ரேஸ் 2 படத்தில் மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் தீபிகா. சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாத தன்னால் யாரையும் எதிர்த்துக் கொள்ள முடியாது என்பதால் சுமூகமாக பிரச்சினையை முடித்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் கோச்சடையானிலிருந்து விலகக் கூடும் என்று வரும் செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "கோச்சடையான்' படத்தில் நடிப்பதற்காக நான் 'ரேஸ்-2′ படத்திலிருந்து விலக வில்லை.
நான் பிஸியாக இருந்த காலகட்டத்தில் 'ரேஸ்-2′ நடிக்க தேதிகள் கொடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. படப்பிடிப்பு நடத்தாமல் ஒன்றரை ஆண்டுகள் இழுத்தடித்தனர்.
நானும் வேறு சில படங்களுக்கு தேதி கொடுத்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ரஜினி சார் படமும் வந்ததால் நான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.
ஆனால் 'ரேஸ்-2′ படத்தின் சார்பாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். இதற்கு நான் சங்கத்திற்கு நேரில் போய் விளக்கம் கூறிவிட்டேன். யோசித்துப் பார்த்தேன். எந்த பிரச்சினையும் வேண்டாம் என்பதால், மீண்டும் ரேஸ்-ல் நடிக்க சம்மதித்துவிட்டேன். எந்தப் பின்னணியும் இல்லாத பெண் நான்… வேறு வழியில்லை. அதற்காக 'கோச்சடையான்' படத்தில் நான் நடிப்பதில் எந்த மாற்றமும் இல்லை," என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?