'தெரியாத மொழியில் நடிப்பது கஷ்டமாக இருக்கிறது' என்றார் எமி. 'மதராஸ பட்டிணம்' படத்தில் நடித்தவர் லண்டன் நடிகை எமி ஜாக்ஸன்.
அவர் கூறியதாவது:
இந்தியாவை நேசிக்கிறேன். இந்தி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியாவை சுற்றிப்பார்க்க வாய்ப்பு கிடைத்தது. மதுரை, திருவனந்தபுரம், ஆக்ரா, டெல்லி, கோவா என பல இடங்களுக்கு சென்றேன்.
கேரளாவின் எழில் என்னை கவர்ந்தது. ஷூட்டிங்கிற்காக என்றில்லாமல் அழகை ரசிப்பதற்காக மீண்டும் அங்கு செல்ல ஆசையாக இருக்கிறது.
எனது அடுத்த படம் மார்ச் மாதம் தொடங்குகிறது. ராம் சரண் நடிக்கும் 'எவடு' என்ற படத்தில் அவரது ஜோடியாக நடிக்கிறேன். அடுத்து தமிழ் படத்தில் நடிக்கிறேன்.
இவ்வருட இறுதியில் மீண்டும் இந்தியில் நடிப்பேன் என நம்புகிறேன். 'ஏக் தீவனா தா' என்ற இந்தி படத்தில் முழுஅர்ப்பணிப்புடன் நடித்தேன்.
தெலுங்கு மொழியைப் போலவே இந்தியும் எனக்கு மிக கடினமான மொழியாக இருந்தது. தெரியாத மொழியில் நடிப்பது கஷ்டமாக இருந்தாலும் இயக்குனர்கள் அதை எளிதாக போக்கிவிடுகிறார்கள். இவ்வாறு எமி ஜாக்ஸன் கூறினார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?