Sunday, 29 December 2013

விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை : இங்கிலாந்து அரசின் இணையதளத்தில் வெளியான விளம்பரத்தால் பரபரப்பு UK Government website publishes advertisement for call girls job

- 0 comments

UK Government website publishes advertisement for call girls job

விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை : இங்கிலாந்து அரசின் இணையதளத்தில் வெளியான விளம்பரத்தால் பரபரப்பு UK Government website publishes advertisement for call girls job

லண்டன், டிச. 30-

இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை என்று வெளியான விளம்பரத்தால் தலைநகர் லண்டனில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலை நிமித்தமாக தன்னந்தனியே வெளிநாடுகளுக்கு செல்லும் ஆண், பெண்களுக்கு பல நாடுகளில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்கள் அவர்களின் வழித்துணைக்கு பாதுகாவலர்களாக எதிர் பாலினத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்துகிறது.

இவ்வாறு பணியமர்த்தப்படும் நபர்கள் அந்நாட்டில் உள்ள அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். தனியாக வரும் ஆணுக்கு துணையாக அழகான பெண்களையும், பெண்ணுக்கு துணையாக இளமையும், நல்ல உடல்கட்டும் கொண்ட ஆண்களையும் இந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தருகின்றன.

ஒருவர் எந்த நாட்டுக்கு போக வேண்டுமோ..? அந்த நாட்டில் பிரபலமாக இயங்கிவரும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு முன்கூட்டியே தகவல் அளித்துவிட்டால் போதும். செல்பவர் ஆணாக இருந்தால் அழகான பெண்களின் புகைப்படங்களையும், பெண்ணாக இருந்தால் கட்டிளங்காளையர்களின் புகைப்படங்களையும் இந்த நிறுவனம் இ-மெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்.

வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நபரை தேர்வு செய்து தகவல் தெரிவித்து, உறுதிபடுத்தி விட்டால் அவர்களை விமான நிலையத்திற்கே வந்து அந்த நபர்கள் அழைத்து செல்வார்கள்.

அந்த நேரம் முதல் வெளிநாட்டு வாடிக்கையாளரின் நிழல் போலவே இருந்து, அவர் போகும் இடங்களுக்கு எல்லாம் கூடவே சென்று, அவர் செலவிலேயே சாப்பிட்டு, அவர் தங்கும் அறையிலேயே இவர்கள் படுத்து தூங்குவார்கள்.

எஸ்கார்ட் சர்வீஸ் என்றழைக்கப்படும் இந்த சேவைக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு பெரிய தொகையை கட்டணமாக பெறும் இந்த நிறுவனங்கள், தங்களது கமிஷன் போக பணியமர்த்தப்படும் நபர்களுக்கு சொற்ப தொகையை சம்பளமாக தருகின்றன.

இவ்வகையில், இங்கிலாந்தில் இயங்கிவரும் ஹார்னி எஸ்கார்ட்ஸ் என்ற நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று அரசின் வேலைவாய்ப்பு துறையின் அதிகாரபூர்வ இணயதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

மேற்கண்ட நிறுவனத்தில், தங்களுக்கு வசதியான வேலை நேரங்களில் பணியாற்ற பெண்கள் தேவைப்படுகிறார்கள். அடிப்படை தகுதியாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில் பிரியம் இருந்தால் போதும். விருப்பம் உள்ள பெண்களுக்கு ஒரு மணி நேரத்துக்கான சம்பளமாக 10 பவுண்டுகள் (இந்திய மதிப்புக்கு சுமார் 1020 ரூபாய்) வழங்கப்படும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரசின் வேலை வாய்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்தை ஆதரித்தும், எதிர்த்தும் லண்டன் வாசிகளிடையே தற்போது சூடான பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன.
...

UK Government website publishes advertisement for call girls job

[Continue reading...]

Police hunt to nab 3 Persons for molesting Class XI Dalit student

- 0 comments

Police hunt to nab 3 Persons for molesting Class XI Dalit student லிஃப்ட் தருவதாக கூறி தலித் மாணவியை காரில் கடத்திச் சென்று கற்பழித்த மூவருக்கு போலீஸ் வலை Police hunt to nab 3 Persons for molesting Class XI Dalit student

லக்னோ, டிச. 30-

உத்தரபிரதேசம் மாநிலம், மதுரா அருகே உள்ள நாக்லா ஹன்சி பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் தலித் மணவி கடந்த 26-ம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஊரை சேர்ந்த 3 பேர் காரில் வந்து அவரை வீட்டில் இறக்கி விடுவதாக கூறினர்.

இதற்கு சம்மதிக்காத அந்த இளம் பெண்ணை பலவந்தமாக காருக்குள் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆள்நடமாட்டமில்லாத ஓரிடத்தில் காரை நிறுத்தி, காரினுள் வைத்தே அந்த பெண்ணை கதறக் கதற மூவரும் கற்பழித்தனர். அவர்களிடமிருந்து தப்பியோடி வந்த மாணவி நடந்த சம்பவத்தை அழுதபடியே பெற்றோரிடம் கூறினார்.

இதனையடுத்து, அதே ஊரை சேர்ந்த அண்ணு, ராஜேஷ், லலித் ஆகியோர் தனது மகளை கடத்திச் சென்று கற்பழித்து விட்டதாக மாணவியின் தந்தை அருகில் உள்ள ரயா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மூவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் புகாரை வாங்கிக்கொள்ள மறுத்த போலீசார், குற்றவாளிகளுடன் சமரசமாக போகும்படியும் புகார்தாரரை வற்புறுத்தினர்.

பாதிக்கப்பட்ட தலித் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவும் போலீசார் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இங்கு நமக்கு நீதி கிடைக்காது என்பதை உணர்ந்துக் கொண்ட தந்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து நடந்த கொடுமைகளை எல்லாம் விபரமாக கூறினார்.

சூப்பிரண்ட்டின் உத்தரவையடுத்து, தற்போது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் மூவரையும் பிடிக்க வலைவீசி தேடி வருகின்றனர்.
...

[Continue reading...]

பா.ஜனதாவுடன் தே.மு.தி.க. சேர வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி bjp party DMDK Chance to join Bon Radhakrishnan interview

- 0 comments

Img பா.ஜனதாவுடன் தே.மு.தி.க. சேர வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி bjp party DMDK Chance to join Bon Radhakrishnan interview

மேல்புறம், டிச.29–

பாரதீய ஜனதா குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் மார்த்தாண்டத்தில் இன்று நடந்தது. மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரத்தினமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:––

தமிழகத்தில் பாரதீய ஜனதா கூட்டணி ஓரளவு முடிவுக்கு வந்துள்ளது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஐ.ஜே.கே. தலைவர் பச்சமுத்து ஆகியோர் பாரதீய ஜனதா அகில இந்திய தலைவர்களை சந்தித்து பேசி விட்டனர். பா.ம.க.வுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தால் மகிழ்ச்சி. அந்த கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் என நம்புகிறோம். அப்படி கூட்டணி ஏற்படும் பட்சத்தில் பாரதீய ஜனதா கூட்டணி வலுவான கூட்டணியாக தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும்.

அ.தி.மு.க., தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் இன்று தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. நாளை திடீரென கூட்டணி என்று பேசுவார்கள். அவர்களது முடிவுகளை புரிந்து கொள்ள முடியாது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் 1½ லட்சம் தமிழகர் கொல்லப்பட்டனர். ஒரு லட்சம் பெண்கள் கணவர்களை இழந்து விதவைகள் ஆனார்கள். 50 ஆயிரம் குழந்தைகள் அனாதைகள் ஆனது. அங்குள்ள தமிழர்களின் உடமைகள், நிலங்கள், வீடுகள் இலங்கை அரசு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு தமிழர்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகிறார்கள். இவ்வாறு இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இங்குள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தமிழக மீனவர்களை நிம்மதியாக கடலுக்கு போய் மீன் பிடிக்க விடாமல் சிங்கள ராணுவம் சித்ரவதை செய்கிறது. இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு கடலோர கிராமங்களில் ஒரு ஓட்டு கூட விழாது.

ப.சிதம்பரம் மத்திய உள்துறை மற்றும் நிதி மந்திரியாக பதவி வகித்துள்ளார். ஆனால் அவரால் தமிழகத்துக்கோ, அவரது தொகுதிக்கோ ஒரு நன்மையும் கிடைக்க வில்லை. தமிழகத்தில் ஒரு வளர்ச்சித்திட்ட பணிகள் கூட அவரால் செய்யப்படவில்லை.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் காங்கிரசின் ஊழலுக்கு எதிராக போராடினார். தற்போது அந்த கட்சியுடனேயே கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்து உள்ளார். ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவரே வெளியே வருவார்.

குளச்சல் வர்த்தக துறைமுகம் குறித்து மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறுகையில் சிறிய துறைமுகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி உள்ளார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் பட்சத்தில் குளச்சல் பெரிய வர்த்தக துறைமுகமாக மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

...

[Continue reading...]

Kejriwal to eradicate corruption crackdown Delhi officials unfazed

- 0 comments

Kejriwal to eradicate corruption crackdown Delhi officials unfazed லஞ்சத்தை ஒழிக்க கெஜ்ரிவால் அதிரடி நடவடிக்கை: டெல்லி அதிகாரிகள் கலக்கம் Kejriwal to eradicate corruption crackdown Delhi officials unfazed

புதுடெல்லி, டிச.29–

டெல்லி மாநில முதல்– மந்திரியாக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் நாடு முழுவதையும் உற்று நோக்க வைத்து இருக்கிறார்.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்த டெல்லியில் அவர் பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் தானே டிக்கெட் எடுத்து பதவி ஏற்க வந்தார்.

அவரது காரில் சிகப்பு விளக்கு இல்லை. டிரைவர் கூட கிடையாது. ரெயில் நிலையத்தில் இருந்து பதவி ஏற்பு விழா நடைபெற்ற ராம்லீலா மைதானத்துக்கு காரில் 6 மந்திரிகளை உட்கார வைத்து அவரே ஓட்டி வந்தார்.

முன்பு இதே மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம் இருந்த போது அவரை குண்டு கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்திய டெல்லி போலீசார் நேற்று அவரை வரவேற்று பாதுகாப்பாக விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

பதவி ஏற்பு விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் வாங்கவும் மாட்டோம், லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம் என்று தொண்டர்களுடன் சேர்ந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

வெறும் உறுதிமொழியுடன் நிறுத்திக் கொள்ளாமல் அதை செயல்வடிவம் காட்டவும் தீவிரமாக உள்ளார். ஊழல் லஞ்சம் பற்றி தகவல் தெரி விப்பதற்காக 2 நாளில் டெலிபோன் எண்ணை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிடுகிறார்.

லஞ்சம் வாங்குவோர் பற்றி பொதுமக்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் புகார் செய்யலாம். அந்த எண் முதல்–மந்திரி அலு வலகத்தில் இருக்கும். புகார் வந்ததும் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பல அதிரடி கட்டளைகளும் பிறப்பித்துள்ளார். அதன்படி மந்திரிகளோ, மாநில அரசின் அதிகாரிகளோ தங்கள் கார்களில் சிகப்பு சுழல் விளக்குகளை பொருத்திக் கொள்ள மாட்டார்கள்.

அதிகாரிகளுக்கு தனி பாதுகாப்பு அதிகாரியோ, பாதுகாப்பு வாகனமோ வழங்கப்பட மாட்டாது. அச்சுறுத்தல் அடிப்படையில் தான் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் முடிவு எடுத்துள்ளார்.

டெல்லியில் எங்கு பார்த்தாலும் அதிகாரிகள் சிகப்பு விளக்கு பொருத்திய கார்களில் வலம் வருகிறார்கள். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டே கேள்வி எழுப்பி இருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எந்த அதிகாரியும் மதிக்கவில்லை. எனவேதான் சிவப்பு விளக்கு பொருத்தக்கூடாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரிகள் அனைவரும் வி.ஐ.பி.க்கள் போல் வலம் வரக்கூடாது. மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தனது அலுவலகத்தில் அமர்ந்ததும் தனது எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அதிகார வர்க்கத்தை மாற்றி அமைத்தார்.

டெல்லி மாநில அரசின் உயர் அதிகாரிகள் 9 பேர் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டனர். டெல்லி குடிநீர் வாரிய முதன்மை அதிகாரிதான் முதலில் மாற்றம் செய்யப்பட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளராக உயர் கல்வித் துறை செயலாளர் ராஜேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்ததாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறை வேற்ற முன்னுரிமை கொடுத்துள்ளார். தினந்தோறும் நபருக்கு 700 லிட்டர் இலவச குடிநீர் அளிப்பதாகவும், மின்சார கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதாகவும் வாக்குறுதி அளித்து இருந்தார்.

இலவச குடிநீர் பற்றிய அறிவிப்பை நாளை (திங்கட்கிழமை) வெளியிடுகிறார். அதுபோல் மின் கட்டணம் குறைப்பு பற்றிய அறிவிப்பை நாளை மறுநாள் அல்லது புதன் கிழமை வெளியிடவும் திட்ட மிட்டுள்ளார்.

இதேபோல் டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவால் பயணிகளின் டீசல் வாகனங்கள் தடை செய்யப்பட்டு கியாஸ் வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் கியாஸ் விலை உயர்வால் ஆட்டோ டிரைவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீர், மின்சாரத்திற்கு அடுத்தப்படியாக டெல்லியில் இதுவும் பெரும் பிரச் சினையாக உள்ளது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னுரிமை அளித்துள்ளார்.

அரசுப் பணிகளில் தீவிர கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு கீழ்ப்படியாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் தீவிரமாக உள்ளார். இதனால் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger