தேசிய பாதுகாப்பு சவால்கள் எனும் தொனிப்பொருளில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட கோட்டபாய GTF தலைவர் மற்றும் சுரேன் சுரேந்திரன் நா.க அரசின் தலைவர் திரு.ருத்திரகுமாரன் வினாயகம் மற்றும் நெடியவன் ஆகியோரது படங்களைப் போட்டுக் காட்டி இவர்களே தமக்கு தொல்லை தருபவர்கள் எனக் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தோற்றம் பெறுவதற்கான சாத்தியப்பாடானது யுத்தத்தற்குப் பின்னர் நாடு எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கூறியுள்ளார். இராணுவம் இந்த அச்சுறுத்தலை இனங்கண்டுள்ளதுடன் இலங்கையின் புலனாய்வு சேவைகளை பலப்படுத்தவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முகாம்களை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் இலங்கை முகம்கொடுக்கும் தேசிய பாதுகாப்பு சவால்கள் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
"யுத்தத்தின்போது இராணுவத்தினரிடமிருந்து தப்பிய எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகளை எல்.ரி.ரி.ஈ. முகவர் அமைப்புகள் ஊக்குவித்து வசதிகளை அளித்து அவ்வமைப்பை மீளத் தோன்ற செய்யக்கூடும். 11,000 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள போதிலும் 100 சதவீதம் புனர்வாழ்வு பெறாத போராளிகளும் இருக்கக்கூடும். அவர்களை இராணுவ ரீதியாக நாம் தோற்கடித்துவிட்டதனால் அனைத்தையும் நாம் மறந்துவிட முடியாது. இன்னும் அச்சுறுத்தல் உள்ளது. சர்வதேச அமைப்புகளில் உள்ள பெரும் எண்ணிக்கையான எதிரிகள் அரசாங்கத்தை தடம்புரளச் செய்வதற்கு செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இதனால் தான் நாம் இன்னும் வலிமையான இராணுவத்தைப் பேணுகிறோம். இதனால்தான் வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்கு இராணுவத்துக்கு ஒதுக்கப்படுகிறது. எல்.ரி.ரி.ஈ.யை இராணுவ ரீதியாக தோற்கடித்து இரண்டரை வருடங்கள் மாத்திரமே கடந்துள்ளன" என அவர் கூறினார்.
நாட்டை இராணுவ மயப்படுத்துவதாக அரசியல் காரணங்களுக்காக சில குழுக்கள் கூறுவதாகவும் பாதுகாப்புச் செயலர் குற்றம் சுமத்தினர். நாட்டை இராணுவமயப்படுத்துவதாக சில குழுக்கள் அரசியல் லாபங்களுக்காக கூறுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். நாளாந்த சட்டம் ஒழுங்கு செயற்பாடுகள் பிரதானமாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையின் எந்த பகுதியிலும் இராணுவ முகாமை நிறுவுவது இறைமையுள்ள நாடென்ற வகையில் அதன் சொந்தத் தீர்மானமாகும் என அவர் கூறியுள்ளமையின் உள்ளர்த்தம் புரிகிறது. தற்போது சில குழுக்கள் இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையை அழுத்தத்திற்குள்ளாக்குவதற்கு சர்வதேச சமூகத்திற்கு உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற அமைப்புகள் சகல வழிகளிலும் அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன.எல்.ரி.ரி.ஈ. சார்பு அமைப்புகள், சர்வதேச ஊடகங்களுடன் இணைந்து செயற்படுகின்றன. இதனால் தான் சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவை போன்ற தகவல்களையும் அவர்களால் பரபப்ப முடிந்தது. அவ்வமைப்புகள் தமிழ் சோலை எனும் பெயரில் பாடசாலைகளையும் நடத்துகின்றன. அவை சுமார் 15,000 மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்றன எனவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மொத்தத்தில் புலம்பெயர் தமிழர்களை இம் மாநாட்டில் வைத்து மறைமுகமாக அவர் திட்டித்தீர்த்தது தான் மிச்சம். எங்கே மீண்டும் ஒரு போராட்டம் வெடித்துவிடுமோ என அவர் அஞ்சுவது அவர் பேச்சுக்களில் இருந்து தெளிவாகப் புலப்படுகிறது.
http://tamil-cininews.blogspot.com
http://girls-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?