Tuesday, 1 October 2013

கடுப்பில் த்ரிஷா, ஓ.கே. ஆன ஹன்சிகா trisha and hansika medvani cinema news

- 0 comments

கடுப்பில் த்ரிஷா, ஓ.கே. ஆன ஹன்சிகா…….

by abtamil

ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்துக்குப் பிறகு தரணி இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்தப் படத்துக்கு 'ராஸ்கல்' எனப் பெயர் வைத்துள்ளனர்.

விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க, கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு கதாநாயகி செலக்ஷனை நடத்திப் பார்த்தார் தரணி. மும்பையில் ரூம் போட்டு கூட யோசித்துப் பார்த்தார். ஆனால், யாருமே செலக்ட் ஆகவில்லை.

ஒருவழியாக 'இந்தா… அந்தா'வென ஹன்சிகா மோத்வானியைத் தேர்ந்து எடுத்து இருக்கிறார், தரணி. இதனால் கடும் கொந்தளிப்பில் தகிக்கிறார், திரிஷா. தன்னைத்தான் அந்தப் படத்துக்கு ஹீரோயினாக்குவார் என த்ரிஷா கட்டிய மனக்கோட்டை இடிந்ததுதான் இதற்குக் காரணமாம்.

இத்தனைக்கும் விக்ரம், தரணி இருவரும் த்ரிஷா, அவரது அம்மா இருவருக்கும் குடும்ப நண்பர்கள். அப்படி இருந்தும் தன்னைக் கழற்றி விட்டார்களே என்கிற ஆத்திரத்தில் இருக்கிறாராம் திரிஷா.

Show commentsOpen link

[Continue reading...]

கைதி எண் 3312 லல்லுவின் முதல்நாள் சிறை வாழ்க்கை First day experience of Lalu in Prison

- 0 comments

கைதி எண் 3312 லல்லுவின் முதல்நாள் சிறை வாழ்க்கை First day experience of Lalu in Prison

Tamil NewsYesterday,

ராஞ்சி, அக். 2-

கால்நடை தீவன ஊழலில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டார்.

அன்றிரவு முழுவதும் மூட்டைபூச்சி மற்றும் கொசுக்கடி தொல்லையால் தூங்க முடியாமல் அவதிப்பட்ட லல்லு, அதிகாலை வேளையில் கண்ணயர்ந்தார். காலை 7 மணியளவில் கண் விழித்த அவர் சிறை வளாகத்தினுள் ஒருமுறை சுற்றி வந்தார். கொசு தொல்லை மற்றும் மூட்டைபூச்சி கடி பற்றி சிறை அதிகாரியிடம் அவர் புகார் கூறினார்.

பின்னர், செய்தி தாள்களை சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்த லல்லு, டி.வி. செய்திகளையும் பாரத்துவிட்டு தேநீர் குடித்தார். அவருக்கு 3312 என்ற கைதி எண்ணையும், குற்றேவல் புரிய 2 தண்டனை கைதிகளையும் சிறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

சிறையின் உணவு பட்டியலின்படி வி.ஐ.பி. கைதிகளுக்கு அன்றாடம் 350 கிராம் அரிசி, 117 கிராம் பருப்பு, 233 கிராம் உருளைக் கிழங்கு, 233 கிராம் காய்கறிகள், 467 கிராம் தயிர் அல்லது பால், 29 கிராம் நெய் மற்றும் 2 பழங்கள் வழங்கப்படும்.
...
Show commentsOpen link

[Continue reading...]

ராஜா ராணி திரைவிமர்சனம் (Raja Rani movie review)

- 0 comments

ராஜா ராணி திரைவிமர்சனம் (Raja Rani movie review)

by Geetha A

அன்புள்ள நண்பர்களே,

வணக்கம். நலம்தானே? மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. சில திரைப்படங்கள் வருவதற்க்கு முன்பே மிக மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும். ஏனெனில் நமது தொலைக்காட்சிகளில் வரும் திரைப்படங்கள் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய கிசுகிசுக்கள் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி ஒரு திரைப்படம்தான் ராஜா ராணி.
வாங்க படத்தை பார்க்கலாம்.

நான்கு பேர் மூன்று காதல் இதுதாங்க ராஜா ராணி. ரெஜினா (நயன்தாரா) வும் ஜான்(ஆர்யா) வும் திருமணமாகும் காட்சியில் ஆரம்பிக்கிறது திரைப்படம். இருவருக்கும் பிடிக்காமல் நடக்கிறது திருமணம். இதனால் இருவரும் பேசிக் கொள்வதில்லை. ஜான் தினமும் குடித்து விட்டு வருவது ரெஜினாவிற்க்கு பிடிப்பதில்லை. மனவருத்தும் ஏற்படும் பொழுது ரெஜினாவிற்க்கு வலிப்பு நோய் வருகிறது. இவரை மருத்துவமனையில் சேர்க்கும் பொழுது மருத்துவர் கேட்கும் எந்த கேள்விக்கும் ஜானிற்க்கு பதில் தெரிவதில்லை. அதனால் மருத்துவர் இவருக்கு அறிவுரை கூறி விட்டு செல்கிறார். அதற்க்காக முதன் முறையாக ரெஜினாவிடும் பேசும் ஜான் மருத்துவருக்காகவாவது இந்த நோய் வந்த விவரங்களைக் கேட்கிறார். முன்கதையைக் கேட்ட ஜானிற்க்கு ரெஜினா மீது ஈடுபாடு வருகிறது. இதேப் போல் ஜானிற்க்கும் ஒரு முன்கதை இருக்கிறது. இதைக் கேட்ட பிறகு ரெஜினாவிற்க்கு ஜானின் மீது காதல் வந்து இருவரும் வாழ்வில் இணைந்தார்களா என்பதே ராஜா ராணி :)

ஒரு மனிதனின் வாழ்வில் காதல் முக்கியமானதுதான். ஆனால் கிடைக்காத காதலுக்காக வாழ்வே சூனியமாகி விடாது என்பதே
ராணி சொல்லும் ராஜாவின் கதை, ராஜா சொல்லும் ராணியின் கதை.

நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு தலை காட்டி இருக்கும் படம் தான் இது. நடிப்பில் மிளிருகிறார். வலிப்பு வரும் காட்சியிலும், காதலனை பிரிந்த காட்சியிலும் சபாஷ் வாங்குகிறார்.

ஜெய்யின் அப்பாவித்தனமான நடிப்பு நமக்கு புதியதில்லை. ஆனாலும் அவரின் அப்பாவித்தனமான முகமும், நண்பர்கள் மிரட்டும் பொழுது அழுவதும் மிகவும் ரசிக்கும் காட்சி. முன்பகுதியில் குழந்தைத்தனம், பின்பகுதியில் மிடுக்கு ரசிக்கும்படி உள்ளது.

வழக்கமாக துடிப்போடும், துடுக்கோடும் நடிக்கும் ஆர்யா இதிலும் சளைக்க வில்லை. நயனின் அன்புக்கு ஏங்கும் காட்சியிலும், நஸ்ரியாவை துரத்தி துரத்தி காதல் செய்யும் பொழுதும் இன்னொரு காதல் மன்னன்.

நஸ்ரியா அழகு பதுமையாக வந்து அனைவரையும் கொள்ளை கொள்கிறார். தன்னைப் பற்றி சொல்லி, பாசத்திற்க்காக ஏங்கி
"எங்க அம்மா மடியில படுத்ததே இல்ல, உன் மடியில படுத்துக்கட்டுமா" என்று கேட்கும் பொழுது நமக்கும் அந்த பாசத்தின் தவிப்பு தெரிகிறது. பிரதர், பிரதர் என்று சொல்லும் காட்சி ரசிக்கும் படி உள்ளது முதலில், பின்பு அதுவே முகம் சுளிக்க வைக்கிறது.

சந்தானம் நகைச்சுவை கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. சத்யாராஜ் சில காட்சிகளில் நடித்தாலும், அப்பா,மகளின் நெருக்கத்தை சொல்லுகிறார்.

இயக்குநர் அட்லி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.கதைக்காக செலவிட்ட நேரத்தை விட பீருக்காக அதிகம் செலவிட்டிருக்கிறார். அதிகமாக அனைவரையும் அழ வைத்திருக்கிறார் (கிளிசரின் செலவும் அதிகம்)


சில வசனங்கள் ரசிக்கும் படி இருக்கிறது. "கல்யாணத்திற்க்கு முன்னாடி ஒருத்தன் குடிக்கிறான் என்றால் லவ் பெயிலியர், அதுவே கல்யாணத்திற்க்கு பின்னாடி ஒருத்தன் குடிக்கிறான்னா வாழ்க்கையே பெயிலியர்", "நம்ம கூட இருக்கறவங்க நம்மல விட்டு போயிட்டாங்கன்னா, நாமளும் கூடவே போகனும்ன்னு அர்த்தம் இல்ல. என்னைக்காவது ஒரு நாள் நாம ஆசப்பட்ட மாதிரி நம்ம லைப் ஒரு நாள் மாறும்"

இசை ஜிவி பிரகாஷ், பின்னணி இசை ரசிப்பு, பாடல்களும் ஏற்புடையதாக இருக்கிறது.

மொத்தத்தில் ராஜா ராணி அரியணை ஏறலாம்.

நீங்களும் படம் பார்த்து விட்டு கருத்தை சொல்லுங்களேன். மீண்டும் சந்திப்போமா?

வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!

Show commentsOpen link

[Continue reading...]

மனநலம் பாதித்த 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவனுக்கு மரண தண்டனை Death sentenced to accused for molestation and murder of minor girl

- 0 comments

மனநலம் பாதித்த 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவனுக்கு மரண தண்டனை Death sentenced to accused for molestation and murder of minor girl

Tamil NewsYesterday,

ஜெய்ப்பூர், அக்.2-

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமன்ட் மாவட்டத்தில் உள்ள கன்க்ரோலி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வசித்துவந்த மனநலம் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமியை 17-1-2013 அன்று கடத்திச் சென்று கற்பழித்து விட்டதாக அதே பகுதியில் வசித்த மனோஜ் குமார் என்பவன் மீது ராஜ்சமன்ட் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த (2012) ஆண்டு கொண்டுவரப்பட்ட இளம்சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றவாளி மீது வழக்கு தொடரப்பட்டது.

போலீஸ் தரப்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மனோஜ் குமாருக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

வழக்கு தொடரப்பட்ட ஏழே மாதங்களில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதும், இளம் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (தடுப்பு) சட்டத்தை பயன்படுத்தி மரண தண்டனை வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link

[Continue reading...]

ஜோடிகளின் செக்ஸ் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பப் போகிறது சேனல் 4 ! Live Sex video on channel 4

- 0 comments

ஜோடிகளின் செக்ஸ் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பப் போகிறது சேனல் 4 !!

by admin
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,

சேனல் 4 ஐ தமிழர்கள் யாரும் மறக்க முடியாது, ஈழப்போரின் இறுதியில் நடந்த படுகொலைகளை வெளிச்சம் போட்டு காட்டிய சேனல் அது. அப்படிபட்ட சேனல் 4ல் தான்  "செக்ஸ் பாக்ஸ்" என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது, இந்த நிகழ்ச்சியில் சேனலில் ஸ்டுடியோவில் பார்வையாளர்கள் முன்பு காதலர்கள்/ தம்பதிகள் செக்ஸ் வைத்துக்கொள்ள உள்ளார்கள்.

செக்ஸ் வைத்து முடிந்த உடன் பேனலில் உள்ள செக்ஸ் எக்ஸ்பர்ட்டுகளுடன் அவர்களது செக்ஸ் எக்ஸ்பீரியன்சை அலசுவார்கள், நேர்மையான ஒளிமறைவற்ற உண்மையான செக்ஸ் உறவு குறித்து ஒரு விழிப்புணர்வை உண்டாக்க தான் இந்த நிகழ்ச்சி என்றும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளார்கள்.

ஷோவில் பங்கேற்க உள்ள மூன்று ஜோடிகளில் ஒரு ஜோடி சிறுவயதிலிருந்தே பழகியவர்கள், இன்னொரு ஜோடி 20களில் உள்ள ஜோடி என்றும், மூன்றாவது ஜோடி ஆண் ஓரிணை சேர்க்கையாளர்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

The post ஜோடிகளின் செக்ஸ் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பப் போகிறது சேனல் 4 !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

[Continue reading...]

தெலுங்கில் அஜித்தின் 'ஆட்டம் ஆரம்பம்' ajith aarambam in telugu

- 0 comments

தெலுங்கில் அஜித்தின் 'ஆட்டம் ஆரம்பம்'

by tnkesaven

தெலுங்கில் அஜித்தின் ஆட்டம் ஆரம்பம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது
தெலுங்கில் அஜித் படங்களுக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கூட்டமே இருக்கிறது
அஜித் நடித்த பில்லா, மங்காத்தா இரண்டுமே அங்கே சூப்பர்டூப்பர் ஹிட். அதனால் இப்போது அவர் நடித்துவரும் ஆரம்பம் படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

மேலும் ஆந்திரா ரசிகர்களின் கனவுக்கன்னியான நயன்தாராவும் கனவுக்கன்னியாக முயற்சித்துவரும் டாப்ஸியும் இந்தப்படத்தில் இருப்பதால் படம் தெலுங்கிலும் பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.

தெலுங்கில் இந்தப்படத்திற்கு ஆட்டம் ஆரம்பம் என பெயர் வைத்திருக்கிறார்கள்.
முதலில் தமிழில் கூட ஆட்டம் ஆரம்பம் என பெயர் வைப்பதாகத்தான் இருந்தது.
அனேகமாக அக்டோபர் முதல் வாரத்தில் தெலுங்கில் ஆட்டம் ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுவனின் இசைக்கென்றே ஒரு ரசிகர்கூட்டமும் ஆந்திராவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
newsindianews.com

Show commentsOpen link

[Continue reading...]

விக்ரமின் ஜோடி நானா? ஹன்சிகா vikram jodi hansika

- 0 comments

விக்ரமின் ஜோடி நானா? ஹன்சிகா குமுறல்
by abtamil
Tamil newsToday,

தரணி இயக்கும் ராஸ்கல் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் ஹன்சிகா.
ஷங்கர் இயக்கும் ஐ படத்துக்குப் பிறகு தரணி இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம்.
இந்தப் படத்துக்கு ராஸ்கல் எனப் பெயர் வைத்துள்ளனர்.
விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு கதாநாயகி செலக்ஷனை நடத்திப் பார்த்தார் தரணி.
மும்பையில் ரூம் போட்டு கூட யோசித்துப் பார்த்தார். ஆனால் யாருமே செலக்ட் ஆகவில்லை.
ஒருவழியாக ஹன்சிகா மோத்வானியைத் தேர்ந்தெடுத்து இருப்பதாக கொலிவுட்டில் தண்டோராக்கள் வெளிவந்தன.
ஆனால் இதனை மறுத்துள்ளார் ஹன்சிகா.
ஏனெனில் தனது கைவசம் 9 படங்களை வைத்துக்கொண்டு பிசி ஷெடியூலில் உள்ளாராம் ஹன்சிகா.

Show commentsOpen link

[Continue reading...]

மது பாட்டிலுடன் இன்டர்நெட்டில் திரிஷா thrisha with liquir bottels

- 0 comments

மது பாட்டிலுடன் இன்டர்நெட்டில் பரவும் நடிகை திரிஷாவின் சர்ச்சை படங்கள்!

by abtamil
Tamil newsToday,
நடிகை திரிஷா மதுபாட்டில்கள் முன் உட்கார்ந்து இருப்பது போன்ற சர்ச்சை படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஐதரபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்தில் இந்த படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விருந்துக்கு திரிஷா தனது தோழிகளுடன் சென்று இருந்தார். அவருடன் நடிகைகள் சங்கீதா, மகேஸ்வரி போன்றோரும் போய் இருந்தனர். விடிய விடிய இந்த விருந்து நடந்தது. திரிஷா உட்கார்ந்திருந்த மேஜையில் கிளாசில் மது ஊற்றி வைக்கப்பட்டு இருந்தது. அதை குடித்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. யாரோ மர்ம நபர் இதை செல்போனில் படம் எடுத்து இன்டர்நெட்டில் பரவவிட்டுள்ளார்.

இதனால் திரிஷா அதிர்ச்சியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விருந்தில் திரிஷா தகராறில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாயின. திரிஷா விருந்தில் நடனமாடியதாகவும், அப்போது ஒருவருடன் மோதல் ஏற்பட்டு வாய்தராறில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. திரிஷாவை பலர் சமரசபடுத்தியும் கேட்கவில்லையாம்.

 

இதனால் ஓட்டல் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர் என்றும், அவர்கள் கட்டாயப்படுத்தி திரிஷாவை அங்கிருந்து வெளியேற்றி காரில் அனுப்பி வைத்ததாகவும் கூறப்பட்டது.

Show commentsOpen link

[Continue reading...]

தருண்கோபியுடன் ‘காதல்’ சந்தியா சேரும் ‘சூதாட்டம்’ kathal sandhiya soothattam

- 0 comments

தருண்கோபியுடன் 'காதல்' சந்தியா சேரும் 'சூதாட்டம்'

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,

இயக்குனர் தருண்கோபியுடன் சூதாட்டம் படத்தில் ஜோடி சேர்கிறார் காதல் சந்தியா.

விஷால், ரீமாசென் நடிப்பில் வெளியான திமிரு படத்திற்கு பிறகு தருண்கோபி ஒரு புதிய படத்தை இயக்கி, அதில் நடிக்கவும் இருக்கிறார்.

அந்த படத்திற்கு சூதாட்டம் என பெயர் வைத்திருக்கின்றனர்.

இப்படத்தில் தருண்கோபிக்கு ஜோடியாக காதல் சந்தியா நடிக்கிறார்.

மேலும் ரமணா, சரோஜா, காதல் சுகுமார், தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். தேவராஜ் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் தருண்கோபி கூறுகையில், திமிரு படத்திற்குப் பிறகு நல்ல படத்தை கொடுக்கவேண்டும் என்பதற்காக காத்திருந்தேன்.

அதற்கு ஏற்றார்போல் இப்போது கதை அமைந்துள்ளது. இரண்டு நண்பர்களுக்குள் நட்பு உருவாவது சுலபம். ஆனால், அந்த நட்பை பலப்படுத்திக் கொள்வது என்பது கடினம்.

இதை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். இந்த படம் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

The post தருண்கோபியுடன் 'காதல்' சந்தியா சேரும் 'சூதாட்டம்' appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

[Continue reading...]

கடனை தரும் அதிகாரிகளிடம் உடலை கொடுக்கும் பெண்கள்! Srilankan sex news

- 0 comments

கடனை தரும் அதிகாரிகளிடம் உடலை கொடுக்கும் பெண்கள்!

by Marikumar

கிழக்கு மாவட்டத்தில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில் நுண்கடன்கள் வழங்குகின்ற நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளால் பெண்களுக்கு செக்ஸ் வலை வீசப்படுகின்றது.

சுய தொழில் முயற்சிகளுக்கு கடன்கள் பெற பெரும்பாலும் வறிய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் செல்கின்றனர். அதிக வீத வட்டிக்கு கடன்கள் கொடுக்கப்படுகின்றன. இதனால் கடன்களை மீள செலுத்த முடியாத நெருக்கடி பெண்களுக்கு ஏற்பட்டு விடுகின்றது.

இதை எதிர்பார்த்து காத்திருக்கின்ற அதிகாரிகள் செக்ஸ் ரீதியான ஒத்துழைப்பை இப்பெண்களிடம் பதிலுக்கு கோருகின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள் இப்பெண்களின் குடும்ப வாழ்க்கையை சிதைத்து விடுகின்றன, கணவன் - மனைவி உறவு கெடுகின்றது, தற்கொலைகளும் இடம்பெறுகின்றன.

இவ்விடயத்தில் தலையிடவும், தீர்வு காணவும் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பாற்ற நிறுவனங்களின் ஒன்றியம் தற்போது முனைப்புடன் முன்வந்து உள்ளது.

தாய்நாடு

Share |

Show commentsOpen link

[Continue reading...]

ஸ்ருதியுடன் ஜோடி சேரவுள்ளார் ஆர்யா aarya with sruthihasan

- 0 comments

ஸ்ருதியுடன் ஜோடி சேரவுள்ளார் ஆர்யா

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,

ராஜா ராணி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ருதியுடன் ஜோடி சேரவுள்ளார் ஆர்யா.

ஆர்யா நடித்த இரண்டாம் உலகம், ஆரம்பம் ஆகிய படங்கள் வருகிற தீபாவளி சரவேடியில் வெடிக்க காத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தடையறத் தாக்க புகழ் மகிழ் திருமேனி இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.

மேலும், இப்படத்திற்கு கொலைவெறி புகழ் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

ஆனால் ஏற்கெனவே இதுபோன்ற செய்திகள் கொலிவுட்டில் தண்டோரா அடிக்கப்பட்டு பின் நிராகரிக்கப்பட்டதால். தற்போது இச்செய்தினை, ஆர்யாவே தனது ட்விட்டர் வலைதளத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

தற்போது ஆர்யா, எஸ்.பி .ஜனநாதன் இயக்கும் புறம்போக்கு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

அதேபோல் ஸ்ருதியும் இந்தியில் இரண்டு படங்களும், தெலுங்கில் ஒரு படமும் நடித்து வருகிறார்.

இந்த படங்குக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து மகிழ் திருமேனி படத்தில் நடிக்கவுள்ளனராம்.

The post ஸ்ருதியுடன் ஜோடி சேரவுள்ளார் ஆர்யா appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

[Continue reading...]

சிறையில் தூங்க முடியாமல் கொசுக்கடியில் தவித்த லல்லு Lalu not be able to sleep in jail

- 0 comments

சிறையில் தூங்க முடியாமல் கொசுக்கடியில் தவித்த லல்லு Lalu not be able to sleep in jail
Tamil NewsToday,

ராஞ்சி, அக்.1–

கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லல்லுபிரசாத் குற்றவாளி என்று நேற்று அறிவிக்கப்பட்டார்.

சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டதும் லல்லுபிரசாத் யாதவை போலீசார் கைது செய்தனர்.

ராஞ்சியில் உள்ள வீர்சா முண்டா மத்திய சிறைக்கு லல்லுபிரசாத் யாதவ் உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவர் உடலை பரிசோதித்தனர்.

பிறகு அவரை சிறையில் அடைத்தனர். நேற்று மதியம் மற்றும் இரவில் அவருக்கு சிறை உணவு வழங்கப்பட்டது.

கோர்ட்டுக்கு வரும்போது மிக மிக உற்சாகமாக வந்த லல்லுபிரசாத் யாதவ் ஜெயிலுக்குள் அடைக்கப்பட்டபோது மிகவும் வாடிப்போனார். யாருடனும் பேசாமல் அவர் அமைதியாக காணப்பட்டார். நேற்றிரவு அவர் சிறைச்சாலை அறைக்குள் தூங்க முடியாமல் தவித்தார். வீர்சாமுண்டா மத்திய சிறைச்சாலை கொசுத் தொல்லை அதிகம் உள்ள பகுதியாகும்.

அந்த சிறையில் எல்லா நசீன வசதிகளும் சமீபத்தில் செய்யப்பட்டது என்றாலும் கொசுத்தொல்லையை சமாளிக்க முடிவில்லை. கொசுக்கடி தாங்க முடியாமல் லல்லு பிரசாத் தவிக்க நேரிட்டது.

இன்று அதிகாலையிலேயே லல்லுபிரசாத் விழித்து விட்டார். எப்போதும் சுறுசுறுப்பாக காமெடி செய்தபடி இருக்கும் அவர் இன்று காலை சோர்வுடன் காணப்பட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே 135 நாள் ஜெயிலில் இருந்துள்ள லல்லு தற்போது 2–வது முறையாக தண்டனை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு நாளை மறுநாள் சி.பி.ஐ. கோர்ட்டு குறைந்தபட்சம் 4 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான எல்லா எற்பாடுகளையும் லல்லுவின் மகன் செய்து வருகிறார்.

ஆனால் லல்லுவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதும் சபாநாயகர் மீராகுமார் அதுபற்றி தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவிப்பார். தேர்தல் கமிஷன் லல்லுவின் எம்.பி. பதவியை பறித்து நடவடிக்கை எடுக்கும்.

...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger