்கள் நீங்களாகவே இருங்கள்!
டிஸ்கி-1.
இன்று முதல் ஏழு நாட்களுக்கு வலைச்சரப் பொறுப்பேற்றிருப்பதால், இங்கு பதிவிட இயலாத நிலையில் உள்ளேன்,
அங்கு வாருங்களேன்,சந்திக்கலாம்!
டிஸ்கி 2:நேரம் கிடைத்தால் இங்கும் பதிவிடுவேன்!
http://famousstills.blogspot.com
http://mobilesexpicture.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?