Sunday, 29 December 2013

Kejriwal to eradicate corruption crackdown Delhi officials unfazed

Kejriwal to eradicate corruption crackdown Delhi officials unfazed லஞ்சத்தை ஒழிக்க கெஜ்ரிவால் அதிரடி நடவடிக்கை: டெல்லி அதிகாரிகள் கலக்கம் Kejriwal to eradicate corruption crackdown Delhi officials unfazed

புதுடெல்லி, டிச.29–

டெல்லி மாநில முதல்– மந்திரியாக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் நாடு முழுவதையும் உற்று நோக்க வைத்து இருக்கிறார்.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்த டெல்லியில் அவர் பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் தானே டிக்கெட் எடுத்து பதவி ஏற்க வந்தார்.

அவரது காரில் சிகப்பு விளக்கு இல்லை. டிரைவர் கூட கிடையாது. ரெயில் நிலையத்தில் இருந்து பதவி ஏற்பு விழா நடைபெற்ற ராம்லீலா மைதானத்துக்கு காரில் 6 மந்திரிகளை உட்கார வைத்து அவரே ஓட்டி வந்தார்.

முன்பு இதே மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம் இருந்த போது அவரை குண்டு கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்திய டெல்லி போலீசார் நேற்று அவரை வரவேற்று பாதுகாப்பாக விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

பதவி ஏற்பு விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் வாங்கவும் மாட்டோம், லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம் என்று தொண்டர்களுடன் சேர்ந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

வெறும் உறுதிமொழியுடன் நிறுத்திக் கொள்ளாமல் அதை செயல்வடிவம் காட்டவும் தீவிரமாக உள்ளார். ஊழல் லஞ்சம் பற்றி தகவல் தெரி விப்பதற்காக 2 நாளில் டெலிபோன் எண்ணை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிடுகிறார்.

லஞ்சம் வாங்குவோர் பற்றி பொதுமக்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் புகார் செய்யலாம். அந்த எண் முதல்–மந்திரி அலு வலகத்தில் இருக்கும். புகார் வந்ததும் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பல அதிரடி கட்டளைகளும் பிறப்பித்துள்ளார். அதன்படி மந்திரிகளோ, மாநில அரசின் அதிகாரிகளோ தங்கள் கார்களில் சிகப்பு சுழல் விளக்குகளை பொருத்திக் கொள்ள மாட்டார்கள்.

அதிகாரிகளுக்கு தனி பாதுகாப்பு அதிகாரியோ, பாதுகாப்பு வாகனமோ வழங்கப்பட மாட்டாது. அச்சுறுத்தல் அடிப்படையில் தான் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் முடிவு எடுத்துள்ளார்.

டெல்லியில் எங்கு பார்த்தாலும் அதிகாரிகள் சிகப்பு விளக்கு பொருத்திய கார்களில் வலம் வருகிறார்கள். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டே கேள்வி எழுப்பி இருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எந்த அதிகாரியும் மதிக்கவில்லை. எனவேதான் சிவப்பு விளக்கு பொருத்தக்கூடாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரிகள் அனைவரும் வி.ஐ.பி.க்கள் போல் வலம் வரக்கூடாது. மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தனது அலுவலகத்தில் அமர்ந்ததும் தனது எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அதிகார வர்க்கத்தை மாற்றி அமைத்தார்.

டெல்லி மாநில அரசின் உயர் அதிகாரிகள் 9 பேர் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டனர். டெல்லி குடிநீர் வாரிய முதன்மை அதிகாரிதான் முதலில் மாற்றம் செய்யப்பட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளராக உயர் கல்வித் துறை செயலாளர் ராஜேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்ததாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறை வேற்ற முன்னுரிமை கொடுத்துள்ளார். தினந்தோறும் நபருக்கு 700 லிட்டர் இலவச குடிநீர் அளிப்பதாகவும், மின்சார கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதாகவும் வாக்குறுதி அளித்து இருந்தார்.

இலவச குடிநீர் பற்றிய அறிவிப்பை நாளை (திங்கட்கிழமை) வெளியிடுகிறார். அதுபோல் மின் கட்டணம் குறைப்பு பற்றிய அறிவிப்பை நாளை மறுநாள் அல்லது புதன் கிழமை வெளியிடவும் திட்ட மிட்டுள்ளார்.

இதேபோல் டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவால் பயணிகளின் டீசல் வாகனங்கள் தடை செய்யப்பட்டு கியாஸ் வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் கியாஸ் விலை உயர்வால் ஆட்டோ டிரைவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீர், மின்சாரத்திற்கு அடுத்தப்படியாக டெல்லியில் இதுவும் பெரும் பிரச் சினையாக உள்ளது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னுரிமை அளித்துள்ளார்.

அரசுப் பணிகளில் தீவிர கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு கீழ்ப்படியாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் தீவிரமாக உள்ளார். இதனால் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger