Monday, 27 February 2012

ரஷ்ய பிரதமரை கொல்ல தீவிரவாதிகள் சதிதிட்டம்

- 0 comments
 
 
 
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை கொல்ல செசன்ய தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ரஷ்யாவில் வரும் மார்ச் 4ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது பிரதமராக உள்ள விளாடிமிர் புடின், இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், உக்ரைன் நாட்டில் துறைமுக நகரமான ஒடேசாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குண்டு வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்தார். அங்கிருந்த மற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மூவரும் தீவிரவாதிகள் என்பதும், அவர்கள் வெடிகுண்டு தயாரிக்கும் போது தவறுதலாக குண்டு வெடித்து விட்டது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
 
கைதானவர்களில் மட்யேவ் என்பவன் ரஷ்யாவை சேர்ந்தவன். இன்னொருவன் பியான்சின். இருவரும் துருக்கியில் இருந்து அரபு எமிரேட் நாடு வழியாக உக்ரைன் வந்ததாக கூறினர். மேலும், ரஷ்யாவை சேர்ந்த செசன்யா தீவிரவாதி டோக்கு உமரோவ் உத்தரவுப்படி, பிரதமர் புடினை கொலை செய்ய சதி திட்டம் வகுத்து வந்ததாகவும் கூறியுள்ளனர். இந்த 2 தீவிரவாதிகளும் தற்கொலை படையாக உருவெடுத்து, ரஷ்யாவில் அதிபர் தேர்தல் முடிந்ததும் புடினை கொல்ல திட்டமிட்டிருக்கின்றனர்.
 
இதையடுத்து, ரஷ்ய உளவு படையிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த செய்தியை ரஷ்யாவில் 'சேனல் ஒன்' என்ற டி.வி. நேற்று வெளியிட்டது. இதனால், ரஷ்யாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நடத்தப்படும் நாடகம் என்று எதிர்க்கட்சியினர் வர்ணித்துள்ளனர்.



[Continue reading...]

பகிரங்கமாக அறிவித்த அமெரிக்கா! நாடு நாடாக அலையும் இலங்கை!!

- 0 comments
 
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரப் போர் உக்கிரமடைந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இலங்கைக்கு எதிரான பிரேரணை மார்ச் மாதம் 23 ஆம் திகதியே வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரியவருகின்றது.
 
இலங்கைக்கு எதிரான பிரேரணையை தாம் ஆதரிக்கப்போவதாக அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையிலும், தனக்கு எதிரான பிரேரணையை தோற்கடிப்பதற்கு இலங்கை கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ள நிலையிலுமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவாக் கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது.
 
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, மெக்ஸிக்கோ, தென் ஆபிரிக்கா, பெல்ஜியம் உள்ளிட்ட முக்கியமான நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கும் அதேவேளை, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, உகண்டா, மலேசியா, சிங்கப்பூர், சவூதி அரேபியா, குவைத், கட்டார் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படத் தீர்மானித்துள்ளன என்று அறிய முடிகின்றது.
 
ஜெனிவா விரைந்துள்ள இலங்கை அமைச்சர்கள் குழாம், தமது நாட்டுக்கு எதிரான பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போதிலும் மேற்குலகத்திடம் இருந்து அக்குழுவிற்கு சாதகமானதொரு பதில் கிட்டவில்லை என்றே ஜெனிவாவிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
ஜெனிவாத் தொடர் இன்று ஆரம்பமானாலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை மீது மார்ச் 23 ஆம் திகதியே வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரியவருகின்றது.
 
மேலும், இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாகக் கூறப்படும் பிரேரணையில் முக்கியமான சில விடயங்களைப் பரிந்துரைப்பதற்கும் மேற்குலக நாடுகள் தீர்மானித்துள்ளன என அறியக்கூடியதாகவுள்ளது.
[Continue reading...]

மதுவில் மயக்க மருந்து கலந்து மாணவி கற்பழிப்பு:

- 0 comments
 

டெல்லியின் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹிமான்ஷு ஷர்மா, ராகுல் ஆர்யா, சுனில்சிங், சவுரப் சவுகான் மற்றும் நீரஜ்சிங். இவர்கள் 5 பேரும் நண்பர்கள்.நேற்று முன்தினம் ராகுல் ஆர்யாவின் பிறந்தநாள். இதையொட்டி, அவர் தனது நண்பர்களுக்கு அங்குள்ள ஓட்டலில் விருந்து அளித்தார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள தனக்கு அறிமுகமான பத்தாம் வகுப்பு மாணவி (17) ஒருவரையும் ராகுல் அழைத்திருந்தார்.

பிறந்தநாள் விருந்து இரவு 10 மணி வரை நீடித்தது. விருந்தில் குளிர்பானம் மற்றும் மதுபானம் பரிமாறப்பட்டது. மாணவிக்கு, குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்தனர். அதை குடித்த அவர், சிறிது நேரத்தில் மயங்கினார்.

உடனே விருந்தை முடித்துக்கொண்ட நண்பர்கள், அந்த மாணவியை சவுரப் சவுகானுக்கு சொந்தமான காரில் ஏற்றினர். கார், நொய்டா நகரை சுற்றி சுற்றி வந்தது. ஓடும் காருக்குள் அந்த மாணவியை ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி பலமுறை கற்பழித்தனர்.

பின்னர், பிரியதர்ஷிணி பார்க் பகுதியில் காரை நிறுத்தி, அந்த மாணவியை கீழே தள்ளி விட்டனர். லேசான மயக்கத்தில் இருந்த அவரிடம், சம்பவம் பற்றி புகார் அளித்தால், கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு, கிளம்பிச் சென்றனர்.

மாணவியை கற்பழித்தவர்களில் ஒருவரின் தாயார், மாணவியின் நிலையை கண்டு அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் மாணவியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் கற்பழிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹிமான்ஷு ஷர்மா, ராகுல் ஆர்யா, சுனில் சிங், சவுரப் சவுகான் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட நீரஜ்சிங்கை தேடி வருகின்றனர்.

குற்றவாளிகளில் ஹிமான்ஷு ஷர்மா, சுனில் சிங், நீரஜ் சிங் ஆகியோர் மாணவர்கள், ராகுல் ஆர்யா தனியார் நிறுவன ஊழியர். சவுரப் சவுகான் சொந்தமாக வாகன உதிரிபாகங்கள் கடை வைத்துள்ளார்.

[Continue reading...]

உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !

- 0 comments
 
 
இதுவரை தாம் பல வேற்றுக்கிரக மனுதனர்களைக் கண்டதாகவும், அவர்கள் பறக்க பாவிக்கும் விமானங்களையும் தாம் கண்டதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். பல வீடியோக்களும் வெளியாகியுள்ளது. இருப்பினும் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ உலகையே அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. இக் காணொளியானது உண்மையாகப் படமெடுக்கப்பட்டது என அதனைப் பகுப்பாய்வுசெய்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இனி முடிவை நீங்களே எடுங்கள்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger