Tuesday, 10 January 2012

வெற்றி! வெற்றி! வ��ற்றி நமதே!!



ஒரு அறிஞர் இருந்தார்.அவர் ஒரு நாள் நடந்து சென்று கொண்டி ருந்த  போது  அவர் எதிரே வந்த முரடன் ஒருவன் அவரைப் பார்த்து"நீ ஒரு முட்டாள்;போலி;உனக்கு எதுவும் தெரியாது.நீ யார் எல்லோருக்கும்  உபதேசம் செய்வதற்கு?" என்றெல்லாம் கடும் வார்த்தைகளால்  சாடினான்.

அனைத்தையும் புன்முறுவலுடன் கேட்டுக்கொண்ட அறிஞர்"நீ ஒருவருக்கு ஒரு பரிசு கொடுக்கிறாய்.ஆனால் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அது யாருக்குச் சொந்தம்."எனக்கேட்டார்.

எதிர்பாராத கேள்வியால் அதிர்ச்சியடைந்த அவன் "நான் வாங்கிய பரிசுஅது. எனக்குத்தான் சொந்தம்"என்றான்.

"அது போல்தான் உன் கோபமும்.உன் கோபத்தினால் நான் காயப்பட வில்லையெனில் அந்தக்கோபம் உனக்கே திரும்பி வருகிறது.நீ காயப்படுகிறாய்.மகிழ்ச்சியற்றவனாகிறாய்.மற்றவரை நீ வெறுப்பதால் உனக்கு மகிழ்ச்சியில்லாமல் போகிறது.ஆனால் மற்றவர் மீது நீ அன்பு செலுத்தும்போது,அனைவரும்,நீ உட்பட, மகிழ்கிறார்கள்." என்றார் அறிஞர்.

அவன் மனம் நெகிழ்ந்தான்."எனக்கு அன்பு வழியைக் காட்டுங்கள்.  இன்று முதல் நான் உங்கள் சீடன்" என்றான்.

அறிஞர் சொன்னார்"விரும்புபவர்களுக்கு வழிகாட்டுவது என் கடமை." என்று சொல்லி உபதேசம் செய்தார்----------

"நீ செய்வது சரியென்றால்,கோபப்பட அவசியமில்லை; தவறென்றால்  உனக்குக்  கோபப்பட  உரிமையில்லை"

உற்றாரிடம்  பொறுமை என்பது அன்பு.
மற்றாரிடம் பொறுமை என்பது   மரியாதை
தன்னிடமே பொறுமை என்பது  பற்றுறுதி
இறைவனிடம் பொறுமை என்பது விசுவாசம்.


கடந்தகாலத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்காதே;அது கண்ணீரைத்தரும்.
எதிர்காலம் பற்றி அதிகம் சிந்திக்காதே .அது பயம் தரும்.
இந்த விநாடியை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்:அது உற்சாகம் தரும்.


வாழ்க்கையில் வரும் ஒவ்வோரு சோதனையும் நம்மை செப்பனிடும் அல்லது சிதைத்து விடும்.
ஒவ்வொரு பிரச்சினையும்,நம்மை உருவாக்கும் அல்லது உடைக்கும்.
நாம் வெல்கிறோமா அல்லது வெல்லப் படுகிறோமா என்பது நம் கையில்தான் இருக்கிறது. 

டிஸ்கி:இதற்கு என்ன இப்படி ஒரு தலைப்பு என்றா கேட்கிறீர்கள். சும்மா ஒரு செண்டிமெண்ட்தான் --சினிமாக்காரங்க மாதிரி!!



http://famousstills.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger