Tuesday 1 October 2013

சிறையில் தூங்க முடியாமல் கொசுக்கடியில் தவித்த லல்லு Lalu not be able to sleep in jail

சிறையில் தூங்க முடியாமல் கொசுக்கடியில் தவித்த லல்லு Lalu not be able to sleep in jail
Tamil NewsToday,

ராஞ்சி, அக்.1–

கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லல்லுபிரசாத் குற்றவாளி என்று நேற்று அறிவிக்கப்பட்டார்.

சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டதும் லல்லுபிரசாத் யாதவை போலீசார் கைது செய்தனர்.

ராஞ்சியில் உள்ள வீர்சா முண்டா மத்திய சிறைக்கு லல்லுபிரசாத் யாதவ் உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவர் உடலை பரிசோதித்தனர்.

பிறகு அவரை சிறையில் அடைத்தனர். நேற்று மதியம் மற்றும் இரவில் அவருக்கு சிறை உணவு வழங்கப்பட்டது.

கோர்ட்டுக்கு வரும்போது மிக மிக உற்சாகமாக வந்த லல்லுபிரசாத் யாதவ் ஜெயிலுக்குள் அடைக்கப்பட்டபோது மிகவும் வாடிப்போனார். யாருடனும் பேசாமல் அவர் அமைதியாக காணப்பட்டார். நேற்றிரவு அவர் சிறைச்சாலை அறைக்குள் தூங்க முடியாமல் தவித்தார். வீர்சாமுண்டா மத்திய சிறைச்சாலை கொசுத் தொல்லை அதிகம் உள்ள பகுதியாகும்.

அந்த சிறையில் எல்லா நசீன வசதிகளும் சமீபத்தில் செய்யப்பட்டது என்றாலும் கொசுத்தொல்லையை சமாளிக்க முடிவில்லை. கொசுக்கடி தாங்க முடியாமல் லல்லு பிரசாத் தவிக்க நேரிட்டது.

இன்று அதிகாலையிலேயே லல்லுபிரசாத் விழித்து விட்டார். எப்போதும் சுறுசுறுப்பாக காமெடி செய்தபடி இருக்கும் அவர் இன்று காலை சோர்வுடன் காணப்பட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே 135 நாள் ஜெயிலில் இருந்துள்ள லல்லு தற்போது 2–வது முறையாக தண்டனை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு நாளை மறுநாள் சி.பி.ஐ. கோர்ட்டு குறைந்தபட்சம் 4 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான எல்லா எற்பாடுகளையும் லல்லுவின் மகன் செய்து வருகிறார்.

ஆனால் லல்லுவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதும் சபாநாயகர் மீராகுமார் அதுபற்றி தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவிப்பார். தேர்தல் கமிஷன் லல்லுவின் எம்.பி. பதவியை பறித்து நடவடிக்கை எடுக்கும்.

...
Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger