சீமான் நடித்த 'மகிழ்ச்சி' படத்தை இயக்கியவர் கௌதமன். இவர் இந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பு "சினிமாவுக்குப் போன சித்தாளு" என்ற ஜெயகாந்தனின் குறுநாவலை டெலிஃபிலிமாக எடுத்தவர்.
இந்த முயற்சிகளின் மூலம் வெளிச்சத்துக்கு வராத வ.கௌதமன் மக்கள் தொலைகாட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் "சந்தணக்காடு" மெகா தொலைகாட்சித் தொடரின் மூலம் புகழ் பெற்றார். சந்தண வீரப்பனின் வாழ்க்கையை இந்தத் தொடரில் அவர் மிகநேர்மையாகவும் துணிச்சலாகவும், காட்சிபடுத்தி வந்தார். தொலைக்காட்சிக்கு முன் தணிக்கை இல்லாத காரணத்தால் பல உண்மைகளை மறைக்காமல் இந்த சந்தணக்காடு தொடர் ஒளிபரப்பானது.
இந்நிலையில் ஈழமக்களின் விடுதலையில் அக்ககறை கொண்ட உணர்வாளராக, இவர் மக்கள் போராட்ட மேடைகளிலும் பிரபமாகி வருகிறார். இதனால் இவரிடம், "சந்தணக்காடு தொடரைப் போலவே, ஈழவிடுதலை வரலாற்றை வன்னிக்காடு என்ற தலைப்பில் ஏன் மக்கள் தொலைகாட்சிக்கு தயாரிக்கக் கூடாது" என்று நண்பர் கேட்க, ஏற்கனவே உணர்வாளராக இருக்கும் கௌதமன் இதை கற்பூரமாக பிடித்துக் கொண்டு விட்டார்.
தற்போது "வன்னிக்காடு" மெகா தொலக்காட்சித் தொடருக்கான திரைக்கதை மும்முரமாக எழுதிவருகிறேன். விரைவில் மக்கள் தொலக்காட்சி வன்னிகாட்டை தொடங்க இருகிறோம். இது மாபெரும் மக்கள் வரலாறாக இருக்கும். கோவை சத்தியமங்கலம் பகுதியையே வன்னிக்காடு தொடருக்கும் கதைக்களமாக பயன்படுத்த இருகிறேன். கொழும்பு, மற்றும் யாழ் நகர்களை கோவா மற்றும் மங்களூர் பாண்டிச்சேரி ஆகிய நகரங்களை வைத்து மேச் செய்ய இருகிறோம். திருநெல்வேலி மாவட்டம் கிளிநொச்சிக்கு அப்படியே பொருந்தும். வன்னிக்காடு தமிழனின் வீரவரலாறாக இருக்கும். ஈழத்தை விரைவில் தமிழினம் வெல்லும்" என உணர்ச்சி பொங்க நம்மிடம் கூறினார் கௌதமன்.
தமிழ் மீடியா
http://tamil-cininews.blogspot.com
http://kaamakkathai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?