Tuesday, 1 October 2013

தருண்கோபியுடன் ‘காதல்’ சந்தியா சேரும் ‘சூதாட்டம்’ kathal sandhiya soothattam

தருண்கோபியுடன் 'காதல்' சந்தியா சேரும் 'சூதாட்டம்'

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,

இயக்குனர் தருண்கோபியுடன் சூதாட்டம் படத்தில் ஜோடி சேர்கிறார் காதல் சந்தியா.

விஷால், ரீமாசென் நடிப்பில் வெளியான திமிரு படத்திற்கு பிறகு தருண்கோபி ஒரு புதிய படத்தை இயக்கி, அதில் நடிக்கவும் இருக்கிறார்.

அந்த படத்திற்கு சூதாட்டம் என பெயர் வைத்திருக்கின்றனர்.

இப்படத்தில் தருண்கோபிக்கு ஜோடியாக காதல் சந்தியா நடிக்கிறார்.

மேலும் ரமணா, சரோஜா, காதல் சுகுமார், தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். தேவராஜ் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் தருண்கோபி கூறுகையில், திமிரு படத்திற்குப் பிறகு நல்ல படத்தை கொடுக்கவேண்டும் என்பதற்காக காத்திருந்தேன்.

அதற்கு ஏற்றார்போல் இப்போது கதை அமைந்துள்ளது. இரண்டு நண்பர்களுக்குள் நட்பு உருவாவது சுலபம். ஆனால், அந்த நட்பை பலப்படுத்திக் கொள்வது என்பது கடினம்.

இதை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். இந்த படம் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

The post தருண்கோபியுடன் 'காதல்' சந்தியா சேரும் 'சூதாட்டம்' appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger