சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகா எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னதாக, விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி வருவதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
அத்துடன், அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்பது உட்பட மேலும் சில நிபந்தனைகளுடன் அவரை விடுவிப்பதற்கு அரச தரப்பு அக்கறை கொண்டிருப்பதாகவும் அவ் வார இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அமைச்சர்கள் மட்டத்தில் கூட உருவாகியிருக்கும் நிலையில், கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவ்வாறு விடுதலை செய்யப்படவில்லை எனில், ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் இராஜதந்திர வழிமுறைகளில் இலங்கையை அமெரிக்க எச்சரித்திருப்பதாகவும்வ் ஆங்கில வார இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிட்டளவு கையொப்பங்களைப் பெறுவதற்கான முயற்சிகளும், பொன் சேகாவின் மகள் மேற்கொண்டிருந்த முயற்சிகளும் அரசாங்கத்திற்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையிலேயே, அரசாங்கம் சரத் பொன்சேகாவை விடுதலை செய்து வீட்டுக்காவலில் வைக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://tamil-cininews.blogspot.com
http://girls-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?