விக்ரமின் ஜோடி நானா? ஹன்சிகா குமுறல்
by abtamil
Tamil newsToday,
தரணி இயக்கும் ராஸ்கல் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் ஹன்சிகா.
ஷங்கர் இயக்கும் ஐ படத்துக்குப் பிறகு தரணி இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம்.
இந்தப் படத்துக்கு ராஸ்கல் எனப் பெயர் வைத்துள்ளனர்.
விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு கதாநாயகி செலக்ஷனை நடத்திப் பார்த்தார் தரணி.
மும்பையில் ரூம் போட்டு கூட யோசித்துப் பார்த்தார். ஆனால் யாருமே செலக்ட் ஆகவில்லை.
ஒருவழியாக ஹன்சிகா மோத்வானியைத் தேர்ந்தெடுத்து இருப்பதாக கொலிவுட்டில் தண்டோராக்கள் வெளிவந்தன.
ஆனால் இதனை மறுத்துள்ளார் ஹன்சிகா.
ஏனெனில் தனது கைவசம் 9 படங்களை வைத்துக்கொண்டு பிசி ஷெடியூலில் உள்ளாராம் ஹன்சிகா.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?