கடனை தரும் அதிகாரிகளிடம் உடலை கொடுக்கும் பெண்கள்!
by Marikumar
கிழக்கு மாவட்டத்தில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில் நுண்கடன்கள் வழங்குகின்ற நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளால் பெண்களுக்கு செக்ஸ் வலை வீசப்படுகின்றது.
சுய தொழில் முயற்சிகளுக்கு கடன்கள் பெற பெரும்பாலும் வறிய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் செல்கின்றனர். அதிக வீத வட்டிக்கு கடன்கள் கொடுக்கப்படுகின்றன. இதனால் கடன்களை மீள செலுத்த முடியாத நெருக்கடி பெண்களுக்கு ஏற்பட்டு விடுகின்றது.
இதை எதிர்பார்த்து காத்திருக்கின்ற அதிகாரிகள் செக்ஸ் ரீதியான ஒத்துழைப்பை இப்பெண்களிடம் பதிலுக்கு கோருகின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் இப்பெண்களின் குடும்ப வாழ்க்கையை சிதைத்து விடுகின்றன, கணவன் - மனைவி உறவு கெடுகின்றது, தற்கொலைகளும் இடம்பெறுகின்றன.
இவ்விடயத்தில் தலையிடவும், தீர்வு காணவும் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பாற்ற நிறுவனங்களின் ஒன்றியம் தற்போது முனைப்புடன் முன்வந்து உள்ளது.
தாய்நாடு
Share |
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?