டெல்லியின் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹிமான்ஷு ஷர்மா, ராகுல் ஆர்யா, சுனில்சிங், சவுரப் சவுகான் மற்றும் நீரஜ்சிங். இவர்கள் 5 பேரும் நண்பர்கள்.நேற்று முன்தினம் ராகுல் ஆர்யாவின் பிறந்தநாள். இதையொட்டி, அவர் தனது நண்பர்களுக்கு அங்குள்ள ஓட்டலில் விருந்து அளித்தார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள தனக்கு அறிமுகமான பத்தாம் வகுப்பு மாணவி (17) ஒருவரையும் ராகுல் அழைத்திருந்தார்.
பிறந்தநாள் விருந்து இரவு 10 மணி வரை நீடித்தது. விருந்தில் குளிர்பானம் மற்றும் மதுபானம் பரிமாறப்பட்டது. மாணவிக்கு, குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்தனர். அதை குடித்த அவர், சிறிது நேரத்தில் மயங்கினார்.
உடனே விருந்தை முடித்துக்கொண்ட நண்பர்கள், அந்த மாணவியை சவுரப் சவுகானுக்கு சொந்தமான காரில் ஏற்றினர். கார், நொய்டா நகரை சுற்றி சுற்றி வந்தது. ஓடும் காருக்குள் அந்த மாணவியை ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி பலமுறை கற்பழித்தனர்.
பின்னர், பிரியதர்ஷிணி பார்க் பகுதியில் காரை நிறுத்தி, அந்த மாணவியை கீழே தள்ளி விட்டனர். லேசான மயக்கத்தில் இருந்த அவரிடம், சம்பவம் பற்றி புகார் அளித்தால், கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு, கிளம்பிச் சென்றனர்.
மாணவியை கற்பழித்தவர்களில் ஒருவரின் தாயார், மாணவியின் நிலையை கண்டு அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் மாணவியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் கற்பழிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹிமான்ஷு ஷர்மா, ராகுல் ஆர்யா, சுனில் சிங், சவுரப் சவுகான் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட நீரஜ்சிங்கை தேடி வருகின்றனர்.
குற்றவாளிகளில் ஹிமான்ஷு ஷர்மா, சுனில் சிங், நீரஜ் சிங் ஆகியோர் மாணவர்கள், ராகுல் ஆர்யா தனியார் நிறுவன ஊழியர். சவுரப் சவுகான் சொந்தமாக வாகன உதிரிபாகங்கள் கடை வைத்துள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?