ஸ்ருதியுடன் ஜோடி சேரவுள்ளார் ஆர்யா
by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,
ராஜா ராணி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ருதியுடன் ஜோடி சேரவுள்ளார் ஆர்யா.
ஆர்யா நடித்த இரண்டாம் உலகம், ஆரம்பம் ஆகிய படங்கள் வருகிற தீபாவளி சரவேடியில் வெடிக்க காத்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தடையறத் தாக்க புகழ் மகிழ் திருமேனி இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.
மேலும், இப்படத்திற்கு கொலைவெறி புகழ் அனிருத் இசையமைக்கவுள்ளார்.
ஆனால் ஏற்கெனவே இதுபோன்ற செய்திகள் கொலிவுட்டில் தண்டோரா அடிக்கப்பட்டு பின் நிராகரிக்கப்பட்டதால். தற்போது இச்செய்தினை, ஆர்யாவே தனது ட்விட்டர் வலைதளத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.
தற்போது ஆர்யா, எஸ்.பி .ஜனநாதன் இயக்கும் புறம்போக்கு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
அதேபோல் ஸ்ருதியும் இந்தியில் இரண்டு படங்களும், தெலுங்கில் ஒரு படமும் நடித்து வருகிறார்.
இந்த படங்குக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து மகிழ் திருமேனி படத்தில் நடிக்கவுள்ளனராம்.
The post ஸ்ருதியுடன் ஜோடி சேரவுள்ளார் ஆர்யா appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?