Saturday, 25 February 2012

குளியலறையில் +1 மாணவியை கற்பழித்தவர் கைது

- 0 comments
 

சேலம் அன்னதானப்பட்டி லைன்மேடு வேலுதெருவை சேர்ந்தவர் தர்மன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு செல்வி (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற மகள் உள்ளார். இவர் குகை பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

இதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பாண்டியன் (28). இவர் செல்வியை காதலித்து வந்தார். கடந்த 12 ந்தேதி இரவு செல்வியை, பாண்டியன் பேசுவதற்கு தனது வீட்டின் குளியலறைக்கு அழைத்தார்.

இதையடுத்து அங்கு வந்த செல்வியை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த பாண்டியன், நான் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவரை கற்பழித்து உள்ளார்.

இதையடுத்து செல்வி நடந்த சம்பவங்களை தனது தாய் லட்சுமியிடம் கூறினாள். அவர் பாண்டியன் வீட்டிற்கு சென்று தனது மகளை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டார். அதற்கு பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

இதையடுத்து லட்சுமி அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியன் அவரது தந்தை ராஜேந்திரன், தாய் கோகிலா, தாத்தா சுப்பையா ஆகியோரை கைது செய்தனர்.

[Continue reading...]

கேப்டன் வீட்டுக்கு வந்து கெஞ்சியதற்கு ஆதாரம் இருக்கு! அ.தி.மு.க-வை பின்னி எடுக்கும் பிரேமலதா

- 0 comments

சட்டசபையில் அ.தி.மு.க-வுடன் உரசல்… ஸ்டாலினுடன் ஏர்போர்ட் சந்திப்பு போன்ற பரபரப்புக்குப் பின் கூடிய தே.மு.தி.க. பொதுக் குழு இன்னும் கூடுதல் பரபரப்பைக் கிளப்பியது. வழக்கமாக, அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும், வானகரம் ஏரியாவில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்திலேயே தே.மு.தி.க-வின் பொதுக்குழுவும் இந்த முறை கூடியது. செல்போன், கேமரா எதுவும் கொண்டுவரக் கூடாது என்று ஏக கெடுபிடிகள். மண்டபத்தை சுற்றிலும் சஃபாரி அணிந்த 'ரமணா' படை நின்று, எல்லோரையும் சல்லடை போட்டுத்தான் உள்ளே அனுப்பினார்கள். மீடியாவுக்கும் தடா. உள்ளே நடந்ததை அப்படியே வெளியே வந்து கொட்டினார்கள் சில நிர்வாகிகள்.

இரட்டைப் பதவி!

முதலில் செயற்குழு கூடியது. கட்சியின் தலைவரான விஜயகாந்த், இனி பொதுச் செயலாளராகவும் இருப்பார் என்று முடிவு எடுக்கப்​பட்டது. திடீரென்று இரட்டைக் குதிரையில் சவாரி ஏனாம்?

"ராமு வசந்தன் இறந்ததும் காலியாக இருந்த அந்தப் பதவிக்காக, தலைமைக் கழக நிர்வாகிகள் பலரும் போட்டி போட்டார்கள். இதைவைத்து நிர்வாகிகளுக்குள் கருத்து வேறு​பாட்டை உருவாக்க முடியுமா என்று ஆளும் கட்சி திட்டம் போட்டது. அதனால்தான், விஜயகாந்த் அந்தப் பதவியை தன்னிடமே வைத்துக்​கொண்டார்" என்கிறார்கள்.

கேசட் ஆதாரம்!

பொதுக்குழுவின் ஹைலைட் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் பேச்சுதான். "ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதுதான் ஜெயல​லிதாவின் வாடிக்கை. பஸ் கட்டண உயர்வு, பால் விலை அதிகரிப்பு ஆகியவற்றுக்காக சட்டசபையில் குரல் கொடுத்தால், அவர்களுக்குக் கோபம் வருகிறது. மக்கள் பிரச்னையைப் பேசும் அவையில், தனியாக நிற்கத் திராணி இருக்கிறதா, தைரியம் இருக்கிறதா என்றெல்லாம் கேட்கிறார். கடந்த ஆட்சியில் 13 இடைத்தேர்தல்கள் நடந்தன. அதில் தன்னந்தனியாகத் தைரியத்தோடு போட்டி இட்டது தே.மு.தி.க. ஆனால், ஐந்து இடைத் தேர்தல்களில் போட்டி போடாமலேயே ஓடி ஒளிந்தவர்கள், பென்னாகரத்தில் டெபாசிட்டைப் பறி கொடுத்தவர்கள் எல்லாம் திராணி பற்றிப் பேசுகிறார்கள். அ.தி.மு.க.வோடு கேப்டன் கூட்டணி வைக்கா விட்டால், அந்த அம்மா ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்க முடியுமா? தே.மு.தி.க-வோடு கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் ஜெயலலிதா. நம்மோடு கூட்டணி சேர அவர்கள் எவ்வளவு இறங்கி வந்தார்கள் என்று சொன்னால், அவர்கள் முகத்திரை கிழிந்து தொங்கும். இப்போது, அமைச்சர்களாக இருக்கும் மூன்று பேர் அப்போது கேப்டனை சந்திக்க வீட்டுக்கு வந்து காத்திருந்தார்கள். அவர்கள் என்னென்ன பேசி னார்கள். நம்மோடு கூட்டணி சேர்வதற்காக எப்படி அலைந்தார்கள். எப்படி எல்லாம் இறங்கி வந்தார்கள். காலில் விழாத குறையாக எப்படிக் கெஞ்சினார்கள். என்னென்ன பேசினார்கள் என்று அவ்வளவையும் பதிவுசெய்து வைத்திருக்கிறோம். இனியும் எங்களைச் சீண்டினால் அந்த ஆதாரங்களை வெளியிடு​வோம்" என்று அனல் பறக்கப் பேசி முடிக்க, கூட்டம் எழுந்து நின்று கை தட்டியது.

விஜயகாந்தின் விளாசல்!

இறுதியாகப் பேசிய விஜயகாந்த், அ.தி.மு.க-வுடன் தி.மு.க-வையும் சேர்த்தே விளாசினார். 'அடுத்து தி.மு.க-வோடு கூட்டணி' என்ற எழுந்திருக்கும் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் அப்படிப் பேசினாராம்.

"அ.தி.மு.க. ஆட்சியின் 100-வது நாளில் என்னைப் பாராட்டி பேசச் சொன்னார்கள். நான் பேசவில்லை. கூடங்குளம் அணுமின் பிரச்னையில் அந்தப் பகுதி மக்கள் 100 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்கள். அவர்களை நேரில் போய் இந்த அம்மா ஏன் பார்க்கவில்லை? கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. கூடங்குளம் பகுதியில் மண் அள்ளும் மனிதருக்கு ஆதரவாகத் தமிழக அரசு செயல்படுவதாகத் தெரிகிறது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் தேர்தல் செலவுக்காக அந்த மனிதர் கொடுத்திருக்கிறார். குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையை ஆளும் கட்சி செய்வதாக சந்தேகம் ஏற்படுகிறது. அது நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும்.

நேற்று, சட்டசபைக்கு நான் ஒருவன் மட்டுமே போனேன். இன்று 29 பேர் போயிருக்கிறோம். நாளைக்கு எத்தனை பேர் என்பதை மக்கள் தீர்மானிப்​பார்கள். நிச்சயம் நாம் ஆட்சியைப் பிடிப்போம்" என்று சூளுரைத்தார்.

இப்போது, நீதிமன்றம் மூலமாகவும் அ.தி.மு.க-வுக்கு தே.தி.மு.க. குடைச்சல் கொடுக்கத் தொடங்கி விட்டதால், தமிழக அரசியல் களை கட்டும்.

[Continue reading...]

ஜெ-க்கு எதிராக குற்றம் சுமத்த கங்கை அமரனை மிரட்டினார்கள் - சசிகலா

- 0 comments
 
 
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக குற்றம் சுமத்துவதற்காகவே இயக்குநர் - இசையமைப்பாளர் கங்கை அமரனை போலீசார் மிரட்டினார்கள் என்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சசிகலா தெரிவித்தார்.
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
 
இப்போது சசிகலாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று 3-வது நாளாக தனிக்கோர்ட்டில் ஆஜரானார். நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் விசாரணை நடந்தது.
 
ஆட்சேபனை
 
அரசு தரப்பு வக்கீல் ஆச்சார்யா வாதிடுகையில், "சசிகலா வலுவான குரலில் பதிலளிக்க வேண்டும். குறிப்பு எழுதி வைத்து கொண்டு பதிலளிக்க கூடாது. அவருக்கு மேஜை வழங்கியிருப்பது சரியல்ல'' என்றார்.
 
இதற்கு சசிகலா தரப்பு வக்கீல் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். "இது குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை. குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கு அவருக்கு போதிய உரிமை உள்ளது. தேவைப்படும் நேரங்களில் பதிலை விரிவாக சொல்வது அவசியம்'' என்று அவர் வாதம் செய்தார்.
 
அப்போது குறுக்கிட்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, "ஏதாவது மறந்து இருந்தால் கோர்ட்டில் உள்ள ஆவணங்களை பெற்று பதிலளிக்கலாம்'' என்று உத்தரவிட்டார். இதனால் இரு தரப்பு வக்கீல்களின் ஆட்சேபனை விவகாரம் முடிவுக்கு வந்தது.
 
சசிகலாவிடம் கடந்த 2 நாட்களாக 63 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. நேற்று மட்டும் 40 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இதுவரை 103 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து இருக்கிறார்.
 
சொத்து வாங்கிய விவகாரம் தொடர்பாகவே நேற்றைய கேள்விகள் இடம் பெற்று இருந்தன. அப்போது பெரும்பாலான கேள்விகளுக்கு சசிகலா பதிலளிக்கையில், "சொத்துகள் வாங்கியதில் ஜெயலலிதாவுக்கு சம்பந்தம் இல்லை. வேண்டுமென்றே அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது,'' என்றார்.
 
கங்கை அமரன் மிரட்டப்பட்டாரா?
 
"செங்கல்பட்டு அருகே உள்ள பையனூரில், இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பண்ணை வீட்டை கட்டாயப்படுத்தி வாங்கினீர்களா?'' என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
 
அதற்கு சசிகலா பதிலளிக்கையில், "கங்கை அமரனின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அந்த நிலம் வாங்கப்பட்டது. எங்களுக்கு எதிராக குற்றம் சாட்டுவதற்காக அவரை போலீசார் மிரட்டி பணிய வைத்து உள்ளனர்'' என்றார்.
 
இன்றும் (சனிக்கிழமை) வழக்கு விசாரணை நடக்கிறது. அப்போது சசிகலாவிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது.
 
சுதாகரன், இளவரசி ஆகியோரும் நேற்று நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
 
கங்கை அமரன் விவகாரம் என்ன?
 
ஜெயலலிதா முதல்முறை பதவிக்கு வந்தபோது, தனக்கு சொந்தமாக பையனூரில் இருந்த 22 ஏக்கர் நிலம் மற்றும் வீட்டை மிரட்டி ஜெயலலிதாவும் சசிகலாவும் வாங்கியதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து பேசியதற்காக தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.



[Continue reading...]

என்கவுன்டரில்: கொல்லப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்: நிதிஷ்குமார்

- 0 comments
 
சென்னை வேளச்சேரியில் என்கவுன்டர் செய்யப்பட்ட 5 வங்கிக் கொள்ளையர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தமிழக காவல்துறை அறிவித்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது:-
சென்னையில் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ள பட்டியல் தவறானது. மேலும் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் சிலர் பீகாரில் உயிருடன் இருக்கிறார்கள். இந்த என்கவுன்டர் குறித்து தொடர்ந்து தகவல் சேகரித்து வருகிறோம்.
என அவர் கூறினார்.
[Continue reading...]

பெப்சி பிரச்சினைக்கு மத்தியில் விஜய்யின் பட ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது

- 0 comments
 
விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. தமிழகம், ஆந்திரா என எங்கும் பெப்சி பிரச்சினை தலைவிரித்தாடுவதால், மும்பையிலேயே முழுப் படப்பிடிப்பையும் நடத்த முடிவு செய்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்.

பெப்சி பிரச்சினை காரணமாக துப்பாக்கி படத்தை இடையில் நிறுத்திவிட்ட முருகதாஸ், ஒரு குறும்படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.

இது விஜய்க்கு கவலையளித்தது. படப்பிடிப்பு இல்லாததால் அவரும் கூப்பிட்ட விழாக்கள், சலூன் திறப்பு என அனைத்துக்கும் போய் வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் முருகதாஸ். கதைப்படி விஜய் மும்பையில் போலீஸ் அதிகாரி. எனவே மொத்தப் படத்தையும் மும்பையிலேயே முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர்.

பெப்சி தொழிலாளர் பிரச்சினையும் அங்கு வராது என்பதால் இந்த முடிவு என்கிறார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன் அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு மும்பையில் நடந்தபோது பெப்சிக்காரர்கள் பிரச்சினை செய்தது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம், பெப்சி - தயாரிப்பாளர் தகராறு இன்னும் முடிவுக்கு வராததால் அனைத்து படப்பிடிப்புகளும் நின்றுபோய், கோடம்பாக்கமே ஸ்தம்பித்துள்ள நிலையில், விஜய் படத்தின் ஷூட்டிங்கை நடத்துவது முணுமுணுப்பைக் கிளப்பியுள்ளது.
[Continue reading...]

தெரியாத மொழிப்படங்களில் நடிப்பது கஸ்ரமாக உள்ளது - ஏமி ஜாக்சன்

- 0 comments
 


'தெரியாத மொழியில் நடிப்பது கஷ்டமாக இருக்கிறது' என்றார் எமி. 'மதராஸ பட்டிணம்' படத்தில் நடித்தவர் லண்டன் நடிகை எமி ஜாக்ஸன்.

அவர் கூறியதாவது:

இந்தியாவை நேசிக்கிறேன். இந்தி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியாவை சுற்றிப்பார்க்க வாய்ப்பு கிடைத்தது. மதுரை, திருவனந்தபுரம், ஆக்ரா, டெல்லி, கோவா என பல இடங்களுக்கு சென்றேன்.

கேரளாவின் எழில் என்னை கவர்ந்தது. ஷூட்டிங்கிற்காக என்றில்லாமல் அழகை ரசிப்பதற்காக மீண்டும் அங்கு செல்ல ஆசையாக இருக்கிறது.

எனது அடுத்த படம் மார்ச் மாதம் தொடங்குகிறது. ராம் சரண் நடிக்கும் 'எவடு' என்ற படத்தில் அவரது ஜோடியாக நடிக்கிறேன். அடுத்து தமிழ் படத்தில் நடிக்கிறேன்.

இவ்வருட இறுதியில் மீண்டும் இந்தியில் நடிப்பேன் என நம்புகிறேன். 'ஏக் தீவனா தா' என்ற இந்தி படத்தில் முழுஅர்ப்பணிப்புடன் நடித்தேன்.

தெலுங்கு மொழியைப் போலவே இந்தியும் எனக்கு மிக கடினமான மொழியாக இருந்தது. தெரியாத மொழியில் நடிப்பது கஷ்டமாக இருந்தாலும் இயக்குனர்கள் அதை எளிதாக போக்கிவிடுகிறார்கள். இவ்வாறு எமி ஜாக்ஸன் கூறினார்.
[Continue reading...]

பாலிவூட் பக்கம் கரை ஒதுங்கிய நிலா

- 0 comments
 


கொலிவுட்டில் அன்பே ஆருயிரே, மருத மலை படங்களில் நடித்த நாயகி நிலா, தற்போது பாலிவுட்டில் நடிக்க உள்ளார்.

கொலிவுட்டில் 'அன்பே ஆருயிரே' படத்தில் நடித்த நிலா, தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

நான் பாலிவுட்டில் 'பையாஜி சூப்பர்ஹிட்' படத்தில் சன்னி தியோல், அர்ஷாத் வார்சி, துச்ஷார் கபூர் ஆகியோருடன் நடிக்க உள்ளேன்.

அது மட்டுமல்லாமல், இந்த வருடம் ஹிந்தியில் உருவாகும் 'ஹேரா பெர்ரி' படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளேன்.

தென்னிந்திய பட உலகிற்கும் பாலிவுட்டுக்கும் மொழி தான் வித்தியாசப்படுகிறது. மற்றபடி, எனக்கு பழக்கப்பட்ட மொழியில் நடிக்கிறேன்.

தெலுங்கு படத்திலும் நான் நடிக்கிறேன். தென்னிந்திய திரையுலகிலிருந்து வந்து பாலிவுட்டில் நடிகர் மற்றும் நடிகைகள் இப்போது நடித்து வருகிறார்கள்.

நான் யாரோடும் போட்டி போட விரும்பவில்லை. பாலிவுட் பட உலகம் ரொம்ப பெரியது. இதில் எல்லோருக்கும் இடம் உள்ளது என்று நிலா கூறியுள்ளார்.
[Continue reading...]

சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாதவள் நான்,என்னால் யாரையும் எதிர்க்க முடியாது - தீபிகா படுகோனே

- 0 comments
 


ரேஸ் 2 படத்தில் மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் தீபிகா. சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாத தன்னால் யாரையும் எதிர்த்துக் கொள்ள முடியாது என்பதால் சுமூகமாக பிரச்சினையை முடித்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் கோச்சடையானிலிருந்து விலகக் கூடும் என்று வரும் செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "கோச்சடையான்' படத்தில் நடிப்பதற்காக நான் 'ரேஸ்-2′ படத்திலிருந்து விலக வில்லை.

நான் பிஸியாக இருந்த காலகட்டத்தில் 'ரேஸ்-2′ நடிக்க தேதிகள் கொடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. படப்பிடிப்பு நடத்தாமல் ஒன்றரை ஆண்டுகள் இழுத்தடித்தனர்.

நானும் வேறு சில படங்களுக்கு தேதி கொடுத்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ரஜினி சார் படமும் வந்ததால் நான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.

ஆனால் 'ரேஸ்-2′ படத்தின் சார்பாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். இதற்கு நான் சங்கத்திற்கு நேரில் போய் விளக்கம் கூறிவிட்டேன். யோசித்துப் பார்த்தேன். எந்த பிரச்சினையும் வேண்டாம் என்பதால், மீண்டும் ரேஸ்-ல் நடிக்க சம்மதித்துவிட்டேன். எந்தப் பின்னணியும் இல்லாத பெண் நான்… வேறு வழியில்லை. அதற்காக 'கோச்சடையான்' படத்தில் நான் நடிப்பதில் எந்த மாற்றமும் இல்லை," என்றார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger