கைதி எண் 3312 லல்லுவின் முதல்நாள் சிறை வாழ்க்கை First day experience of Lalu in Prison
Tamil NewsYesterday,
ராஞ்சி, அக். 2-
கால்நடை தீவன ஊழலில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டார்.
அன்றிரவு முழுவதும் மூட்டைபூச்சி மற்றும் கொசுக்கடி தொல்லையால் தூங்க முடியாமல் அவதிப்பட்ட லல்லு, அதிகாலை வேளையில் கண்ணயர்ந்தார். காலை 7 மணியளவில் கண் விழித்த அவர் சிறை வளாகத்தினுள் ஒருமுறை சுற்றி வந்தார். கொசு தொல்லை மற்றும் மூட்டைபூச்சி கடி பற்றி சிறை அதிகாரியிடம் அவர் புகார் கூறினார்.
பின்னர், செய்தி தாள்களை சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்த லல்லு, டி.வி. செய்திகளையும் பாரத்துவிட்டு தேநீர் குடித்தார். அவருக்கு 3312 என்ற கைதி எண்ணையும், குற்றேவல் புரிய 2 தண்டனை கைதிகளையும் சிறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
சிறையின் உணவு பட்டியலின்படி வி.ஐ.பி. கைதிகளுக்கு அன்றாடம் 350 கிராம் அரிசி, 117 கிராம் பருப்பு, 233 கிராம் உருளைக் கிழங்கு, 233 கிராம் காய்கறிகள், 467 கிராம் தயிர் அல்லது பால், 29 கிராம் நெய் மற்றும் 2 பழங்கள் வழங்கப்படும்.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?