பாலிவுட்டின் பிரபல நடிகர் ஜான் அபிரகாம் தனது பைக்கில் மும்பையின் ஹார் பகுதியில் சென்று கொண்டிருந்தார். மிக வேகமாக அவர் சென்று கொண்டிருந்தபோது சாலையோரமாக நடந்து சென்ற இரண்டு பேர் மீது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தார்.
ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து ஜான் ஆபிரகாம் கைது செய்யப்பட்டார். அவரது வழக்கு மும்பை செச்சன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதி அவருக்கு 15 நாட்கள் போலீஸ் காவலுக்கு உத்தரவிட்டார். ஆனால் ஜான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அதனால் தனக்கு 5 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி மனு அளித்திருந்தார்.
ஆனால் மும்பை நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்தது. இதனைத்தொடர்ந்து ஜான் ஆபிரகாம் மும்பை உயர்நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து மேல்முறையிடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி தண்டனையை ரத்து செய்து ரூ.20 ஆயிரம் அபராதத்துடன் ஜாமீன் வழங்கியது.